Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 29 டிசம்பர், 2011

அம்பலக்காரர் என்பவர் யார்?

http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314565.htm?mid=55

அம்பலக்காரர் என்பவர் யார்?
கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர்
என அழைக்கப் பெற்றார்.



இந்த உங்கள் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவல் தவறானதாகும், இத்தனை உடனடியாக மற்ற வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கதி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் காரணம் , அம்பலக்காரர் என்பது முத்தரையர் என்ற பெரிய இனத்தின் ஒரு பகுதி மக்களாகும், இந்த மக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவது தாங்கள் அறிந்த தாக இருக்கும் என்று நம்புகிறோம்,

சரியான தகவலினை வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்


மேற்கண்ட நமது வேண்டுகோளுக்கு தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குனர் அளித்த மினஞ்சல் பதில் :

அன்புடையீர்,


தாங்கள் மின் அஞ்சலில் குறிப்பிட்டுள்ள “கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர் என அழைக்கப்பெற்றார்” என்ற கருத்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இளநிலைப் பட்டத்திற்கான தமிழியல் பாடத்திட்டத்தில் ‘தமிழர் வாழ்வியல்-II’ என்ற தாளில், ‘தமிழக வரலாறு’ என்னும் பகுதியில், ‘விசயநகர அரசின்கீழ்த் தமிழகம்’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் ‘தமிழர் வாழ்வியல் – II’ என்ற தாள் 2009ஆம் ஆண்டுமுதல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.






இயக்குநர்



அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com


அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org

புதன், 28 டிசம்பர், 2011

நன்றி: கண்ணன் அடைக்கலம்

LIST OF TAMIL MUTHURAJA SURNAMES - TAMILNADU :

LIST OF TAMIL MUTHURAJA SURNAMES - TAMILNADU :

The following are the surnames of Tamil Mutharayars as per the research conducted by Chola Mutharayar Research Center, Tanjore, Tamilnadu.

Surnames with Star (*) indicate that the surname is analysed to find its origins and people of the surnames. For the details of analysis, readers may refer to item-03 on surname analysis in this page itself.

Aabathsagayarayar
Aerikattirayar
Alagarmalairayar
Ambalakkarar *
Anaikattirayar
Anjatha singamutharaiyar
Anjatha singarayar
Annavirayar
Arayar
Arittarkandarayar
Arkotturayar
Arunavinayar
Aruvimalairayar
Beemrayar
Chatrubayangaramutharayar
Chatrukesarirayar
Cholamutharayar *
Cholan
Cholavalavan
Cholavallakamayar
Ellamkondarayar
Enthalkattirayar
Ettikudirayar
Ettipulirayar
Idumbavanarayar
Ilanthivelrayar
Irandampulirayar
Irukkaikudirayar
Irunchonatarayar
Kadanthairayar
Kadothkajarayar
Kaduvelirayar
Kaduvettimutharayar
Kaduvizhirayar
Kalimoorkarayar
Kalvarkalvar
Kanatarayar
Kanchirayar
Kanhamudirayar
Kannangarayar
Kanthlurkondarayar
Karikalarayar
Kariventrayar
Karuvurarayar
Katahamutharayar
Katakarayar
Kathamaravarayar
Kathamaravillaliyar
Kathaperumal
Kaukuntla
Keerthirayar
Killirayar
Killivazhavan *
Kolalimoimburayar
Kolalirayar
Kolalivalavarayar
Kolarirayar
Konadulunar
Konattarayar
Kongandamutharasar
Kongandarayar
Kongarayar
Kongukalamventrarayar
Kongukalavazhirayar
Kongukalimookarayar
Kongukanikodutharayar
Kongukarikalarayar
Kongukonattaraiyar
Kongumusukuntharayar
Kongumutharasar
Kongusenthalai Kounder
Kongusenthalairayar
Konguvalavar
Konguvikkiramarayar
Kookurrayar
Koorvelrayar
Kotampattimaravarayar
Kumararayar
Kurinchinattaraiyar
Kutralarayar
Maacholarayar
Maasilimutharayar
Maasilirayar
Malainattaraiyar
Mangamaikatharayar
Mangattumutharayar
Mangatturayar
Maravamutharaiyar *
Meechiramkondarayar
Meechurayar
Menattaaryar
Meykkarayar
Moopaagathiyarkavalan
Moopaazhahanar
Moopabarathavarayar
Moopakadampavanarayar
Moopakkadamparayar
Moopakon
Moopakoodalrayar
Moopakurinchirayar
Moopamuruhanar
Moopanar Arayar *
Moopar
Moopasangamudayar
Moopathamizharayar
Moopavelaliyar
Moopavelanar
Moopavillaliyar
Moothaaryar
Moothakudiaryar
Mudiraj
Murugavelarayar
Musirirajar
Mutharasar (Mutha Arasar)
Mutharayar (Mutha Arayar)
Muthuraja
Nallarayar
Nalmadibeemarayar
Natambalakarar
Nathampadimaravar
Nattalvar
Nattaraiyar *
Nayakkar
Ochanrayar
Oorali gounder
Otriyurrayar
Oyyakirayar
Padaiventrarayar
Palaimaravar
Pampalimutharayar
Pazhayarayar
Pazhierinthar
Peivettirayar
Perambalarayar
Peraraiyar
Periyacholarayar
Peruvalarayar
Ponninattaraiyar
Poovandarayar
Poovanrayar
Pothikairayar
Poyyilirayar
Pulirayar
Pulivalarayar
Puliyakudirayar
Puliyurrayar
Rao
Rethinakiriyar
Rettapadikondar
Sennivalavar
Senniyar
Senthalaikounder
Senthalairayar
Senthilvelarayar
Senthurarayar
Serukalamutharayar
Serumaramutharayar
Seruvalavamutharayar
Seruvalavarayar
Seruventrarayar
Servai
Servaikarar
Setrambadimutharayar
Setramihumutharayar
Setramvalarmutharayar
Silanbumaravar
Silanthirayar
Singamutharayar
Singarayar
Sithirayar
Sivanesarayar
Suryamutharayar
Thanamarayar
Thananjayarayar *
Thandalaiudayar
Thanjaiyarkon
Therinthavillalirayar
Thirumalrayar
Thirumangairayar
Thirumoorthirayar
Udutha
Uraiyurrayar
Uranthaikoman Uttamaseelirayar
Uttamathanirayar
Valanattarayar
Valarikondarayar
Valavan
Valavar
Valavarkoman
Vallakkamanyar
Vallakkamayar
Vallaththarayar
Vallkkon
Vankaramutharayar
Vankarurayar
Veliyan *
Veliyangarayar
Velkodirayar
Vengaikodirayar
Vengaiyar
Venniventrarayar

The above mentioned list of surnames were collected and compiled after a long research by the organizer Mr. C.Sundararajan Servai, Mutharaya Chola Alias Early Chola History Research Center, 129, Fifth Street, Abraham Pandithar Nagar, Thanjavur, Pin- 613 001, Tamilnadu.

The remaining surnames will be published in course of time after further collection & compilation by the research center.

நன்றி : ManojHaving Good FrdsOnly

வியாழன், 22 டிசம்பர், 2011

காவல் கோட்டம் என்னும் ஆயிரம் பக்க அபத்தம்

சர்வதாரி வருடம் தை 30. ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. (பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம்) தமிழ்நாடு. பழைய பெயர் (சென்னை ராஜஸ்தானி) தென்னிந்தியா. இந்தியா.


(சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.)


பூர்வாங்கம்


சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் என்ற ஆயிரத்து நாற்பத்தியேழு பக்கமே உள்ள சிறிய நாவலை பனிரெண்டு நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன். இருபத்தி மூணு வருட அனுபவத்தில் ஒரு நாவலை வாசித்து முடிப்பதற்கு இவ்வளவு சிரமமும் அலுப்பும் அடைந்தது இந்த நாவலில் மட்டும் தான்.


சாலையோரம் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்து கொள்வானே கிட்டதட்ட அப்படியொரு தண்டனை போலத்தானிருந்தது இந்த நாவலை வாசித்தது. இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.


நாவலைப் பற்றிய பேசுவதாக ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டுவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் அதன் வண்டவாளம் தெரிய ஆரம்பித்தது. என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னுடன் கூட்டத்தில் பேச வேண்டிய இன்னொரு நண்பர் போன் செய்து படித்துவிட்டீர்களா என்று துக்கம் விசாரிப்பது போலக் கேட்டார்.


நீங்கள் என்று எதிர்க் கேள்வி போட்டதும் பரிட்சைக்குக் கூட இப்படி படிச்சதில்லை சார். எப்படிப் படித்தாலும் நகர மாட்டேன் என்கிறது, ரோடு ரோலர் மாதிரி என்றார். எனக்கு அவரது உவமை பிடித்திருந்தது. மெதுவாக நகட்டி நகட்டி படித்துவிடுங்கள். நாவலைப் பற்றி பேச வேண்டும் அல்லவா என்று சொன்னேன். உடனே அவர் இப்படிப் போய் மாட்டிக்கிட்டேனே என்று புலம்பிக் கொண்டு போனைத் துண்டித்தார்.


அது இன்னமும் நாவலைப் படிக்க விடாமல் தடுக்க ஆரம்பித்தது. மனதைரியத்துடன் இதைப் படித்தவர் எவராவது இருப்பார்களா என்று நண்பர்கள் வட்டாரத்தில் தேடத் துவங்கினேன். பெயரைக் கேட்டவுடன் மௌனமாகி விட்டார்கள்.


எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இந்த நாவலை மூன்று முறை படித்துவிட்டார் என்றார்கள். அவர் மிலிட்டரியில் வேலை செய்த அனுபவம் உள்ளவர், அதனால் எவ்வளவு கடினமான வேலையும் செய்துவிட முடியும், நிச்சயம் அவர் படித்திருப்பார் என்று தோன்றியது. சாமான்ய மனுசன் எவராவது படித்திருக்கிறார்களா என்று கேட்டேன். பதிலே இல்லை.


சரி விதி வலியது, எப்படியாவது படித்து முடித்துவிடலாம் என்று நாளைக்கு மூணு நாலுமணி நேரம் வீதம் படித்து ஒருவழியாக நாவலை முடித்து கீழே வைத்தபோது நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு அலுப்பும் சலிப்பும் அடைவானோ அப்படியொரு சோர்வு பற்றிக் கொண்டது. இந்த லட்சணத்தில் காய்ச்சலும் சேர்ந்து கொள்ள நாலைந்து நாள் படுக்கையிலே கிடந்தேன். தூக்கத்தில் கூட நாவலின் பக்கங்கள் புரண்டு கொண்டேயிருந்தன. புதைச்சேறில் மாட்டிக் கொண்டது போன்ற அனுபவம். நல்லவேளையாக வெளியீட்டு விழாவிற்குப் போகவில்லை. சென்றவர்கள் அங்கு பாடப்பட்ட புகழாரங்களைக் கண்டு தலைகவிழ்ந்து வந்தார்கள் என்று கேள்விபட்டேன்.


ஒரு மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால் எளிய வழி அவனுக்கு ஒரு காவல் கோட்டம் நாவலை வாங்கித் தந்துவிட வேண்டியது தான். புத்தக சைஸ் பார்த்தால் போதும் சப்தநாடியும் அடங்கிவிடுவான்.


மதுரையில் சில கடைகளில் விளம்பரங்களுக்காக ஆள் உயர சைஸ் பனியன் அல்லது மிகப்பெரிய செருப்பை வைத்திருப்பார்கள். இதை எல்லாம் யார் போடுவார்கள் என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் XXXX சைஸ் சு. வெங்கடேசன் போன்றவர்களுக்காக மட்டுமே தயாரிக்கிறார்கள் போலும் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு பெரிய எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நாவலை எழுதுவது என்றால் சாமான்ய வேலையா என்ன?


டால்ஸ்டாய் ஆயிரம் பக்கத்திற்கு மேல் எழுத வில்லையா என்று கேட்கலாம். உண்மை தான் ஆனால் டால்ஸ்டாய் ஒன்றும் பந்தல் போடும் வேலை செய்யவில்லையே. சின்னஞ்சிறிய வீடு கட்டுவதற்கு ஆறு மாசமாகிறது. ஆனால் ஊரையே வளைத்து கீற்றுப் பந்தல் போடுவதற்கு இரண்டு நாள் போதும், சர்வ அலங்காரத்துடன் போட்டுவிடலாம். பந்தலைக் காட்டி இதுவும் பல்லாயிரம் பேர் தங்கும்படியாகத் தானே அமைக்கபட்டிருக்கிறது அதை ஏன் கட்டிடக்கலையின் உச்சம் என்று ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்க முடியாது இல்லையா? அப்படி இந்த நாவலும் ஒரு பெரிய மாநாட்டு பந்தல் தான். கீற்று தெரியாமல் வேஷ்டி விரித்து ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது, மற்றபடி உள்ளே அத்தனையும் பொத்தல்.


காவல்கோட்டம் நாவல் வெளியான சில தினங்களில் ஆண்டின் சிறந்த நாவல் என்று விருதுக்கு அடையாளம் காட்டப்படுவதும். வெளியான நாளில் இருந்து சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கோவை என்று ஒவ்வொரு ஊரிலும் அவர்களாகவே வெளியீட்டு விழா நடத்தி அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்களின் புகழாரங்களை அவசர அவசரமாக சூட்டிக் கொள்வதும் எதற்காக என்று தான் புரியவில்லை.


ஒரு நாவலுக்கு ஒரு வெளியீட்டுவிழா நடத்ததுவது தான் மரபு. ஆனால் வெங்கடேசன் ஊருக்கு ஒரு வெளியீட்டு விழா செய்வதை காணும்போது நாவல் விற்றுத் தீருமளவு தொடர்ந்து பல நூறு வெளியீட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்படப் போவதில்லை.


தமிழ் இலக்கியச் சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும்.


**


நாவலை முன் வைத்து சில பார்வைகள்:


இதை ஒரு சரித்திர நாவல் என்கிறார்கள். ஆனால் நாவலில் சரித்திரமும் இல்லை நாவலும் இல்லை. இரண்டும் கெட்டான் வகை. முதல் பகுதி நாயக்க மன்னர்களின் வரலாறு இரண்டாம் பகுதி கள்ளர் சீமை. இரண்டுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் கள்ளர்கள் மதுரையை காவல் செய்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை.


சரி, இதில் எதற்கு நாயக்கர் வரலாறு?


நேரடியாக கள்ளர்கள் மதுரை காவலுக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து நாவலைத் துவக்கினால் எப்படி ஆயிரம் பக்கத்திற்கு இழுப்பது? இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லும் நாயக்கர் வரலாற்றில் அப்படி என்ன புதிய விஷயமிருக்கிறது? கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.


மதுரையின் வரலாற்றை எதற்காக நாயக்கர் காலத்திலிருந்து எழுதத் துவங்க வேண்டும். அது சங்க காலத்திலிருந்து இருக்கிறதே என்றால் நாயக்கர் காலத்தில் இருந்து தான் ரிக்கார்ட்ஸ் கிடைக்கிறது. அதற்கு முன்பு உள்ளதை எழுத கற்பனை வேண்டுமே என்று வெங்கடேசன் சொல்லக்கூடும்.


நாவலின் முதல் பகுதி முடிஅரசு. இரண்டாம் பகுதி குடிமக்கள். முதல் பகுதி 376 பக்கம். மாலிக்கபூர் மதுரைக்கு படை எடுத்து வருவதில் துவங்கி மதுரை கலெக்டராக பிளாக்பெர்ன் வந்து சேர்ந்து மதுரையின் சுற்றுக் கோட்டையை இடிப்பது வரையிலான சரித்திர காலம். அதன் பிறகு மதுரையைச் சுற்றிய கள்ளர்களைப் பற்றியது. குறிப்பாக தாதனூர் என்ற ஊரில் வாழும் கள்ளர்களைப் பற்றிய எண்ணிக்கையற்ற தகவல்கள் உதிரி சம்பவங்கள் போன்றவற்றால் நிரப்பட்டுள்ளது. ஹிண்டு பேப்பர் செய்தி முதல் பழைய சர்வே ரிக்கார்டு, போலீஸ் எப்ஐஆர் வரையான ஆயிரக்கணக்கான தகவல்கள் ஒன்றோடு ஒன்று திணிக்கப்பட்டு மாபெரும் வைக்கோல் போர் போல நாவல் காட்சியளிக்கிறது.


சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னைக் காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.


நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது, சரித்திரத்தை எப்படி உள்வாங்கியிருக்கிறோம், எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே. முன்பு எழுதப்பட்ட சரித்திரக் குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.


வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணக்காப்பகத் தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கப்பட்டதும் தவிர்க்கப்பட்டதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்கத் துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.


நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்தக் கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.


டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்புநிதி நல்கை பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும் ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.


வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதார தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருப்பது வருத்தமளிக்கிறது.


இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont - A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலைக் கள்ளர்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் முத்துசாமி தேவர் என்பவரைப் பற்றி குறிப்பிட்டு, அவர் இந்த நூலின் இணையாசிரியர் போன்றவர் என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் உள்ளுர் தரவிபரங்கள் அறிந்தவர்கள் உதவியால் மட்டுமே ஒரு ஆய்வு முழுமையடைகிறது. வெங்கடேசன் லூயிஸ் டுமாண்டிலிருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.


டால்ஸ்டாய் போரும் வாழ்வும் எழுதும்போது நெப்போலியன் படையெடுப்பை தன் நாவலின் பின்புலமாக கொண்டிருக்கிறார். ஆனால் எந்த சரித்திர புத்தகத்திலிருந்தும் நெப்போலியன் பற்றிய சரித்திர விபரங்களை தொகுத்து தன் நாவலுக்கு எடையை அதிகமாக்கவில்லை. மாறாக அவர் படைகள் வருவதை மிகுந்த கற்பனை உணர்வோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். நெப்போலியன் வருகை என்பது அவருக்கு ஒரு குறியீடு. நாவலின் கதையோட்டத்திலிருந்து சரித்திரத்தை தனித்துப் பிரித்து எடுத்துவிட முடியாது.


சரித்திர பிரக்ஞை ஒரு நாவலில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு சிறந்த உதாரணங்களைத் தர முடியும். ஒன்று குர்அதுல்துன் ஹைதர் எழுதி அக்னி நதி என்ற நாவல். இது இந்திய சமூகத்தின் புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கப்படவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள்.


இன்னொரு நாவல் அதின் பந்தோபாத்யாயா எழுதிய நீலகண்ட பறவையைத்தேடி. இதுவும் சுதந்திரப் போராட்ட காலத்து நாவல் தான். ஆனால் ஒரு இடத்தில் கூட ஆவணக்காப்பகத்தில் இருந்த தகவல்களை தொகுத்து பண்டல் கட்ட முயற்சிக்கவேயில்லை. இரண்டுமே தமிழில் வெளியாகி உள்ளது.


குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக காவல் கோட்டம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வி எழுகிறது. அதுவும் பொய்யே. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, நான் உள்ளிட்ட பலரும் குற்றப்பரம்பரை பற்றி அவரவர் அளவில் எழுதியிருக்கிறோம்.


வழிப்பறி கள்ளர்கள் குறித்து பஞ்சாபி மொழியில் வெளியாகி உள்ள சோரட் உனது பெருகும் வெள்ளம் மற்றும் சமீபத்தில் மராத்தியில் வெளியான உபரா, உச்சாலியா போன்ற நாவல்களைப் படித்த எவருக்கும் இந்த நாவல் எவ்வளவு அபத்தம் என்று சொல்லாமலே புரிந்துவிடும். நான் குறிப்பிட்ட இந்த நாவல்கள் அத்தனையும் தமிழிலே வாசிக்க கிடைக்கின்றது. பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற சரித்திரக் கதைகளில் படிக்க சுவாரஸ்யமான கற்பனையாவது இருக்கும். இதில் அதுவும் கிடையாது என்றால் இந்த நாவல் எப்படி இவ்வளவு பெரிசாக உருண்டு திரண்டிருக்கிறது. அங்கே தான் இருக்கிறது வெங்கடேசனின் சாமர்த்தியம்.


நாலு பக்கம் கள்ளர் கதை, அடுத்து நாற்பது பக்கம் நாயக்கர் வரலாறு என்று டிவி சீரியல் போல இழுத்திருக்கிறார். ஒருவேளை நாயக்கர் வரலாறும் உபரித் தகவல்களும் நீக்கப்பட்டால் நாவல் இருநூறு பக்கத்திற்குள் முடிந்து போயிருக்கும்.


குளறுபடி 1:


நாவலின் ஆரம்பம் மதுரையைத் தாக்க மாலிக்கபூர் வருவதை எழுதிவிட்டால் ஒரு நூற்று ஐம்பது வருசங்களை முன்னாடி சேர்த்துக் கொள்ளலாமே என்று வெங்கடேசன் நினைத்திருக்க்க் கூடும். ஆகவே முதல் இரண்டு பக்கங்கள் மாலிக்கபூருக்கு. சரித்திரத்தை மீள்வாசிப்பு செய்கின்ற எவருக்கும் தெரியும் மாலிக்கபூர் என்பது ஒரு அரவாணி. அவனது பெயர் ஹசர் தினார் என்றால் ஆயிரம் தினார் கொடுத்து வாங்கப்பட்டவன் என்று பொருள். கில்ஜியின் பாலுறவு துணையாக இருந்தவன். அதனால் அதிகாரம் வழங்கபட்டு மற்றவர்கள் கேலி செய்யப்படக்கூடாதே என்று எஜமானனுக்கு உரியவர் என்ற பெயரில் மாலிக்கபூர் என்று அடையாளம் தரப்பட்டவன்.


மாலிக்கபூர் தமிழகத்திற்கு படையெடுத்து வந்தது குறித்து இன்றுவரை தெளிவான காரணங்கள் இல்லை. அவன் உட்பகையைப் பயன்படுத்தியே உள்ளே நுழைந்தான் என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன. இந்த நாவல் திரும்பவும் பழைய குருடி போலவே மதுரையைத் தாக்க வந்தான் மாலிக்கபூர். தங்கம் வைரம் வெள்ளி என எண்ணிக்கையற்ற பொருட்களை கொள்ளையடித்தான் என்று அரைத்த வரலாற்று ரிக்கார்ட்டையே அரைக்கத் துவங்குகிறது.


ஒரு லட்சம் வீரர்களுடன் வந்தான் என்று மிகையாக உருவாக்கபடும் மாலிக்கபூர் படையெடுப்பையாவது எழுத்தாளரால் கற்பனை செய்ய முடிகிறதா என்றால் அதுவும் இயலவில்லை.


குளறுபடி 2:


இந்த நாவலின் முதல் முந்நூறு பக்கங்கள் நாயக்க மன்னர்கள் வரலாற்றை விவரிக்கிறது. இந்த வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ளதிலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே நகலெடுத்திருக்கிறது நாவல்.


குறிப்பாக 1) Edgar Thurston, "The castes and Tribes of south India, 2) The Madura Country - A manual - J..H..Nelson, Asian Educational Services New Delhi, Madras. 3) History Of The Nayaks Of Madura- R Sathianathaier, 4) The History of Tinnevelly by Rev R Caldwell, 5) History of Military transactions - R Orme இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.


குறிப்பாக சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கப்பட்டு அப்படியே முழுமையாக நாவலில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.


Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.


Page 254


வெங்கடேசன் நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்


மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)


வரலாற்று பாடப்புத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதைத் தவிர இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.


ராணி மீனாட்சி விஷம் குடித்த நெருக்கடியை, என்ன விஷம் அது, அப்போது அவளுடன் யார் இருந்தார்கள், அவளுக்கு என்ன வயதானது, சாவு ஏன் தவிர்க்கப்படவில்லை, சாந்தா சாகிப் எதற்காக துரோகம் செய்தான் என்று கற்பனை செய்ய, செய்ய சாதாரண மனிதன் கூட ஒரு கதையைப் புனைந்துவிடுவானே, ஏன் ஆயிரம் பக்கம் எழுத முடிந்த ஆளால் இது சாத்தியமாகமல் போனது? ஒரே காரணம், சரித்திரப் புத்தகத்தில் இருக்கிறது அப்படியே எடுத்து பைண்டிங் செய்துவிடலாம் என்று ஆசை மட்டும் தான். மீனாட்சி ஊர்வலம் போனதை எழுதியவர் அவள் சிறைப்பட்ட நெருக்கடியான மனநிலையை ஏன் கவனம் கொள்ள இயலவில்லை?


உப்புசப்பற்ற தகவல்களைத் தானே இத்தனை வருசமாக சரித்திரம் என்ற பெயரில் நாம் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாவலும் அதே குப்பையை அழகாக பாலீதின் பையில் அடைத்து கையில் கொடுப்பது தான் சாதனையா? இப்படியான தகவல்கள் பக்கம் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன. அதை விரிவாக எழுதினால் விமர்சனம் நூறு பக்கம் மேலாகிவிடும் அபாயமிருக்கிறது.


குளறுபடி 3 :


திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய பொறியாளரின் உதவியால் நாயக்கர் மஹாலைக் கட்டினார் என்ற தகவலை பல காலமாக கேட்டு வருகிறோம். அந்த இத்தாலியர் யார், அவர் எதற்காக மதுரைக்கு வந்தார், எப்படி இது போன்ற கட்டிட வடிவம் ஒன்றைத் தேர்வு செய்தார், அதை எப்படி திருமலை நாயக்கர் ஒத்துக் கொண்டார்? இப்படி எண்ணிக்கையற்ற கேள்விகள் அதன் பின்னால் இருக்கின்றன. பிரிட்டீஷ் ரிக்கார்டு வரை தேடிய ஆள் ஆயிற்றே என்று இவரது நாவலில் தேடினால் அவரும் நாயக்கர் ஒரு இத்தாலியரின் உதவியால் மஹாலைக் கட்டினார் என்று பள்ளிபாடப்புத்தக வரிகளையே திரும்பவும் ஒப்பிக்கிறார். யார் அந்த இத்தாலியர் என்பதைப் பற்றிய துளி விபரமும் இல்லை. இது தான் பத்தாண்டு ஆய்வு செய்து எழுதியவரின் லட்சணம்.


குளறுபடி 4:


பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றாற்போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு அத்தியாயம் 36 பக்கம் 280யை படித்துப் பார்க்கவும்.


இது போலவே இரவெல்லாம் மழை பெய்யும் நாளில் குளிர் இருக்காது என்று கிராமத்து மனிதர்கள் கூட அறிவார்கள். வெங்கடேசனோ ஒரு வாரமாக பகலும் இரவும் விடாத மழை. உயிரை உறைய வைக்கும் குளிர் – (பக் 210) என்று எழுதியிருக்கிறார். இதே போல இயற்கையின் எளிய நுட்பமறியாத வரிகள் நாவலில் நிறைய இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கின்றன.


குளறுபடி 5 :


நாவலில் மருந்துக்குக் கூட கதைசொல்லும் போக்கிலோ, உரையாடல்களிலோ சரித்திர பிரக்ஞையே கிடையாது. மதுரை ரீகல் தியேட்டர் முன்புள்ள இட்லிக் கடையில் கேட்கக் கூடிய சரளமான மதுரை தமிழ் தான் முந்நூறு வருசத்தின் முன்னுள்ள நாயக்கர் காலத்திலும் ஒலிக்கிறது. ஒன்றிரண்டு உதாரணங்கள்:


பிறகு தம்மையாவை பார்த்து நாகம்மா நாயக்கர் வாடா என்று சொல்லிவிட்டு திருநீற்றை எடுத்துப் பூசினார். எங்கே வந்த என்று கடுத்த குரலில் கேட்டார். (பக் 43)


ஏண்டா இப்போ தான் வழி தெரிஞ்சதாக்கும். இத்தனை வருசமா எங்கடா போய் தொலைஞ்சே


அக்கா நல்ல பசி சோத்தைப் போடு பக்.195


விடு மாப்ள, உள்ளபடி நடக்கட்டும். பக்.201


எவன்டி அந்த எடுபட்ட பய பக் 221


ஙோத்தாலோக்க.. எழவுவிழுந்துருச்சிடா..


குளறுபடி 6 :


நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதைச் சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள், அங்கு வந்து போன வணிகர்கள், ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள், விழாக்கள், குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில் பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவுப் பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.


சிலப்பதிகாரத்தில் மதுரை விவரிக்கப்படுகிறது. கோவலன் மதுரையை காண்பதைப் பற்றிய பகுதியது. எவ்வளவு துல்லியமாகவும், விரிவாகவும் அது மதுரையைக் காட்டுகிறது. பரிபாடல் ஒரு மதுரையை நமக்கு காட்டுகிறது. வைகை ஆற்றின் வெள்ளமும் நகரமும் வியப்பாக காட்சி தருகின்றன. நெல்சன் தனது மதுரை பற்றிய நூலில் எவ்வளவு விபரங்களைத் தொகுத்திருக்கிறார்.


வெங்கடேசன் மனதில் மதுரையின் பழமையான பிம்பம் எதுவுமில்லை. அவர் திரும்பத் திரும்ப இன்றைய வாழ்க்கையிலிருந்து கடந்த காலத்தை கட்ட முயற்சிக்கிறார். அதுவும் அவருக்கு பழக்கமான வீதிகள், இடங்கள், அதில் மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கிறது.


அல்லி அரசாணி மாலை, மதுரைவீரன் கதை பாடல் போன்ற பெரிய எழுத்துக்கதைகளில் கூட மதுரையைப் பற்றிய விசித்திரமான சித்திரங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த நாவலில் மதுரை என்பது பெயராக வருகின்றதேயன்றி அதன் சொல்லித் தீராத நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படவேயில்லை.


ஒரேயொரு சம்பவம், மதுரை கோட்டை கட்டப்பட்டதும் அது இடிக்கப்பட்டதும் அலுப்பூட்டும் அளவு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதை தவிர்த்து மதுரையின் ஏதாவது ஒரு வீதியின் நூற்றாண்டு நினைவு இதில் விவரிக்கபட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.


கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்பிலும் மதுரையைப் பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை. மாறாக தொ.பரமசிவத்தின் நுட்பமான பதிவுகள் அப்படியே உருமாற்றம் பெற்று நாவலில் ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கின்றன என்பது தான் கொடுமை.


குளறுபடி 7:


மனோகரா படத்தில் ஆண்வேடம் இட்டு வரும் சோழ நாட்டு ராஜகுமாரி மனோகராவோடு சண்டை போடுவாள். முடிவில் அவள் வேஷம் கலைந்து போகும். அவள் தன்னோடு சண்டை போடும்படியாக வாளை உயர்த்தும் போது என் வாள் பெண்களுடன் சண்டையிடாது என்று காதல் மொழி பேசுவான் மனோகரா. இந்தக் காட்சி அப்படியே சற்று உல்டா செய்யப்பட்டு பக்கம் 62ல் விஸ்வநாத நாயக்கருக்கும் துக்காதேவிக்குமாக நடக்கிறது.


இப்படி முடி அரசு பகுதி முழுவதும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஒடிய அரசகட்டளை, அரசிங்குளமரி, மனோகரா, மகாதேவி, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை, நீரும் நெருப்பும் போன்ற படங்களின் சரித்திர காட்சிகளை நினைவூட்டும் அத்யாயங்கள் நிரம்பி வழிகின்றன.


குளறுபடி 8 :


மதுரைக்கு கோட்டை கட்டியதால் மதுரை வாழ் மக்களுக்கு என்ன நல்லது கிடைத்தது? கோட்டைகள் அரசர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏற்படுத்திக் கொண்ட கவசம். அது மக்கள் வரிப்பணத்தில் தங்களைப் பாதுகாக்க செய்து கொண்ட ஏற்பாடு. அப்படித்தான் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையைச் சுற்றி கோட்டை கட்டப்படுகிறது.


சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்றுக் கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைப்பூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே விஸ்வநாதன் கோட்டை கட்டியதில் ஒரு பெருமையும் இல்லை.


பராமரிக்கப்படாத மதுரை கோட்டையை மாவட்ட கலெக்டர் பிளாக்பெர்ன் இடிக்க முடிவு செய்தவுடன் கோட்டை சுவரில் இருந்த 21 துடியான சாமிகளையும் வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கொதித்து எழுந்தார்கள். அதற்கு பரிகார பூஜை நடந்தது என்று விரிவாக வெங்கடேசன் எழுதிப் போகிறார்


சமகாலத்தில் நடக்கும் சேது பாலம் விஷயத்தில் இப்படியான கடவுளின் சக்தி தான் தடையாக உள்ளது. அதை எதிர்த்து இடது சாரிகள் சுப்ரிம் கோர்ட் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடதுசாரி எழுத்தாளரோ மதவாத சக்திகளை விடவும் மோசமாகப் போய் கோட்டை சுவரில் உள்ள மொட்டை கோபுர முனியை இறக்கினால் நகரம் அழிந்துவிடும் என்பதற்கு வக்காலத்து வாங்கி முப்பது பக்கம் எழுதியிருக்கிறார். இது இடதுசாரி எண்ணங்களுக்கு எதிரானது மட்டுமில்லாது. பச்சையான மதவாதம்.


செவ்வியல் தெய்வங்களை உயர்த்திப் பிடித்து உருவாகும் மதவாதம் எவ்வளவு மோசமானதோ அதே அளவே நாட்டார் தெய்வங்களை முன்னிறுத்தி அதன் நம்பிக்கைகளைக் கொண்டாடும் தெய்வப்பற்றும் கண்டிக்க வேண்டியதே. நாட்டார் தெய்வங்களின் பின்னால் தான் சாதியின் வேர் ஆழமாக புதையுண்டிருக்கிறது. சாதியைக் காப்பாற்றி வைத்திருக்கும் பெரும்பலம் நாட்டார் கடவுள்களே. கவனிப்பார் இல்லாமல் கிடக்கும் காட்டுக் கோவில் தானே என்று கூட ஒரு சாதி வழிபடும் சாமியை இன்னொரு சாதியினர் கும்பிட்டுவிட முடியாது என்பது தான் தென்தமிழ்நாடு அறிந்த உண்மை.


வெங்கடேசனின் துடியான தெய்வங்கள் வெறும் தெய்வங்கள் மட்டுமில்லை, அவை சாதியின் பாதுகாவலர்கள். அதன் வழியே தான் சாதி ஒன்றிணைக்கப்படுகிறது. இதை விமர்சகர்கள் எப்படி சுலபமாக மறந்து வெங்கடேசனைப் பாராட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை.


குளறுபடி 9:


இன்னொரு பக்கம் பிளாக்பெர்ன் மதுரை கோட்டையை இடிப்பதற்கு முடிவு எடுத்த நாட்களில் மதுரை கோட்டை எப்படியிருந்தது?


Madura town, they found it to be rectangular in outline with its sides presented to the cardinal points. Its fortifications, which were formerly extensive, were then much dilapidated ; but it was still defended by a fort, and surrounded by a broad ditch, and a double wall that originally had 72 bastions. Each side was about three-quarters of a mile in length,


The streets were narrow, irregular, and dirty, and the houses of the most miserable description. Large herds of cattle were often found within the precincts of the town, and mephitic miasmata were exhaled from the stagnant basins in the vicinity of the fort.


Fullarton s Gazetteer


அதாவது இடிந்து குப்பையாக இருந்தது. இந்த நிலையில் காலரா நோய் வேறு மதுரையில் பரவத் துவங்கவே பிளாக்பெர்ன். கோட்டை வாசலை ஆறு இடங்களில் இடித்துவிட முடிவு செய்கிறார். இந்த வேலைக்கு குற்றவாளிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறார். மக்கள் காலராவிற்கு மருத்துவம் பார்க்க மறுத்து குலசாமிகளுக்கு வேண்டுதல் போடுகிறார்கள். இந்த நிலையில் அவர் மதுரை வீதிகளில் பாதி ஆக்ரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்கிறார். அதன்பிறகே கோட்டையை இடிப்பது என்று முடிவு செய்கிறார்.


கோட்டையை இடிப்பதற்கு முன்பு முப்பத்தியெட்டாயிரம் மக்கள் மதுரை நகரினுள் இருந்தார்கள். கோட்டையை இடித்த பிறகு எட்டாயிரம் பேர் புதிதாக நகரினுள் வசிக்க வந்திருந்தார்கள். இதில் 1200 பேர் குயவர்கள் மற்றும் நெசவாளிகள், சாயம் போடுகின்றவர்கள் என்று ராயல் ஆசியாடிக் சொசைட்டியின் ரிக்கார்ட் வால்யூம் மூன்று கூறுகிறது.


இன்னொரு பக்கம் கோட்டை இடித்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி அதுவரை இந்துக் கோவில்களுக்கு அளித்து வந்த மான்யத்தை நிறுத்தி கொண்டதாக அறிவித்தது. அதை கோட்டை இடிந்ததோடு சேர்ந்து கலெக்டர் இந்துகளின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. அதனால் பிளாக்பெர்ன் சில நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்பு அவர் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட மிஷினரி வரலாறு கூறுகிறது.


வெங்கடேசனின் நாவல் இந்த வெள்ளை அதிகார சரித்திரத்தின் பின் உள்ள உண்மைகளை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக கோட்டையில் இருந்த முனிகள், காவல் தெய்வங்களை எப்படி சாந்தி படுத்தினார்கள், எப்படி உடுக்கு அடித்தார்கள், என்ன பலி கொடுத்தார்கள் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதுகிறார்.


சுயலாபங்களை நோக்கி வெள்ளை அதிகாரத்தின் சூழ்ச்சிகளை அவர் வெளிச்சமிட்டுக் காட்டவேயில்லை. அதே நேரம் கோட்டை இடிக்கப்பட்டதன் வழியே மதுரைக்குள் வசிக்கத் துவங்கிய அடித்தட்டு மக்களின் புது வாழ்க்கையைப் பற்றிய எவ்விதமான தெளிவும் அக்கறையும் வெங்கடேசனுக்கு இல்லை.


குளறுபடி 10 :


நாவலின் உப தலைப்புகளாக முதல் அத்யாயம் மதுரா விஜயம், ஆறாவது அத்யாயம் பாளையப்பட்டு அப்புறம் 37 வது அத்யாயம் யூனியக் ஜாக் என்று முதல் பகுதி பிரிக்கபட்டிருக்கிறது. இந்த தலைப்புகளுக்கும் உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமில்லை. எந்த எடிட்டர் இப்படி பகுப்பு செய்தது என்று தெரியவில்லை.


இதில் குடிமக்கள் பகுதி துவங்கியதும் உள்ள இருளெனும் கருநாகம் என்ற தலைப்பு காணப்படுகிறது. இது பி.டி.சாமி எழுதிய பேய்க்கதையின் தலைப்பு. அதனால் என்ன? சரித்திரம் எதையும் தாங்கும் தானே.


நாவலின் பிரதான கதைக்குள் போவதற்கு முந்தைய சரித்திரத்திலே இவ்வளவு தடுமாற்றங்கள், தள்ளாட்டங்கள். இதைத் தாண்டி நாவலின் கதை எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்வது அடுத்த பகிரதப் பிரயத்தனம்.


நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுதத் தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்கக் கூட முடியவில்லை.


நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையைச் சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது, வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள், சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா, கள்ளர்களின் பூர்வீகத் தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய், ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை


அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதைத்தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸ் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி. இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும், அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.


மதுரையைச் சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள், எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும். வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்குப் பகிர்ந்து தரவில்லை தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.


கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில் திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினைக் கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில் மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப்ப் பெண்களின் அல்லல்படும் பிழைப்பு. குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.


கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது, அதைப் பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள், கள்ளர் வீட்டுப் பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனைத் திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.


பழங்கதைகளில் வரும் திருடர்களைப் போல மதுரைக் கள்ளர்கள் எப்படி திருடப் போனார்கள், எப்படி கன்னம் வைத்தார்கள், அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை.


சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களைப் பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை, ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டிப் போன ஆள் மாட்டிக் கொள்வான்.


முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பைப் போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்குப் போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளிக் கொண்டு வந்துவிடுவான்.


இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.


யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்துப் போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களைப் பிடித்து வர ஆணையிட்டு சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.


திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம். இதுதான் கள்ளர்களின் வீரப்பரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.


கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு, எதற்காக, யாரிடமிருந்து? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது? மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?


கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது. மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான், ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது. ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களைக் கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?


கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்திப் பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.


மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள்? அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்கக் கூடும். மற்றவர்கள்? தாதனூரைத் தவிர மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள்? மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை? எது அவர்களைத் தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றச்சமூகமாகவே வைத்திருந்தது?


மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தைத் தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடிக் கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.


அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்தபோதும் கதையாக்க முடியாத அவரது எழுத்துத் தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டிச் செல்கிறது. திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிப் பார்த்திருக்கிறார்.


தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதைப் போலத் தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர், பிறகு உசிலம்பட்டி, பிறகு கம்பம், அதற்குள் பெரியார் அணைகட்டு, இடையிடையில் மதுரை.


பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பைப் பற்றி நானே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.


பெரியார் அணை முடிந்தவுடன் நீர்ப்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவிச் செல்கிறார். குற்றப்பரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள். அவர்கள் ஊர் ஊராகப் போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்கத் துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்புக் குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்பு பெற்றது. உடனே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றப்பரம்பரை சட்டம் (The Criminal Tribes Act) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.


இந்த நடைமுறைப்படுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல்துறை அதிகாரி செயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது. இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வதா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடி வருகிறார்.


தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸூடன் துப்பாக்கிச் சூடு நடந்து பலர் உயிர்ப்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது. முத்துராமலிங்கத் தேவருடன் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.


குற்றப்பரம்பரை சட்டம் பற்றி பேசும்போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள், நிலவரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாகப் பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்றுப் பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை? ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது


வெங்கடேசன் மேடைப் பேச்சை போல குற்றப்பரம்பரை தரவுகளை அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை. குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்படுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.


அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையைப் பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்து வருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.


நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.


ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது என்று தனித்தனி அத்தியாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டுப் போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகையும். அது மதுரைச் சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும். பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றியும், பள்ளி, போதகர்கள் சேவை பற்றியும் போகிற போக்கில் சொல்லி போகத் தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின் 75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?


நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதைத் தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதா அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கப்பட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.


ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்யப் போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறிச் சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்தப் பகுதிக்கு போனால் தலையைத் துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார். உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது. அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டு வேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.


இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்தப் பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.


ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது, எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்தக் காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.


ராணி மங்கம்மாளைக் காண்பதற்காக லிஸ்பனில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்த மூத்த பாதிரி முதன்முறையாக ஒரு உலக உருண்டை ஒன்றை அவளுக்குப் பரிசளிக்கிறார். அதுவரை அவள் உலக உருண்டை பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. வியப்போடு பார்க்கிறாள். அந்த உலக உருண்டையில் தங்கப் பிடி உள்ளது. ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் இவ்வளவு தானா என்று பிரமிப்பதாக இருக்கிறது.


அத்தோடு இரண்டு லென்சுகளை பரிசாகத் தருகிறார். ஒன்று தூரத்தில் உள்ளதை அருகில் காட்டுகிறது. மற்றது அருகில் உள்ளதை தூரத்தில் காட்டுகிறது. இது எப்படி என ராணி வியக்கும் போது இது தேவனின் மகிமை என்கிறார் மிஷனரி.


அவள் மிஷனரியைப் பாராட்டி தன் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதித்து தன் சார்பில் பரிசுகள் தருகிறாள். ஆனால் அன்றிரவே மனம்மாறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து தன் எல்லைக்குள் அவர் நடமாட கூடாது என்று வெளியேற்றினாள் என்றும் மிஷனரி ரிக்காடுகள் கூறுகின்றன.


இப்படி தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் ஏன் விலக்கி போனார்? ஒரே காரணம் இந்தத் தகவல்கள் எளிதில் கிடைக்க கூடியதில்லை. இதற்காக பாரீஸில் உள்ள ஆவணக்காப்பகத்தை நாட வேண்டியதிருக்கும். தேடி அலைவது பெரிய சவாலாக இருந்திருக்கும். இன்னொன்று அதைக் கற்பனை செய்து ஆழமாக எழுதுவது மிகப்பெரிய வேலை.


வெங்கடேசன் நாவலில் வரும் மிஷனரி போதகரின் கடிதங்கள் யாவும் வெற்று தகவல்கள் மட்டுமே.


நாவல் பெருங்காம நல்லூர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது. நாளிதழ் செய்தி வரை எத்தனையோ தகவல்கள் கிடைப்பதால் அதை எளிதாக நிரப்ப முடிந்திருக்கிறது.


நாவலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்தியாயங்கள்.


கதை என்று இந்த நாவலில் எதுவுமில்லை. தலைமுறை தலைமுறையாக வளர்ந்து செல்லும் கதைப் போக்கு கூட இல்லை. சர்வே ரிக்கார்ட் அல்லது சென்சஸ் ரிக்கார்ட் ஒன்றை எடுத்து அதில் வரும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அத்தியாயம் தகவல்களை நிரப்பி எழுதினால் எப்படியிருக்குமோ அந்த சோர்வு தான் மிஞ்சுகிறது.


நாவல் முழுவதும் ஆங்காங்கே சமணர்களைப் பற்றிய விஷயங்கள் லேசாக தூவப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு இடங்களில் புத்த பிரதிமை வருகிறது. அது எதற்கு என்று நாவல் முடிந்தபிறகும் புரியவேயில்லை. ஒரு வேளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் இருக்கிறது சமணமும் பௌத்தமும் போட்டுவிட்டால் மத ஒற்றுமையைப் பற்றி எழுதியதாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?


மிதமிஞ்சிய தகவல் சேகரிப்பும், தான்சேர்த்து வைத்த தகவல்களை மொத்தமாகக் கொட்டி வாசகனை திணறடிக்க வேண்டும் என்ற முனைப்பும், கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளைப் பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரைப் பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிகப் பலவீனமானதாக ஆக்குகின்றன.


காவல் கோட்டம் மதுரையை பற்றிய வெறும் கட்அவுட் சித்திரம் மட்டுமே.


காவல் கோட்டத்தில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் காவல்கோட்டம் போன்ற நாவலைக் கூட விபரம் தெரியாமல் படித்துவிடக்கூடிய வாசகர்கள் தான். (நான் இதற்கு பலியாக்கபட்டவன். ஆகவே என்னை சேர்க்க முடியாது)


அதிலும் வெளியான நாலு நாளில் அதைப் படித்து விகடன் விருதுக்குத் தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.


பின்குறிப்புகள்


என்னிடம் உள்ள பிரதியில் கடைசி அத்யாயம் இரண்டு தடவை அச்சாகி வேறு இருக்கிறது. அதையும் சேர்த்துப் படித்து வைக்கவேண்டிய இம்சை ஏற்பட்டது.


நாவலை இரண்டு ஆண்டுகாலம் மூன்று பேர் எடிட் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். எடிட்செய்ததே இப்படியிருக்கிறது என்றால் இதை எடிட் செய்யாமல் படித்திருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது. இது வெங்கடேசனின் முதல் நாவல் என்கிறார்கள். அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது.


- எஸ்.ராமகிருஷ்ணன்( writerramki@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5241:2010-04-08-08-29-14&catid=4:reviews&Itemid=267

திங்கள், 19 டிசம்பர், 2011

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி

1. Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

மதுரை இளவரசன் கோசடையான்

காஞ்சிமீது படையெடுத்து வந்து, அந்நகரைக் கைப்பற்றிய சாளுக்கிய (முதலாம்) விக்கிரமாதித்தன், உறையூரின் சோழ மாளிகையில் வந்து தங்கி, மதுரை இளவரசன் கோச்சடையானை வரவழைத்து நட்பு பேச எண்ணுகிறான். சாளுக்கிய சேனையிடம் சிக்கிய நாடோடிப் பெண் பதுமகோமளை, அரசவையில் ஆடமறுத்து அடிபடுகிறாள். அவளை அன்றிரவு கோச்சடையான் விருப்பப்படி, அவனுடைய தனியறையில் கொண்டுவிடுகிறார்கள். அங்கு அவள் பாண்டிய குமாரன் மீது கத்தி வீசுகிறாள். ரணம், வலி தாங்கிய கோச்சடையான், அவள் யாரென்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அங்கிருந்து அவள் தப்பிச் செல்ல உதவுகிறான். இனி...

கொங்குவேளின் புதல்வி, இளவரசி ரங்கபதாகை, அந்த மனிதரை மிகுந்த பரிவுடன் நோக்கினாள். மூர்ச்சித்த நிலையில் மஞ்சத்தில் கிடந்த அவர் எப்போது கண்விழிப்பார் என்பது அவளுடைய கவலையாக இருந்தது.

ஐம்பது வயதிற்குக் குறையாத அப்பெரியவரின் தோற்றம், பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய கம்பீரத்துடன் உள்ளது. முகத்தில் நரை கலந்த தாடி மீசை, தலையில் அழகிய பட்டுத் தலைப்பாகை. யாருடனோ கடுமையாகப் போரிட்டிருக்க வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்திருந்தன. மார்பிலும் புஜங்களிலும் வாட் கீறல் கள் பட்டு, பெருகிய குருதிகள் - காய்ந்து போன ரணங்கள்.

அன்று பிற்பகலில், செந்தலை முத்தரையர் மாளிகையிலிருந்து அவள் ரதத்தில் வந்து கொண்டிருந்தாள். வழியில் ஓரிடத்தில் ஒரு கருநீல வண்ணப் புரவி சாய்ந்து கிடந்த து. அதன்மீதும் ஈட்டிகள் பாய்ந்த ரணங்கள். அருகே இந்த மனிதர் விழுந்து கிடந்தார்.

ரங்கபதாகை தன் வீரர்களை அனுப்பி, என்ன ஏதுவென்று பார்க்கச் சொன்னாள். குதிரைக்கும் உயிர் இருந்தது. இவரும் மூர்ச்சித்துக் கிடந்தார். உடனே பாதுகாப்புடன் இங்கு கொண்டு வந்தனர்.

எவ்வளவோ ஆசுவாசப்படுத்தியும் அப்பெரியவர் நெடு நேரமாகக் கண்திறவாமலே கிடந்தார்.

இதோ கண் திறக்கிறார்.

‘‘நா...ன்... எங்கே இருக்கிறேன். இது எந்த இடம்...?’’ என அவர் வாய் முனகுகிறது.

‘‘ஐயா, இது கருவூரில் உள்ள கொங்குவேளின் அரண்மனை. நான் அவருடைய புதல்வி ரங்கபதாகை. வழியில் மயங்கிக் கிடந்த தங்களை நான்தான் தூக்கிவரச் செய்து, காயங்களுக்கு மருந்திடச் செய்தேன். தங்கள் அசுவம் நல்ல நிலையில், பத்திரமாக இருக்கிறது. எந்தக் கவலையும் வேண்டாம். தாங்கள் யார்? என்ன நிகழ்ந்தது? எங்கி ருந்து வருகிறீர்கள்? சற்று விவரமாகச் சொல்லுங்களேன்...’’ என வினவினாள் ரங்கபதாகை.

அவளுக்கு அந்த மனிதரின் முகம் மிகவும் பரிச்சயமானது போன்று இருந்தது. ஆனால் எங்கே, எப்படி என்பது ஒன்றும் புரியவில்லை.

‘‘மிக்க நன்றியம்மா. நீ செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். கொங்குவேள் எங்கே... நான் அவரைப் பார்க்க வேண்டுமே...?’’

‘‘அப்பா, மதுரை சென்றுள்ளார். தமிழ் நிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேச அவரை அவசரமாக அழைத்தாராம் பாண்டிய மன்னர். தாங்கள் யாரென்று இன்னமும் சொல்லவில்லையே.... தங்களுக்கு என்ன நிகழ்ந்தது? ஏன் இத்தனை வாட் காயங்கள்...?’’

‘‘நான் ஒரு இரத்தின வணிகன். பெயர் உக்கிரதண்டன். விளந்தை நகரில் ஒரு சத்திரத்தில் தங்கியபோது, என்னிடம் இரத்தினங்களை விலைபேச இருவர் வந்தனர். பிறகு தான் தெரிந்தது அவர்கள் கொள்ளையர் என்பது. நான் தப்பித்து ஓடிவந்தேன். காவிரிக் கரையில் அவர்கள் என்னை வழிமறித்துத் தாக்கினர். விலைமதிப்பற்ற என் இரத் தினங்கள் பறிபோயின. கடுமையாகப் போரிட்ட நான் அங்கிருந்து உயிருடன் தப்ப என் புரவிதான் உதவியது. நெடுந்தூரம் ஓடிவந்த களைப்பால், அசுவம் ஒரு மேட்டுப் பாதையில் ஏறும்போது கால் இடறிக் கீழே விழுந்துவிட்டது. நான் மூர்ச்சித்துப் போனேன்.’’

‘‘சரி ஐயா. நீங்கள் மிகவும் களைப்பு மாறாமல் இருக்கிறீர்கள். ஒரு கவலையும் இல்லாமல் உண்டு, உறங்குங்கள். மற்ற விவரம் நாளை பேசலாம்...’’

‘‘இல்லையம்மா. நான் உடனே புறப்படவேண்டும். உன் தந்தை இங்கு இல்லாத நிலையில் நான் தங்குவது முறையல்ல. இப்போது என் மூர்ச்சையும் தெளிந்துவிட்டது. எ ன்னைப் போகவிடு...’’

‘‘அதெல்லாம் முடியாது. உடல் நிலை பூரணமாகக் குணமாகும்வரை தாங்கள் இங்குதான் தங்கவேண்டும்...’’ என ரங்கபதாகை அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தபோதே அந்த அரண்மனை பரபரப்பு அடைந்தது.

அடுத்த கணம் அங்கே, ‘‘அம்மா ரங்கபதாகை, நீ பத்திரமாக வந்து சேர்ந்தாயா...? யாருடைய உடல்நிலை பூரணமாகக் குணமாகும்வரை இங்கே தங்கவேண்டுமென்று கூறுகிறாய்? யார் அது?’’ என்று பேசியவாறே வந்து நின்ற கொங்குவேள், அங்கே மஞ்சத்தில் சாய்ந்து கிடந்தவரைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்துபோனார்.

‘‘பிரபு! தாங்களா.... தங்களுக்கு என்ன நேர்ந்தது...?’’ என்ற சொற்கள் அவரிடமிருந்து பதற்றத்துடன் வெளிப்பட்டன.

தான் காப்பாற்றியது யாரை என்பது தெரிந்தவுடன் இளவரசி ரங்கபதாகை, பிரமித்துப்போனாள்.

பதும கோமளை என்கிற அந்த நாடோடிப் பெண்ணை உறையூர் அரண்மனையிலிருந்து தப்பிச் செல்லுமாறு கூறி, இரகசிய நிலவறை வழியைக் காண்பித்த பாண்டிய இ ளவசரன் கோச்சடையான், அவள் அவ்வழியே சென்றபின், சுவரோவியத்தை மீண்டும் நகர்த்தி அந்த நிலவறையின் முகப்பை மூடிவிட்டு, மஞ்சத்தில் வந்து சாய்ந்தான். நீண்ட நேரம் கழித்தே, ‘ஆ... ஊ....’ என அலறல் குரல் எழுப்பினான். காவலர்கள் உள்ளே ஓடி வந்தனர்.

அடுத்த கணம், உறையூர் அரண்மனையே பரபரப்படைந்தது. சிறிது நேரத்தில் சாளுக்கிய வேந்தன் (முதலாம்) விக்கிரமாதித்தன் அங்கு வந்து சேர்ந்தான்.

‘‘இளைய பாண்டியா! என்ன விபரீதம் இது! எப்படி நிகழ்ந்தது இது? எங்கே அந்த நாடோடிப் பெண்... இங்கிருந்து எப்படித் தப்பினாள் அவள்...? நேற்றுதான் அவளைப் பிடித்து வந்தோம். நீ அவள்தான் வேண்டுமென்று அடம் பிடித்தாய். பார், என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டது! உன் உயிருக்கு ஏதும் அபாயம் நிகழ்ந்திருந்தால், பழி என் தலை மீதல்லவா விழும்! பாண்டிய மன்னர் மாறவர்மன் அரிகேசரி நெடுமாறருக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்...?’’ எனப் பதறினார்.

‘‘விக்கிரமாதித்தரே, வீண் கவலை எதற்கு? என் உயிருக்கு அத்தனை எளிதில் ஆபத்து வந்துவிடுமா என்ன? அந்த நாடோடிப் பெண் விஷயத்தில் நான் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டது உண்மைதான். அவளை உங்கள் வீரர்கள் சரியாகப் பரிசோதிக்காமல் விட்டிருக்கிறார்கள். நடந்தாலே குடையாய் விரியும் அவள் பாவாடையின் மடிப்புகளில் எங்கோ இந்தக் கத்தியை மறைத்து வைத்திருக்கிறாள். நான் எதிர்பாராத தருணத்தில் சரேலென எடுத்து வீசிவிட்டாள்.

ஒன்று சொல்கிறேன், நீங்கள் நம்புவீர்களோ என்னவோ! என் மீது கத்தி வீசிய அவள், திடீரென இந்த வாயில் கதவைத் திறந்துதான் ஓடினாள். காவலர்கள் அவளை ஏன் பாய்ந்து பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை, அவளுக்கு உதவ இங்கு யாராவது இருக்கிறார்களோ என்னவோ! நான் பயணக் களைப்பாலும், குருதிச் சேதாரத்தாலும் சிறிது கண் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். விழித்ததும் வலி தாங்காமல் அலறினேன். பிறகு நடந்தது தாங்கள் அறிந்ததே....’’

‘‘கோச்சடையா, என்னால் இங்கு நடந்த எதையுமே நம்ப முடியவில்லை. நீ எவ்வளவு பெரிய மாவீரன்... உன்மீதே கத்தி வீசி விட்டு ஒருத்தி தப்பியிருக்கிறாள் என்றால், அவள் சாதாரண நாடோடிப் பெண்ணாக இருக்க முடியாது! என் ஆட்களை விசாரிக்கிறேன். அவள் தப்ப உதவியவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனைதான். அந்தப் பெண் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது. நிச்சயம் அகப்படுவாள். அவள் நினைத்தே இராத வகையில் பாடம் கற்பிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தன், மருத்துவரை அழைத்து வரச் செய்து, இளையபாண்டியன் புஜத்தில் கட்டுப்போட வைத்தான். பிறகு காவலை பலப்படுத்திவிட்டுச் சென்றான்.

சாளுக்கிய புலிகேசியின் புதல்வன் விக்கிரமாதித்தன், அத்தனை சாமர்த்தியம் குறைந்தவனா என்ன! அவன் காஞ்சியில் அதாகதம் செய்தபின், உறையூர் அரண்மனையில் வந்து தங்கியதே, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதில் அமர்ந்து, கடல்போன்ற தன் சேனைகளால் பலப்படுத்திக் கொண்டுவிட்டால், மதுரையை மிரட்டிப் பணிய வைக்கலாம் அல்லது பாய்ந்து தாக்கலாம் என்பதால்தானே? அதனால் அங்குள்ள இரகசிய நிலவறைப் பாதைகளைத்தான் முதலில் கண்டறியச் செய்திருந்தான். கோச்சடையான் அந்த அறையில்தான் தங்குவேன் என விருப்பம் தெரிவித்ததுமே நிலவறையின் மறுமுனை சாளுக்கிய வீரர்களின் கண்காணிப்பின் கீழ் வந்திருந்தது. அதன் வழியே தப்பிச் செல்ல முயன்ற பதுமகோமளை அன்றிரவே மீண்டும் சிறைப்பட்டுவிட்டாள்.

ஆனால், அவள் அகப்பட்ட செய்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று சாளுக்கிய வீரர்களுக்கு உத்தரவிட்டான், விக்கிரமாதித்தன். காரணம், அவளைத் தன் அறைக்கு அனுப்புமாறு ஏன் அத்தனை வற்புறுத்திக் கேட்டான் கோச்சடையான் என்பது அவனுக்குப் புரியாதிருந்தது. மேலும், இளையபாண்டியனின் உதவியின்றி அப்பெண் அங்கிருந்து இரகசிய நிலவறை வழியே தப்பிச் செல்ல முயன்றிருக்க முடியாது என்பதும் அவனுடைய தீர்மானமாய் இருந்தது. வாசல் வழியேதான் அவள் தப்பி யோடினாள் என்பது சுத்தப் பொய் என்பதும் விசாரணைகளால் ஊர்ஜிதமாகியிருந்தது.

அந்த நாடோடிப் பெண் உண்மையில் யார்? கோச்சடையான் அவளைத் தப்ப வைக்க முயன்றது ஏன்?

இந்தக் கேள்விகள் விக்கிரமாதித்தனின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன..

வெள்ளி, 16 டிசம்பர், 2011

மார்கழித் திங்கள் அல்லவா?

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவம் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.


தமிழ்மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது மார்கழிமாதம். எண்களில் ஒன்பதிற்கு எப்போதுமே பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரி நவரத்தினம் நவக்ரஹங்கள் இப்படி பலப்பல. மும்மதங்களுக்கும சிறப்பு இறைவழிபாட்டு மாதமாகும்.



மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.




திருவரங்கத் திருநகரத்திற்கும் அருகே உள்ள ஆனைக்கா நகருக்கும் மார்கழியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். இவ்விடங்களில்
திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஊரே விழாக்கோலம் கொண்டுவிடும்.

மார்கழிமாதத்தில் மட்டும் திருவரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனம் கிடையாது.

மார்கழியில் மட்டும் அனந்தசயனத்திலிருக்கும் பெருமாளுக்குத் துயில் எழுப்ப வேண்டி அதிகாலை முன்றரை மணிக்கே திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக ஆண்டாள் பாசுரங்களைப்பாடுவார்கள்.

மார்கழி உற்சவக்காலத்தில்அரையர் சேவையில் நாலாயிரதிவ்யப்ரபந்தப்பாடல்கள் அபிநநயத்துடன் அரங்கேற அதை அரங்கன் செவிமடுத்துக்கேட்பது கண்கொள்ளாகாட்சியாகும். தமிழுக்குப் பெருமையும் ஆகும்.

உற்சவதினத்தின் எட்டாம் நாள் அரங்கர் குதிரைவாகனத்தில் கோயிலின் கிழக்குப்பகுதியில் இருக்கும் மணல் வெளிக்கு வருகை தருவார். அங்கு நடைபெறும் நிகழ்வுக்கு வேடுபரி என்று பெயர். அப்போது முத்தரையர் இன மக்களுக்கு கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது. வருடத்தின் ஒவ்வொரு உற்சவ காலங்களிலும் இதுபோல ஒவ்வொரு சாதியினருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது.


மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்.

இதைப்பெற்றுக்கொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்துநிற்பார்கள். இவைகளின் மணமும் சுவையும் அலாதியானது.


மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின் இன்னொரு பாடலைப்பார்க்கலாமா?





’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,


திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ


மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே


விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’


கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.

கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை.

பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.

மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

ஆண்டாளின் திருவாய்மொழியில் நட்சத்திர அந்தஸ்து கொண்டபாடல் இது.

திருப்பாவை முப்பதும் பாடும் போது ஆண்டாள் சிறுமியாய் இருந்திருக்கவேண்டும் செல்வச்சிறுமீர்காள் என்பாள் தனது தோழிகளை ஆனால் கற்பூரம் நாறுமோ பாடலின்போது அவள் பருவ மங்கையாக இருந்திருக்கவேண்டும் அந்தப்பருவத்தில் மனத்தில் தோன்றுவதை அந்த காலத்தில் ஒரு பெண் இப்படி துணிவோடு கேட்கிறாள் என்றால் ஆண்டாள் எப்படிப்பட்ட புரட்சிப்பெண்ணாக இருந்திருப்பாள்?!


'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.



ஏழாம் திருமொழியில் 'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்கிறாள்.

அடுத்து,



'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் '



என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் 'வாயமுதம் ' என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை
கொள்கிறாள் ஆண்டாள்

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!


கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.

ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.


'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!


அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? அதைப்பிறகு பார்க்கலாம்!

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}



அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

புல்லாங்குழலை ஏன் கேட்கவில்லை தெரியுமா



பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.




அதனால் புல்லாங்குழல் பிறகுதான்.புல் லாங் கா இருந்தாலும் சிக்கென்ற சங்கு மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது!

சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். 'அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்' என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.




அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.






உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,

ஊனும் உறக்கமும் இந்த சங்குக்காரருக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ...ஐயா சங்கையாவே... பெரியவர்!

ஆண்டாள் புத்திசாலிப்பெண் அல்லவா அதனால்தான், பெரிதினும் பெரிது கேட்டிருக்கிறாள்!

(மார்கழியில் மேலும் ஆண்டாளை வாரணம் ஆயிரம் சூழ கொண்டுவருவோம்!)

thanks: http://shylajan.blogspot.com/2011/12/blog-post_16.html

""முத்தரையர் நண்பர் சந்திப்பு""

நண்பர்களுக்கு வணக்கம்,
நாளை மறுநாள் (18.12.2011) அன்று திருச்சி வரகனேரி முத்தரையர் உயர் நிலைப் பள்ளியில் ""முத்தரையர் நண்பர் சந்திப்பு"" நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த நாளில் கலந்துக் கொள்ள வசதியுள்ள நண்பர்கள் கலந்துக் கொண்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்து வரும் நண்பர் சண்முகம் அவர்களுக்கும் ஏனைய இணைய நண்பர்களுக்கு இளம் சிங்கங்களின் நன்றியினையும், இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் நண்பர்கள் இந்த தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளவும்
9486939275 ,9003817749 .917299381212 ,9962560614

குறிப்பு: முத்தரைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வருகை தரும் திருச்சிக்கு புதியவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திருக்கு வந்து அங்கிருந்து திருவெறும்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் வரலாம் வரகனேரி மாரியம்மன் கோயில் நிறுத்தத்தில் இறங்கிகொள்ளவம் .இடம் ,முத்திரியர் பள்ளி



வாழ்த்துக்களுடன்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

ஒருங்கிணப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 7 டிசம்பர், 2011

நண்பர் மணிவானதி

முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார்.

சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்

கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.

இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.

மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.

1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.

இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.

இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.












THANKS: http://manikandanvanathi.blogspot.com/search?updated-min=2011-01-01T00:00:00-08:00&updated-max=2012-01-01T00:00:00-08:00&max-results=27

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)- முனைவர் துரை.மணிகண்டன் -பெரம்பலூரில்

தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர் க.துரையரசன்,
தமிழ் இணைப்பேராசிரியர் -
முன்னுரை;
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர்.
அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க

முற்படுகிறது.திண்ணை; வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம். இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது. இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி; www.thinnai.comதட்ஸ் தமிழ்; திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.inவார்ப்பு;இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும். இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில் வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை. நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி; www.vaarappu.comபதிவுகள்; 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன. இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.comமரத்தடி;மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.comதமிழம் நெட்;மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.netதமிழ்க்கூடல்;இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.comநிலாச்சாரல்; இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.comதமிழோவியம்; இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e -books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.comமுடிவுரை;இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும். http://duraiarasan.blogspot.com/2008/04/blog-post.html

காலச்சுவடு!கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்!- பத்ரி சேஷாத்ரி -இணையம் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று பல நாளேடுகள், வார, மாதத் தமிழ் இதழ்கள் இணையத்தில் வருகின்றன. தமிழகத்தில் அச்சில் வரும் செய்தித்தாள்களும் பெரும் வணிக இதழ்களும் சிறிது சிறிதாக 1990களிலிருந்தே இணையத்தில் வர ஆரம்பித்தன. இன்று தினத்தந்தி (www.daily thanthi.com), தினகரன் (www. dinakaran.com), தினமலர் (www.dinamalar.com), தினமணி (www. dinamani.com), தமிழ்முரசு (www.tamilmurasu.in), மாலைமலர் (www.maalaimalar.com) போன்ற அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன.இவற்றுள் தினமலர் (http://epaper.dinamalar. com), தினகரன் (www.dinakaran.com/epaper/default.asp), தமிழ் முரசு ஆகியவை மின்-தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே அந்தந்தப் பக்கங்களில் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளியாகின்றன.விகடன் (www.vikatan.com), குமுதம் (www. kumudam.com), கல்கி (www.kalkionline.com) ஆகியவை தமது குழும இதழ்கள் அனைத்திற்கும் வலையங்களை வைத்துள்ளன. விகடன், கல்கி இரண்டுமே காசு கொடுத்துப் படிக்கும் இதழ்கள். குமுதம் இப்போதைக்கு இலவசம்.இவை அனைத்திலுமே ஒரு பெரும் பிரச்சினை உள்ளது. இந்தத் தளங்களின் பக்கங்கள் ஒன்று மின்-தாள்களாக, அதாவது முழுவதுமே படங்களாக உள்ளன அல்லது ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font) ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இந்த எழுத்துருக்கள் எவையும் யூனிகோடு கிடையாது. இதனால் இலவசமான தளங்கள்கூடத் தேடு பொறிகளான கூகிள், யாஹூ!, எம்எஸ்என் ஆகியவற்றில் அகப்படா. வலையகங்களின் அடிப்படையே யாராவது எதையாவது தேடும்போது 'டக்'கென்று கிடைப்பதுதான்.மின்-தாள்களாக வெளியாகும் செய்தித் தாள்களைத் தவிர்த்துப் பிற அனைத்திலுமே வடிவமைப்பு மோசமாகத்தான் உள்ளது. தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், இதுநாள்வரையில் இந்த மின்னிதழ்கள் மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே.இதே நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு (தமிழக இதழுக்கும் சிங்கை இதழுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை போல) முழுவதும் யூனிகோடில் வெளிவருகிறது (http://tamil murasu.asia1.com.sg). அதேபோலவே இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் (www.thinakural.com), வீரகேசரி (www.vira kesari.lk) முதலியன முழுவதும் யூனிகோட் எழுத்துருவிலேயே வருகின்றன.இணையம் வளர்ச்சி அடைந்த காலத்தில் உருவான வலைவாசல்கள் (போர்ட்டல்கள்) பலவும் தமிழில் தினசரிச் செய்திகள், சிறப்புச் செய்திகள், இலக்கிய, பல்சுவை இதழ்கள் என்று ஆரம்பித்தன. இணையக் குமிழ் வெடித்தபோது இவ்வாறு உருவான பல வலையகங்களும் தமது சேவையைக் குறைத்துக்கொள்ள நேரிட்டது. சில காணாமல் போயின. சில இன்றும் இருந்துவருகின்றன. இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உள்ளன என்பது முக்கியம். அவற்றில் வணிக நோக்கில் நடந்துவரும் இதழ்கள் கீழ்க்கண்டவை:சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்: http://tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து ஒரே பக்கத்தில் வழங்கும் சேவை: www.samachar.com/tamil/index.php. Thats Tamil: http://thatstamil.oneindia.in, ஆறாம் திணை: www.aaraamthinai.com, வெப் உலகம்: www.webulagam.com.இவை தினசரிகள். என்றாலும் தினசரி அச்சு இதழ்களுடன் போட்டிபோட முடியாமல் மிகக் குறைந்த நிருபர்களையும் வசதிகளையும்கொண்டு, முடிந்தவரை அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டே தமது இணைய இதழ்களைக் கொண்டுவருகின்றன. இந்த நிறுவனங்கள்கூட யூனிகோடில் தமது இதழ்களைத் தருவதில்லை. வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன. திண்ணை (www.thinnai.com), தமிழோவியம் (www. tamiloviam.com) வாராவாரமும், திசைகள் (www.thisaigal.com) மாதம் ஒரு முறையும், பதிவுகள் (www. pathivukal.com), நிலாச்சாரல் (www.nilacharal.com) ஆகியவை எப்பொழுதெல்லாம் வர முடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள். திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை; திசைகளும் தமிழோவியமும் பயன்படுத்துகின்றன.சிஃபி தமிழ்ப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாகப் பல சிற்றிதழ்கள், நடுத்தர இதழ்களை முழுவதுமாக ஆவணப்படுத்திவருகிறது.
அவை :காலச்சுவடு: http://tamil.sify.com/kalachuvadu/index.php, உயிர்மை: http://tamil.sify.com/uyirmmai/index.php, அமுதசுரபி: http://tamil.sify.com/amudhasurabi/index.php, கலைமகள்: http://tamil.sify.com/kalaimagal/index.php, மஞ்சரி: http://tamil.sify.com/kalaimagal/index.php, தலித்: http://tamil.sify.com/dalit/index.php, பெண்ணே நீ: http://tamil.sify.com/pennaenee/index.phpஇவை எதுவும் யூனிகோடில் இல்லை.ஆனால் கீற்று என்னும் வலையகம் (www.keetru. com) பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யூனிகோடில் வெளியிடுகிறது. இங்குக் கிடைக்கும் இணைய இதழ்கள்:தலித் முரசு: www.dalithmurasu.com, புதிய காற்று: www.puthiyakaatru.keetru.com, புது விசை: www.puthuvisai.com, கூட்டாஞ்சோறு: www.koottanchoru.com, அநிச்ச: www.anicha.keetru.com, புரட்சி பெரியார் முழக்கம்: www.puratchiperiyarmuzhakkam.com, விழிப்புணர்வு: www.vizhippunarvu.keetru.com, தாகம்: http://keetru.com/thaagam/index.html, தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்: http://www.keetru.com/anaruna/index.html.இவை அனைத்திலும் உள்ள விஷயங்கள் கூகிள் தேடலின்போது கிடைக்கும்.குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை மட்டும் குறிவைக்கும் niche magazines தமிழில், அச்சில், நிறைய வருகின்றன. பெண்களுக்காக மட்டும், குழந்தைகளுக்காக, பங்குச் சந்தை/தொழில் தொடர்பானவை, மோட்டார் வாகனங்களுக்காக என்று. தோழி (www.thozhi.com) என்ற தளம் பெண்களுக்காக என்று பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் நல்ல வடிவமைப்புடன் உள்ளது. நின்னை (www.ninnay.com) என்றொரு தளம், கவிதைகள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காக உருவாகியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க எழுத்துகளால் அல்லாமல் பட வடிவில் (png கோப்புகளாக) அமைத்திருக்கிறார்கள்.நான் இதுவரை குறிப்பிட்டவற்றைத் தவிர இன்னமும் பல சிறு மின்னிதழ்கள் இருக்கலாம்.தொழில்நுட்ப வகையில் பார்க்கும்போது வெகு சிலவற்றைத் தவிரப் பிற அனைத்துமே யூனிகோடை ஏற்காமல் இருப்பதால் அவற்றின் பயன் குறைவே. இதைத் தவிர, RSS feed, வாசகர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, tagging போன்ற பலவற்றைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களுக்கும் அச்சு இதழ்களை நடத்துவதே போராட்டமாக இருக்கும் போது இணைய இதழ்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய வணிக இதழ்களுக்கோ, இப்பொழுது வலையகங்களை அவர்கள் உருவாக்கும் பாணியை மாற்றுவது என்பது மிக அதிகமான அளவு வேலையை இழுத்தடிக்கும்.வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார் இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களைவிட அதிகமாக மிளிர வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்கள் பலரும் தமக்கெனத் தமிழில் வலைப்பதிவுகளை உருவாக்கும்போது அவற்றில் காணக்கிடைக்கும் செய்திகளும் செய்தி அலசல்களும் இணைய இதழ்களில் காணக் கிடைப்பதைவிட வலுவாக இருக்கும். இந்நிலை ஏற்கெனவே உலகளாவிய ஆங்கில வலைப் பதிவுகளில் எட்டப்பட்டுவிட்டது. ஒரு நல்ல விஷயம் - தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கும் போதே உயர் தொழில்நுட்பங்களான யூனிகோட், RSS feeds, tagging போன்ற பலவற்றையும் பாவித்தே உருவாக்கப்படுகின்றன.இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது. காசு கொடுத்து 30-40 இதழ்களை நாம் வாங்கிப் படிக்கப் போவதில்லை. இதனால் மாற்றுக் கருத்துகள் நம்மை வந்தடைகின்றன. இன்று வாசகர்கள் சில ஆயிரங்களே இருந்தாலும், இணையம் வளர வளர, நாளை இந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு அதிகரிக்கும் என்பதை மனத்தில் வைத்து இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணையத்தைத் தொட வேண்டிய தேவையை உணர வேண்டும்.அதைப் போலவே சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் சிற்றிதழ்கள் வெளியிடுவதில் செலவழித்துவிடும் பலரும்கூட இணையத்தில் மட்டுமே இருக்கக் கூடிய இதழ்களை உருவாக்குவதன் மூலம் காசை மிச்சப்படுத்தலாம். நிறையச் செலவுசெய்து 300-1000 வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிடச் சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்![கட்டுரையாளர் கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாளர். இவரது வலைப்பதிவு: http://thoughtsintamil.blogspot.com ]

மீள்பிரசுரம்: திண்ணை.காம்.தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., -உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும், புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை. அறிவியல், தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. மனித அறிவுத்திறனின் எல்லையே அதன் எல்லை; மனித படைப்புத்திறனின் வரம்பே அதன் வரம்பு. உலகு முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும்¢ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்¢டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அனுப்ப மட்டுமே பயன்பட்டுவந்த இணையம் தற்போது மின்வணிகம், மின் அரசான்மை, மின் பொழுதுபோக்கு, மின்நூலகம், மின்னிசை எனப் பல வகைகளில் தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம் பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளித்¤¢ல் சென்றடையும்; மக்களால் பெரிதும் பயன் படுத்த முடியும் என்ற அடிப்படையி¢ல் தமிழ் மொழி இயைத்தில் இடம் பெற வேண்டி தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது. தமிழும் கணினிப் பயன்பாடும்
தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது இயைத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. இதன் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் இணையத்தை, கணினியை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மின் அஞ்சலில் தமிழ் முதலில்¢ இடம் பெற்றது. மெல்ல மற்ற துறைகளிலும்¢ கால்பதி¢த்தது. தமிழ் இணையம் 99 மாநாட்டிற்கு முன்வரை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பல குழுவினராக இருந்து அவரவருக்கான தனித்தனியான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டு அவ்வற்றை மின்னஞ்சலிலும் இணைய தளங்களிலும் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு குழுவினர்¢ அனுப்பிய மின்னஞ்சலையோ, இணையதளத் தகவலையோ ஏனையோர் படித்து அறிய இயலாத நிலை நிலவியது. தமிழ்மொழி ஒன்றுதான் என்றபோதிலும் அது இணையத்தில் பல வடிவங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. மேற்கண்ட சிக்கலில் இருந்து மீள தமிழக அரசு நடத்திய தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு டாம் (TAM), டாப் (TAM) என்ற எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட அறிவிக்கப்பட்டன. இதனால் அச்சிக்கல் ஓரளவிற்கு அந்நேரத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பி¢னும் இந்த எழுத்துருக்களை ஒரு கணினியில் உள்ளீடு செய்தபின்னேதான் பயன்படுத்தமுடியும் என்ற சிக்கல் நீடித்தது. தமிழில் யுனிகோடு முறைமை
தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான யுனிகோடு (UNICODE) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில கயைப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது. இந்த யுனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை. யுனிகோட் முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் தமிழின் இடம் இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ எளிதான வழி பிறந்¢துள்ளது. தமிழ் இணைய இதழியல் இன்று கல்வி, வணிகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கணினி விளைவித்துள்ளது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற புதிய பிரிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலும் பல இணைய இதழ்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இது ஒரு புதிய முயற்சியாகும். தமிழ் இணைய இதழ்கள் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களை உடன் எட்டுகின்றன ; உலக அளவில் வாசகர்களைப் பெறுகின்றன. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக வாசகர் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று விடுகிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள் பன்முக நோக்கில் பரவிவருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு, பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள். தமிழ் இணைய இதழ்கள் சிலவும் அவற்றின் வகைப்பாடும் தமிழில் பல இணைய இதழ்கள் தற்போது எழுந்து வளர்ந்து வருகின்றன. அவற்றுள் பின்வருவன குறிக்கத்தக்கன. அம்பலம், திண்ணை, தமிழோவியம், வார்ப்பு, திசைகள், ஊடறு, நிலாச்சாரல், ஆறாந்திணை, மரத்தடி, பதிவுகள், வெப் உலகம், தமிழ்சிபி தோழி.காம் போன்ற இதழ்கள் வாசகர்களைப் பெருமளவில் பெற்றவை. இவ்விதழ்களில் சில மாத இதழ்கள், சில வார இதழ்கள். இவை பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த இதழ்கள் என்பது இவற்றின் பொதுப்பண்பாக உள்ளது. இந்த இதழ்களில் பெண்களுக்கானவை, கவிதைக்கானவை, செய்திகளுக்கானவை என்ற பிரிவுகளும் உண்டு. கட்டணம் கட்டி படிக்கவேண்டியவை, கட்டணம் தேவைப்படாதவை என்ற பிரிவுகளும் உண்டு. இவை தவிர தமிழ் நாட்டில் வெளியாகும் அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது. மேலும் இணைய இதழ்களைச்¢ சிற்றிதழ்கள் போன்றவை/ தரத்தவை என்று கருதினாலும் தவறாகாது. இதனடிப்படையில் தமிழ் இணைய இதழ்களின் தரத்தையும் அவற்றின் பங்களிப்பையும் ஆராய ஏற்ற காலம் இதுவேயாகும். தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம் மேற்சுட்டிய இணைய இதழ்களின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்வது அவற்றின் தரத்தை உணர்ந்து கொள்வதற்கு ஈடானது. அவவ்கையில் சில இதழ்களின் உள்ளடக்கம் இங்கு தரப்படுகின்றன. திண்ணை இந்த இதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக்¢ கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள் அறிவிப்புகள் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி அமைகிறது. இது ஒரு வார இதழாகும். பதிவுகள் இந்த இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல் , திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக் கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன. தோழி. காம் இந்த இதழ் பெண்களுக்கான இதழ் ஆகும். இதனுள் விவாதம், அழகு, தாய்மை, பயணம், திரை, உங்கள் நாட்குறிப்பு முதலிய இடம்பெற்று வருகின்றன. அம்பலம் இந்த இதழில் செய்திகள், வார இதழ், கவிதைகள், சிறப்பிதழ்கள், மகளிர்பக்கம், வாழ்த்துகள், மின்னஞ்சல், இளையர், திரை முதலிய பகுதிகள் உள்ளன. வார்ப்பு இது கவிதைகளுக்கான இதழாக வெளிவருகிறது. இதில் கவிதைகள், கவிதைத்தொகுதி அறிமுகம், கவிதை விமர்சனங்கள், கவிஞர்களின் பட்டியல் முதலியன இடம் பெற்றுள்ளன. இவ்வாறு வகைக்கு ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர மற்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. இடங்கருதி இவை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழ் இணையஇதழ்கள் ஆய்வின் தேவை தமிழ் இணைய இதழ்கள் என்பவை தமிழ் இதழியல் வரலாற்றில் புதுமையானவை. அவற்றிற்கு என்று சில வரையறைகள் தற்போது உள்ளன ; பொதுப்பண்புகள் உள்ளன. அவை இணைய இதழ்களுக்கு மட்டுமே உரித்தானவை. இவை ஆராயப்படவேண்டும். தமிழ் இணைய இதழ்களில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் இணையஇதழ்கள் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க முடியும். தமிழ் இணைய இதழ்களின் தரம், வாசகர் கருத்து ஆகியவையும் ஆராயப் படவேண்டிய களங்கள். இதன்மூலம் இணையஇதழ்களின் தரம் மேம்பாடு அடையும். தமிழ் இணைய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட மக்களை மட்டுமே சென்றடைகின்றன. அவை அனைத்து வட்ட மக்களையும் சென்றடைவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும். தமிழ் இணைய இதழ்களுக்கும் மற்ற துறை இதழ்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை அளந்தறியப்பட வேண்டும். இதன்மூலம் இணைய இதழ் வளர தனித்த வழி உருவாகும். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை குறிப்புபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கு ஆய்வு நெறியாளராக முனைவர் மு. பழனியப்பன் எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., பிஜிடிசிஏ., முதுநிலை தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, (த), புதுக்கோட்டை, 622 001 அமைகிறார். இது குறித்தத் தகவல்கள் ஏதேனும் இருப்பினும் கீழ்க்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறேன். muppalam2003@yahoo.co.in நன்றி: திண்ணை.காம்

இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன் -விரிவுரையாளர் , தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.இலக்கிய உலகில் எண்ணிலடங்கா இலக்கியங்களைப் பிரசவம் செய்யும் மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்குச் சொந்தம் கொண்டாடியத் தமிழ் இன்று நான்காம் தமிழாக .......உள்ளே

தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர். மு. இளங்கோவன் -[புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில் (09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம்.- பதிவுகள்]இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன. அச்சுவடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில் இருந்து பல வடிவங்களில் பெற்றுக்கொள்ள,அனுப்ப முடிகிறது. எனவே அச்சுவடிவில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்களும், ஒலி,ஒளி வடிவில் இருந்த ஊடகங்களும் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை,தகவல்களை உலகச்சொத்தாக்க முனைந்துள்ளன.உலகப்போட்டிக்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்காக இணையத்தை ஒவ்வொரு வகையில் சார்ந்து நிற்கின்றனர்.அவ்வகையில் அச்சில் வந்த,வரும் இதழ்கள் பலவும் தங்கள் இதழ்களை மின்னிதழ்களாகவும்(e-zines) வெளியிடுகின்றன.அவ்வகையில் உலக மொழிகள் பலவற்றுள்ளும் மின்னிதழ்கள் வெளிவருகின்றன.இக்கட்டுரை தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்கின்றது.தரவுதளம் (Database site) இணையதளம்,இணைய இதழ், வலைப்பூ வரையறைதமிழில் வெளிவரும் இணைய இதழ்களைப்பற்றி அறிவதற்கு முன்பாக தரவுதளம் (Database site), இணையதளம்,இணைய இதழ்,வலைப்பூ என்னும் சொற்களைப்பற்றிய வரையறையைச் செய்துகொள்வது நன்று. ஏனெனில் இவை யாவும் தொடர்புடையனவாக இருப்பதால் ஒன்றுபோல் தோன்றும்.தரவுதளம் என்பது பல்வேறு தகவல்களைச் சேகரித்து நிரல்படுத்திக் கட்டமைக்கப்பட்ட தொகுப்பு இணையதளம்.ஆங்கிலத்தில் பல தரவுதளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உலகளாவிய திரைப்படங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் www.imdb.com தளத்திலும், மட்டைப்பந்து விளையாட்டினைப் பற்றிய தகவல்களுக்காக www.cricinfo.com தளமும் உள்ளன.தமிழில் முதலாவது தரவு தளமாக www.viruba.com உள்ளது. இத்தளத்தில் தமிழில் வெளியாகும் நூல்களைப் பற்றியும், அவற்றைப் பதிப்பித்த பதிப்பகங்கள் பற்றியும், நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களுடன் தமிழ் ஊடகங்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்கள், புத்தகங்களுக்கான மதிப்புரைகள் ஆகியவற்றுடன் தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் ஆய்வுமாணவர்கள் மற்றும் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தளமாக இது விளங்குகிறது.இணையதளம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு, அல்லது தனிநபர் தமது விவரங்கள், தகவல்கள்,செய்திகள்,சேவைகள் முதலானவற்றை,எழுத்தாகவோ, படமாகவோ ஒலி, ஒளி வடிவிலோ தருவது இணையதளமாகக் கருதலாம்.எ.கா. அப்பல்லோ மருத்துவமனையின் தளம் (www.apollohospitals.com) அதன் சேவை,மருத்துவர்கள் பற்றிய விவரம், வசதிகள் இவற்றைத் தாங்கியுள்ளமையை நினைவிற்கொள்க.இணைய இதழ்கள் என்பவை அச்சுவடிவ இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள்,படங்கள் இவற்றைக்கொண்டு வெளிவருவனவாகஉள்ளன.எ.கா.கீற்று, திண்ணை. பதிவுகள்,நிலாச்சாரல், எழில்நிலா, அந்திமழை முதலியன.வலைப்பூ என்பது தம் விருப்பத்தை எழுத்தாகவோ,படமாகவோ,ஒலி,ஒளி வடிவாகவோ வழங்குவது. கட்டணம் கட்டியும்,இலவசமாகவும் வலைப்பூக்களை உருவாக்கமுடியும்.பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றன. Google நிறுவனத்தின் www.blogger.com என்னும் வலைப்பூ சிறந்த நூல்கள், சிறந்த தளங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், பதிப்பு, நூல் தொர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவதை அத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம்.இணைய இதழ்கள்
தமிழ்மொழியில் பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவ்விதழ்கள் இலவசமாகவும், கட்டணம் கட்டியும் படிக்கும் படியாக உள்ளன.அதுபோல் அனைவரும் எளிதில் படிக்கும்படியாக ஒருங்குகுறி(unicode) எழுத்திலும், எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் படி தனிவகை(டாம்,டேப்) எழுத்திலும் வெளிவருகின்றன. ஒருங்குகுறியில் வெளிவரும் இதழ்களையே அனைவரும் விரும்பிப் படிக்கின்றனர்.தொடக்கத்தில் டாம்,டேப் எழுத்துகளைப் பயன்படுத்திய இதழ்கள்கூட உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஒருங்கு குறிக்கு மாறிவிட்டன.தனிவகை எழுத்தில் தொடக்கத்தில் வெளிவந்த தினபூமி,தினமணி இதழ்கள் இன்று ஒருங்கு குறியில் வருகின்றமையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவேண்டிய தளத்திற்கோ, இதழிற்கோ படிப்பாளிகள் செல்லத் தயங்குகின்றனர்.தினத்தந்தி இதழ் ஒருங்குகுறியில் இல்லாமையால் படிக்கும் சிக்கல் உள்ளது.இணைய இதழ்களின் வகைப்பாடு
இணைய இதழ்களை அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்ப நாளிதழ்,வார இதழ்,மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும் காலை இதழ்,மாலை இதழ் என வகைப்படுத்தலாம்நாளிதழ்பெரும்பாலான அச்சு இதழ்கள் இன்று மின்னதழ்களை வெளியிடுகின்றன. தினமலர், தினமணி, தினபூமி, விடுதலை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர் முதலியன இணைய இதழ்களாக வெளிவருவதில் குறிப்பிடத்தக்கன.இவற்றுள் தினமலர் நாளிதழ் மின்னிதழாக வெளிவருவதுடன் குறிப்பிட்ட மணி நேரத்தில் செய்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.மேலும் அயல்நாட்டுத் தமிழர்களைக் கவரும் பல்வேறு உத்திகளையும் பின்பற்றி அயலகத் தமிழர்களைத் தன் இதழைப் படிக்கும்படி செய்கின்றது. உலகத்தமிழர் செய்திகள், பிற மாநிலச் செய்திகள், மாவட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு வகையில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வகையில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆத்திரேலியா, சீனா,சப்பான் முதலான நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்த அந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்கள் திரட்டி அனுப்புகின்றனர்.இது தவிர புதினம்.காம்,சங்கதி,பதிவு,லங்காசிறீ,தினக்குரல்,உதயன், தாட்சுதமிழ்,வெப் உலகம், சிபி.காம், பி,பி.சி.தமிழ்,வணக்கம் மலேசியா முதலான தளங்கள் பல்வேறு வகையில் அன்றாடச் செய்திகளைத் தருகின்றன.வார இதழ்கள்
தமிழகத்தில் அச்சில் வெளிவரும் வார இதழ்கள் பலவும் மின்னிதழாகவும் வெளிவருகின்றன. மின்னிதழின் தரம் படிப்பாளிகளை மனத்தில்கொண்டு சிறப்புப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் சில இதழ்கள் வழங்குகின்றன. ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர்மலர், கல்கி,நக்கீரன்(வாரம் இருமுறை) முதலிய இதழ்கள் இணைய இதழ்களாகவும் கிடைக்கின்றன.இவற்றுள் சிலவற்றை இலவசமாகவும்,சிலவற்றைக் கட்டணம் கட்டியும் படிக்கவேண்டியுள்ளது.திண்ணை வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.இதன் வடிவமைப்பும்,வகைப்பாடும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது. முகப்பு,அரசியலும் சமூகமும்,கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும்,கலைகள்-சமையல் என்னும் வகைப்பாட்டில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து வாரந்தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்பட்டுத் தரமான படைப்புகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டிற்கு உரியது. உலகம் முழுவதும் இவ்விதழுக்கு வாசகர்கள் உள்ளனர்.அதுபோல் படைப்பாளிகளும் உள்ளனர்.உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைத் திண்ணை வழங்குவதில் ஓர் உலகப்பார்வை உள்ளமை புலனாகும். அனைத்துத்தர மக்ககளும் அமர்ந்துபேசும் இடமாகத் திண்ணை இருப்பதுபோல் திண்ணை இணையதளமும் அனைத்துக் கொள்கைகளையும், கருத்துகளையும் கொண்டவர்களைத் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளமை திண்ணையின் தனிச்சிறப்பாகும்.திண்ணையில் பல வகையான படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வந்து வழங்குகின்றனர். கதை, கட்டுரை,கடிதம், ஆய்வுகள், நாட்டு நடப்புகள், இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள்,உலக அரசியல் முதலியன பற்றிய பல தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய ஆவணப்பகுதிக்குச் சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்தும் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.திண்ணையில் கி.இராசநாராயணன், அம்பை, கோபால்இராசாராம், அ.மார்க்சு, விக்கிரமாதித்தியன், காஞ்சனாதாமோதரன், வாசந்தி, பாவண்ணன்,வ.ந.கிரிதரன், பழ.நெடுமாறன், இன்குலாப், சா.கந்தசாமி, இந்திராபார்த்தசாரதி, தேவமைந்தன், செயபாரதன், பிச்சினிக்காடு இளங்கோ முதலானவர்கள் பலவகையில் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.மாத இதழ்கள்
தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும் சில வெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com). பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது. ['பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது' என்பது பிழையான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. 'இலவசமாக வெளிவரக் கூடிய இதழாக இருப்பினும்' என்னும் சொற்தொடர் தற்பொழுது பதிவுகள் அவ்வாறில்லையென்னுமொரு அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. உண்மையில் தற்பொழுதும் பதிவுகள் இலவசமாகவே வெளிவருகிறது. பதிவுகளைச் சந்தா செலுத்திப் படிக்க வேண்டியதில்லை. ஆயினும் சந்தா செலுத்த விரும்பினால் செலுத்தலாமென்றுதான் கூறியிருக்கிறோம். 'பதிவுகள் இலவசமாக வெளிவரும் இதழாக இருப்பினும்' என்றிருந்திருக்க வேண்டும். - பதிவுகள்] ஆசிரியர் வ.ந.கிரிதரன். 2000 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் முரசுஅஞ்சல் (இணைமதி) எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஒருங்குகுறி எழுத்து பயன்படுத்தப்படுகிறது.அரசியல்,கவிதை,சிறுகதை,கட்டுரை,நூல்விமர்சனம்,நிகழ்வுகள்,அறிவியல்,திரைப்படம்,வாசகர் எதிரொலி, நாவல்,உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச விளம்பரம்,நூல் அங்காடி, சமூகம் என்னும் தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன.இலக்கிய இதழ்கள்
இலக்கியம், இலக்கணம், படைப்புகள் சார்ந்த செய்திகளைக்கொண்டும் இதழ்கள் வெளிவருகின்றன. திண்ணை என்னும் இணைய இதழ் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,ஆய்வாளர்களின் படைப்புகளைத் தாங்கித் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வெளிவருகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் என்னும் மாத இதழ் இலக்கியம், இலக்கணம் தமிழ்வளர்ச்சி சார்ந்த செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது.பதிவுகள் என்னும் இதழ் கனடாவிலிருந்து வ.ந.கிரிதரன் அவர்களால் சிறப்பாக இலக்கியம் சிறுகதை,கவிதை,கட்டுரை முதலான பலதரப்பட்ட செய்திகளுடன் வெளிவருகின்றமை குறிக்கத்தக்க ஒன்றாகும். இந்த இதழில் திண்ணை, தமிழ்மணம், விக்கிபீடியா, வார்ப்பு, நூலகம்,கீற்று,மதுரைத்திட்டம், சென்னை நூலகம் முதலான இதழ்,தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.படைப்பாளிகளுடன், இலக்கிய ஆர்வலர்களுடன் தம் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், எல்லைகளைக் கடந்து அனைவருடனும் தொடர்புகொள்ளவும் பதிவுகள் தோற்றுவிக்கப்பட்டது என்ற் இதன் நோக்கம் பதிவாகியுள்ளது. குழுமனப்பான்மையின்றி, அனைவரும் கலந்து பங்காற்றும் இதழாகவும், உலகில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடும் இதழாகவும் இது உள்ளது. இவ்விதழில் இந்திரன், செயபாரதன், கா.சிவத்தம்பி, செயமோகன், சுப்பிரபாரதிமணியன், அ.முத்துலிங்கம், பிச்சினிக்காடு இளங்கோ, நளாயினி, சோலைக்கிளி கிரிதரன் முதலானவர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.வடஅமெரிக்கா,ஆத்திரேலியா,ஐரோப்பா,சிங்கப்பூர்,சப்பான்,மலேசியா,இலங்கை,இந்தியா உட்பட பலநாடுகளின் வாசகர்கள் இந்த இதழுக்கு உண்டு.பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலப் படைப்புகளும் இதில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மாத இதழாகப் பதிப்பிக்கப்பட்டு அனைவராலும் விரும்பிப்படிக்கப்படுகின்றது.பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம்.நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்(இதனைத் தளமாகவும் கொள்ளலாம்).தமிழறிஞர்களின் படங்கள்,அறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்பு,பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு வரும் இதழ்கள் மடல்கள் பற்றிய விவரம்,நூல் மதிப்புரை,தமிழ்ப்பாடம்,திருக்குறள்,இலக்கிய நிகழ்வுகள்,அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உலக அளவில் மதிக்கப்படுகின்றன. மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாடல்கள், இலக்கண,இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்,நூல்மதிப்புரை,தமிழ்சார்ந்த நிகழ்வுகள்,பாடல் எழுதும் பயிற்சி முதலியவற்றைக்கொண்டு மூன்று இதழாக இணைய இதழாக வெளிவருகிறது.இணைய இதழ்களின் பயன்
இணைய இதழ்களைப் படிப்பவர்கள் உலக அளவில் உள்ளதால் படைப்பாளியின் படைப்பு உலக அளவில் செல்கிறது.உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இணைய இதழ்கள் செய்கின்றன.ஒரு படைப்பாளியின் படைப்புகளை எளிதில் திரட்டமுடிகிறது. பின்னூட்டங்களின் வழி நம் படைப்புகளின் தன்மையை உணரமுடியும்.அச்சு வடிவ இதழ்களைப் படித்த பிறகு சேமிக்க வீட்டில் இடம் தேவை.அச்சுவடிவ இதழ்கள் நம்மை அடைய கால தாமதம் ஏற்படலாம்.இதழ்களை வாங்க தொகை தேவை.ஒரு இதழை ஒரு இடத்திலிருந்து ஒருவர்தான் படிக்கலாம்.ஆனால் இணைய இதழை உலகின் பல பகுதிகளிலிருந்து பலர் படிக்கலாம்.பி.பி.சி. போன்ற தளங்களில் செய்திகைளைப் படிப்பதுடன் செய்திகளை ஒலிவடிவில் கேட்கவும் முடிகிறது.இணைய இதழ்களைப் பலர் தொடங்கி நடத்தினாலும் சில இதழ்கள்தான் தொய்வின்றி வருகின்றன.தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும்,பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும் பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன.வெளிவந்த,வெளிவரும் சில இதழ்களைத் திரட்டித்தர இக்கட்டுரை முனைகிறது (இப் பட்டியல் முழுமையானதல்ல.விடுபட்ட இதழ்களைத் தெரிவிக்கப் பட்டியலை முழுமைப்படுத்தலாம்).
தமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்1. தினமலர் www.dinamalar.com2. தினகரன் www.dinakaran.com3. தினதந்தி www.dailythanthi.com4. குமுதம் www.kumudam.com5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/6. மாலைமலர் www.maalaimalar.com7. தினமணி www.dinamani.com8. பதிவு.காம் www.pathivu.com9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com10. தமிழ் ஈ11. ஆனந்தவிகடன் www.vikatan.com12. நிதர்சனம் www.nitharsanam.com13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk14. யாழ்இணையம் www.yarl.com15. அறுசுவை www.arusuvai.com16. வெப்உலகம் www.webulagam.com17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil18. சிபிதமிழ் www.tamil.sify.com19. மாலைச்சுடர் www.maalaisudar.com20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com22. தமிழ்.நெட் www.tamil.net23. தமிழ்க்கூடல் www.koodal.com24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com26. தேனி.இலங்கை www.thenee.com27. தினபூமி www.thinaboomi.com28. தமிழ்மணம் www.thamizmanam.com29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org31. புதினம் www.puthinam.com32. பதிவுகள் www.pathivukal.com33. சங்கதி www.sankathi.com34. அதிர்வு www.athirvu.com35. சுடரொளி www.sudaroli.com36. யாழ் இணையம் www.yarl.com37. தமிழ்ஆர் www.tamilr.com38. சுவிசு முரசம் www.swissmurasam.com39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com40. ஈழநாதம் www.eelanatham.com41. தினக்குரல் www.thinakural.com42. ஒரு பேப்பர் www.orupaper.com43. பரபரப்பு www.paraparapu.com44. முழக்கம் www.muzhakkam.com45. கனடாமுரசு www.canadamurasu.com46. சுதந்திரன் www.suthanthiran.com47. ஈழமுரசு www.eelamurasu.com48. தமிழ்முரசு49. விடுதலை www.viduthalai.com50. தமிழ்நாதம்51. லங்காசிறீ www.lankasri.com52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com53. சுரதா www.suratha.com54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk55. சற்றுமுன் www.sarumun.com56. கல்கி www.kalkiweekly.com57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com58. அலைகள் www.alaikal.com59. தென்செய்தி www.thenseide.com60. நோர்வே தமிழ் www.norwaytamil.com61. ஈழதமிழ் www.eelatamil.com62. நெருடல் www.nerudal.com63. தமிழ்விண் www.tamilwin.net64. விருபா www.viruba.com65. அறுசுவை www.arusuvai.com66. சோதிடபூமி www.jothidaboomi.com67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com68. குவியம் www.kuviyam.com69. நாதம் www.natham.com70. தமிழோவியம் www.tamiloviam.com71. காலச்சுவடு www.kalachuvadu.com72. உயிர்மை73. அப்பால் தமிழ் www.appal-tamil.com74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com75. நெய்தல் www.neithal.com76. கவிமலர் www.kavimalar.com77. இளமை78. தமிழமுதம்79. நிலாச்சாரல் www.nilacharal.com80. தமிழம் www.thamizham.net81. எழில் நிலா www.ezhilnila.com82. வானவில் www.vaanavil.com83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com84. தோழி.காம்85. திசைகள்86. அம்பலம் www.ambalam.com87. ஆறாம்திணை www.araamthinai.com88. மரத்தடி www.maraththadi.com89. தமிழ் எழுதி www.http://tamileditor.org90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg91. அமுதசுரபி92. கலைமகள்93. முரசொலி www.murasoli.in94. கீற்று www.keetru.com95. தமிழகம்.காம் www.thamizhagam.com96. மஞ்சரி97. ஈழவிசன்98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com99. எரிமலை www.erimalai.com100. இன்தாம் intamm101. வரலாறு www.varalaaru.com102. மொழி www.mozhi.net103. செம்பருத்தி www.semparuthi.org104. தமிழமுதம் www.tamilamutham.com105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org107. சூரியன் www.sooriyan.com108. திண்ணை www.thinnai.com109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com110. நக்கீரன் www.nakkheeran.com111. தி.க.பெரியார் www.periyar.com112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com113. தமிழ்வாணன் www.tamilvanan.com114. திராவிடர் www.dravidar.org115. உண்மை www.unmaionline.com116. புதுவிசை www.puthuvisai.com117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com118. தமிழகம்.நெட் www.thamizhagam.net119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com120. கல்கி www.kakionline.com121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com)கவிதாசரன்கருஞ்சட்டைத் தமிழர்புதிய காற்றுஅணிஅணங்குகுதிரைவீரன்பயணம்விழிப்புணர்வுதீம்தரிகிடகதைசொல்லிபுதுவிசைகூட்டாஞ்சோறுஅநிச்சபுதுஎழுத்துஉங்கள் நூலகம்புதியதென்றல்வடக்குவாசல்புன்னகைஉன்னதம்புரட்சி பெரியார்முழக்கம்தலித்முரசு122. கணித்தமிழ் www.kanithamizh.com123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz124. கருத்து www.karuthu.com125. சித்தர்கோட்டை www.chittarkottai.com126. பொய்கை www.poikai.com127. கௌமாரம் www.kaumaram.com128. தமிழோவியம் www.tamiloviam.com129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com130. மலேசியநண்பன்131. கணையாழி132. கணியத்தமிழ் www.kaniyatamil.com133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org134. தென்றல் www.tamilonline.com/thendral135. பதியம் www.pathiyam.com136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com137. ஊடறு www.oodaru.com138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com139. வரலாறு www.varalaru.com140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.orgபுதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில்(09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ளஇக்கட்டுரையை வலைத்தள நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.கட்டுரைச் செய்திகளைப் பயன்படுத்துவோர் இணைப்பு வழங்கவும்.முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் 2007ஆம் ஆண்டு இயற்றபப்பட்டதுhttp://www.geotamil.com/pathivukal/dr_mu_elangovan_on_internet_magazines.htmhttp://tooriga.wordpress.com/2008/06/01

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.. இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்."இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். 'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.நன்றி: http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116106401618516138.html

வலைப்பூ இலக்கியத்தின் வளமை! முனைவர் மு. பழனியப்பன்,தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைஇணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்ப, இணையக் கடிதம், இணையப் படங்கள், இணைய திரைப்படம், இணையக் குறும் படம், இணைய இதழ், இணைய அகராதி, இணைய நூலகம், இணையக் கல்வி, இணைய விளையாட்டு, இணைய வணிகம், இணையச் சுற்றுலா, இணைய வரைபடம், இணையக் குழுமம், இணைய நட்பு, இணையக் காதல், இணைய வங்கி, இணைய அலுவலகம் என்று எல்லாத் துறைகளுடனும் இரண்டற கலந்து விட்ட ஒரு காலம் இக்காலம். இத்தகைய அத்தனை வசதிகளையும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் ஓரளவு குறைந்த பணச்செலவில் பெற முடிகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.இணையத்தைப் பயன் கொள்ளுதல் என்பது ஒருமுறை. அம்முறையின் வளர்ச்சி ஒவ்வெரு இணையப் பயனாளியும் இணைய நிர்வாகியாக மாறுவது என்பதுதான். இணைய நிர்வாகியாக மாறி இணையதளம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்துதல் என்பது சற்று கடினமான செயல். அதற்கென ஒரு பெயரைப் பதிவு செய்து அதை நிர்வகிக்கப் பணம் கொடுத்து அதில் இடம் பெற வேண்டிய செய்திகளை அவ்வப்போது தயாரித்து, வடிவமைத்து அதன்பின் இதனைப் பயன் படுத்துபவர்களின் எண்ணங்களை ஏற்று மேலும் அதனை வளப்படுத்துதல் என்பதை வெற்றிரமாகச் செயல்படுத்துதல் என்பது ஒரு சாதனையாகும்.இந்த இணைய தளத்தை விளம்பரங்கள் முலமாக அல்லது நண்பர்களின் தொடர்பகள் முலமாக பரவலாக்கம் செய்தல், தேடு பொறிகளுக்கு தயாரிக்கப் பெற்ற இணையதளத்தை வழங்குதல் என்பது இன்னும் பெரிய கலை. இதற்குப் பல நிறுவனங்கள் இலவசமாக இணைய தளம் அமைக்க வசதி செய்து தந்தன. அவ்வசதிகளைப் பயன் படுத்தி இணைய தளம் ஆரம்பித்து அவற்றில் செய்திகளைப் படங்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இணைய இணைப்பில் ஏதேனும் தகராறு தோன்ற மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். எனவே வலையேற்றம் செய்வது என்பது மிகக் கடினமான செயல். அதைவிடக் கடினமான செயல் வலையேற்றம் செய்தவற்றில் தவறு நேர்ந்தாலோ அல்லது மாற்றி அமைக்க நேர்ந்தாலோ அவ்வ மாற்றங்களை உடன் செய்வது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று.இச்சூழலில் ஒரு இணையப் பக்கம் வெற்றிகரமாக நடத்த, அவற்றில் செய்திகளை நினைத்த நேரத்தில் வலையேற்றம் செய்ய, வலையேற்றியவற்றை உடன் நிறுத்த, வலையேற்றப் பெற்ற செய்திகளுக்கு பின்னூட்டம் என்ற நிலையில் பிரதிபலிப்பகளைப் பெற ஒரு அருமையான வசதி தற்போது கிடைத்துள்ளது. இதற்குப் பெயர் வலைப்பூ என்பதாகும். இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு மனிதருக்கு எத்தனை வலைப் பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவற்றிற்கான பின்னூட்டங்களை அவர் தன் மின்னஞ்சல் முகவரியில் பெறலாம். அப்பின்னூட்டங்களும் அவ்வலைப் பக்கத்திலேயே தெரியும். மேலும் ஒரு செய்தியை வலைப்பக்கத்தில் வலையேற்றி விட்டால் அச்செய்தி நிரந்ததரமாக சேமிக்கப் பெற்றுவிடும். தேவையான போது அவற்றை எவரும் பார்க்க இயலும். அவற்றில் உள்ள செய்திகளைச் சொல், தொடர், தலைப்பு வாரியாகத் தேடிப் பெறமுடியும். கணினியில் சேமித்து வைக்கப்பெற்ற கோப்பு அழிந்து போனாலும் வலைப்பூவில் உள்ள பதிவு வழியாக மீண்டும் அந்தச் செய்தியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது வுடுதல் வசதி. அது மட்டும் இல்லை. என் சொந்தக் கணினி என் சொந்த ஊரிலேயே இருக்க அதில் உள்ள கோப்புகளில் தேவையானவற்றை வலைப் பூவில் பதிவு செய்துவிட்டால் எந்நேரத்திலும் எவர் கணினியிலும் இணைய இணைப்ப பெற்றவடனேயே பெற்றுவிடமுடியும்.வலைப்பூ வசதியை வழங்கும் நிறுவனங்கள்வலைப்பூ வசதியைத் தற்போது பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. ஒருகாலத்தில் இதில் இணைந்தபின் இந்த வசதி பணமயமாக்கப்படுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐயம் இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கத் தயாராகி விட்டன. குறிப்பாக வுகிள் நிறுவனத்தின் தொடர்பில் பிளாக்கர் (டடிபபநச) என்ற தொடுப்பின் வழியாக ஒவ்வெருவரும் ஒரு வலைப்பூவைப் பெறமுடியும். யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.வலைப்பூ வடிவமைப்புவலைப்பூ வடிவமைப்பில் ஏற்றப்படும் வலைச்செய்திக்கு அதிக இடம் முக்கியஇடம் தரப்படும். அதன்பின் இதனை ஏற்படுத்தியவர் பற்றிய குறிப்ப ஓரிருவரிகளில் தரப்பெற்றிருக்கும். அத்தொடர்பை அபுத்தி ஏற்படுத்தியவரின் தகவல்களை அதிகமாகப் பெறஇயலும். மேலும் வலைச் செய்திகளைப் பார்க்கும் வண்ணம் ஆவணக் காப்பகத் தொடுப்ப ஒன்றும் இருக்கும். இத வார வாரியாகத் தலைப்பு வாரியாக, அடுக்கிக் கொள்ளவம் வசதி உண்டு. வலைச்செய்திகளுக்கு வரும் பின்னூட்டங்களை அதன் அடிப்பக்கத்தில் காமாண்ட்ஸ் என்ற நிலையில் அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் திறந்து வந்தப் பின்னூட்டங்களுக்குத் தக்கவகையில் ஏற்படுத்தியவர் பதிலும் வழங்கலாம்.யாவு, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.மேலும் இவ்வலைப்பவில் பாடல்கள் ஒலிபரப்படலாம். குறும் படங்களைக் காட்சிப்படுத்தலாம். பகைப்படங்களை இணைக்கலாம். அசை படங்களை இணைக்கலாம். வலைப்பூவைத் திறந்ததும் பூமாரி பொழியச் செய்யலாம். ஓடும் வகையில் செய்திகளை ஓடவிடலாம். தற்போது எந்தக் குறிப்பிட்ட நாட்டவர் அக்குறிப்பிட்ட வலைப்பூவைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதனை அறியலாம். எத்தனை பேர்கள் இவ்வலைப்பூவைப் பார்க்கின்றனர் என்ற எண்ணிக்கையை அறியலாம். இவையெல்லாம் வுடுதல் முயற்சிகள்.மேற்வுறியவை குறிப்பிட்ட ஒருவர் ஏற்படுத்திய வலைப்பூவில் அவர் பெறும் தகவல்கள். அவ்வலைப்பூ முலம் மற்றவலைப் பூக்களைத் தொடர்ப கொள்ள இயலும். அதற்கான தொடுப்பகள் லிங்ஸ் (டமேள) என்ற அமைப்பில் பெறலாம். குறிப்பிடத்தக்க ஒருவரின் முகவரியை மற்றவர்கள் இதில் தந்து அவர் பக்கத்திற்குச் செல்லச் செய்யலாம். இவைதவிர இந்தத் தொடுப்பில் தினம் பார்க்கவிரும்பம் ஏற்பாட்டாளரின் விருப்ப தளங்களை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இதன் முலம் வேறுபக்கங்களுக்கு இதன்வழியே சென்று சேர இயலும்இதற்கு அடுத்த நிலையில் வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாட்டாளரின் அனுமதியோடு விளம்பரங்களை இணைக்க ஒரு இடத்தை வைத்துள்ளன. அவ்விடம் அதற்கான வாடகை போன்றன வலைப் பூவை வழங்கும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே வலைப்பூக்களை இலவசமாக அளிக்கப் பெற்று வருகின்றன.வலைப்பூ முகவரிவலைப்பூவின் முகவரி விருப்பத் தேர்விற்கு உரியது. அவரவர் சுய விருப்பம் கருதி அவரவர் அவரவர் வலைப்பூவிற்குத் தமிழிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயே அல்லது அவரவர் மொழியிலேயே வைத்துக் கொண்டு அம்மொழியிலேயே தெரியவம் செய்யலாம். அப்பெயருக்குப் பின்னால் வழங்கும் நிறுவனத்தின் பெயர் அமையும். அதன்பின் வகைமை அமையும். எடுத்துக்காட்டிற்கு ஆயனையட. டெடிபளிடிவ.உடிஅ என்பது கட்டுரையாளரின் வலைப்பூ முகவரி. இதனடிப்படையிலேயே எல்லா வலைப்பூக்களும் முகவரியைப் பெறுகின்றன.வலைப்பூ வடிவமைக்க உதவிவலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் வலைப்பூவினை வடிவமைத்துக் கொள்ள அதற்கேற்ற கருவிகளையும் வழங்குகின்றன. இக்கருவிகளைக் கொண்டு முன்று படிநிலைகளில் ஒரு வலைப்பூவை வடிவமைத்துவிடலாம். ஒரே பக்கம் தான் வலைப்பூ. இது அதன் வலிமையும் கொடுமையும் வுட. எனவே அந்த ஒரே பக்கம் அழகாக இருந்தால் மட்டுமே வாசிப்பவரைக் கவரும். அதே நேரத்தில் அது ஏற்பாட்டாளரின் சுவைக்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும். இவ்வகையில் ஒன்றைத் தேர்வ செய்து கொள்ளலாம். இல்லையானால் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். மாறிக் கொள்ளலாம்.வலைப்பூவில் வலையேற்றம் செய்ய வழிகள்பிறரது வலைப்பூவை யார் வேண்டுமானலும் பார்க்கலாம். ஆனால் யார் வேண்டுமானாலும் மற்றொருவர் வலைப்பூவள் நுழைந்து வலையேற்றம் செய்துவிட முடியாது. வலைப்பூ ஏற்படுத்தியவரே தன் வலைப்பூவக்குள் நுழைந்து வலையேற்றம் செய்யமுடியும். அவருக்கு என ஒதுக்கப் பெற்றுள்ள கடவச் சொல்லைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வலைப்பூ வலையேற்ற உதவம் பகுதிக்குள் நுழையவேண்டும். அங்கு பதிய செய்தியை ஏற்றும் வசதி, ஏற்றிய செய்தியை அழிக்கும் வசதி, செய்திக்கு வண்ணம் பூச, படம் சேர்க்க, எழுத்துகளை பட்டை தீட்ட, சாய்க்க, உருவ ஒபுங்கு செய்ய எனப்பல கருவிகள் இருக்கும். அவற்றை இணைத்து ஒரு செய்தியை வலையேற்றம் செய்க என்ற தொடர்பை அபுத்தினால் வலையேற்றிவிடலாம். வலையேற்றிய அழகை ஏற்பாட்டாரே பார்த்து ரசிக்கலாம்.வலைப்பூவின் வரலாறுவலைப்பூ என்பதன் ஆங்கில முலம் பிளாக் (டடிப ) என்பதாகும். இதன்முலம் வெப்பிளாக் (றநடெடிப) என்பதாகும். இதுவே சுருங்கி பிளாக் ஆனது. 1994ல் பிளாக்கை உருவாக்கிய சஸ்டின் ஹால் என்பவர் பிளாக்கின் தோற்றக் காரணர்களுள் முன்நிற்பவர் ஆவார். அதன்பின் பல முயற்சிகள் தொடர்ந்துள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி வெப் பிளாக், வெப்பிளாக்கர் ஆகிய சொற்களை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன் சொற்குபுமங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிளாக்கிற்கான ஏற்பாட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் இவான் வில்லியம்ஸ், மற்றம் மெக்ஹாரிக்கான்ஸ் ஆவர். இவர்களின் குழமமான பைரா லாப்ஸ் என்பதுதான் முதன்முதலில் பிளாக்கர் என்பதை உருவாக்கியது. இவ்வசதி பின்னால் வுகிள் நிறுவனத்தால் காப்பரிமை செய்யப் பெற்று அந்நிறுவனத்திற்கு ஆக்கப் பெற்றுவிட்டது. (நுஎய றுடைடயைஅள யனே ஆநப ழடிரசரைய;ள உடிஅயலே லசய டுயளெ டயரஉநன டடிபபநச (றாஉ றயள ரசஉயளநன லெ புடிடிபடந 2004)) (வவி//றறற.தரஉநநநேறளனயடைல.உடிஅ/0505/நேறள/ளைவடிசலஸ்ரீடெடிபள.வஅட)தமிழில் வலைப்பூதமிழில் ஒருங்குறி முறை என்ற எழுத்துவடிவ முறை அறிமுகமானது மிகப் பெரிய உதவியாக வலைப்பூ ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்துவிட்டது. ஏறக்குறைய முதன் முதல் தமிழ்ப்பதிவு என்பது எது எனக் கண்டறியமுடியாத ஆதி அந்தமில்லா இலக்கிய வரலாற்றுச் ழலே இதற்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் பதிவுகள் வேகம் பெற்று விட்டன என்பது மட்டும் உறுதி. வலைப்பூ ஏற்பாட்டாளர்களின் தகுதிகள்வயது, கல்வி, மொழி, இனம், பால், பெயர் என எவ்வகையிலும் கட்டுப்பாடு தேவையில்லா கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதனுள் நுழையலாம். தமிழ் படிக்க வலையேற்றத் தெரிந்தால் போதும். வலைப்பூக்களின் அரங்கம்வலைப்பூவில் செய்தியை வலையேற்றம் செய்தாகிவிட்டது. அதனை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது. அதற்கெனத் தொடங்கப் பெற்றவைதான் அரங்கம் என்ற அமைப்பகள். இவற்றில் உறுப்பினர்களாக இணையவேண்டும்.ஒவ்வெரு வலையேற்றமும் வலைப்பூவில் நிகழ்த்தியபின் இவ்வரங்கங்களில் தேவையான இடத்தில் வலைப்பூ முகவரியைத் தந்து அற்றைநாள் முன்னேற்றத்தை ஏற்க எனக் கட்டளையிட்டால் வலைப்பூ அரங்கத்தின் பொருளடக்கம் போன்ற பக்கத்தில் இரண்டுவரிகளில் அச்செய்தி தெரிய ஆரம்பிக்கும். அதன்பின் மேலும் என்ற தொடர்பை அபுத்தினால் வலைப்பூவின் பக்கத்திற்கே சென்று சேரலாம்.இவ்வசதியை வழங்குவதில் தமிழில் குறிக்கத்தக்கவை இரண்டு. ஒன்று தேன்வுடு, மற்றொன்று தமிழ்மணம் இவற்றில் தமிழ்மணம் தனக்குத் தரப்பெற்ற வலைப்பூ வலையேற்றச் செய்திகளை வகைமை செய்து பூங்கா என்ற வலைப்பூ அரங்க இதழாக மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. இது மீள்வாசிப்பக்கு மேலும் உதவகிறது. இவை ஒரு வரையறை வைத்துள்ளன. கவர்ச்சி, பாலியல் செய்திகள் படங்கள் ஆகியன இடம் பெறும் தளங்களைத் தவிர்த்தலை முக்கியமாகக் கொண்டுள்ளன. இது ஒரு இன்றியமையாத நல்ல செய்திவலைப்பூ இலக்கியம்எல்லா வலைப்பூக்களும் இலக்கியச் செய்திகளைக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை, அனுபவம், கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை, கடிதம் இவை போன்ற வடிவங்களில் இலக்கியம் வலைப்பூக்களில் பரவிக்கிடக்கின்றது. தமிழ்மணம் வலைப்பூஅரங்கம் வலையேற்றச் செய்திகளை இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல்நயம் என்ற பலபிரிவகளில் செய்திகளைத் தொகுக்கிறது. இதனை வகைப்படுத்தும் முறை ஏற்பாட்டாளரைச் சார்ந்தது என்றாலும் அதனைச் செய்ய அவர் மறந்துவிட்டால் படிப்பவர் அதனை வகைப்படுத்த இயலும்.வலைப்பூ இலக்கியங்களுக்கு என்று தனித்த நடை கிடையாது. தணிக்கை கிடையாது. அவரவர் போக்கில் அவரவர் எழுதலாம். எழுதப்படும் செய்திகளைப் பின்னூட்டத்திற்கு அளிக்கும்போது மட்டுமே அச்செய்திகளின் உண்மை பொய்மை தெரியவரும். அப்படி உண்மைக்கு மாறான செய்திகள் வழங்கப் பெற்றிருந்தாலும் அது குறித்து மன்னிப்ப வேண்ட அவசியமில்லை. கட்டற்ற இலக்கிய வகையாக இது விளங்குகிறது.அதே நேரத்தில் இதன் வசாகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஓரளவ தமிழறிவ, அதைவிட அதிக அளவ கணினி அறிவ என்ற நிலையில்தான் பல வசாககர்கள் அமைந்துள்ளனர். வலைப்பூ ஏற்பாட்டாளர்களும் அமைந்துள்ளனர். இவர்களில் தேர்ந்த இலக்கிய விமர்சகர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அவ்வப்போது இதன் நடை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும் வலைப்பூ இலக்கியம் எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற இலக்கியவகையாகும். தமிழறிவ மிகுந்தவர்கள் இதனுள் அதிகம் இடம் பெறல் வேண்டும். அதன் காரணமாக இவ்வகை மேலும் உயர்வ பெறும்.திலகபாமா முதல் மாலன் வரை பெரும்பான்மை எழுத்தாளர்கள் இவ்வலைப்பூ வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் வலைப்பூ அரங்கங்கள் இலக்கியத்திற்கென தனியே வரவேண்டும். மேலும் ஆய்வக் கட்டுரைகளின் அரங்கம் என்பதாக பதியநிலையில் மற்றொரு அரங்கமும் துவக்கப் பெறலாம். இதற்குக் கணினி அறிவ சார்ந்தவரகள் உதவலாம்.மேலும் இவ்வலைப்பூ இலக்கியங்கள் பெரும் மீள்பிரதி செய்யப் பெறுவனவாகவே உள்ளன. இணைய இதழ்கள் அல்லது வெகுஜன இதழ்களில் வெளியான படைப்பகள் பல மீள்வாசிப்பக்கு இங்கு வருகின்றன. அப்படி வருகின்ற நிலையில் அதன் வெளிவந்த செய்திகளைத் தருவது தேவையானதாகும்.வலைப்பூ இலக்கியம் எல்லா இலக்கிய வகை போன்று அமைந்திருந்தாலும் இது உடனுக்கு உடன் பலரால் பார்வையிடப் பெற்று அவர்களின் மௌனத்தின் மீதோ அல்லது விமர்சனத்தின்மீதோ பின்னூட்டங்களைப் பெறுகிறது என்பதுதான் இதன் வலிமை. இப்பின்னூட்டங்கள் உண்மையான பெயரில் இடம் பெறலாம். அல்லது போல(டோண்டு டு) என்ற மறைபெயரில் பின்னூட்டத்தைத் தரலாம். இதனை ஏற்பதோ மறுப்பதோ ஏற்பட்டாளரின் கடமையாகும்.மேலும் பெண்களுக்கு உரிய இடமும் வலைப்பூவில் உண்டு. தோழி .காம் என்ற இதழ் பெண்களுக்கான தனித்த வலைப்பூக்களை வழங்கிவருகிறது. இவைதவிர இலக்கிய வலைப்பூக்கள் பல உள்ளன. இவற்றை இணைத்துப் பார்க்கும்போது வலைப்பூ இலக்கியம் என்பது தற்போது வளர்ந்து வருகிறது என்பது தெரியவருகிறது. மேலும் இதற்கான விடுதலை மற்ற ஊடகங்களில் இருந்து மாறுபட்டது. "ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் அதிவேகப் பரவலுக்கு இந்த அதிகார உடைப்பதான் காரணம்'' என்ற இந்தக் குறிப்பு இங்கு கவனிக்கத் தக்கது.இவ்வாறு தனித்த நிலையில் வலைப்பூவக்கென எழுதப்படாமல் இணைய இதழ் போன்ற எதற்கோ புதியவை இங்கு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது இதன் தரத்தைச் சற்றுக் குறைக்கிறது.இலக்கியம், ஆய்வுக்கட்டுரை அடங்கிய தனித்தனி வலைப்பூ அரங்கங்கள் தோன்றிடின் சிறப்பாய் இருக்கும். இவ்வழிகாட்டுதல்கள் எதிர்காலக் கணினித் தமிழ் உலகத்தின் வளமை கருதி இங்குப் பகிர்ந்து கொள்ளப் பெறுகின்றன

THANKS: http://manikandanvanathi.blogspot.com/2009/04/blog-post_05.html