Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 20 பிப்ரவரி, 2019

இன்றைய தகவல்படி...

இன்றைய தகவல்படி...
IJK பச்சமுத்து (உடையார்) பெரம்பலூர் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்க அதிக வாய்ப்பு...!
இரட்டை இலைய பார்த்தாலே ஓட்டு போடுற பய பூரா "முத்தரையர்ன்னு" பேரோடதான் திரியுறான்.
என்ன ஆக போகுதோ....?

தினகரனின் அமமுக

தினகரனின் அமமுக முத்தரையர்களுக்கு இரண்டு தொகுதி கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக நம்ப தகுந்த தகவல்கள் கிடைக்கிறது.
பெரம்பலூரில் மு. அமைச்சர் செல்வராஜின் உறவினருக்கு உறுதி என்றும் மற்றொரு தொகுதி எதுவென முடிவாகவில்லை என்றும் தகவல்.
வாய்ப்பு உறுதியென்றால் அமமுக வுக்கு இரண்டு எம்பி நிச்சயம்.

தினகரனின் அமமுக

தினகரனின் அமமுக முத்தரையர்களுக்கு இரண்டு தொகுதிகளை கொடுத்து வெற்றியும் பெற்றுவிட்டால்....
அடுத்த சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதியை அவரே ஒதுக்கி தருவார், உரிமையாடு கேட்கவும் முடியும்.
சாதிய முரண்களுக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை...
அரசியலில் வாய்ப்புகளுக்காக எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுகொள்ள தயாராக வேண்டும்

அதிமுகவில்....

அதிமுகவில் முத்தரையர்களுக்கு ஒரு தொகுதியும் கிடையாது, முத்தரையர் பெரும்பாண்மை தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கவே திட்டம்....
ஓ. பி. எஸ், எடப்பாடி, வைத்திலிங்கம் மற்றும் முன்னணி தலைவர்களின் நிலைப்பாடு அவர்களின் வாரிசுகளை நிறுத்தி ஜெயிக்க வைப்பது மட்டும்தான்.
ஆக...
பெட்டி வாங்குறவன் மட்டும் அந்தப்பக்கம் போகலாம்.

ஆதரவு கடிதம்

ஆதரவு கடிதம் கொடுக்கிறேன்னு சொல்ற பரதேசிங்கள ஊருக்கு ஊர் செருப்ப கழட்டி அடிச்சா, கட்சிகாரனுங்களுக்கு தானா அண்டை கட்டும்.
தேர்தல் வந்துட்டா போதும் மஞ்ச துண்டோட கிளம்பிட வேண்டியது.

கள்ளனுக்கும் நமக்கும் ஆகாதே

கள்ளனுக்கும் நமக்கும் ஆகாதேன்னு பேத்தனமா பேசுறத விட்டுட்டு எவன் இன்னைக்கு நிலைமையில வாய்ப்பு தரானோ அவன்கூட போய் பொழைக்க பாரு....
கண்ணு முழிச்சா எதிர்த்த வீடு அவனோடதுதான், சண்டையோ வம்போ பொழுதுக்கும் போட்டுகிட்டு இரு...
வாய்ப்ப விடாத... எவன்னே தெரியாதவனவிட தெரிந்தவன் எதிரி ஆனாலும் பரவாயில்ல சேர்த்து போ....

இத இப்ப சொல்றதுதான் சரியா இருக்கும்..

இத இப்ப சொல்றதுதான் சரியா இருக்கும்..
தேர்தல் நேரத்துல கிளம்பிவர சங்கம், கட்சி, மயிரு மட்டை எல்லாம் எவனும் மதிக்கவே கூடாது. இவனுங்க யாரு ? என்ன மயிர புடுங்கிட்டானுங்கன்னு வரிசையில போய் ஆதரவு கடிதம் கொடுக்குறதுக்கு ? நேத்துகூட ஒரு கும்பல் போய் எடப்பாடிய பார்த்துட்டு வந்திருக்கும்போல.....
தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அரசியல்கட்சியில் இருக்கும் முத்தரையர்களுக்கு வாய்ப்பு வேண்டும், நீங்கள் வாக்களிக்கும் தொகுதியில் எந்தகட்சியாவது அப்படி ஒரு வாய்ப்பை உங்கள் சமுதாயத்தினை மதித்து அளித்தால் அந்த நபரை கேள்வி கேட்காமல் ஆதரிக்க வேண்டும், அந்த நபர் சரியானவராக இல்லாதபட்சத்தில் சாதி ரீதியான விமர்சிக்காமல் அரசியல் சார்ந்து விமர்சனம் செய்துவிட்டு பிற வேட்பாளர்களை ஆதரித்துக்கொள்ளலாம்.. மொத்தமாக நீங்கள் வசிக்கும் தொகுதியில் உங்கள் சமூகத்தை அரசியல்கட்சிகள் புறக்கணிக்கும்போது ஒட்டுமொத்தமாக தமிழகம் தழுவிய அளவிற்கு ஏதேனும்கட்சி வாய்ப்பளித்திருந்தால் அதனை காரணமாக வைத்து ஆதரிக்கலாம்...
இதைவிடுத்து எவனோ சங்கதலைவர் ஆதரவு கடிதம் கொடுத்தான், புடிங்கினான்னு வெட்டி சத்தம் போட்டா ஆசிட்ட வாங்கி அடிச்சுவிட்டுடனும்.
பரதேசி பசங்க தேர்தல் வந்தாலே ஆதரவு கடுதாசி போட்டு காசு பார்க்கதான் நிக்கிறானுங்க...

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

அதிகாரமிக்க பதவிகளை பெற உழையுங்கள்

நாட்டின் ராணுவத்தை இயக்குவது பிரதமர், இராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற அதிகாரமிக்க பதவிகளே...! அந்த பதவிக்கு அருகிலாவது செல்ல குறைந்தபட்ச தேவை நாடாளுமன்ற பிரதிநிதிதுவம்..! ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வக்கற்றவர்கள் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்றோ புலம்புவதால் ஆக போவது என்ன ?

அதிகாரமிக்க பதவிகளை பெற உழையுங்கள்

#MP4Mutharaiyar

புத்தியுள்ளவர்களின் பரிசீலனைக்காக....

இப்பகூட கூட்டணி அளவுக்குதான் பேச்சுவார்த்தை போய்கிட்டு இருக்கு சாதியம் பேசுறவனுங்க கொஞ்சம் அழுத்தமா கிடைக்கும் இடங்களில் (சமூகவலைதளங்களில்), கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முன்வந்தால் குறைந்தபட்ச பரிசீலனையின் மூலம் ஒன்றோ, இரண்டோ தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கு, வெட்டிகதையும், அதிகாரமற்ற விசயங்களில் ஆக்ரோசமும் விழலுக்கு நீராய் போகும்.

புத்தியுள்ளவர்களின் பரிசீலனைக்காக....

போலோ பாரத் மாதாகி ஜே...!!

தாக்குதலுக்கு உத்தரவோ, நடவடிக்கையோ எடுக்க வேண்டியவனெல்லாம் கூட்டணி, தேர்தல், சீட்டு எண்ணிக்கைய பத்தி பேசி "உனக்கு எரியுதா ? அதே மாதிரிதான் எனக்கும் எரியுதுன்னு காமடி பன்னிக்கிட்டு இருக்கானுங்க"
ஓட்டு போடுறத தவிர ஒரு அதிகாரமும் இல்லாதவன் பொங்கிகிட்டு இருக்கானுங்க‌
அதுலயும் மனுசனா மதிச்சு தேர்தல்ல போட்டியிட ஒரு வாய்ப்புகூட இல்லாத சாதிகாரனுங்க அலும்பு அதுக்கும் மேல இருக்கு, கேட்டா தேசியத்தை தூக்கி நட்டமா வைக்கபோற மாதிரி நம்மகிட்டயே சண்டைக்கு வாரானுங்க...
எதுக்கு வம்பு போலோ பாரத் மாதாகி ஜே...!! 🤣

வியாழன், 14 பிப்ரவரி, 2019

பரிதாப சாதி..!!

பரிதாப சாதி..!!
தமிழகம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது, தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட்டு பேரங்கள் நடந்துகொண்டு இருக்கிறது, இந்த எல்லா செய்கைகளுக்கு பின்னால் எந்த சாதிக்கு எவ்வளவு இடங்களில் வாய்ப்பளிப்பது என்பதுவரை முடிவுகள் எடுத்து வேகமெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது தமிழக அரசியல்....
இந்த எந்த பரபரப்பை பற்றியும் பெரிய புரிதலோ, உணர்வோ இல்லாமல் தமிழகத்தில் ஒரு சாதி முடங்கி கிடக்கிறது என்றால் அது முத்தரையர் சாதியாகதான் இருக்க முடியும்...
அரசியல் கோமாளிகள், சங்க புரோக்கர்கள் என்று அரசியல் பார்வையே இல்லாத கோமாளிகளால் சமூகத்துக்கு விடிவு கிடைத்துவிடும் என்று ஒரு பெரும்பாண்மை சமூகம் பகல் கனவு காண்கிறது.
இப்போதைய அரசியல் நடவடிக்கைகளை கவணித்தவரை கடந்த முறை கிடைத்த ஒரே ஒரு தொகுதியும் இந்த முறை ந... போகும் என்றே தெரிகிறது, அதாவது பிரதானமான எந்த அரசியல்கட்சியும் ஒரு தொகுதியில்கூட முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தபோவதில்லை.... இதுதான் எதார்த்த கள நிலவரம்.
திராவிட கட்சிக்கு பல்லக்கு தூக்க ஒரு கோஷ்டி, ஹிந்துத்துவா பேசும், தேசியம் பேசும் கட்சிகளுக்கு சால்ரா அடிக்க இன்னுமொரு கோஷ்டி என்று அரசியல் தரகர்களின் ஆதிக்கத்தில் உள்ள வாய்ப்புகளை உதறிதள்ளிவிட்டு அனாதையாக நிற்கிறது ஒரு சாதி.....!!
கிட்டதட்ட 15 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் ஒரு சாதி, ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரும்பிம்பங்கள் இல்லாத, அடுத்த தலைமுறை தலைவர் அல்லது முதல்வர் யாராக இருக்கும் என்பதை கணிக்க முடியாத அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில்கூட தனக்கான அரசியலை வெல்ல முடியாத ஒரு சாதியாக பழம்பெருமை பேசி திரிகிறது.
ஓட்டுக்கு நூறும், ஒரு குவாட்டரும் போதுமான சமூகத்திற்க்கு அரசியல் ஒரு வேண்டாத வேலைதான்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

தெரிந்துகொள்ள ஒரு வரலாறு....

தெரிந்துகொள்ள ஒரு வரலாறு....
திருச்சி செல்வராஜ் (திமுக) கிட்டதட்ட 40 வருடத்துக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்.
புதுக்கோட்டை ராஜா பரமசிவம் (அதிமுக) கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுபினர்
பெரம்பலூர் மருதைராஜா (அதிமுக) இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆக இந்த கணக்குபடி அடுத்த 20 வருடங்களுக்கு முத்தரையர்களுக்கு வாய்ப்பு கிடையாது. 🤣🤣🤣
#அதுவரை பிரதான கட்சிகளுக்கு ஆதரவு மட்டும் கொடுத்து பெட்டி வாங்கி கொள்ளவும்

தெரிந்து கொள்ள வரலாறு...

தெரிந்து கொள்ள வரலாறு...
திமுக ஒருமுறையும், அதிமுக இருமுறையும் நாடாளுமன்றத்துக்கு வேண்டாவெருப்பாக முத்தரையர்களை மக்களவை வரை அனுப்பி இருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினராக கோடி எண்ணிக்கையில் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் முத்தரையர்களில் ஒருவர் கூட இருந்ததில்லை....
காங்கிரஸூம், பாஜகவும் அப்படி ஒரு வாய்ப்பைகூட முத்தரையர்களுக்கு கொடுத்ததில்லை என்பதும் வரலாறு...

தகவலுக்காக...

தகவலுக்காக...
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் தொகுதிகளில் முதல் 7 தொகுதியில் அறுதி பெரும்பாண்மையாகவும் இதர தொகுதிகளில் குறிப்பிடதக்க ஓட்டுவங்கியாகவும் இருக்கிறார்கள் முத்தரையர் மக்கள்.

தெரிந்து கொள்ள வரலாறு...

தெரிந்து கொள்ள வரலாறு...
திமுக ஒருமுறையும், அதிமுக இருமுறையும் நாடாளுமன்றத்துக்கு வேண்டாவெருப்பாக முத்தரையர்களை மக்களவை வரை அனுப்பி இருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினராக கோடி எண்ணிக்கையில் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் முத்தரையர்களில் ஒருவர் கூட இருந்ததில்லை....
காங்கிரஸூம், பாஜகவும் அப்படி ஒரு வாய்ப்பைகூட முத்தரையர்களுக்கு கொடுத்ததில்லை என்பதும் வரலாறு...

#MP4Mutharaiyar

அவரவர் மக்கட் தொகைக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம். அந்த வகையிலே முத்தரையர் சமூகத்தின் மக்கட் தொகைக்கேற்ப அவர்களது சமூகத்தினர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிப்பதே, சரியான ஜனநாயகப் பார்வையாக இருக்கும்.
அன்பர் சஞ்சய்காந்தி அம்பலக்காரர் தகவலின் படி, கீழ்கண்ட தொகுதிகளில், தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு, முத்தரையர் சமூக மக்கள் வாழ்கின்றனர்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் தொகுதிகளில் முதல் 7 தொகுதியில் அறுதி பெரும்பாண்மையாகவும் இதர தொகுதிகளில் குறிப்பிடதக்க ஓட்டுவங்கியாகவும் இருக்கிறார்கள் முத்தரையர் மக்கள்.
பதிவு : Ganeshan Gurunathan Manoranjan

நாடாளுமன்ற தேர்தலில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு கேட்டு சமூக வலைதளத்தில் என்ன செய்யலாம்...?

நாடாளுமன்ற தேர்தலில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு கேட்டு சமூக வலைதளத்தில் என்ன செய்யலாம்...?
என்ற ஹஸ்டாக்கை இடும் ஒவ்வொரு பதிவிலும் எழுதி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கலாம்
யோசனை : திரு. Ganeshan Gurunathan Manoranjan

#MP4Mutharaiyar

Sanjaigandhi Ambalakkarar கொடுத்திருக்கும் லிஸ்டில் இருந்து குறைந்தபட்சம்
பெரம்பலூர், சிவகங்கை தொகுதிகளை முத்தரையர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கவேண்டும்.அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட சமூகம்.
தஞ்சாவூர்- (பட்டுக்கோட்டை,பேராவூரணியில் முத்தரையர் அதிகம்)
திருச்சி- (ஶ்ரீரங்கம்,புதுக்கோட்டை தொகுதியில் கணிசமானவர்கள்)
பெரம்பலூர்(பெரும்பாலான தொகுதிகளில் அதிகம்)
சிவகங்கை- திருமயம்,ஆலங்குடி மிக அடர்த்தி, திருப்பத்தூர்,காரைக்குடியில் கணிசம்.
கரூர்-விராலிமலையில் அதிகம்.
மற்றவை தெரியாது.
அவரவர் மக்கட் தொகைக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம். அந்த வகையிலே முத்தரையர் சமூகத்தின் மக்கட் தொகைக்கேற்ப அவர்களது சமூகத்தினர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிப்பதே, சரியான ஜனநாயகப் பார்வையாக இருக்கும்.
அன்பர் சஞ்சய்காந்தி அம்பலக்காரர் தகவலின் படி, கீழ்கண்ட தொகுதிகளில், தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு, முத்தரையர் சமூக மக்கள் வாழ்கின்றனர்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் தொகுதிகளில் முதல் 7 தொகுதியில் அறுதி பெரும்பாண்மையாகவும் இதர தொகுதிகளில் குறிப்பிடதக்க ஓட்டுவங்கியாகவும் இருக்கிறார்கள் முத்தரையர் மக்கள்.
பதிவு : அண்ணன் Lenin Ayyasami

#MP4Mutharaiyar

மொத்த இந்தியாவிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கை கொண்ட சாதிகளில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை ஒரேஒரு பிரதிநிதியை அனுப்ப வக்கற்ற ஒரே சாதி "முத்தரையர்" மட்டும் தான்
பெருமை கொள்வோம் 🤣

முத்தரையர்களால் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய தொகுதிகளான

முத்தரையர்களால் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய தொகுதிகளான
1. திருச்சி தொகுதியில் : மீண்டும் ப.குமார் (கள்ளர்) அவர்களுக்கே அதிமுக வாய்ப்பளிக்கும், திமுக வழக்கம்போலவே மதிமுக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை தள்ளிவிட்டுவிடும் அதில் பணம்படைத்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அந்த கட்சிகள் அறிவிக்கும், முத்தரையர்களுக்கு பட்டை நாமம்.
2. தஞ்சாவூர் தொகுதியில் : முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகனுக்கு (கள்ளர்) அல்லது அவரது பினாமி, உறவினர்களில் ஒருவருக்குதான் வாய்ப்பு, திமுகவிலும் கள்ளர் சமூகத்துக்கே வாய்ப்பு வழங்குவார்கள், முத்தரையர்கள் பரிசீலனையில் கூட கிடையாது.
3. பெரம்பலூர் தொகுதியில் : அப்படி ஒருவர் தங்கள் கட்சியில் எம்.பியாக இருந்ததே (மருதைராஜா) தெரியாத காரணத்தால் அதிமுக இந்த முறை போட்டியில் இருக்காது கூட்டணி கட்சி சார்பில் பச்சமுத்துவே (உடையார்) போட்டியிடுவார், திமுக சார்பில் ரெட்டியார் சமூகத்துக்கே வாய்ப்பு.
4. கரூர் தொகுதியில் : கொங்கு வேளாளர் சமூகத்துக்கே வாய்ப்பு.
5. சிவகங்கை தொகுதியில் : திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரமே (செட்டியார்) வேட்பாளர், அதிமுக கூட்டணியில் ஹச்.ராஜாவே போட்டியிடுவார்.
6. மதுரை தொகுதியில் : சொல்லவே வேண்டாம்.
7. இராமநாதபுரம் தொகுதியில் : இஸ்லாமியர்களுக்கே வாய்ப்பு
முத்தரையர் சமுதாயம் செரிந்து வாழும் இந்த தொகுதிகளின் இன்றைய அரசியல் சூழ்நிலை இதுதான், எல்லா முத்தரையர்களுக்கும் பட்டை நாமம்தான்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி

"விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்" முத்தரையர்களின் ஓட்டு வங்கி அதிகம் குறிப்பாக இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம்,திருமங்கலம்,அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாகவும் சிவகாசி,விருதுநகர் தொகுதிகளில் கணிசமாகவும் எங்கள் ஓட்டு வங்கி உண்டு.
தகவல்: கரு.மகேஷ் ராயர்

தேனி நாடாளுமன்ற தொகுதி

தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் முத்தரையர்கள் ஓட்டு வங்கி குறிப்பிடும்படி உள்ளது குறிப்பாக நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாகவும் உசிலம்பட்டியில் பிரமலைக்கள்ளர் சமூகத்திற்க்கு அடுத்தப்படியாகவும் ஆண்டிப்பட்டியிலும் குறிப்பிடும்படியான ஓட்டு வங்கியுடனும் போடி,கம்பம்,பெரியகுளம் தொகுதிகளில் கணிசமான ஓட்டு வங்கி உண்டு.
தகவல் : கரு.மகேஷ் ராயர்

மணிமண்டபம்

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம்

கிட்டதட்ட 23 ஆண்டுகளாக "முத்தரையர்" மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேறவே இல்லை...
1996 ஆம் ஆண்டு அமைத்த சிலையோடு அரசின் பார்வை நின்றுபோனது, இன்று புதிதாக ஒரு அறிவிப்பினை (பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம்) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
அவருக்கு நன்றிகள்...
அதே நேரம் தேர்தல் நேர அறிவிப்பாக இது நின்றுவிடாமலும், தேர்தலில் முத்தரையர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பிரதிநிதிதுவத்தை மறுப்பதாகவும் இருக்க கூடாது.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைய யார் காரணம்... ?

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைய யார் காரணம்... ?
நிச்சயம் இதற்காக உரிமை கொண்டாட நிறைய பேர் வருவார்கள், அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.., கிட்டதட்ட 40 வருடங்களாக "முத்தரையர் சங்கம்" இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறது (இப்ப இருக்க புரோக்கர் கும்பல் இல்லை), அதன் பின்னர் தோன்றிய அனைத்து சங்கங்களும் இதே கோரிக்கையை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தீர்மானமாக நிறைவேற்றுவது வழக்கம், ஆக...
இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது இது வேண்டுமானால் எடப்பாடியாரின் இராஜதந்திரமாக எடுத்துக்கொள்ளலாம். 

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

தேவை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்

முத்தரையர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டாலே ஒரு கோடி ரூபாயை தாண்டி தொகை வரும் ஆக ஒரு கோடி ரூபாயில் மணி மண்டபம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு என்பது மகிழ்ச்சியான செய்திதானே தவிர அது மட்டுமே போதுமானதல்ல....
தேவை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்... மறந்துடாதிங்க எடப்பாடியாரே..

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

சாதியை அறிவோம்..., அரசியல் பயில்வோம்...!!


கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை - வேளாளர்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் - முத்தரையர்
இரட்டைமலை சீனிவாசன் - பறையர்
வி.கே.பழனிச்சாமி கவுண்டர் - கொங்கு வேளாளர்
ஏ.டி.பன்னீர் செல்வம் - கிருஸ்தவர்
ஒண்டிவீரன் - அருந்ததியர்
வீரன் சுந்தரலிங்கனார் - பள்ளர்
வீரன் அழகுமுத்துக்கோன்- யாதவர்
ம.பொ.சிவஞானம் - கிராமணி அல்லது நாடார்
சி.ப.ஆதித்தனார் - நாடார்
இன்று தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு சாதியை சேர்ந்தவர்கள் அவரவரின் அடையாளமாக கருதும் சாதிய முன்னோடிகளுக்கு மணிமண்டபம், சிலை, அரசு விழா என்று ஒரே கல்லில் ஆயிரக்கணக்கான மாங்காய்களை விழ்த்தி இருக்கிறார்.
இதில் அதிகமான கொண்டாட்ட மனநிலையில் இருப்பது முத்தரையர்கள் மட்டுமாகதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்,கொண்டாட்டம் சரிதான் ஆனாலும் ?
மேலே குறிப்பிட்டு இருக்ககூடிய சமூகங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகைப்பாட்டில் வரும் அருந்ததியர், பள்ளர், பறையர் சமூகங்களுக்கு தன்னிச்சையாகவே நாடாளுமன்ற பிரதிநிதிதுவம் (தனி தொகுதி அடிப்படையில்) கிடைத்துவிடும், இதர சமூகங்களில் கொங்கு வேளாளர், நாடார், யாதவ சமூகங்களுக்கும் எண்ணிக்கைக்கும் அதிகமாகவே பிரதிநிதிகள் கிடைத்துவிடுவார்கள் என்பது கள எதார்த்தம்.
ஆனால் மேற்சொன்ன எல்லா சமூங்களைவிடவும் எண்ணிக்கையில் பெரும்பாண்மையாக இருந்தும் நாடாளுமன்றத்துக்குள் ஒரே ஒரு உறுப்பினரைகூட அனுப்ப வக்கற்று நிற்கும் முத்தரையர்கள் அதீத போதையில் (மணிமண்டம்) திளைப்பது சரிதானோ...??
ஆனாலும் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். 😍💥

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

அமமுக

திமுகவும், அதிமுகவும் வேட்பாளர் நிறுத்தாதபட்சத்தில் (அதாவது கூட்டணிக்கு தள்ளிவிடும்பட்சத்தில்) திருச்சி தொகுதி அமமுகத்துக்கே கிடைக்கும்.
திமுகவும், அதிமுகவும் யாரை வேட்பாளராக அறிவிக்கிறார்கள் என்பதை பொறுத்து தஞ்சாவூரும் தினகரனின் அம்முகத்துக்கே வாய்ப்பு அதிகம்.
திமுக ரெட்டியாரையும், அதிமுக கூட்டணியில் உடையாரையும் வேட்பாளராக நிறுத்தும்பட்சத்தில் அமமுக பெரம்பலூரின் தொட்டியம் ராஜசேகரை (முத்தரையர்) நிறுத்தி எளிதாக வெல்லும்.
நாடாளுமன்ற தேர்தல்

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

அரசியல் கட்சிகளில் வாய்ப்பு

திமுகவில்....
அதன் குறுநில மன்னர்களை தாண்டி புதிய நபர்களுக்கு வாய்ப்பளிக்காது, ஒரே வேட்பாளர் பட்டியல்தான் தேர்தல் காலங்களில் தூசி தட்டி அங்கே இங்கே சிறிய திருத்தங்களோடு வெளியிடுவார்கள், இதில் முத்தரையர்கள் பெரிதாக எதிர்பார்ப்பது வீண், கடந்த தேர்தலில் பெரம்பலூரில் அறிவித்த சீமானூர் பிரபு இப்போது இல்லை என்பதும், மீதி அந்த கட்சியில் இருக்ககூடிய முத்தரையர்கள் அனைவரும் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதும் அந்த கட்சிக்கு சாதகமான விஷயம் அதனால் அவர்களின் அறிவிப்புக்காக காத்திருப்பது வீண்.
அதிமுகவில்...
இந்த ஒரு இடம்தான் உரிமையோடு நாம் எட்டிபார்க்ககூடிய இடம், இங்கேதான் திமுகாவை தாண்டிய நம்முடைய‌ அடிமுட்டாள்கள் சங்கமித்து இருக்கிறார்கள், வாய்ப்பை பெறும் திறமை கொஞ்சம்கூட கிடையாது, நிகழ்காலத்தில் மத்திய மாவட்டங்களில் தினகரனால் பெரிய சரிவை சந்தித்து இருக்கும் இந்த கட்சியில் கள்ளர் சமூகத்தின் ஆதரவை முற்றிலும் இழந்து நிற்கும் அதிமுகவை மிரட்டியே பணியவைக்க முடியும், இன்றைய நிலையில் மத்திய மாவட்டங்களில் அதிமுகவின் நம்பிக்கைக்குறிய ஒரு பெரிய ஓட்டு வங்கி முத்தரையர்கள்தான், ஆனால் அடிமுட்டாள்களாக இருக்கும் அதிமுக முத்தரையர்களின் எத்தனை பேர் விருப்பமனு கொடுத்தார்கள் என்பதே கவலைக்குறிய செய்தி.
காங்கிரஸ்...
உலக அயோக்கியர்களின் கூடாரம் நம்பவைத்து கழுத்தறுக்கும் கயவர் கூட்டம் ஒரு வாய்ப்பும் தராது, அங்கு கோஷ்டி தலைவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
பாஜக...
அதே உலக அயோக்கியர்களின் கூடாரம்தான் இது இன்று வந்தவனுக்காக நேற்று இருந்தவனையெல்லாம் வெளியே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒரு வாய்ப்பும் இல்லை...
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

வீட்டில் குவிந்து கிடக்கும் 400 ஆண்டு கால ஓலைச்சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு

முத்தரையர்களின் வரலாற்றை தேடி ஓடும் செல்லங்களே... இந்த ஓலைசுவடிகள் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்ய முன்முயற்சி எடுங்கள்

---------------------------------------------------------

வீட்டில் குவிந்து கிடக்கும் 400 ஆண்டு கால ஓலைச்சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு


வியாழன், 17 ஜனவரி, 2019

வலையராதினிப்பட்டி முத்தரையர் சமூகத்தினர், விஷ்ணு, ராமன், சிவன் என, மூன்று பிரிவினராக உள்ளனர்

வலையராதினிப்பட்டி முத்தரையர் சமூகத்தினர், விஷ்ணு, ராமன், சிவன் என, மூன்று பிரிவினராக உள்ளனர்.

செய்திகளை வாசிக்க : தினமலர்

புதன், 9 ஜனவரி, 2019

சாத்தம்பூதி எனும் இளங்கோவதி முத்தரையன் மற்றும் முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட குடைவரைகோவில்...

சாத்தம்பூதி எனும் இளங்கோவதி முத்தரையன் மற்றும் முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட குடைவரைகோவில்...
கிரானைட் நிறுவனங்களால் வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சியிருக்கும் ஒன்பது குன்றுகள், விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையிலான வீடுகள், பாறைகள் மீது வளர்ந்திருக்கும் சிறுசிறு புதர்கள், குன்றுகளில் ஆங்காங்கே காணப்படும் சுனைகள், அவற்றின் கரைகளில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள், எப்போதாவது வந்து செல்லும் ஒரு சில பேருந்துகள்... இவையே, 1100 ஆண்டு கால வரலாற்றுப் பழைமைக்கும் கலைச் செழுமைக்கும் அடையாளமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தா மலையின் தற்போதைய அடையாளங்கள்.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 20 - கி.மீ தொலைவில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்று ஒன்பது வகையான மலைக் குன்றுகளால் சூழப்பட்ட கிராமம்.  கி.பி 9 - ம் நூற்றாண்டு காலத்தில் தஞ்சையிலிருந்து முத்தரையர்கள் ஆட்சி செய்தபோது அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் பிறகு சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும் இருந்த பகுதி. 
இந்தக் கிராமத்தின் பழைய பெயர் ‘நகரத்தார் மலை’. நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்,  என்று அழைக்கப்படும் வணிகர்கள் வாழ்ந்த பகுதி இது. ‘நகரத்தார் மலை’ பின்பு மருவி ‘நார்த்தா மலை’ ஆனது.  முத்தரையர்கள், சோழர் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் இந்த நகரத்தார் மலைதான் வாணிபத்தின் முக்கியமான பகுதியாக விளங்கியது. ‘நானாதேசத்து ஐநூற்றுவர்’ எனும் வணிகக் குழுவினர் இங்கு தங்கித்தான் வாணிபம் செய்திருக்கிறார்கள். 
நார்த்தா மலை
நார்த்தாமலையின் முக்கிய அடையாளம் ‘விஜயாலய சோழீச்சுவரம்’ கோயில். இந்தக் கோயில், நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு அருகே மேலமலைக் குன்றின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. மேலமலையின் அடிவாரத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவுக்கு  மேலேறிச் சென்றால் தலைவிரி சிங்கம் (தலையருவி சிங்கம்) என்ற சுனையைக் காணலாம். இந்தச் சுனையில் சுமார் 20 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று நீருக்குள் மூழ்கியிருக்கிறது. அதன் அருகிலேயே 1871 - ம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு சிவலிங்கத்தைத் தரிசித்த செய்தி கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நீருக்குள் மூழ்கியபடி அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கிவிட்டு, மேலேறிச் சென்றால் விஜயாலய சோழீச்சுவரத்தைக் காணலாம். இந்த ஆலயம் முற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது. 
ஓவியங்கள்
பிரதானக் கோயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் கம்பீரத்துடன் வீற்றிருக்க, நுழைவாயிலில் அழகான துவாரபாலகர்கள். உள்ளே கருவறையில்  விஜயாலய சோழீச்சுவரர் அருள்பாலிக்கிறார். கோயில் மண்டபத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானைச் சுற்றி வருவதற்குச் சாந்தார அறை காணப்படுகிறது. கருவறை விமானம் வேசரக் கலைப்பாணியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. விமானத்தில்  சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. தமிழகத்தில் முழுமையான வேசர பாணியில் அமைக்கப்பட்ட கோயில் இதுவெனக் கூறலாம். 
இந்தக் கோயிலை முதலில் சாத்தம்பூதி எனும் இளங்கோவதி முத்தரையன் என்னும் மன்னர் கட்டினார். பின்பு மழை மற்றும் இடியினால் ஆலயத்தின் சில பகுதிகள் சிதைந்துவிட விஜயாலயன் காலத்தில் மல்லன் விதுமன் எனும் தென்னவன் தமிழ்திரையன் என்பவனால் இந்தக் கோயில்  மீண்டும் இப்போதிருக்கும் வடிவுடன் புனரமைக்கப்பட்டது.
ஆலயத்தில்  ஆறு சிறு சிறு சந்நிதிகள் காணப்பட்டபோதும் இவற்றில் சிலைகள் எதுவும் தற்போது காணப்படவில்லை. சிலை திருடர்களின் திருட்டுக்குத் தப்பி கருவறையில் வீற்றிருக்கும் விஜயாலய சோழீச்சுவரரும், நந்தியும் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறார்கள். 
கோயிலுக்கு முன்பு, அதாவது நந்தியெம்பெருமானுக்குப் பின்புறத்தில் இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. முதலாவதாக ‘பதிணென்பூமி விண்ணகரம்’ எனும் திருமால் குடைவரைக் காணப்படுகிறது. இது முதலில் சமணர் குடைவரையாக வெட்டப்பட்டுப் பிறகு திருமால் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் குடவரையின் மண்டபத்தை யானை, யாளி, சிங்கம் ஆகியவை வரிசையாகத் தாங்குவதைப் போன்று விண்ணகரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோயில் கருவறையில் சிலைகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தக் குடைவரையின் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர திருமால் சிலைகள் காணப்படுகின்றன. தோற்றத்தில் இந்தத் திருமால் சிலைகள்
நார்த்தாமலை
அனைத்தும் ஒன்று போலக் காட்சியளித்தாலும் உற்றுக் கவனிக்க இவை  அசையும் காட்சி - மோஷன் பிக்சர் (Motion picture) வகைமை என்பதை அறிந்துகொள்ளலாம். திருமால் தனது சுதர்சன சக்கரத்தை ஏவும் காட்சிதான் இங்கே தத்ரூபமாக வெட்டப்பட்டுள்ளது. முதல் சிற்பத்தில் திருமாலுடைய கரத்தில் மேலிரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் இருக்கும். ஆனால், அடுத்தடுத்த சிலைகளில் திருமாலின் கரத்திலிருந்து சங்கு மற்றும் சுதர்சன சக்கரங்கள் கரத்திலிருந்து விலகிச் செல்வது தெரியும். அதாவது திருமால் சுதர்சன சக்கரத்தை ஏவுவதைப் போன்று உருவாக்கப்பட்ட ’மோஷன் பிக்சர்’ சிலைகள்  இவை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலைச்சிறப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். 
இதற்கு அருகே உள்ளது ‘பழியிலி ஈசுவரம்’ எனும் சிறிய குடைவரைக் கோயில். இது ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ என்பவனால் கட்டப்பட்டது.  இங்கு லிங்கம் மற்றும் துவாரபாலகர்கள் சூழக் கருவறைக்குள் 'பழியிலி சிவனார்' அருள்புரிகிறார். இந்தக் குடைவரைக்கு அருகில் முடிக்கப்படாத இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. இங்கு சிவலிங்கங்களுக்குத் தனியாக எந்த வழிபாடுகளும் நடத்தப்படுவது இல்லை. கிராமத்து மக்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டுச் செல்கிறார்கள். நகரத்தார் வருடத்துக்கு ஒருமுறை நார்த்தாமலை வந்து விஜயாலய சோழீச்சுவரரைத் தரிசித்து வணங்கிச் செல்கிறார்கள்.
நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், கடம்பர் கோயில் ஆகிய கோயில்களும் புகழ்பெற்றவை. 
நன்றி : விகடன்