Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 30 ஜூன், 2012

BANK JOB

வெள்ளி, 29 ஜூன், 2012

THANKS: DINATHANTHI

வியாழன், 28 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்

இளம் சிங்கங்களி​ன் எழுச்சி இயக்கம்

THANKS: Kathiravelu thurairatnam, SRILANKA

THANKS: Kathiravelu thurairatnam, SRILANKA

செவ்வாய், 26 ஜூன், 2012

THANKS TO : NELLAI ONLINE

THANKS TO: NELLAIONLINE

THANKS TO: DINAMALAR

தூத்துக்குடி: திரேஸ்புரத்தில் நாட்டுபடகு பழுதுபார்க்கும்தளம் அமைக்க அரசு முயற்சி செய்திருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முத்தரையர் சமுதாயம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக திரேஸ்புரம் முத்தரையர் சமுதாய சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;திரேஸ்புரம் வடக்கு பகுதியில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் காலங்காலமாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் மீன்பிடி மற்றும் சங்குகுளி தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மீன்பிடி மற்றும் சங்குகுளி தொழிலில் எங்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக தொழில் செய்து வருகிறோம். தற்போது இந்த பகுதியில் நாட்டுப்படகு பழுதுபார்க்கும் தளம் அமைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த இடத்தில் சுகாதாரம் இல்லாமல் இந்த பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு சுகாதாரகேடு விளைவிக்கும் நிலை உள்ளது. அந்த இடத்தில் வேறு பகுதியினருக்கு பழுதுபார்க்கும் தளம் ஏற்படுத்தினால் எங்கள் சமுதாயத்தினருக்கு மிகவும் இடையூறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் வர வாய்ப்புகள் உள்ளன. திரேஸ்புரம் வட க்கு கடற்கரை பகுதிகளில் மேட்டுப்பட்டி, விவேகானந்தநகர் ஆ கிய பகுதி மீனவ மக்களுக்கும் இது போன்ற பிரச்னை கள் வரும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு பழுதுபார்க்கும் தளம் அமையவிருக்கும் திட்டத் தை தவிர்த்து, அந்த இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து எங்கள் பகுதி மீனவ மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. THANKS: DINAMALAR
THANKS : SEE AJAY

ஸ்வஸ்திக் கிணறு

ஸ்வஸ்திக் கிணறு: எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்... நன்றி: தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் - Nages Paku, Bellarmin Bell, Subramani Madhu, Vignesh Sgமற்றும் Nimesh Narayanamoorthy N R உடன்

திங்கள், 25 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​​​​​.!!

ஞாயிறு, 24 ஜூன், 2012

வருந்துகிறோம் ....

தமிழ்நாடு முத்தரையர் எழுச்சி சங்கம் நிறுவன தலைவர் தி. ரு பா. மாறன் , அவர்களின் தாயாரும் பாலகிருஷ்ணன் அவர்களின் துணைவியாரும் ஆனா பா. பூவேதி அம்மாள் வயது : 92 அவர்கள் இன்று இயற்கை எய்தினர் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .. என் : 8 , முருகேசன் தெரு , சூலை . சென்னை செய்தி : கோ . திருமேனி அரநிலம் அறகட்டளை : சென்னை NEWS FROM: RAJKUMAR

சனி, 23 ஜூன், 2012

employment news...

இனிப்பான வேலை...!!

முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திரு.பொன்னுதுரை--- லயன் டே்டஸ் நிறுவனம். ஒரு நிறுவனத்தை நடத்த திறமைமிக்க பணியாளர்கள் தேவை. ஆனால் தனது நிறுவனத்துக்கு திறமையானவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், மாற்றுத் திறனாளிகளையும் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் லயன் டேட்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பி.பொன்னுதுரை. ""என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏதேனும் மாற்றுத் திறனாளிகள் உள்ள இடத்துக்குச் சென்று அவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் பொழுதைப் போக்குவது எனது வழக்கம். அப்படித்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு "விடிவெள்ளி' என்ற மனநலம் குன்றியவர்களுக்காகச் செயல்படும் அமைப்புக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அந்த அமைப்பினர், "இங்குள்ள மனநலம் குன்றியவர்களுக்கு ஏதாவது வேலை தாருங்களேன்' என்று கேட்டார்கள். நானும் ""சரி'' என்று ஒத்துக் கொண்டேன். மாற்றுத் திறனாளிகள் பிறரைப் போல பஸ் ஏறி தொழிற்சாலைக்கு வர முடியாது என்பதால், அவர்களுக்காக மினி வேன் ஒன்றை ஏற்பாடு செய்தேன். அது அவர்களைக் காலையில் தொழிற்சாலைக்கு ஏற்றி வந்து மாலையில் அவர்களுடைய இருப்பிடத்தில் கொண்டு போய் விட்டுவிடும். காலை 9.30 மணி முதல் அவர்களுக்கு வேலை. எனது தொழிற்சாலைகளில் 33 மாற்றுத் திறனாளிகள் வேலை செய்கிறார்கள். 15 காது கேளாதவர்கள், 18 மனநலம் குன்றியவர்கள் வேலை செய்கிறார்கள். பிற தொழிலாளர்களிடம் பலவிதமான வேலைகளை வாங்க முடியும். ஆனால் மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்வார்கள். பேரீச்சம் பழங்களை அடைத்து வைக்க பாட்டிலை எடுத்துத் தரும் வேலை என்றால் அந்த வேலையை மட்டுமே செய்வார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குச் செய்யத் தெரியும். என்னுடைய இந்தப் பணியைப் பாராட்டி தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சிறந்த தனியார் தொழிலதிபருக்கான விருதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிச் சிறப்பித்தது'' என்கிறார் மகிழ்ச்சியுடன். நன்றி : திரு. முத்தரையர் மகராஜா News From : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Kadhir&artid=613824&SectionID=146&MainSectionID=146&SEO&Title=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88

வெள்ளி, 22 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​​​​.!!

நேர்முக தேர்வு...!!! சென்னை, மதுரை,திருச்சியில்


நேர்முக தேர்வு...!!! சென்னை, மதுரை,திருச்சியில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு


நாம் அறிந்து இந்த நிறுவனம் மிக சிறப்பாக செயல்படுகிறது ஆனாலும் நண்பர்கள் விசாரிதுக்கொள்ளவும், ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் முன்பு சரியாக படித்து ஏற்புடையதாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளவும்

தென்னக ரயில்வேயின் வேலைவாய்ப்பு....!!!

செவ்வாய், 19 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​​​.!!

ஞாயிறு, 17 ஜூன், 2012

சஞ்சயின் கருத்து ...!!

நண்பர்களுக்கு வணக்கம்,

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் முத்தரையர் என்று தேடினால் அண்ணன் துரைரெத்தினம் போல் ஒருரிருவர் தென்படுவார்கள், சில ஆண்டுகளிலேயே FACEBOOK போன்ற வலைத் தளங்களின் உபயத்தால் இன்று பூர்விகத்தின் வேர் தேடி அலையும் மலேசிய குடிமகன் நண்பர் செல்லமுத்து ரிசி போல பல்வேறு நண்பர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள், புவியியல் முழுமையாக அறியாத / கற்றுக்கொள்ளாத நமக்கு மிகுந்த ஆச்சரியம் கொட்டிக்கிடக்கிறது இன்று முத்தரையர்கள் இந்தியாவில் / உலகில் பலப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது மிகுந்த சந்தோசமாகவே உள்ளது ஆந்திர, கர்நாடக உறவுகளைக் கூட மொழி அறியாவிட்டாலும் நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே... மற்ற சமுதாயங்களை விட நாம் இணையத்தால் அடைந்த பலன் முகம் அறியாத / கனவிலும் சிந்திதிடாத தொலைவுகளில் நம் உறவுகளை கண்டுகொள்கிறோம், இன்று ஆயிரக்கணக்கான நண்பர்கள் இணையத்தினை பயன் படுத்துகிறோம், இப்பொழுது வலைத்தளங்களில் உபயத்தால் நட்பு வட்டத்தினைப் பேணுகின்றோம், எல்லாம் சரி இனி .....!!!!

வெறுமனே நான் முத்தரையர் நீங்களும் முத்தரையர் என்று சொல்லி நடப்பதனால் என்ன பயன்? இதுவரை நாம் முகம் அறியாமல், நீங்கள் எங்கோ ஒரு மூலையில், நான் ஒரு மூலையில் இருந்து இன்று நமக்குள் அறிமுகங்கள் ஆனப்பின்னல் இனி என்ன செய்யப் போகிறோம் ? யாரும் யாருக்கும் தனி தனியாக உதவிகள் செய்ய முடியாது என்பது நாம் அறிந்ததே... ஆனால் செய்ய முடிந்த வற்றை செய்யலாம் அல்லவா ?

நாம் இருக்கும் ஊர்களில் (உதாரணம் : சென்னை / மதுரை / திருச்சி / சிங்கப்பூர் / மலேசிய / துபாய் ) அங்கிருக்கக் கூடிய நண்பர்களை ஒரு தொலைப்பேசி அழைப்பில் அல்லது முடிந்தால் ஒரு ஒய்வு நாளில் ஒரு தேனீர் சந்திப்பில் நம் உணர்வுகளை / உறவுகளை மேம்படுத்தலாம், இன்னும் நீங்கள் இருக்க கூடிய பகுதிகளில் (உதாரணம் : சென்னையில் வேலை செய்யும் நண்பர் கவியரசு தன் ஒய்வு நேரங்களில் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் வாழும் நம் மக்களுடன் கலந்துரையாடுகிறார் ) வெறுமனே நம் மக்களை நேரில் சந்திக்கலாம் சற்று உறவுகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அதற்காக யாருக்கும் பொருள் உதவி செய்யவோ / பெறவோ இத்தகைய சந்திப்புகளை பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அது ஒரு தவறான முன் உதாரணமாக மாறிவிடும்,

இது என்னுடைய சொந்த கருத்து (யாருக்கும் கட்டாயம் இல்லை), எழுத்திலோ , கருத்திலோ முரண்பட்டால் குட்டிவிட்டும் (comment) , ஏற்பிருந்தால் தட்டிக்கொடுத்துவிட்டும் ( like ) செல்லவும்


காத்திருக்கிறேன் நண்பர்களின் பதிலுக்காக ... !!!

அன்புடன்

என்றும் உங்கள் சஞ்சய் காந்தி அம்பலக்காரர்

முத்தரையர் எழுச்சி சங்கம்




THANKS: http://mutharaiyar.in/

முத்தரையரின் முதல் IAS





Sri.G.E.Muthirulandi IAS

FIRST MUTHARAIYAR IAS.....!!!

THANKS: http://www.mutharaiyarmatrimonial.com

முத்தரையர் எட்டாம் நூற்றாண்டு




Inscription in verse on a pillar, Tamil Script, Mutharaiyar chiefs, 8th Century, Sendalai, Thanjavur Dist.

thanks : http://www.tnarch.gov.in/epi/ins2.htm

Mutharaiyar varalaru

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​​.!!


வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​​.!!





சனி, 16 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​.!!

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​​.!!

வெள்ளி, 15 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​​.!!


வியாழன், 14 ஜூன், 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்..​​.!!


வெள்ளி, 8 ஜூன், 2012

ஜெ., வருகையின் போது தாவுகிறார் தி.மு.க., பிரமுகர் : யார் அவர்? புதுகையில் பரபரப்பு - தினமலர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வரும்போது, தி.மு.க.,வின், "முக்கிய புள்ளி' ஒருவரை, அ.தி.மு.க.,வில் இணைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை இடைத்தேர்தல், வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா நாளை (9ம் தேதி) புதுக்கோட்டை வருகிறார்.

வாடிக்கை : பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், தொகுதியில் உள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கள் இழுத்து தேர்தல், "ஸ்டண்ட்' அடிப்பதும், எதிர்த்து போட்டியிடுபவர்களின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கை.
அந்த வழக்கம் இந்த இடைத்தேர்தலிலும் அரங்கேறியுள்ளது. சில வாரங்களுக்கு முன், தி.மு.க., முன்னாள் மாவட்ட துணை செயலர் ஜாபர் அலி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இணைந்தனர் ஒருவேளை, தி.மு.க., புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால், தி.மு.க., சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜா பரமசிவம், நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதே போல், தே.மு.தி.க., மகளிரணி மாநில செயலர் ரெஜினா பாப்பாவும், முத்தரையர் சமுதாயத்தில் செல்வாக்குள்ள குழ.செல்லையாவும், நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

உறுதி : முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு புதுக்கோட்டை வரும் வேளையில், முக்கிய, தி.மு.க., பிரமுகர் ஒருவரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க முயற்சி நடந்து வருவதாகத் தெரிகிறது. அந்த பிரமுகர் யார்? என்பதை வெளியே சொல்ல, அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், தி.மு.க., பிரமுகர், அ.தி.மு.க.,வில் இணைவது மட்டும் உறுதி என்பதை மட்டும் அடித்துக் கூறுகின்றனர். ஏற்கனவே, இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் மாவட்ட, தி.மு.க.,வினர் மத்தியில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,விலிருந்து அ.தி.மு.க.,வுக்கு தாவிய ஜாபர்அலியும், ராஜா பரமசிவமும், முன்னாள் அமைச்சர் ரகுபகுதியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எதிர்மறையான பாதிப்புகள் இருக்கும் என்ற காரணத்தால், தி.மு.க., போட்டியிடாத நிலையிலும், அ.தி.மு.க.,வினர் தங்கள் பக்கம், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை இழுத்து வருவது, தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் அக்கட்சிக்கு பாதிப்பை உருவாக்கி உள்ளது.

வியாழன், 7 ஜூன், 2012

உலகமயமாக்களில் ஓரங்கட்டப்பட்ட சாதிகள்

தலைப்பின் படி இது உலகமயமாக்கலின் சாதிகள் ஒழிந்துவிட்டதாக வெற்றுக்கோஷம் பேசும் பதிவு அல்ல,உலகமயமாக்கப்பட்ட இந்த சூழலில் தங்களை புதுப்பித்துக்கொள்ளாத/ வாய்ப்பளிக்கப்படாத சாதிகளைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை என்னுடைய அனுபவம்,நான் சார்ந்த பகுதியில் உள்ள சாதிகளை வைத்து என்னுடைய கருத்து, இதில் கருத்துப்பிழைகள் தவறுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம், ஆனாலும் இதனை ஒரு விவாதப்பொருளாக்க விரும்புகிறேன்.


தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டத்தை களமாக வைத்து எழுதுகிறேன்.நான் எடுத்துக்கொள்ளப்போகும் சாதிகள், முத்தரையர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான கள்ளர்கள். இந்த மூன்று சாதியினரும் பெரும்பாலும் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களது ஆதாரத் தொழில் விவசாயம் மட்டுமே. அன்றைய சாதிய மற்றும் வசதிப்படிநிலைகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் கள்ளர்கள் நில உடைமைக்காரர்களாககவும், முத்தரையர் மற்றும் தாழ்த்தபட்டவர்கள் விவசாயக்கூலிகளாகவும் பெரும்பாலும் இருந்தனர், முத்தரையர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் நிலஉடைமக்காரர்களே,விவசாய நிலஉடைமைக்காரர்களை குடியானவர்கள் என்று அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு, ஆலங்குடி பகுதியில் இன்றும் முத்தரையர்களை குடியானவர்கள் என்றே அழைக்கிறார்கள்.பழங்கதைகளில் கடைசியாக விவசாயம் கொழித்தபோது நிலஉடைமைக்காரர்களும் சரி அதனை நம்பி இருந்த விவசாயக்கூலிகளும் வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து வந்தனர். (சாதியக்கொடுமைகளை இங்கே பேசவில்லை). விவசாயம் இன்றைக்கு மற்றைய உலக முன்னேற்றத்திற்காக அமுக்கப்பட்ட தொழில், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவனுக்கு உழைப்பு இழப்பு மட்டுமே மிச்சம் என்ற நிலையில் இவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த மூன்று சாதியினருக்கும் வியாபாரம் எட்டாத கலை, எனக்குத் தெரிந்து இவர்கள் மளிகைக்கடை கூட வைப்பதில்லை, தலித்துக்கள் நினைத்தாலும் வைக்கமுடியாத அளவு ஆதிக்க கள்ளர் சாதியினரே அனுமதிக்க மாட்டார்கள்.பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு சாமான் வாங்க /சினிமா பார்க்க சென்றே பழக்கப்பட்ட இவர்களுக்கு, நகரமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நகரங்களில் ஒரு சிலரைத்தவிர இடமோ/வீடோ இருக்காது.தஞ்சை நகரில் இருக்கும் நிலங்களை கள் குடிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுவிட்டனர்.:)

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் நகரத்தின் மதிப்பு விளைநிலங்களில் இல்லை.நகரத்திற்கு அருகில் விளைநிலம் வைத்திருந்தவர்களும் அதனை குறைந்த விலைக்கு ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று குடித்திருப்பார்கள்.கிராமங்களில் மிச்சமுள்ள விளைநிலங்களுக்கு மதிப்பும் கிடையாது, அந்த மதிப்பில்லாத நிலத்தை வாங்க/விற்க கூட இவர்களிடம் பொருளாதாரம் கிடையாது, ஒரு சில வட்டிக்கடைகாரர்கள், பண்ணைநிலம் தேடும் வெளியூர்க்காரர்களிடம் விற்றுவிட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உண்டு.

முத்தரையர் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், ஆலங்குடி பகுதி தவிர இவர்கள் பெரும்பாலும் நாடோடி உல்லாச வாழ்க்கை வாழும் கிராமவாசிகள், இன்றைக்கும் இவர்கள் கூலி வேலை செய்து அன்றைக்கே செலவு செய்துவிட்டு,கிராமங்களிலேயே குடி இருப்பவர்கள், எம்ஜியார் படம் வந்தால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.படிப்புக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்.வருங்காலத்தில் கிராமத்தை ஆள வாய்ப்புண்டு, ஆனால் என்ன இருக்கும் ஆள்வதற்கு என்பதுதான் கேள்விக்குறி.ஆலங்குடி.பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் பெருமளவில் வசித்தாலும் இவர்களுக்கும் பணம் சம்பாதிக்கும்/ பொருளாதார முன்னேற்றம் அடையும் எந்தக்கலையும் தெரியாது.நகரங்களில் எந்த ஒரு வியாபாரமும் இவர்கள் செய்ய வாய்ப்பில்லை, நினைத்தாலும் முடியாத அளவிற்கே லாபி இருக்கும்.

புதுக்கோட்டை கள்ளர்களால் ஆளப்பட்ட தனி சமஸ்தானம் ஆனால் இன்றைக்கு புதுக்கோட்டை நகரில் அவர்களுக்கு சொந்தமாக இடம் இருக்குமா என்றால் இருக்காது, பெருமைக்காக வியாபாரிகளிடம் விற்றுவிட்டு குடித்து ஓட்டாண்டிகளாகத்தான் இருப்பார்கள். ஆலங்குடி நகரில் தலித்துக்களிடம் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டும் கள்ளர்களுக்கு வியாபாரம் செய்ய வாடகைக்கு கூட கடை கொடுக்கமாட்டார்கள் இதுதான் இவர்கள் நிலை, தங்களுடைய பொருளாதார நிலை தெரியாமல் ஜாதி ஜம்பம் பேசுவதில் எந்தக்குறையும் இன்றும் இருக்காது.

வட்டித்தொழில் நடத்தும் சிலர் உண்டு, சிலர் நேரடியாக நடத்துவார்கள் பலர் வட்டித்தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் அடியாட்களாக இருப்பார்கள்,வேற்று சமூகத்துக்காரன் கேட்டால் பணம் திரும்பக்கிடைக்காது அதனால் அடியாட்கள் வேலை இவர்களுக்கு கண்டிப்பாக உண்டு:)

தலித்துகளின் நிலை இட ஒதுக்கீட்டில் படித்த ஒரு சில குடும்பங்கள் வெளியேறி மீண்டும் அவர்களே இட ஒதுக்கீட்டை அனுபவித்து தப்பிக்கிறார்கள் மற்றபடி,தனக்கே ஒன்றுமில்லை என்று அறியாத ஆதிக்க சாதியினர்,நலிந்து போன விவசாயக்கூலிகளாக இருந்து, தங்களை ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதியினருக்கே திறக்கப்படாத லாபியைத்தாண்டி இவர்கள் மேலே எங்கே வருவது.?

இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்குவதால் இலவச அரிசிக்கும்/வேட்டிக்கும் அலையும், ஜனநாயகத்தை காப்பாற்றப்பயன்படும் வாக்காளர்கள் மட்டும் ஆகிப்போவார்கள் என்பதுதான் யதார்த்தம்.


thanks: http://kudukuduppai.blogspot.com/2012/06/blog-post.html

புதன், 6 ஜூன், 2012

நன்றி: நக்கீரன்


நன்றி: நக்கீரன்

கடந்த பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாபரமசிவம், பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு பதவியை இழந்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமை அதற்கு மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.



இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.













இந்நிலையில் முத்தரையர் நிறைந்திருக்கும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் திமுகவோ தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டது.



சுயேட்சையாக போட்யிடலாம் என்று கூட முடிவெடுத்திருந்தார். இதற்காக கலைஞரிடம் அனுமதி பெற சென்னையில் முகாமிட்டிருந்தார்.


இந்நிலையில் திடீரென ராஜாபரமசிவம், சென்னையில் போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளார் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகல் இணைந்தார். இவருடன், முத்தரையர் சங்கத்தின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல.செல்லையா, முன்னாள் சிவகங்கை தேமுதிக பாராளுமன்ற வேட்பாளரான ரெஜினா பாப்பா ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

சனி, 2 ஜூன், 2012

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (எம்எல்)

இன்று...!!

தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின்
சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள்

பழ.ஆசைத்தம்பி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க போகிறோமா? மீண்டும் பழைமைக்குத் திரும்பி மன்னர் பரம்பரையிடம் ஒப்படைக்க போகிறோமா?
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ஒருவர் கூட தலித் அல்ல. 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை மக்கள் கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுத்தனர்.
எதிர்வரவுள்ள இடைத்தேர்தலில், உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, ஏழைகளின் பிரதிநிதியாக தலித் மக்களின் பிரதிநிதியாக மாலெ கட்சி களம் காண்கிறது. இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், அறிவாளி பிரிவினர் ஆதரவு கொடுங்கள் என மாலெ கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
180, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டை தொகுதி ஒன்று. புதுக்கோட்டை தொகுதி 1952 முதல் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி புதுக்கோட்டை ஒன்றியம் (26 ஊராட்சிகள்) கரம்பக்குடி ஒன்றியம் (20 ஊராட்சிகள்) மூன்றும் இணைந்தது புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி.
மார்ச் 2012 வரை மொத்த வாக்காளர்கள் 1,92,362. ஆண் வாக்காளர்கள் 96,167. பெண் வாக்காளர்கள் 96,255. 25.05.2012ல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,94,980.
மொத்த வாக்குச் சாவடிகள் 224. புதுக்கோட்டை ஒன்றியத்தில் 74 வாக்குச் சாவடிகள். கரம்பக்குடி ஒன்றியத்தில் 47 வாக்குச் சாவடிகள். புதுகை நகராட்சியில் 103 வாக்குச் சாவடிகள்
சமூகம்
தொகுதியில் பெரும்பான்மை தலித் மக்கள். முத்தரையர் சமூகம், முக்குலத்தோர் (மறவர் இல்லை), பிற சமூகத்தினர் என அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளனர்.
வர்க்கம்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஏழை, சிறு, குறு விவசாயிகள் நிறைந்த பகுதி. நிலவுடைமையாளர்கள் சிறிய பிரிவினரே. சிறுவிகித விவசாய உற்பத்தியை கொண்ட பகுதி. மிகவும் பின்தங்கிய, வறட்சியான பகுதி.
மன்னர் ஆட்சியின் மிச்சசொச்சம்
1948ல் மன்னர் ஆட்சி ஒழித்து கட்டப்பட்டது. ஆனால் அதன் மிச்சசொச்சம் பெயர்களில் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெயர் தொண்டைமான் மாளிகை. அரசு மருத்துவமனை, ராணியார் மருத்துவமனை. அரசுப் பள்ளி, ராணியார் மேல்நிலை பள்ளி. அரசுக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி.
நாட்டு கூட்டமைப்பு முறை
தொகுதியில் இன்னும் நாட்டு அம்பலம் முறை, சாதிய மிச்சசொச்சங்களுடன் உயிர் வாழ்கிறது. கவி நாடு, வடவாளம் நாடு, வாராப்பூர் நாடு, கோத்துபனை நாடு வீரக்குடி நாடு, ஈ சங்க நாடு என பல நாடு முறை இருக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை
தலித் மக்கள், முத்தரையர் மக்கள் கோவிலில் நுழைய தடை துவங்கி, தனிக் குவளை, தனி சுடுகாடு, முடித்திருத்த தடை, உள்ளூர் அதிகாரத்தில் பங்கு மறுப்பு, உரிமை மறுப்பு, தலித் தலைவர் கருக்கள குறிச்சியில் தேசிய கொடி ஏற்ற தடை என சாதிய ஒடுக்குமுறை தொடர்கிறது.
வரலாறு நெடுக வறட்சி, பஞ்சம் தொடர்கிறது. புதுகை தொகுதியில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் துவங்கி 1708, 1709, 1733, 1837, 1866, 1868, 1879, 1884, 1889, 1893, 1895, 1904 - 05, 1907, 1909, 1921, 1925, 1926 - 30, 1945, 1969, 1974 - 75 என தொகுதி மக்களை வாட்டி வதைத்த வறட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம்.
பஞ்சத்தை போக்க மாவட்டம் முழுவதும் 6000 குளங்கள் வெட்டப்பட்டன. புதுக்கோட்டை நகரத்தில் மட்டும், புதுகுளம், பல்லவன்குளம் துவங்கி 66 குளங்கள் வெட்டப்பட்டது.
குளங்கள் பராமரிக்கப்படாமல் பல காணாமல் போயின. சில சென்னை கூவம் போல் ஆயின. சிலவற்றை அரசாங்கமே அங்கீகரித்து கட்டிடங்கள் கட்டுவது என ஆரம்பித்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் யூனியன் ஆபீஸ், கல்லூரி, கல்லூரி விடுதி என குளத்தை தூற்றுவிட்டனர். இதனால் தண்ணீர் பிரச்சனை தொகுதி மக்களின் பிரதான பிரச்சனை.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது, ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது மிகமிக அவசியம்.
விவசாயம்
தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த மக்கள் பெரும்பான்மை. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 466329 ஹெக்டேர். அதில் சாகுபடி நிலம் 32 சதவீதம் மட்டும். மீதி புறம்போக்கு வகையினம் 143895 ஹெக்டேர். ஓரளவு வன நிலம் உள்ளது. 2010ல் நிகர சாகுபடி 150671 ஹெக்டேர். 2011ல் நிகர சாகுபடி 149367 ஹெக்டேர். 2011ல் சாகுபடி பரப்பு குறைந்துதுள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி, நீர் ஆதாரம் இல்லாமை, மின் தட்டுப்பாடு, இடுபொருள் விலை உயர்வு, விளைச்சலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, சிறு விகித உற்பத்தி என விவசாயத்தை விட்டு மக்கள் விரட்டப்படுவதும், விளை நிலம் சுருங்கி போவதும் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
தொகுதியில் சிப்காட் மற்றும் முந்திரி தொழிற்சாலை தவிர இதர தொழிற் சாலைகள் இல்லை. விவசாய வேலைகளும் இல்லை. (மேலே உள்ள விபரம் இதை காட்டும்). 100 நாள் வேலையில் இது வரை ஒரு நாள் கூட, 80, 100, 119, 132 கூலி வழங்கியதும் இல்லை. 100 நாள் வேலையும் தரப்படுவது இல்லை.
புலம் பெயர்தல்
வேலை இல்லை. போதுமான கூலி இல்லை. வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. மக்கள் திருப்பூர், கோவை சென்னை என பெருநகரங்களுக்கு புலம் பெயர்வதும், உடல் உழைப்பு தொழிலாளர் களாக வெளிநாடு செல்வதும் தொடர்கிறது.
மன்னராட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும்
புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல்களில் 2004 வரை வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தரப்படுகின்றன.
1951 கே.எம்.வல்லதரசு, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி.
1957 ராமநாதன் செட்டியார், இந்திய தேசிய காங்கிரஸ்.
1962 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 வீரையா, திமுக
1977 இளஞ்செழியன், அதிமுக
1980 சுவாமிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் (தி)
1984 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1991 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1996 திருச்சி சிவா, திமுக
1998 ராஜா பரமசிவம், அதிமுக
1999 திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர்.அதிமுக
2004 ரகுபதி, திமுக
2009 தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. 14 முறை நாடாளுமன்ற தொகுதியாக இருந்து 2009ல் தொகுதியாக இல்லாமல் போனது தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே. தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கோட்டை தொகுதியில் மட்டும் 12,326 வாக்குகள் 49 ஓவுக்கு போடப்பட்டன.
சட்டமன்ற தேர்தல்களில் 2011 தேர்தல்களில் தான் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். மத்திய, மாநில அரசுகளின் முதலாளித்துவ ஆதரவு நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக மக்கள் ஆதரவு நிகழ்ச்சிநிரலை முன்னிறுத்த இடதுசாரி இருத்தல் அவசியம். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். மன்னராட்சி அல்லாமல் மக்களாட்சி வேண்டும்.

புதுக்கோட்டை நகரில், நகர மக்களை குடிமனை, வீட்டு வாடகை குடிநீர், வேலையின்மை நகரத்தைவிட்டு துரத்துகிறது. கிராமத்தில், விவசாய நெருக்கடி, வேலையின்மை, சாதிய ஒடுக்குமுறை சொந்த ஊரைவிட்டு பெரும்நகரத்தை நோக்கி, வெளிநாட்டை நோக்கி விரட்டுகிறது.
புதுக்கோட்டை தொகுதி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கு பின்வரும் அம்சங்கள் அவசியம்.தொகுதியில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம்.
நகரத்தில், கிராமத்தில் வீட்டுமனை இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனை.
100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை, 300 ரூபாய் கூலி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை.
தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது. நீராதாரத்தை பெருக்குவது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது.
மத்திய, ரிசர்வ் பாரஸ்ட் இடத்தை மாநில அரசு அரசின் கீழ் கொண்டு வந்து, விவசாய பண்ணைகளாக, பழந்தோட்டங் களாக அமைத்து மக்களுக்கு வேலை தருவது, அல்லது மக்களுக்கு பிரித்து வழங்குவது.
ஆர்.எஸ்.பதி மரங்களை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது. மக்களை, விவசாயத்தை, நிலத்தடி நீரை பாதுகாப்பது.
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் மருத்துவக் கல்லூரி
அரசு கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவ கல்லூரி.
வம்பன விதைப் பண்ணை, வெள்ளான் விடுதி எண்ணெய் வித்து பண்ணை, அண்ணா பண்ணை, அரிமளம் பண்ணை, கால்நடை பண்ணை ஆகியவற்றை மய்யப்படுத்தி விவசாயக் கல்லூரி.
 மாவட்ட தலைநகரம் என்பதால் அரசு பொறியியல் கல்லூரி.
 அரசு முந்திரி தொழிற்சாலை.
 விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்.
 அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலை, கூடுதல் பேருந்து இயக்கி பேருந்து வசதி இல்லா கிராமம் இல்லை என்கிற நிலை.
 அரசு பள்ளிகளையும், ஆதிதிராவிடர் பள்ளிகளையும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்துவது.
 கிராமப்புறங்களில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உடனே அப்புறப்படுத்துவது.
 துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்குதல்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகப்படுத்துதல். அரசு மருத்துவமனைகளை உயிர்காக்கும் மருத்துகளை கொண்டு, கூடுதல் கட்டிட வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளாக மாற்றுதல்.
இன்னும் பல. . .

தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்பார்ந்த புதுக்கோட்டை தொகுதியில் வசித்து வரும் கிராமப்புற தொழிலாளர்களே,
ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளே,
சமூகரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படுகிற தலித் மற்றும் முத்தரையர் சமூக மக்களே,
அனைத்து சமூக உழைக்கும் மக்களே.
வர்க்கமாக, சாதியாக, பெண் என்பதாலும் சுரண்டப்படும் மண்ணின்பாதி, விண்ணில் பாதியாக உள்ள பெண்கள் சமூகமே,
சமூக மாற்றத்தை, சமத்துவத்தை விரும்பும், தலித் அமைப்பு தோழர்களே,
பாட்டாளிகளின் கரத்தை வலுப்படுத்த, இடதுசாரி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தம்மை அர்ப்பணித்துள்ள இடதுசாரி இயக்க தோழர்களே,
அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அங்கன் வாடி பணியாளர்களே, சத்துணவுப் பணியாளர்களே, மக்கள்நலப் பணியாளர்களே, சாலைப் பணியாளர்களே,
துப்புரவுத் தொழிலாளர்களே, சுமைதூக்கும் தொழிலாளர்களே, தரைக் கடை வியாபாரிகளே.
ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, அறிவாளி பிரிவினரே, சமூகத்தை புரட்டி போடும் தொழிலாளர் வர்க்கமே.
உங்கள் பிரதிநிதியாய் தேர்தல்களத்தில் சிபிஅய் (எம்.எல்).
உங்கள் சின்னம் மூன்று நட்சத்திரக்கொடி.
உங்கள் வேட்பாளர் தோழர் ம.விஜயன்.





அன்று...!!!
CPI ML கட்சி உண்மை அறியும் குழுவின் அறிக்கை
தலித்துகளின் நிலத்தை அபகரிக்கும் அரசியல் பெரும்புள்ளிகளின் திட்டமிட்ட சதிச்செயலே பரளிப்புதூர் தாக்குதல்!
அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் திமுக ஆட்சியில் பரளிபுதூர் என்று சொல்ல வேண்டிய விதத்தில் பரளிபுதூர் தலித் சமுதாய மக்கள் மீது முன்கூட்டியே திட்டமிட்ட குறிவைத்த தாக்குதல் 13.02.2001 அன்று நடத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் படம் பிடித்து காட்டிய பிறகும் காவல்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடமிருந்து எவ்வித பொறுப்புள்ள அவசரகால நடவடிக்கையையும் காணமுடியவில்லை.
இந்த சூழலில் 22.02.2011 அன்று சிபிஐஎம்எல் கட்சியின் உண்மை அறியும் குழு பரளிபுதூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்துப் பேசியது. அப்போதுதான் ஊருக்குள் மக்கள் நுழைய ஆரம்பித்திருந்தனர். பெண்கள், இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் குழுவுடன் உரையாடினர். மக்களிடம் ஊடாடியதிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கொண்டு நாங்கள் பின்வருவனவற்றை முன்வைக்கிறோம்.


பரளிபுதூர் தாக்குதலின் சமூக அரசியல் பின்புலம்
பரளிபுதூர் மட்டுமல்ல மதுரையை, ஒட்டியுள்ள நத்தம் தாலுகா பகுதி முழுமையும் பொதுவாக முத்தரையர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். 90 சதம் முத்தரையர்கள் 10 சதம் மற்றவர்கள் என்பதே நிலை. அந்த பத்து சதத்தில் பறையர் என்று குறிப்பிடப்படும் அட்டவணைச் சாதியினர் பெரும் பகுதியினராக உள்ளனர்.
பரளிபுதூர் ஊராட்சி என்பது புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி, பொடுகம்பட்டி, அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சியில் உள்ள மக்கள் தொகையில் 600 பேர் மட்டுமே தலித்துகள். ஏறக்குறைய 4000 பேர் முத்தரையர்கள் மொத்தம் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர்.
முந்தைய காலத்தில் பறையர்கள் நிலஉடமையாளர்களைச் சார்ந்து வாழ்ந்திருந்திருக்கிறார்கள். 600 ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருந்த ஓர் நாயக்கர் நிலப்பிரபு மற்றும் அவனிழைத்த கொடுமைகள் பற்றி இப்போதும் கசப்போடு நினைவுகூர்கிறார்கள். பின்னர், முத்தரையர்கள் கைவசம் நிலம் கைமாறியிருக்கிறது. அதேசமயம் தலித்துகள் கல்வியில், வேலைவாய்ப்பில் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறத் துவங்கியுள்ளனர்.
தற்போது முத்தரையர்கள் நிலத்தில் வேலை செய்யும் தலித் என்று எவரையும் சொல்ல முடியாது என்று குறிப்பிடுகின்றனர். படித்து பெரிய வேலைகளுக்குச் செல்வது, தொழில் படிப்புகள் வழியாக வேலை தொழில் வாய்ப்புகள், கட்டுமானப் பணிகள், நகர்புர வேலைகள் என்று தலித்துகள் முத்தரையர்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
முத்தரையர்களுக்கும் நிலத்தின் மீதான கட்டுப்பாடு பற்றிய போட்டி இருந்து வந்திருக்கிறது. தலித்துகளின் சாமி கண் திறப்பு இடத்தை முத்தரையர்களில் ஒருவர் ஆக்கிரமித்துவைத்துள்ளார். தலித்துகளுக்கு அரசு கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு அடுத்துள்ள தோட்டத்தில் நத்தம் புறம்போக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தலித்துகள் தெரிவிக்கின்றனர். மலைச்சரிவில் தலித் மக்களுக்கு முதலமைச்சரின் இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தின் கீழ் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பண்படுத்தி மரங்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
வெகு காலம் தலித்துகளின் பயன்பாட்டில் அந்த நிலப்குதி இருந்திருக்கிறது. (அனுபவத்தில் இருந்த இடத்திற்குத்தான் இரண்டு ஏக்கர் திட்டத்தில் பட்டா அளித்துள்ளனர்.) பட்டா அளிக்கப்பட்ட பின்னர் அந்த 60 ஏக்கரில் 50 ஏக்கருக்கான பாதையை முத்தரையர்களில் ஒருவரான ராமன் ஆக்கிரமித்து வைத்துள்ளார். நிலத்தைக் கைவிடுவது அல்லது எதிர்த்துப்போராடுவது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிலம் தொடர்பான தகறாறுகள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. தற்போதைய மோதலுக்கு அவை முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கின்றன.
கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசு அல்லது இதர வேலைகளில் அமர்ந்த தலித்துகள் தமது சேமிப்பை நிலமாக மாற்றிக் கொண்டு, ஓய்விற்குப் பின் ஊருக்கு வந்துவிட முயற்சித்துள்ளனர். நிலம் வாங்கத் துவங்கியுள்ளனர்.
முத்தரையர்களின் பெரும்பகுதி குறைவான படிப்பறிவு உள்ளவர்கள். பெரும்பாலும் அரசு அல்லது பிற வேலைகளுக்குச் செல்வதில்லை. நிலம் அது சார்ந்த உற்பத்திதான் அவர்களின் பிரதான வாழ்க்கை ஆதாரமாக இருக்கிறது. தற்போது தலித்துகள் நிலத்தை வாங்க ஆரம்பித்துள்ளது முத்தரையர்களை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக, புறம்போக்கு உள்ளிட்ட இயற்கை வளங்களை தமது கையில் வைத்துள்ள முத்தரையர்களின் ஒரு சில நபர்கள், தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதில் முனைப்பாக இருந்துள்ளனர் என்பதை கிராமத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முத்தரைய பெரும் புள்ளிகளின் உற்பத்தி கட்டுப்பாட்டிலிருந்து விலகிவந்துவிட்ட தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விடுதலைசிறுத்தைக் கட்சியில் இணைந்துள்ளனர். திருமணம் போன்ற குடும்ப / சமூக விழாக்களில் தமது சுயேட்சையான நிலைமையை பிரகடனப்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர். அது பொதுவான முத்தரையர்களிடம் எரிச்சல் மற்றும் பொறாமை உணர்வைப் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, முத்தரையர்களின் ஒரு சில பெரும்புள்ளிகள் முத்தரையர்களைத் திரட்டி தலித்துகள் மீது தாக்குதல் தொடுத்து நிலத்தின் மீதான தங்கள் கட்டுப்பாட்டினை மறுஉறுதி செய்துள்ளனர். தலித்துகள் மீது நடைபெற்ற தாக்குதல் உண்மையிலேயே அவர்களின் பொருளாதார பலத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பதன் பொருள் இதுதான்.

தாக்குதலின் தன்மை
சிலை திறப்பு விழாவிற்குத் திரட்டப்பட்ட முத்தரையர்கள் சிலை நிறுவ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். காயப்பட்ட அவர்களின் உணர்விற்கு வடிகாலாக அல்லது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அல்லது இந்த இரண்டின் கலப்பாகவும் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. மதுரையின் தெற்கே உள்ள வலையங்குளம் துவங்கி பரளிபுதூரின் அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முத்தரையர்கள் திரட்டப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக என அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தலித்துகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், கடைகள், உணவு தாணிய சேமிப்பு, கால்நடைகள், தொலைக்காட்சி பெட்டிகள், என்று குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அனேகமாக அனைத்து தலித்துகளின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. அரசு கட்டிக்கொடுத்த அளவுக்கு மேல் விரிவாக்கம் செய்யப்பட்ட வீடுகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் பெரும் புள்ளிகள், குறிப்பாக அம்மாவாசியின் மகன் சுட்டிக்காட்ட வெளியூர் ஆட்களும் உள்ளூர் ஆட்களும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகள் போன்ற அடிப்படை ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கல்விச்சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், பணப்பரிமாற்றம் (கடன்/வைப்பு) ஆவணங்கள் உட்பட அனைத்துவிதமான ஆவணங்களும் திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப்பெற வேண்டும் என்றால் ஒரு சில ஆண்டுகளுக்கு நடையாக நடக்க வேண்டியிருக்கும்.
ஆண்குழந்தைகளை எரித்துக்கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. ஆண்கள்தான் வாரிசுகளை உருவாக்குகிறார்கள் என்ற மிக இருண்ட கால கருத்தாக்கத்தின் அடிப்படையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பெண்களை மிகவும் இழிவான வார்த்தைகளில் வசை பாடியுள்ளனர். ஆட்கள் திரள்வதைக் கண்டவுடன் பெண்கள் காடுகளுக்கு ஓடிவிட்டதால் பாலியல் தாக்குதல் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதுபோல, ஆபத்தான காயங்கள், மரணங்கள் சம்பவிக்காமல் போய்விட்டது.
ஒருவேளை தலித் மக்கள் எதிர்த்துப்போராடுவது என்று முடிவு செய்திருந்தால் மிகப்பெரும் சோகத்தையும் அவமானத்தையும் இழிவையும் தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். ஆனால், எண்ணிக்கை குறைவு என்ற தமது பலவீனத்தை உணர்ந்துகொண்ட தலித்துகள் தீர்மானகரமாக முடிவெடுத்து, அதன்படி தப்பித்துச்சென்றுவிட்டனர். காடகளில் இரவு தங்கி, பின்னர் பதுங்கித் திரிந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து மீண்டிருக்கிறார்கள். பெண்களின், சிறுமிகளின் கண்களில் தெரியும் வேதனைக்கும் வலிக்கும் திமுக அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
தலித்துகளின் வீடுகளின் ஓடுகள் அம்மிக் குழவிகள், பெரிய கற்களை கொண்டு உடைக்கப்பட்டுள்ளன. பார்வையிழந்த தலித் ஒருவரின் சிறிய கடை ஒட்டு மொத்தமாக இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. தண்ணீர் பொதுக்குழாய்கள் கூட உடைத்து தகர்க்கப்பட்டுள்ளன. தாக்குதல் முடிந்த பிறகும் பலகாலத்துக்கு தலித் மக்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்து விடக்கூடாது எனும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் எதிர்வினை
மாவட்ட ஆட்சியர் திரு. வள்ளலார், சம்பவம் நடந்து 3 நாட்கள் கடந்தே பரளிபுதூருக்கு வந்திருக்கிறார். ஐ.பெரியசாமி (அமைச்சர்), என்எஸ்வி சித்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்) வந்து சென்றிருக்கின்றனர். இவர்களில் எம்பி தன் சொந்த பணத்தில் வீட்டிற்கு 2 ஆயிரம் கொடுத்ததாக மக்கள் சொன்னார்கள்.
எம்பியும் சரி மந்திரியும் சரி தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டிக்கவோ அல்லது தாக்கியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவோ அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்காக நடவடிக்கை எடுக்கவோ இல்லை. வெறும் வாய்ப்பேச்சுடன் திரும்பிவிட்டனர் என்று மக்கள் குறிப்பிட்டனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனது ஆட்களுடன் வந்து முத்தரையர்களைப் பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தலித்துகளைப் பார்த்து ‘இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று முழக்கமிட்டுள்ளனர். தலித்துகளைத் தாக்கி மற்றவர்களை தங்கள் வாக்கு வங்கியாக்கிக்கொள்ளும் தந்திரம் இதுவென்றே தோன்றுகிறது.
திமுகவும் இதர கட்சிகளும் வரும் தேர்தலைக் கணக்கில் கொண்டு இப்பிரச்சனையை அடக்கி வாசிக்கப்பார்க்கின்றன. தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு தேர்தல் கணக்குகளை சிதற அடித்துவிடும் என்பதால் மௌனம் சாதித்தே பிரச்சனையை மறக்கடிக்கப் பார்க்கின்றன.
இந்த மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பகுதிக்கு வராதது மட்டுமல்ல, தனது அரசியல் கட்சிக்குப் பாதகம் வராமல் பாதிக்கப்பட்டவர்கள் போராடிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்! திமுக தலைமையிலான தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு அளிக்க வேண்டும், சட்ட விரோத தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரக்கூட, தனது கூட்டணி கட்சிக்கு நெருக்கடி கொடுக்கக் கூட தயாரில்லை.

அரசின் செயல்பாடு
தற்போது உடைக்கப்பட்டுள்ள ஓடுகளை ஈடுகட்ட ஓடுகள் இறக்கப்பட்டுள்ளன. அதனை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசு வழியாக வழங்கியதாக மக்கள் சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியதாகவும் தெரிவித்தனர். எப்போது திரும்ப ஊருக்குச் செல்வோம் என்று தெரியாமல் காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களைத் தவிர அரசின் செயல்பாடு வேறு எதனையும் காணோம். பத்து பேர் சேர்ந்து கொண்டு தாக்க, அதிலிருந்து தப்பித்து ஓடிய தலித்தான நைனாரை போலீஸ் கைது செய்துள்ளது. வேறு சிலரையும் கொடியேற்றம் பிரச்சனை தெடர்பாக கைது செய்துள்ளது.
இருதரப்பாரையும் சமமாகப் பாவிக்கிறோம் என்ற பாவ்லாவைக் காவல் துறை மேற்கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. கடுமையாக தாக்கப்பட்ட தமிழ்ச்செல்வியின் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை. இதிலிருந்து, குற்றத்தை தடுப்பதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் காவல்துறை அக்கறை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, தாக்குதலுக்கு ஆளானவர்களை தண்டிப்பது என்ற காவல்துறையின் தலித் விரோத அணுகுமுறைதான் வெளிப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடு
உள்ளாட்சி அமைப்பு பரளிபுதூரின் ஆதிக்க சக்திகளின் கையில்தான் இருக்கிறது. தேத்தாம்பட்டியைத் தவிர பிற கிராமங்களுக்கு உரிய வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும், தாக்குதலுக்கு ஆளான தலித் பகுதிக்கு விதிவிலக்கான சிலவற்றைத் தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டதில்லை என்றும் திமுகவைச் சேர்ந்த ஒரே தலித் வார்டு உறுப்பினர் பஞ்சு சொன்னார்.
ஒரு கோடி வரை நிதிப்பெற்றுள்ள இந்த ஊராட்சியில், தலித் கிராமத்திற்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். தற்போது உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதைத் தவிர வேறு நடவடிக்கை எதுவும் இல்லை.
ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பிறரைப்போல வளர்ச்சிப் பாதையின் முன்செல்வதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சிறு நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி எதிர்க்கிறது, கண்டிக்கிறது. அந்த அடிப்படையில் பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது.

பரிந்துரைகள்
1.தாக்குதலைத் தடுக்கத் தவறிய, தாக்குதலுக்குப் பின்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய, இதுவரையில் முறையான நிவாரண நடவடிக்கை வழங்காத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் நிர்வாக அதிகாரியான மாவட்ட ஆட்சியர் இத்தவறுகளுக்காகத் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு, ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2.தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட, வழிநடத்திய முத்தரையர் தரப்பு பெரும் புள்ளிகளான அம்மாவாசி, பிச்சை அவரது மகன் மற்றும் இராமன் போன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, பெண்களை இழிவுபடுத்துவது, சொத்துக்களை சேதப்படுத்துவது, கலவரம் செய்வது போன்ற வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
3.சாலை மறியல் போன்ற இதர குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட மற்ற அப்பாவி முத்தரையர்கள் மீதுதான வழக்குகள் கைவிடப்பட வேண்டும்.
4.கொடியேற்றினார்கள் என்று, அல்லது இதர காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட தலித் பிரிவினர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
5.பெண்களை இழிவு செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6.முத்தரையர் தரப்புப் பெரும் புள்ளிகள் செய்துள்ள நில ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றப்பட வேண்டும். புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற தலித்துகளுக்கும் முத்தரையர்களுக்கும் பிரித்தளிக்க வேண்டும்.
7.தலித்துகளுக்கு அரசு பட்டா அளித்த, மலைச்சரிவில் உள்ள 60 ஏக்கர் நிலத்திற்கான பாதையினை அரசு உருவாக்கி வழங்க வேண்டும். பாதையை மறிக்கும் நபரன இராமன் என்பவர் மீது வன்கொடுமை சட்டத்தில் சொல்லப்படும், தலித்துகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது, நிலத்தைப் பறிப்பது என்ற குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
8.தலித்துகளின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால் குடும்பம் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
9.தலித்துகளின் அடிப்படை ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கல்விச் சான்றுகள், வங்கிச் சான்றுகள் போன்றவற்றை அளிக்க உரிய அனைத்து துறைகளையும், அதிகாரிகளையும் கொண்ட சிறப்பு முகாம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் பரளிப்புதூரிலேயே நடத்தி அனைத்து ஆவணங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை அறியும்குழு உறுப்பினர்கள்
பாலசுந்தரம் (மாநில செயலாளர், சிபிஐஎம்எல்)
ஜெயவீரன் (சிபிஐஎம்எல், மாவட்ட செயலாளர் திண்டுக்கல்)
தேன்மொழி (மாநிலத் தலைவர், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்)
உஷா (மாநிலக் குழு, சிபிஐஎம்எல்)
மணிவேல் (ஏ.அய்.சி.சி.டி.யூ, மாநில பொதுக்குழு உறுப்பினர்)
திவ்யா (மாநிலக் குழு, அகில இந்திய மாணவர் கழகம்)
இராமச்சந்திரன் (சிபிஐஎம்எல், மாவட்ட செயலாளர், கரூர்)
மதிவாணன் (சிபிஐஎம்எல், மதுரை மாவட்ட குழு)




இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் .....


பொதுஉடைமை கட்சிகளின் நிலை மிகவும் பரிதாபதற்க்கு உரியது... நேற்று ஆதிக்க சாதியாக தெரிந்த முத்தரையர்கள் இன்றைய தேர்தல் களத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக மாறியது எப்படி ? என்பதனை அறிய இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் விரும்புகிறது, சந்தர்ப்ப அரசியலும், ஏமாற்று வார்த்தை பிரயோகங்களும் எல்லோரிடமும் எடுபடலாம் முத்தரையர் களிடம் உங்களின் நாடகத்தினை கண்பிக்க வேண்டாம் ! தலித்துகளுடன் என்றுமே நாம் வன்மம் பாராட்டியது கிடையாது, சொல்லப்போனால் அவர்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றே நாம் விரும்பி இருக்கிறோம், ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த மோதலை முலதனமக்க நீங்கள் அன்று முற்பட்டப் போது பாவம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை "புதுக்கோட்டையில் " இடைத் தேர்தல் வரும் அங்கே முத்தரையர்களின் காலில் விழ வேண்டி வரும் என்று நீங்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டிர்கள், கம்முனிசமும் லெனினிசமும் எங்களுக்கும் தெரியும், உங்களைப் போல் உழைக்கும் மக்களின் உணர்வினை தூண்டி ஆதாயம் அடையும் எண்ணம் எங்களிடம் இல்லை, உங்களின் இந்த இரட்டை வேடத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

வெள்ளி, 1 ஜூன், 2012

புதியதலைமுறையில் வேலை வாய்ப்புகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியை உருவாக்க விருப்பமா?

புதிய தலைமுறை இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்துடன், பல்வேறு பயன்தரும் நிகழ்ச்சிகளை கொண்டு ஒரு புதிய தொலைக்காட்சியை தொடங்க இருக்கின்றனது. இதற்கு கீழ்க்கண்டவாறு நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர்.



தலைமை செயல் அதிகாரி
ஊடகம்/பொழுதுபோக்குத் துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்ற மேலாண்மை நிர்வாகி


பொதுமேலாளர் - நிகழ்ச்சி
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளி


பொதுமேலாளர் - விளம்பரம்
தொலைக்காட்சி விளம்பர விற்பனையில் அகில இந்திய அளவில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர்


பொதுமேலாளர் - தொழில்நுட்பம்
சேட்டிலைட் தொலைக்காட்சி சேனலில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்


தயாரிப்பாளர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளிகள்


செய்தி ஆசிரியர்
தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஊடகவியலாளர்

ஒளிப்பதிவாளர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன் அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளர்கள்


படத் தொகுப்பாளர்கள்
FCP/AVID ஆகியவற்றில் நன்கு அனுபவம் பெற்ற படத் தொகுப்பாளர்கள்


மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும் :

மேலாளர் (HR),
நெ. 25 A என் பி தொழிற் பேட்டை,
ஈக்காட்டுதாங்கல்,
சென்னை - 600 032


மேலும் விபரங்களுக்கு

மின் அஞ்சல் : hr(at)newgenmedia(dot)in

வேலைவாய்ப்பு தகவல்


வேலைவாய்ப்பு தகவல்


பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டுவிடலாமே? -புதியதலைமுறை

பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டுவிடலாமே?

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் அளிக்கப்படும்’ என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காலதாமதத்தைத் தவிர்க்கும் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.


ஆனால் அதே சமயம் இது குறித்து மனதில் பல நெருடல்களும் ஏற்படுகின்றன. பொதுவாக, 6ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு 11, 12 வயதாகியிருக்கும். காண்பது, கேட்பது எல்லாம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிகிற வயது.


பள்ளிப் பிள்ளைகளிடையே ஒரு வழக்கம் உண்டு. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவது வழங்கப்படும்போது உனக்கு என்ன கிடைத்தது என்று மற்ற மாணவர்களுக்குக் கிடைப்பதை வாங்கிப் பார்ப்பது. பார்த்து தன்னுடையதோடு ஒப்பிட்டுக் கொள்வது. அது மதிப்பெண் அட்டையானாலும் சரி, தேர்வுத் தாளானாலும் சரி, பரிசுப் பொருளானாலும் சரி.


அந்தப் பருவத்தில், அவர்களுக்கு பள்ளியிலிருந்தே சாதிச் சான்றிதழ் வழங்கும்போது, மதிப்பெண் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல, நான் இந்த சாதி, நீ எந்த சாதி என்று சக மாணவர்களின் சாதி பற்றி அறியும் ஆர்வம் நிச்சயம் ஏற்படும். இதன் விளைவால் ஒவ்வொருவரும் இன்ன சாதி என்பது அவர்களது பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து விடும். அதோடு, வகுப்பறையில் சாதி வேற்றுமை பார்க்கிற உணர்வும் வேரூன்றி வளரும் அபாயமும் நேரலாம்.


ஆகவே இதுபோன்ற சிக்கல்கள் நேர்வதைத் தவிர்க்க, பிறப்புச் சான்றிதழிலேயே அவரவர் சாதியைக் குறிப்பிட்டு வழங்கிவிடலாமே. இதன்மூலம் பிறப்பைப் பதிவு செய்யும் வழக்கமும் வலுப்பெறும்.


இப்பொதெல்லாம் பெரிய நகரங்களில் கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது சாதி பற்றிய விவரங்களும் கணினியிலேயே பதிவாகி ஒரு data base உருவாகிவிடும்.


கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்காத இடங்களில் ரிஜிஸ்டரில் பதிவாகிவிடும்.


இதன் மூலம் வருங்காலத்தில், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களையும் அரசு தனது விரல்நுனியில் வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்காது.


-த்ராவிட், சென்னை - 24