Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 30 டிசம்பர், 2010

புதன், 29 டிசம்பர், 2010

முத்தரையர் சுரேஷ் தனது facebook ல் பதிவு செய்தது

Muthirayar Suresh
facebook

இனத்தை வெளிபடுதலமா?
11 மணி நேரம் முன்பு ·விருப்பம்விருப்பமின்மை · கருத்து · (1) பின்னூட்டங்களை பார்வையிடுகபின்னூட்டம் (1) மறை



Muthirayar Suresh எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்நது கொள்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு எனபனி நிமதமாக ஒருநிறுவனத்துக்கு சென்று இருந்தேன் .



அதில் ஒரு எடு படி செய்யும் ஒரு முதியவரை பார்த்து எனிடம் என் நண்பர் கூறினார், இவர் உங்கள் ஏரியா என்றார். பிறகு ...நான் ஓய்வாக இருக்கும் போது அவரிடம் நலம் விசரிதன் அவர் எனிடம் நீங்கள் எந்த சாதி என்றார் . நான் அம்பலக்காரர் என்று கூறினேன்



அதற்கு அவர் உங்கள் இனத்தில் உங்களை போல் படித்தவர் இருகிறர்களா என்று வியந்தார்.



எனக்கு கோவம் வந்தது .பிறகு நினைத்தேன். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று.



என்னெனில் அதே நிறுவனத்தில் நம் இனத்தவர் உயர் அதிகாரியாக இருக்கிறார், எனக்கு தெரியும். அவருக்கு தரியவில்லை!



காரணம் நம் இனத்தவர் உயர்ந்த இய்டதிற்கு சென்ற பிறகு வேறு ஒரு சாதியை சொன்னால் தான் மதிப்பு என்று நினைகிறார்கள்



இதன் காரணமாக நாம் சிருமைபடுகிறோம்



நாம் நமைபற்றி உண்மை சொல்வதே , நம் இனத்துக்கு செய்யும் உதவி .



நாம் யோசனைபன்ந தேவைeல்லை எல்லா ஊர், நகரம், மற்றும நிருவனங்களில் நம் இனத்தவர் இருகிர்ரர்கள். நாம் திஎரியமாக நம்மை வெளிபடுதல்ம்.



இதன் மூலம் நாம் நம் இனத்தவரை அடையாளம் காணமுடியும் ,மற்ற நம் சகோதர இனத்தவரும் நமைபற்றி உயர்வாக நினப்பார்கள..........

சனி, 25 டிசம்பர், 2010

இன்று குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் சேவை சாதிப்பு- தினமலர்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் இன்று தோன்றி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.



ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த ஆறாம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கடந்த 17ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சொர்க்கவாசலை தரிசித்தனர்.



தற்போது, ராப்பத்து விழா நடந்து வருகின்றது. விழாவின், எட்டாம் நாள் விழாவான வேடுபறி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் மாலை 4.30 மணிக்கு சந்தன மண்டபத்தில் இருந்து புறப்படுகின்றார். மாலை 5.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் வையாளி கண்டருள்கிறார்.



முத்தரையர் குல மரபில் வந்தவரும் ஆழ்வார்களில ஒருவருமான திருமங்கை ஆழ்வார் கோவில் திருப்பணி செய்வதற்காக வழிபறியில் ஈடுபட்டு வந்தான். இதை தவறு என்று உணர வைக்க மகாவிஷ்ணு திருமங்கை முன் தோன்றி ஞானம் பெற்ற நிகழ்ச்சியும் ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010,03:00 IST


இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீரெங்கநாதர், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அலங்காரம் அமுது செய்யதிரையும், அரையர் சேவையும் நடந்தது. உபயக்கார மரியாதைக்கு பிறகு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.



ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்



மூலவர் : நரசிம்மர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருக்குறையலூர், சீர்காழி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு




பாடியவர்கள்:

-


திருவிழா:

நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி


தல சிறப்பு:

நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர் - 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.


போன்:

+91- 94435 64650, 94430 07412.


பொது தகவல்:

சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு இத்தலத்தின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.இதன் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர்.குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.




பிரார்த்தனை
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.



தலபெருமை:
தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.அமாவாசை நாட்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார், வைணவ ஆச்சாரியார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.




தல வரலாறு:

சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

ஆழ்வார் அவதார தலம்: திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதி அகோபிலம்: தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். "திருப்பல்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும். மிகவும் பழமையான இத்தலத்தை "ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம க்ஷத்திரம் என்பதால் "தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள்.பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.




சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.



நன்றி: தினமலர்

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில்



மூலவர் : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர் : திருவாலி நகராளன்
அம்மன்/தாயார் : பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : இலாட்சணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆலிங்கனபுரம்
ஊர் : திருவாலி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

மங்களாசாஸனம்
குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை உரையாயே.

-திருமங்கையாழ்வார்



திருவிழா:

வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று


திறக்கும் நேரம்:


காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்


போன்:

+91-4364-256 927, 94433 72567


பொது தகவல்:

இத்தலத்தை சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன். திருநகரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன.

இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும். இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.




பிரார்த்தனை
ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


தலபெருமை:
பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.



தல வரலாறு:
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

நன்றி: தினமலர்

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்



மூலவர் : பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர் : பத்தராவிப்பெருமாள்
அம்மன்/தாயார் : என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
தல விருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : வருண புஷ்கரணி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தின்னனூர்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்


ஏற்றினை இமயத்து ளெம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய கூற்றினை குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினைப் புணலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்.

-திருமங்கையாழ்வார்


திருவிழா:

பங்குனியில் திருவோண விழா, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருநட்சத்திரங்கள், சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.

தல சிறப்பு:

குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.


திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் -602 024 திருவள்ளூர் மாவட்டம்

போன்:

+91- 44-5517 3417


பொது தகவல்:

இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இங்கு பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் உத்பல விமானம். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சமுத்திரராஜன், வருணன் ஆவர்.

பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்கள் ஆகும்.



பிரார்த்தனை

திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.


ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.



நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

பெயர்க்காரணம்: பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு "திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் "திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், ""பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றான். அதற்கு பெருமாள், ""நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்''என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே "என்னைப்பெற்ற தாயார்' எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்''என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்' ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே' என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயில் அமைப்பு: விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.




தல வரலாறு:

திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக சென்றார். ஆனால், இத்தலத்தை பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். "நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே' என்று பாடினார் ஆழ்வார்.


இதன் பொருள்: "எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்' என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார். பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,""என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?'' என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.


நன்றி: தினமலர்

அ.தி.மு.க. Vs முத்தரையர்கள்! -பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டப் புயல்!




மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அடுத்தடுத்து ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட¢டங்களை நடத்திவரும் ஜெயலலிதா... அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையைக் கண்டித்து, பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட¢டம் என அறிவித்தார்.

அறிவித்த சில நாட்களிலேயே அதிரடியாக ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்யுமாறு ஜெயலலிதா உத்தரவிட, பட்டுக்கோட்டை அ.தி.மு.க.வினரிடையே குழப்பத் தீ!

ஆர்ப்பாட்ட அறிவிப்பு... ஆர்ப்பாட்ட ரத்து... இதற்கு இடையே என்ன நடந்தது என அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.




‘‘தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.செந்தில். இவர் கழக பணியாற்றாமல் அடிதடி, கட்ட பஞ்சாயத்து, கூலிக்கு ஆள் அனுப்புவது, கட¢சியில் கழக பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் வசூலிப்பது என கட்சிக்கு விரோதமான போக்கில் செயல்பட்டு வந்தார்.

இதனாலேயே இவர் ஒன்றியச் செயலாளராக உள்ள மதுக்கூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வசமிருந்த சேர்மன் பதவி பறிபோய்விட்டது. மதுக்கூர் காவல்நிலையத்தில் ரவுடிகள் லிஸ்டில் இவரது பெயர் முதலில் உள்ளது. மாஜி அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கில் காவல்துறை இவரை விசாரணைக்கு அழைத்தது. அப்போது காவல் துறைக்கு ஒத்துழைக்காமல், காவல்துறை தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக புகார் கூறினார். மேலும், எங்கள் தலைமைக்கு உண்மைக்கு புறம்பான தகவலைச் சொல்லி தனக்கு நெருக்கமான மன்னார்குடி வகையறாக்களின் முக்கிய புள்ளியின் மூலம் பட்டுக்கோட்டையில் 21.11.2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் தேதி வாங்கிவிட்டார்.





இந்த அறிவிப்பைக் கண்டதும் அ.தி.மு.க.வில் பெரும்பகுதி வாக்காளர்கள் உள்ள முத்தரையர் சமுதாயத்தினரும், அ.தி.மு.க.வின் முத்தரையர் அனுதாபிகளும் அதிர்ச்சி அடைந்தனர். செந்திலின் சுயநலத்துக்காக கட்சியின் பெயரில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தால் அ.தி.மு.க.வுக்கு முத்தரையர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் நிலைமை உருவானது.

இதையடுத்து கட்சி பொறுப்பில் உள்ள முத்தரை-யர்கள் அம்மாவுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் புகார் மனுக்களை அனுப்பினர். இதையடுத்து விசாரணையில் இறங்கியது தலைமை. உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்ட ‘அம்மா’ ஆர்ப்பாட¢டத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்’’ என்று சொல்லி முடித்தனர்.

மேலும், ‘‘பட்டுக்-கோட்டையில் மெகா சைஸில் வைக்கப்பட்டிருந்த பிளக்சில் அம்மா பேரவை இருப்பதுபோல, துரை.செந்தில் பேரவை என்று வைக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல். மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் செந்திலை நீக்கவேண்டும்’’ என்றும் தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.

ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண¢டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் மூர்த்தியிடம் பேசினோம்.

‘‘எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 75 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறோம். ஆனால், அ.தி.மு.க.வால் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அழிந்து கொண்டுதான் வருகிறது. வாக்களிக்க மட்டுமே முத்தரையர்களை பயன்படுத்திக் கொள்ளும் அ.தி.மு.க., எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் கொலை, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகர் இரங்கல் கூட்டத்துக்கு வந்து 3 மணி நேரம் இருந்து விட்டுச் சென்றார். ஆனால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த லோக்கல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாருமே வரவில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கை பற்றி அடிக்கடி பேசும் ஜெயலலிதா, வெங்கடாசலம் கொலை பற்றி பேசவேயில்லையே ஏன்? தொடர்ந்து முத்தரையர்களைப் புறக்கணித்து வரும் அ.தி.மு.க.வுக்கு இந்த முறை வாக்களிக்க போவதில்லை’’ என்றார் ஆவேசமாக.

இத்தனை குற்றச்சாட்டுகளின் பின்னணியாக கருதப்படும் செந்திலை அவரது செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டும் ‘சுவிட்சுடு ஆப்’ என்ற பதிலே கிடைத்தது.





இதுபற்றி, தஞ்சை மாவட்ட அ.தி.மு.க.வின் செயலாளர் வைத்திலிங்கத்திடமே பேசினோம்.

‘‘ஆளும் கட்சியின் போலீஸ் அ.தி.மு.க.வின் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் துரை. செந்தில் மீது பொய்யான புகார்களை ஜோடிக்-கிறது. இதனால்தான் கண்டன ஆர்ப்-பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் சிலரது சூழ்ச்சியால் தலைமை ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டது.

முத்தரையர்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராக நடந்ததில்லை. அதற்காக போலீஸின் பொய் புகார்களையும் சகித்துக்கொள்ள முடியாது. இதே கோரிக்கைகளுடன் இன்னும் சில கோரிக்கைகளையும் சேர்த்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்-பாட்டத்தை மீண்டும் நடத்தத்தான் போகிறோம்’’ என்றார் வைத்திலிங்கம்.

பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தை மையமாக வைத்து முத்தரையர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உரசல் உண்டாகியிருப்பது என்னவோ உண்மை!




ராம்

நன்றி: தமிழக அரசியல்

இந்த பதிவினைக் காண தமிழக அரசியல் இதழின் கிழ்க்கண்ட லிங்கில் செல்லவும் http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2169&rid=98

சனி, 11 டிசம்பர், 2010

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்… ” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.

அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.

அவசரத்திற்கு உதவிய நூல்கள்:

1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )

சனி, 4 டிசம்பர், 2010

பாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் உயிரிழப்புசுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல் - தினமலர்

கோவை:""பாம்பு கடிபட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் உயிரிழக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் உயிரிழக்கின்றனர்,'' என, சூழலியலாளர் ஆனந்த் தெரிவித்தார்.கோவை தமிழ்நாடு ஓட்டலில் "ஓசை' அமைப்பின் சார்பில் நடந்த "சூழல்-சந்திப்பு' நிகழ்ச்சியில், "பாம்புகள்-பயம் வேண்டாம்' என்ற தலைப்பில் ஆனந்த் பேசியதாவது:
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லியாக இருந்தவை, பரிணாம வளர்ச்சியில் பாம்புகளாக மாறியுள்ளன. பாம்பின் பழமையான புதைப்படிவம், சகாரா பாலைவனத்தில் உள்ளது. உலகில் 2,700 வகையான பாம்புகள் உள்ளன.



இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகள் உட்பட 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன; இவற்றில், 62 பாம்புகள் மட்டுமே, விஷத்தன்மை கொண்டவை.கட்டு விரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதரைக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை உண்டு. இந்தியாவில், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர், பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் இறக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் சாகின்றனர்.விஷப்பாம்புகள் எல்லாக் கடிகளிலும் விஷத்தை உமிழ்வதில்லை. நாகப்பாம்பை விட, கட்டு விரியனின் விஷம், 15 மடங்கு வீரியமுள்ளது. கட்டு விரியன் கடித்தால், 45 நிமிடங்களில் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். கருப்பு உடலில் சீரான இடைவெளியில் இரட்டை வெள்ளைப்பட்டைகள் இருப்பதே, இதன் அடையாளம். கண்ணாடி விரியனின் விஷம், ரத்த அணுக்களை சேதப்படுத்தும்.சுருட்டை விரியன், ஒரே கடியில் 12 மில்லி விஷத்தை உமிழும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் ராஜநாகம், தரையில் வாழும் விஷப்பாம்புகளில் மிக நீளமானது. மொத்தம் 19 அடி வரை இருக்கும்.



இது ஒரு கடியின்போது ஏழு மில்லி விஷத்தை உமிழும். ஒரு மனிதன் இறப்பதற்கு, 0.3 மில்லி விஷமே போதுமானது. இருப்பினும் இது அரிதிலும் அரிதாகவே மனிதரைக் கடிப்பதால், பெரும்பாம்புகள் பட்டியலில் இல்லை.கூர்மையான பார்வை கொண்ட ராஜநாகம், தூரமாக மனிதர்கள் வரும்போதே பார்த்து ஓடிவிடும். எனவே, இதனை "ஜென்டில்மேன் ஸ்நேக்' என்பார்கள். இரவு அல்லது அதிகாலை நேரங்களில்தான், பாம்புக்கடி ஏற்படுவதால், எந்த வகையான பாம்பு கடித்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதைக்கண்டு பிடிக்க சில அடையாளங்கள் உள்ளன.விஷப்பாம்புகள் கடித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்; கண் இமை மூடி விடும்; தூக்கம் வரும்; நாக்கு மரத்துப் போகும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால், கடிபட்ட இடத்தில் எரிச்சலும், ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்படும். விஷப்பாம்பு கடித்தால், இரண்டு பற்களின் அச்சு பதிந்திருக்கும்; விஷமற்ற பாம்பு கடித்தால், பிறை வடிவில் பற்கள் பதிந்திருக்கும்.பாம்பு கடித்தவுடன், கடித்த இடத்துக்கு மேலே கட்டுப்போடுவது, காயத்தைக் கீறி ரத்தத்தை உறிஞ்சுவது ஆபத்தானது. ரத்த ஓட்டம் தடைபட்டு, நிலைமை மேலும் சிக்கலாகும். காயத்தைக் கீறுவதால், ரத்தம் அதிகம் வெளியேறியும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து, மிக விரைவாக மருத்துவமனை செல்வதே சிறந்தது; பயப்படுத்தாமல், நம்பிக்கை ஏற்படுத்துவது மிக முக்கியம்.பாம்புகள், உட்செவிகள் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் ஒலியை உணர்கின்றன.



மெல்லிய அதிர்வைக் கூட, பாம்புகள் உணர முடியும். ஆண் பாம்பைக் கவர, பெண் பாம்பு வாசனைத் திரவத்தை உமிழும். மனிதர்களால் பெண் பாம்பு கொல்லப்படும்போது, இந்த வாசனை வெளிப் பட்டே அங்கு ஆண் பாம்பு வரும். இதை பழி வாங்க பாம்பு வந்ததாக கதை பரப்புகின்றனர்.பாம்பு பால் குடிக்கும்; கண்ணைக் கொத்தும்; பழி வாங்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மூட நம்பிக்கை. மரங்களில் வாழும் விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு,கடித்தவர் இறந்து விட்டாரா என்று சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மூடநம்பிக்கையே.இவ்வாறு சூழலியலாளர் ஆனந்த் பேசினார். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் நடராஜ் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்றார்; செயலாளர் அவை நாயகன் நன்றி கூறினார்.