Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இயற்கை அறிவோம்: புள்ளி எலிமானா? சருகுமானா?

‘புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள்.
சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சருகு மான்
இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும் உயிரினங்களுக்குக் காரணப் பெயரைச் சூட்டுவது தமிழ் மரபன்று; ஒன்றிலிருந்து பிரிந்து, இயல்புநிலை திரிந்து பொய்யாக உள்ளவற்றைத்தான் ‘சருகு' என்று அழைப்பது தமிழ் சொல் மரபு (இலைச்சருகு, வெங்காயச்சருகு என்பதைப் போல). மெல்லியதான, ஒடியக்கூடிய தன்மையைச் சுட்டவும் சருகு என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.

மாயம் காட்டும்
அதேநேரம் இந்த உயிரினம் இரட்டைக்குளம்புகளுடன் பார்க்க மான்களைப் போலிருந்தாலும், இந்த உயிரினம் மான் வகையைச் சேர்ந்தது அல்ல; இரட்டைக்குளம்பிகளான இயங்குதிணை உயிரினத்திலிருந்து பிரிந்து, திரிந்துபோய்ச் சரியாகப் பரிணாமவியல் மாற்றம் அடையாத உயிரினம் இது. எனவே தோற்றத்தில் மானைப் போலிருந்தாலும், உயிரின வகைப்படி இது மான் அல்ல. மானைப் போன்ற சருகு என்பதால், சருகுமான் எனப்பட்டது.
இந்தப் பொய்யான தன்மையும் காய்ந்த இலைதழைகளினூடே தன்னுருவை மறைத்து மாயம் காட்டித் திரிவதாலும் இதற்குப் பொய்மான், மாயமான் என்னும் பெயர்களும் உண்டு. சருகு என்னும் இடுகுறிப் பெயரின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், பொய்மான் என்னும் காரணப்பெயராக மாற்றவேண்டிய அவசியம் தமிழ் மரபில் ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் சருகுமான் பொய்மானாயிற்று. மாரீசன் பொய்மானாக வேடமெடுத்து ஓடினான் என்றால், சருகுமானாக வேடமெடுத்து ஓடினான் என்பதுதான் பொருள். பொய்யான மான் என்று பொருள் காண்பது, பொருள்மயக்கம். கல்கி எழுதிய ‘பொய்மான் கரடு' என்னும் புதினம் நினைவுக்கு வரலாம்.

மறைந்த இயற்கை அறிவு
கடந்த ஓரிரு ஆண்டு கால நாளிதழ்களைப் புரட்டினால் திண்டுக்கல், வில்லிப்புத்தூர், கடையநல்லூர், களக்காடு, தர்மபுரி, நீலகிரி ஆகிய ஊர்ப்புறங்களில் சருகுமான்கள் வேட்டையாடப்பட்ட செய்திகள் வந்துள்ளன. திண்டுக்கல், நத்தம், சிறுமலைப் பகுதிகளில் இந்தச் சருகுமான்கள் இப்போதும் வேட்டையாடப்பட்டுவருகின்றன. சருகுமான்கள் வாழ்வதற்கேற்ற மலைகளும் கரடுகளும் இப்பகுதிகளில் இருப்பதால், இங்கு அவை அதிகமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இப்பகுதியில் வசிக்கும் வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர் என்னும் பெரும்பிரிவு உண்டு.
இந்த வேட்டுவச் சமூகத்தினர் சருகுமான்களைக் குலச்சின்னமாக வைத்திருந்ததால் சருகுவலையர் எனப்பட்டனர்; இதுபோன்ற குலச்சின்ன மரபு எல்லாச் சமூகங்களில் உண்டு. ஆனால், பிற்காலத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் அற்றுப்போன நிலையில், சருகுமான்களைப் பற்றிய அறிவை மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அப்போது, சருகுமான்களின் தோற்றத்தை வைத்து அவற்றைக் காட்டு எலிகள் எனக் கருதி, சருகுவலையர்களை எலிகளோடு தொடர்புபடுத்தினர். அதேநேரத்தில் தங்கள் வயல்களைப் பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்க மட்டும், சருகுவலையர்களின் மரபுஅறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இயற்கை பற்றிய அறிவைப் பெரும்பான்மை மக்கள் இழந்து வருவதன் அடையாளமே மேற் கண்டது போன்ற பெயர் குழப்பங்கள், வகைக் குழப்பங்கள். இயற்கை பற்றிய மரபு அறிவைப் பாதுகாக்க சருகுமான் போன்ற பெயர்களையும், அந்த உயிரினங்களையும், சருகுவலையர்களின் அறிவையும் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும்.

கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com


வியாழன், 29 அக்டோபர், 2015

அமைச்சருக்கு எதிராக புதுகை பகுதி முழுவதும் போஸ்டர்

அமைச்சருக்கு எதிராக புதுகை பகுதி முழுவதும் போஸ்டர்

அமைச்சருக்கு எதிராக புதுகை பகுதி முழுவதும் போஸ்டர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய அ.தி.மு.க., சேர்மனாக இருப்பவர் கெங்கையம்மாள். இவரது கணவர் சொக்கலிங்கம் கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். கெங்கையம்மாளை, ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து, புதுகை முழுவதும் குறிபிட்ட பிரிவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இது குறித்து, கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம் கூறியதாவது: கறம்பக்குடி அருகே, வளம்கொண்டன் விடுதியில், தாய்சேய் நல விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுதல் தொடர்பாக, நான், கறம்பக்குடி ஒன்றிய, அ.தி.மு.க., சேர்மன் கெங்கையம்மாள் உட்பட நான்கு பேர் கடந்த, 25ம் தேதி அமைச்சசர் விஜயபாஸ்கரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது, உங்களை யார் வரச்சொன்னது என, அமைச்சர் கேட்டார். தாய்சேய் நல விடுதிக்கு, புதிய கட்டிடம் கட்டுதல் தொடர்பாக உங்களை பார்க்க வந்திருப்பதாக கூறினோம். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாளை, ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி, பதவியிலிருந்து நீக்கி விடுவதாக எச்சரித்தார். இவ்வாறு அவர் கூறினார். இத்தகவல் பரவியதும், ஒரு பிரிவினர் ஒன்று திரண்டு, அமைச்சருக்கு எதிராக, புதுகை பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

News source : http://www.dinamalar.com/district_detail.asp?id=1375197#.VjIJtwtyW2E

திங்கள், 26 அக்டோபர், 2015

சதய விழாவா, சாதிய விழாவா?

//முதல் பராந்தகச் சோழனின் மகளான அநுபமா என்பவர் கொடும்பாளூர் முத்தரையரை மணந்தார். அதே கொடும்பாளூர் அரச குடும்பத்தில் பிறந்த பூதி ஆதிச்ச பிடாரி என்பவரை முதல் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தார். அதாவது, இரண்டு குடும்பத்தாரும் பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். பராந்தகன் இப்படிப் பல்லவர்களோடும் முத்தரையர்களோடும் சேரர் களோடும் கொண்ட மண உறவின் காரணமாகவே பாண்டிய மன்னனை வெற்றி கண்டு இலங்கைக்குத் துரத்தினான் என்பது வரலாறு. //

//சோழ நாட்டு எல்லைக்குள்ளேயே தனக்கென்று தனிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த பழுவேட்ட ரையர்கள் அரச குடும்பத்தோடு மண உறவு கொள்ளும் அளவுக்கு முன்னுரிமை பெற்றிருந்தனர்.//



ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது பெரும் தவறு.
ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளைத் தஞ்சையில் ஆண்டுதோறும் தமிழக அரசே நடத்திவருகிறது. அவ்விழாவில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவிதை பாடி, பட்டிமன்றம் நடத்தி, பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சில வருடங்களாக ராஜராஜ சோழன் அரசின் ஆதரவை மட்டுமின்றி மக்களின் ஆதரவையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.
மாநகரின் சுவர்களில் மட்டுமல்லாது, பிரதான சாலைகளிலிருந்து விலகிக் கிடக்கும் கிராமங்களிலும்கூட ராஜராஜனின் பிறந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அவ்வாறு அழைப்பு விடுப்ப வர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி சாதிய அடிப்படையில் இயங்கும் அமைப்புகள்தான்.
விபரீத நோக்கம்
இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூழலில் வறுமைக்கோட்டைத் தொட்டும் தாண்டியும் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகள், தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வரலாற்று ஆளுமைகளைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்திருக் கின்றன. தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மன்னர்களின் பெயர்களைச் சொல்லி விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது. ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் சரித்திரத்தில் தமது கொடிவழியில் ஒரு மன்னனைத் தேடிக்கொண்டிருப்பது விடுதலை உணர்வால் மட்டுமல்ல, அதில் விபரீதமான நோக்கமும் கலந்திருக்கிறது. சாதிய அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் பேரங்களில் லாபம் ஈட்ட விரும்புவோரே இந்த வரலாற்று நாயகர்களை உரிமை கொண்டாட வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கையுடன் இணைந்து செயல்பட முன்வரும் சாதிகளுக்கான வரலாற்றுப் பெருமைகளை ஆராய்ச்சியாளர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்துத்துவவாதிகளே உருவாக்கியும் கொடுக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர் கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டு, அது தடை செய்யப் படும் நிலைவரைக்கும் வந்தது. அதற்கு மாற்றாக, பாண்டி யர்களை மற்ற சாதிகளோடு இணைத்து அடையாளம் காட்டும் ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணமே உள்ளன. அரசாண்ட வம்சங்களின் அடிமுடி தேடும் வரிசையில் இப்போது சோழர்களின் முறை வந்திருக்கிறது.
ராஜராஜ சோழன் எந்த இனக் குழு?
ராஜராஜ சோழன் வரலாற்று உணர்வு நிரம்பப் பெற்றவன். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த ஆண்டு களையும் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போர்களையும் கால வரிசைப்படி கல்வெட்டுகளில் குறித்துவைக்கும் வழக்கம் ராஜராஜனின் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
மேலும், பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துப் பாணியைத் தவிர்த்துவிட்டுப் புதிய தமிழ் வடிவத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டதும் அவன் காலத்தில்தான். கல்வெட்டுகளின் மெய்ப்புகழில் போர்களைக் குறித்த ராஜராஜன், தாம் எந்த இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று குறிக்கவில்லை.
ராஜராஜனுக்கு மிகத் தெளிவான சமய அடையாளம் உண்டு. அவன் சைவ சமயத்தினன். எனினும், அவன் பிற சமயத்தாரையும் ஆதரித்தான். ஆனால், அவனுக்கு சாதி அடையாளம் வெளிப்படையாக இல்லை. ராஜராஜனின் பெயருக்கு முன்னால் உடையார் என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது. பெயருக்குப் பின்னால் தேவர் என்ற பட்டப் பெயர் இருக்கிறது. இவை மட்டு மல்லாது, சோழ அரசர்கள் மண உறவு கொண்ட சிற்றரசர்களின் பெயர்களும் ஏதாவது ஒரு இனக் குழுவோடு தொடர்புடையதாய் இருக்கிறது. ராஜராஜனின் மனைவியர் எத்தனை பேர் என்பதும் தெளிவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமே 15 பெயர்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று துணிந்து ஒரு முடிவுக்கு வரலாம்.
சோழர்கள் தனித்த இனக் குழுவாகத் தம்மைச் சுருக்கிக்கொள்ளாமல், தமக்கு அருகில் இருந்த பிறரோடும் மண உறவு பூண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டதாலேயே தென்னிந்தியாவில் பேரரசை உருவாக்கிக் கட்டிக் காக்க முடிந்தது. இந்த மண உறவு முறை ராஜராஜனுக்குப் பல தலைமுறைகள் முன்பே வழக்கத்துக்கு வந்துவிட்டது.
ஆதித்த சோழனின் மனைவியான சோழ மாதேவியின் அன்னை அதாவது அவனது மாமியார் காடுபட்டிகள் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. முதல் பராந்தகச் சோழனின் மகளான அநுபமா என்பவர் கொடும்பாளூர் முத்தரையரை மணந்தார். அதே கொடும்பாளூர் அரச குடும்பத்தில் பிறந்த பூதி ஆதிச்ச பிடாரி என்பவரை முதல் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தார். அதாவது, இரண்டு குடும்பத்தாரும் பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். பராந்தகன் இப்படிப் பல்லவர்களோடும் முத்தரையர்களோடும் சேரர் களோடும் கொண்ட மண உறவின் காரணமாகவே பாண்டிய மன்னனை வெற்றி கண்டு இலங்கைக்குத் துரத்தினான் என்பது வரலாறு.
சோழர்களின் வழக்கம்
தாம் வென்ற பகுதிகளில் அங்கு ஏற்கெனவே ஆண்டவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் வழக்கமும் சோழர்களிடம் இருந்தது. சிற்றரசுகளின் வலுவான கூட்டாட்சியாகவே சோழப் பேரரசு விளங்கியது. சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பெற்றிருந்த செல்வாக்கும் மதிப்பும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படிக்கிற ஆரம்பநிலை வாசகர்களுக்கே தெளிவாகப் புரியும். சோழ நாட்டு எல்லைக்குள்ளேயே தனக்கென்று தனிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த பழுவேட்ட ரையர்கள் அரச குடும்பத்தோடு மண உறவு கொள்ளும் அளவுக்கு முன்னுரிமை பெற்றிருந்தனர். மேலும், சோழ நாட்டின் வட எல்லையை ஆண்ட சாளுக்கியர்களோடும் சோழர்கள் மண உறவு பூண்டனர். சாளுக்கியர்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே சோழப் பேரரசு அதன் இறுதிக் காலத்தில் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
வரலாற்றில் யார், எங்கு, எப்போது என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமான விவரங்கள். அரிச்சுவடிப் பாடம். அவற்றால் யாருக்கும் ஒருபோதும் எந்தப் பயனுமே இல்லை. ஏன் என்ற கேள்வி எழும்போதுதான் வரலாற்றுத் துறை நமக்கு மேலான பாடங்களை வழங்குகிறது. சோழர்கள் யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சோழர்களால் 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒரு பேரரசை எப்படிக் கட்டியெழுப்ப முடிந்தது?
எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறோமே, அதே வழிமுறையைப் பின்பற்றி தமது அரசாட்சி எல்லைக்குள் வாழ்ந்த அனைத்து இனக் குழுக்களோடும் ஒருங்கி ணைப்பை உண்டாக்கித்தான் இடைக்கால சோழர்களின் சாம்ராஜ்யம் எழுந்தது. அந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றியதால்தான் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கவும் முடிந்தது.
பல்லவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கோயில் கட்டிடக் கலையை மேலும் செம்மைப்படுத்தியது, சைவத் திருமுறைகளைத் தொகுத்தது, கோயில் நிர்வாகத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்தியது, நெடுங்கடலில் கலம் செலுத்தும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது, அதன் துணைகொண்டு வணிகத்தை மேற்கொண்டது என்ற வரலாற்றுப் பெருமைகள் எல்லாம் பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுறவின் அடிப்படையில் மலர்ந்ததுதான். இந்த வரலாற்றுப் பாடத்தைப் புறந்தள்ளி, ராஜராஜனின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது தவறு.

செல்வ புவியரசன், வழக்கறிஞர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்



அஇஅதிமுக பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்க்கு,

      கடந்த 25/10/2015 அன்று உங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் என்பவர், அதே உங்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தின் பெருந்தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கம் என்ற பெண்மணியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்,
 அத்தோடு முடிந்திருந்தால் அது உங்கள் கட்சியின் சொந்த விவகாரமாக கருதிடமுடியும், அதே பெண்மணியை அவர் சார்ந்த சாதியின் பெயரையும் (முத்தரையர்) சேர்த்து சொல்லி திட்டியுள்ளார், அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி பெரும்பான்மையான முத்தரையர் சமுதாயம் உங்கள் கட்சியை ஆதரித்துவருவது நீங்கள் அறிந்திருக்கும் விசயம்தான் என்றாலும் சமீபத்தில் உங்கள் கட்சியில் அறிவித்த மாவட்ட, ஒன்றிய பதவிகளில் என்ன காரணத்தினாலோ முத்தரையர்களை புறக்கணித்து இருந்தீர்கள் அது போகட்டும் அது உங்கள் உட்கட்சி விவகாரம், அதே நேரம் எங்கள் சமூகத்தை சேர்ந்தவரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், `உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்


முத்தரையர் பொதுக்கூட்டம்

புதன், 14 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை அருகே கார் அடித்து உடைப்பு

அக்டோபர் 11: முத்துப்பேட்டை அருகே ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி சென்ற கார் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்(34), இவர் முத்துப்பேட்டை அடுத்த கல்லடிக்கொள்ளைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே போல் சூசை ரெத்தினம்(40). இவர் முத்துப்பேட்டை புதுத்தெரு பள்ளியில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளராக உள்ளார். தினமும் இருவரும் மன்னார்குடியிலிருந்து ஆசிரியர் முருகேசன் காரில் முத்துப்பேட்டைக்கு வந்துவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணிகள் அதிகமாக இருந்ததால் காலத்தாமதமாக மன்னார்குடி செல்ல முத்துப்பேட்டையிலிருந்து சென்றனர். 

கோவிலூர் கோட்டகம் வளைவு சாலையில் கார் சென்றுக் கொண்டிருக்கும் போது 5-க்கும் மேற்பட்ட பைக்கில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட ஒரு கும்பல் இருவரும் சென்ற காரை வழிமறைத்து கட்டையாலும் கல்லாலும் சரமாரியாக தாக்கியது. இதில் காரில் இருந்த முருகேசனும், சூசை ரெத்தினமும் சத்தம் போட்டனர் இருந்தும் அந்த கும்பல் சரமாரியாக காரை அடித்து நொருக்கிவிட்டு தப்பினர். இதில் ஆசிரியர் முருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசை இரத்தினம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். 
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடைக்கப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் முருகேசனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் துளைசியாப்பட்டினம் அடுத்த வன்டுவாஞ்சேரி கிராமம் என்றும் அங்கு ஆசிரியர் முருகேசனின் சொந்தமான வீட்டு அருகே முத்தரையர் சங்க கொடி மரம் ஏற்றும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் அவரது தந்தை மருதமுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வட்டாட்சியர் மூலம் அந்த கொடி கம்பத்தை அகற்றியதாக தெரிகிறது. 
இதில் ஏற்பட்ட முன்விரோத காரணமாகதான் ஆசிரியர் முருகேசனை அந்த கும்பல் தாக்க வந்ததாத முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Source : Muthupetbbc

அ.தி.மு.க செயலாளரை மாற்ற வேண்டும்: ஜெ.வை நேரில் சந்திக்க தீர்மானம்

ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளருக்கு பதிலாக புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அறந்தாங்கியில் அ.தி.மு.க வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த முத்தரையர் இன அ.தி.மு.கவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ப.அரசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நெவளிநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, இந்திராமுத்துராமன், மலர்வள்ளிநாகையா, ஒன்றியக் கவுன்சிலர் ஆத்மநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறந்தாங்கி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேலாயுதத்தை மாற்றிவிட்டு பெரும்பாண்மையுள்ள முத்தரையர் இனத்தில் இருந்து ஒருவரை புதிதாக ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என ஜெயலலிதாவை கேட்டுக் கொள்வது. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக சென்னை சென்று ஜெயலலிதாவை சந்திப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-இரா.பகத்சிங்.

News Source : NAKKERAN

நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி மாஜி எம்எல்ஏ தலைமையில் அதிமுக அவசர ஆலோசனை ஆலங்குடி அருகே பரபரப்பு


ஆலங்குடி, : நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால், முன்னாள் எம்எல்ஏ  தலைமையில் அதிமுகவினர் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் சமீபத்தில் அதிமுகவில் புதிய  நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஒன்றியத்தை சேர்ந்த  32 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அறந்தாங்கி தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் செயலாளர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் ஆலங்குடி அடுத்த மேற்பனைக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இங்குள்ள மழை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனை கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ அரசன் தலைமை வகித்தார். இதில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
இதில், தலைமைக்குத் தவறான புள்ளி விவரம் கொடுக்கப்பட்டதால், பெரும்பான்மை வகுப்பை சேர்ந்த கட்சியினருக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட பிரதிநிதித்துவம் உரியமுறையில் கொடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சிறப்பு குழு ஒன்று அமைத்து அதன் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை 15க்கும் மேற்பட்ட பஸ்களில் சென்னைக்கு அழைத்துச் சென்று, கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலங்குடி அருகே முன்னாள் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் நடத்திய இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News Source : DINAKARAN

அ.தி.மு.க.,வில் மா.செ., பதவி வன்னியர்களுக்கு முக்கியத்துவம்


சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, அதிகம் வழங்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து சமுதாயத்தினருக்கும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாவட்ட செயலர்கள் பட்டியல் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கு முன், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த, 13 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அவர்களில், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர் கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

அதற்கு அடுத்ததாக, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த, 10 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அதில், இப்போதும் மாற்றம் இல்லை. அதேநேரத்தில், உட்கட்சி தேர்தலுக்கு முன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த, ஏழு பேர், மாவட்ட செயலர்களாக இருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, தென் சென்னை தெற்கு, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் மத்திய மாவட்டங்களில், வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல, நாடார், உடையார், நாயுடு, செட்டியார், விஸ்வகர்மா போன்ற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முத்தரையர் சமூகத்தினர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் அதிகம்.ஆனாலும், அந்த சமூகத்தை சேர்ந்த யாருக்கும், மாவட்ட செயலர் பதவி வழங்கப்படவில்லை. இது, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும், இதை ஈடுகட்ட, தலைமை நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் நியமனத்தில், முக்கியத்துவம் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
News Source : DINAMALAR

சனி, 10 அக்டோபர், 2015

கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம்: ஜி.கே.மணி பேட்டி

புதுக்கோட்டைக்கு வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக சார்பில் கலந்துகொண்டேன். அவர் என்னுடன் சட்டமன்றத்தில் ஒன்றாக இருந்தவர், நல்ல மனிதர். கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். 

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரினை சூட்ட வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அன்புமணிராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல மண்டலங்களில் பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது வரும் 11ம் தேதி திருநெல்வேலியில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாமக திட்டங்களை வகுத்துள்ளது. மதுவிற்கு எதிராக பல போராட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயிரங்களில் நடப்பது லஞ்சம், லட்சம் கோடிகளில் நடப்பது தான் ஊழல். பாமக தலைமையில் மாற்று அணி தேர்தல் நேரத்தில் அமையும். பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது, லஞ்சம் ஊழல் ஒழிக்க சேவை உரிமை சட்டம், லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும், கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பிற்கு படித்த இளைஞர்கள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 

2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிவிட்டது. 2011ம் ஆண்டு பொன்னி அரிசி 35 ரூபாய இருந்தது தற்போது 55க்கு விற்கப்படுகிறது. 72 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது 155 ரூபாய்க்கு ஏறிவிட்டது. இந்த அதிமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் 100 அல்ல 200 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. பதுக்கல், ஆன்லைன் வர்த்தகமும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி தான் அவசியம் தேவை. எனவே மத்திய அரசு கல்விக்காக நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்களின் இறுதி புகழிடமாக நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்ற கண்ணியத்தையும், புகழினை நீதிபதிகள், வக்கீல்கள் காக்க வேண்டும். 

சட்டமன்ற தேர்தலில் பாமக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவிப்பது கட்சியின் உரிமை. விஷ்ணுபிரியா கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே கருத்து சொல்ல இயலாது. பாமக தொண்டர்கள் எங்களுக்கு தெரியாமல் மது குடிப்பதை தடுக்க இயலாது. ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரும் மது குடிக்க கூடாது என்று கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். 

மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, புறக்கணிக்கப்படுகிறது. அதிக வேலைவாய்ப்புகள் மத்திய அரசு பணியில் தான் உள்ளது. எனவே தமிழகத்தில் மத்திய அரசு பணிக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். இதேபோல் மற்ற அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மாநிலங்களில் மத்திய அரசு பணி வழங்கிட வேண்டும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. இதில் மத்திய அரசும் பாராமுகமாக உள்ளது. தமிழக மக்கள் 80 சதவீதம் பேர் காவிரி குடிநீரை நம்பி உள்ளனர். அனைத்து தமிழக கட்சிகளுக்கு இதில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் ஜேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நியாயமானது தான். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அன்புமணிராமதாஸ் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், வணிகர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் கருத்துகேட்புக்கு சந்திக்க உள்ளார். இந்த கருத்து கேட்புக்கு பின் பாமக மக்கள் தேர்தல் அறிக்கையாக 2016 ஜனவரி மாதம் வெளியிடப்படும். பல கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்ததற்காக பாமக மக்களிடம் மன்னிப்பு கேட்டது. இதேபோல் மற்ற கட்சிகள் மன்னிப்பு கேட்டது உண்டா என்றார்.

இந்த பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, அருள்மணி, மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பகத்சிங்

News Source : நக்கீரன்

அமைப்புகள்..!

அமைப்புகள்..!
ஆண்டாண்டு காலமாய் அமைப்புகள் கூட வேண்டும், தலைவர்கள் சேர வேண்டும் என்று த‌ம்முடைய கடமையில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முத்தரையரும் முயற்சிப்பது வழக்கமான நிகழ்வுதான், பல நேரங்களில் அது சாத்தியமானதுதானா..? என்று நாமும் குழம்பிபோனதுண்டு ஆனாலும் வெறுமனே ஏன் சொல்லிக்கொண்டு மட்டும் இருக்க வேண்டும்..? முயற்சித்துதான் பார்ப்போமே..? என்று எந்த அமைப்பிலும் இல்லாத புதுக்கோட்டை நண்பர் வி.ஆர். ஜெயகுமார் இன்று புதுக்கோட்டை நகரில் இருக்கும் ராயல் பேலஸ் ஹோட்டலில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து முத்தரையர் அமைப்புகளுக்கும் அழைப்புவிடுத்து முதல் முயற்சியாக "முத்தரையர் கூட்டமைப்பாக" அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். அவருக்கு முதலில் நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய கூட்டத்தில்
1. திரு. மரு. பாஸ்கரன்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
2. திரு. வீ. கிருஷ்ணமூர்த்தி
மாநில செயலாளர், இந்திய திராவிட முத்தரையர் கழகம்
3. திரு. ஏ. எழில்ராஜா
தலைவர், முத்தரையர் நல சங்கம்
4. திரு. எம்.வீ.ஆர்.சிரஞ்சீவி
பொதுச்செயலாளர், புரட்சி சிங்கங்கள் அமைப்பு
5. திரு. சி.சரவணன்
நிறுவனர், சோழநாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
6. திரு. ஆர். அன்பழகன்
செயலாளர், சிங்க ராஜாக்கள் கட்சி
மற்றும்
7. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
ஆகிய நான் உட்பட ஏழு அமைப்புகள் கலந்துகொண்டு இன்றைய அரசியல் நிகழ்வுகள், எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தோம், முதல் அமர்வினை புதுக்கோட்டையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம் அடுத்த அமர்வு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைக்க இருக்கிறோம்,
மேலே குறிப்பிட்ட அமைப்புகள் தவிர ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம், இந்த நிகழ்வுக்கு அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு இருந்தது ஆனாலும் இந்த அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டன. ஒருவேளை அழைப்புகொடுக்கப்படாத அமைப்புகள் வேறு ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள், அவர்களையும் அழைப்போம். அழைத்தும் இந்த அமர்வில் கலந்து கொள்ளாத / முடியாத‌ அமைப்புகள் அடுத்த அமர்வில் கலந்துக்கொண்டு உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி..!







மாவீரன் நினைவிடம்

கடந்த அக்டோபர் 07 (07-10-2015)  ல் மாவீரன் நினைவிடத்தில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தோழர்கள்













கம்பன் வீட்டு கட்டுதறி மட்டுமல்ல எங்கள் வளப்பக்குடியார் வீட்டு கட்டுதறியும் கவிபாடும்...!

கம்பன் வீட்டு கட்டுதறி மட்டுமல்ல எங்கள் வளப்பக்குடியார் வீட்டு கட்டுதறியும் கவிபாடும்...!

நேற்று மாவீரன் வெங்கடாசலனாரின் மொத்த வரலாற்றையும் 10 நிமிட பாடலாய் எழுதி, பாடி வெளியிட்டு இருந்தார்கள், இப்பொழுதுதான் அந்த பாடலை கேட்டேன், மனமுருகி பாடியுள்ளார், ஆயிரமாயிரம் பூமாலைகளைவிட இந்த பாமாலையே அந்த மாவீரனுக்கு மனம் நிறைக்கும், ஆத்மாவுக்கும் அமைதி கிடைக்கும், இப்படி அர்த்தங்களோடு அன்னாரின் நினைவிடத்துக்கு வாருங்கள் என்றுதான் உறவுகளை வேண்டுகிறேன்.
இந்த பாடலை பாடி இருக்ககூடிய வளப்பக்குடி வீரசங்கர் அவர்களுக்கும், இதனை ஒலித்தகடாய் வெளியிட துணை நின்ற எங்கள் தில்லங்காடு வீ.எஸ்க்கும், (9715871686) சகோதரர் விஜயராகவனுக்கும் நன்றிகள்...!

இந்த ஒலித்தககடு தேவைபடுவோர் மேலே இருக்கும் எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்

- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்



கடந்த ( 08-10-2015)தினதந்தி தஞ்சை பதிப்பில்... இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க ஆலோசனை கூட்ட செய்தி


முன்னாள் அமைச்சர் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி

முன்னாள் அமைச்சர் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொலை செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சரின் நினைவிடத்தில் கட்சியினர், பொதுமக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இவர் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர், 2010 அக். 7-ம் தேதி சில மர்ம நபர்களால் அவரது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது 5-ம் ஆண்டு நினைவு தினமான புதன்கிழமை ஆயிரக்கணக்கானோர் வடகாடு பெரியகடை வீதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று காகித ஆலைச் சாலை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, துணைச் செயலர் சுப. அருள்மணி, அதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலர் ந. மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் த. செங்கோடன், ஒன்றியக்குழுத் தலைவர் துரை. தனசேகரன், திமுக ஒன்றியச் செயலர் ஞான. இளங்கோவன், ஏ.வி. ராஜபாண்டியன், ந. நவமணி, ந. மோகன், ந. தர்மராஜ், ரவிக்கண்ணன் உள்ளிட்ட அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள், முத்தரையர் சங்கத்தினர் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

News Source : DINAMANI

இடஒதுக்கீட்டில் மாற்றம் வேண்டும்

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவிடத்தில் புதன்கிழமை அவர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு ஜி.கே. மணி அளித்த பேட்டி:
தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது.
அதனால் இந்த முறையை மாற்றி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருக்கும் தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும்.
திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டுமென தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் கொலை செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொலைக்கான உண்மை நிலையையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அதனால், இந்த வழக்கை பாமக ஏற்று நடத்தும்.
முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அன்புமணி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் கருத்துக்கேட்க உள்ளார். அதன்பின்னர், பாமக தேர்தல் அறிக்கை 2016, ஜனவரியில் வெளியிடப்படும் என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் சுப. அருள்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News Source : DINAMANI

வேள் வணிகர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றிய சிறு குறிப்பு

வேள் வணிகர் என்றும், நாட்டுகோட்டை நகரத்தார் என்றும், நானாதேசிக வணிகர் என்றும், ஆயிரத்தைநூற்றுவர் என்றும் அறியப்படும் தமிழர்குடிமரபு நகரத்தார்கள், நிலத்தால் ஒரு காலத்தில் ஒன்றுபட்ட, இன்று நீரிணையால் பிரிக்கப்பட்ட இன்றைய தமிகத்தின் அருகில் இருக்கும், ஈழத்தின் நாக நாட்டில் வாழ்ந்த தமிழ் வணிகர் குடியினர். நாக நாட்டு வணிகர் என்றும், மன்னர் பின்னோர் என்றும் பெருமைகளைத் தங்கள் மரபு வழிப் பண்பாட்டின் விருதுகளாய்க் கொண்ட “நாக நீள் நகரொடு அதனொடு போக நீள் புகழ் மண்ணும் புகார் நகர்......” ( சிலம்பு.. ) என்ற வரிகளைச் சான்றாகக் கொண்டவர்கள். மிகப் பழமையான பண்பாட்டு எச்சங்களைத் தங்கள் வாழ்வியலிலும், சொல் வழக்கிலும் கொண்டிருக்கும் ஒரு இனக்குழுவாக இன்றளவும் தமிழர் பெருமைகளைக் கடைபிடிக்கும் மரபாகவும் இருப்பவர்கள், காலத்தால் மிக முந்தைய கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஈழத்து நாகநாட்டில் வணிகக் குடியாகவும், பொருள் வணிகத்தையும், ஈழத்து மலைப்பகுதிகளின் ரத்தினப் படிவங்களை எடுத்து தெற்காசியா, சீனா முதலிய நாட்டினருடன் வணிகத் தொடர்பும் கொண்டிருந்தனர். இதற்கான தொல்லியல், புவியியல் தரவுகள் மிகத் தெளிவாகவே கிடைத்து வருகின்றன. அதனையும் மீறிய நகரத்தார்களின் சொல் வழக்கு (Anthropology), மரபு வழியில் இன்றுவரை கடைபிடிக்கும் பண்பாட்டுப் பதிவுகளே இவர்களின் தொன்மைக்கும், கிடைத்து வரும் தொல்லியல் – புவியியல் சான்றிற்கும், ஐயமின்றி ஒப்புமை கூறும் தரவுகளாகும்.
நாக நாட்டிலிருந்து சோழர்குடிக்குட்பட்ட தொண்டை மண்டலத்திற்கு குடிபெயர்ந்த காரணமும், பின்னர் புகார் நகர் வந்த காரணமும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால் புகார் நகரம், தங்களின் நெடிய மரபுவழிக் கடல் வாணிபத்திற்கு உகந்ததாக இருப்பதனாலும், தேர்ந்த துறைமுகமாக இருப்பதனாலும் இடம் பெயர்ந்தனர் என்பது உறுதி. கண்ணகி-கோவலன் காலத்திற்குப் பிந்தைய காலங்களிலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வாக்கில்இவர்களின் பாண்டி மண்டல இடப் பெயர்வும் பல காரணங்களைக் கொண்டதாகக் கூறப்படுவதில் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் ராஜேந்திர சோழனது மறைவிற்குப் பின் வந்த சோழர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பல சோழர்குடிகள் குறிப்பாக நகரத்தார்கள், முத்தரையர், தஞ்சை ஆ-நிரைக்கள்வர் ஆகியோர் பாண்டிய நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த வருகைக்குப் பின்னர் பிற் கால பாண்டியர்களின் எழுச்சியும், குலோத்துங்க சோழனின் வீழ்ச்சியும் தொடங்கியது. கம்பர், நாட்டரசன் கோட்டை வந்தடைந்ததும் நகரத்தார் எனும் சோழர்குடி மக்களின் அணுக்கத்தை நாடியதேயாகும். # ( மூன்றாம் இராஜராஜனின் படுதோல்வியும், பின்னர் அமராண்டான் நகரில் {பொன்னமராவதி} இளைப்பாறிய சடையவர்மன் சுந்தர பாண்டியனிடம் கப்பம் கட்டியதோடு சோழர் வரலாறு தேக்கம் காண்கின்றது.)
நகரத்தார்களின் இடப்பெயர்ச்சி பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவும், ஆழிப் பேரலையின் சீற்றம் கண்டும் நிகழ்ந்துள்ளன. ஆகவே தான் தங்களது வள மனைகளை, நீர் பெருக்கால் அழிந்துபடாத கோட்டைகளாகவே அமைத்தனர். வளம் மிக்க குடிமனைகளைக் கொண்டதனால் நகரம் என்ற நகரத்தார்களாகவும், வளம் கொழிக்க சீர்மையுடன் வாழ்ந்த குடிமக்கள் வளவினர் – (வளவு) என்றும் குறிக்கப்பெற்றனர். எத்தனை இடப்பெயர்வுகள் வந்தாலும் தங்கள் மரபு வழிப்பட்ட தமிழர் தாய் நிலப்பகுதிகளிலேயே நடத்தினர். மரபு வழி வந்த வழிபாடுகளையும் விட்டுக் கொடுப்பதில்லாமல், வீடு, வணிகம்,பண்பாடு என அனைத்திலும் தங்களின் தொன்றுதொட்ட மரபினைத் தேக்கி, சடங்குகளாகவும், வாழ்க்கை முறைகளாகவும் கடைபிடிப்பது, எந்த ஒரு நிகழ்வினையும் ஒற்றுமையுடன் சேர்ந்து முடிவெடுப்பது, புதிய கருத்து / மாற்றம் ஆகியவற்றினை நீண்ட ஆய்விற்குட்படுத்தி ஒரு மனதாய் முடிவெடுப்பது என்பவையே இவர்களின் பாரிய வெற்றிக்கும், பண்பாட்டு நெறிக்கும் மன்னர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அறமும்கொண்டிருந்த பெருமைக்குரியவர்களாக வரலாறு இன்று வரை பதிவு செய்கின்றது. பாண்டிய நாட்டின் இடப்பெயர்விற்குப் பின் நகரத்தார்களின் முடிவுகளை, சுண்டைக் காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம், அவர்களின் தொன்றுதொட்ட இனக்குழு முடிவுகள் எடுக்கும் வழக்கத்தையும், எந்த எந்த காலங்களில் என்ன வகையான வணிகம் செய்வதென்பதனையும், கொண்டி விற்கும் தொழில் என்றால் அதில் நியாயமான வட்டி விதிப்பது குறித்தும் பதிவாகி உள்ளன. வேலங்குடிக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், ஏனைய எட்டி (செட்டி) என்று வணிகர்களைக் குறிக்கும் கல்வெட்டு சங்க காலத்திற்கு (இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ) முந்தியதாகவும், அது திருச்சியை அடுத்த புகளூர் கல்வெட்டு சான்று சொல்கின்றது.
நகரத்தார்களில் கடலாடிக் கடல் கடந்து செய்யும் வணிகமும், அதன்பால் ஈட்டிய பொருட்களை வணிகச் சாத்துகள் வைத்து ( குழுக்களாக வண்டிகளில் ஏற்றி ) பாதுகாப்புடன் செய்யப்படும் உள் நாட்டு வணிகம். இவையே முந்நீர் கடத்தல் என்பதாகவும் அதற்கு காவற்படை கொண்டிருக்க அரசுரிமையும் பெற்றனர். வணிகச் சாத்துகளாக வண்டிகளில் செய்யப்படும் வாணிபத்திற்கும் காவற்படை அமைத்துக்கொள்ள உரிமை பெற்றனர். இவைகளை சோழப் பேரரசர்கள் நகரத்தார்களுக்கு வழங்கிய பல கல்வெட்டுகள் சோழ மணடலம் மட்டுமின்றி சங்க இலக்கியங்கள், கடல் கடந்த தெற்காசிய நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகளும் சான்று சொல்கின்றன.
கலம் கொண்டு செய்யும் வணிகர்களை நாயகன் என்றும் தரை வழியாகச் செய்யப்படும் பெரு வணிகத்தை சாத்து-சாத்தான் என்றும் குறித்தனர். இது போன்ற சொல்லாட்சிகளை நகரத்தார் இனக்குழுவினர் சிலபதிகாரம் காலம்தொட்டு இன்றுவரை வழக்கில் கொண்டுள்ளது தெளிவு. மாநாய்கன் மகள் மாணிக்க கண்ணகி, மாசாத்துவன் மகன் கோவலன், கண்ணகி ஆத்தாள் கண்ணாத்தாள், சாத்தப்பன், என்று இன்றும் வழக்கில் இருந்து வருகின்றது.

பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின், அந்நியர் ஆட்சிகாலங்களில் நகரத்தார்களின் காவற்படையினை விஜய நகர அரசர்கள் முடக்கினர். பாண்டியர்கள் அனுமதித்த ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை, பாண்டியர்களுக்காய் மிகப்பெரும் போர் நடத்தியது. அதில் மாலிகபூர் படையுடன் நடந்த உக்கிரப் போரில், நகரத்தார்களின் ஒன்பது கோவில் புள்ளிகளுக்காகவும் வயிரவன் கோவில் நகரத்தார்களால் பரிபாலனம் செய்யப்பட்ட ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை உக்கிரமாய் போர் புரிந்து தோல்வியைத் தழுவியது. வயிரவன் கோவில் முற்றாக அழிந்தது. பின்னர் அந்தக் கோவில் அதே ஊரில் பல காலம் கழித்து புணரமைக்கப்பட்டது. இடிந்த பழைய கோவில் கல்வெட்டுகள் நமக்கு மேற்படி வரலாற்றை தாங்கி நின்றது. இதனைக் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் ஆய்வுகள் வெளிக் கொணர்ந்தன.
பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான அயலார் ஆட்சிக் காலங்களில் நகரத்தார்கள் சைவ மடங்களுடன் இணைந்து தமிழ் கோவில்களைக் காப்பதில் முனைப்பு காட்டினர். தங்கள் குழந்தைகளுக்கு தமிழர் பண்பாடு, சைவாகம நெறி, தமிழ்ப் பெருந்தச்சர்களைக் கொண்டு கோவில்களைப் பராமரிப்பது என்று மிகபெரும் பண்பாட்டு அரண் அமைத்தனர். இதுவே இன்றுவரை தமிழர் பண்பாடு அயலார் தாக்கத்திலிருந்து நமது தனித்துவத்தைக் தற்காத்து நிற்க உதவியது. அதன் தொடர்ச்சியே இன்றைய கல்விக்கொடை, கோவில், குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற தொடர்ச்சியுமாகும்.
வெள்ளையர் ஆட்சியும் நகரத்தார் மீட்சியும்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் தேக்க நிலை கண்ட நகரத்தார்கள் தங்களின் திறமையாலேயே, வெள்ளையனை மாமன்னர் மருதிருவருக்காக, ஒக்கூர் நகரில் படை நடத்திகொடுத்து கடும் போர் புரிய உதவினர். அந்தத் தோல் விக்குப் பின்னரும், வெள்ளையர்கள் நகரத்தார்களின் கடலாடும் திறன் கண்டு தங்களின் ஆளுகைக்குட்பட்ட தெற்காசிய பகுதிகளான பர்மா, மலேயா உள்ளிட்ட நாடுகளுக்கு வழமையான கொண்டி விற்கும் தொழிலான சிறு வணிகக் கடன் முதலீட்டிற்கு இசைவும் ஆதரவும் தந்தனர். மீண்டும் ஏரகத்து முருகன் துணை கொண்டு செட்டிக் கப்பல் நாட்டார், மறவர், பெருந்தச்சர் ஆகியோரின் குழுக்களுடன் வட்டித் தொழில் சிறக்க, முல்லை நிலங்கள் திருத்தி மருத நிலம் சமைத்து, தொழில் வளம் பெருக்கி, தங்களின் குடிவகையான கோட்டைகள் கட்டி வாழ்ந்தனர். சென்ற இடங்களில் வெள்ளையர்களின் அனுமதியும், அதனைத் தொடர்ந்து கி.பி 1826 ஆம் ஆண்டு தொடங்கியதும் இன்றளவும் லண்டன் ஆவணக் காப்பகம் சொல்லும் உண்மை.
அதுபோலவே நாக நாட்டு தொடர்பு என்பதை நமது பண்பாட்டின் தொடர்ச்சியாக பிள்ளையார் நோன்பு என்ற வழக்கில் இன்றும் கைவிடாமல் எடுத்து வருவதும், அதே போல் ஈழத்து மக்கள் இன்றும் இந்த பண்பாட்டு நிகழ்வினைத் தொடர்வதும் நமது வழித்தடத்தின் சான்றுகளாகும்.
சான்று நூற் பட்டியல் :
1. சோமலே – செட்டிநாடும் செந்தமிழும்
2. தேவகோட்டை சின்நயந் செட்டியார் எழுதிய நகரத்தார் வரலாறு
3. டாக்டர் தமிழண்ணல் எழுதிய பத்துப்பாட்டு ஆய்வுரைகள்
4. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுத் தொகுதி
5. டாக்டர் மா.ராசமாணிக்கனார் ஆய்வுப் பேரவை புதுகோட்டை கல்வெட்டுகள்
6. ஆய்வாளர்கள் நடன காசிநாதன், ஐராவதம் மகாதேவன்.7. கம்பனடிப்பொடி சா.கணேசன் வயிரவன் கோவில் கல்வெட்டுகள்8. காரைக்குடி சேவு.கதிர்.இராம.நாகப்பன் அவர்களின் நாகநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்.
9. பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் எழுதிய சுண்டைக்காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம்.
10. வெற்றியூர் அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பண்பாடு.
11. Ancient Jaffna – By C.RASA NAYAGAM ( 1910. A.D PUBLISHED).
12. நகரத்தார் மரபும் பண்பாடும் – மா.சந்திரமூர்த்தி.
குறிப்பு:- நாக நாடும் அதனைத் தொடர்ந்த நகரத்தார்களின் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகளும், தரவுகளும் காரைக்குடி அண்ணன், சேவு.கதிர்.இராம. நாகப்பண்ணன் அவர்களின் தரவுகளையும், ஆலோசனையினையும் ஏற்று, அனுமானங்களற்ற ஒரு ஆய்வாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் அளவு கருதி உள்ளடக்கம் பலவற்றைத் தொடாமல் விடுபட்டுள்ளது. நன்றி.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன். நாள் : 25-09-2015

சனி, 3 அக்டோபர், 2015

காசு கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குது

அவிநாசி:""கருவலூர் மின்வாரிய அலுவலகத்தில், காசு கொடுத்தால் மட்டுமே, வேலை நடக்கிறது; லஞ்சம் அதிகரித்து விட்டது,'' என, அவிநாசி ஒன்றிய கூட்டத்தில், கவுன்சிலர் கணேசன் குற்றஞ்சாட்டினார்.அவிநாசி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது; ஒன்றிய தலைவி பத்மநந்தினி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் மணிகண்டன், துணை தலைவி சிவகாமி முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் வரவேற்றார்.
கூட்ட விவாதம்:சக்திவேல் (சுயே.,): வளர்ச்சி பணிகள் பாக்கியுள்ளன. தாளக்கரை லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும். லூர்துபுரத்தில், "சம்ப்' கட்ட, குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
ஆணையாளர்: அம்மா சிமென்ட் கிடைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது; வந்ததும் பணிகள் துவக்கப்படும்.
மகேஸ்வரி (தே.மு.தி.க.,): தத்தனூர் ஊராட்சியில், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. கொசு மருந்து தெளித்து, புகை அடிக்க வேண்டும்.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): காசிகவுண்டன்புதூர், ஏ.டி., காலனி, கொடிகாத்த குமரன் நகர், மங்கலம் ரோட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல, "டிஸ்போஸல் பாயின்ட்' இல்லை. சின்ன கருணைபாளையத்தில், குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. மங்கலம் ரோடு பிரிவில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் ரோடு, மோசமாக உள்ளது.
கணேசன் (கொ.ம.தே.க.,): கருவலூர் மின் வாரிய அலுவலகத்தில், எதற்கொடுத்தாலும் லஞ்சம்
கேட்கின்றனர். மின் கணக்கீடு அட்டைக்கு, 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர். எந்த வேலையாக இருந்தாலும், காசு கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கிறது. மனப்பாளையம் துவக்கப்பள்ளியில் அங்கன்வாடி மையம், ஏ.டி., காலனியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் என, பலமுறை கூறியும், ஒன்றும் நடக்கவில்லை. கருவலூரில் நெடுஞ்சாலைத்துறையினர் கட்டிய சாக்கடை கால்வாயால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயராகவன் (இந்திய கம்யூ.,): எளச்சிபாளையத்தில், பொதுக்கழிப்பிடம் இல்லாததால், பெண்கள் கஷ்டப்படுகின்றனர். முத்தரையர் காலனியில், மதிற்சுவர் கட்ட, ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விட்டு, 21 மாதங்களாகிறது; இன்னும் வேலை நடக்கவில்லை.
ஆணையாளர்: போதிய ஆட்கள் வசதி இல்லாததால், பணிகளை விரைவாக செய்ய முடிவதில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

News Source : DINAMALAR

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்



இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (03/10/2015) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் திரு.இ.இளவழகன் (துணைச்செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார், திரு. மு.காந்தி, (செயலாளர்), முன்னிலை வகித்தார்
திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) தலைமை வகித்தார், கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் அறிமுகத்திற்க்கு பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
1. 2016 சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் (திமுக, அதிமுக உட்பட) பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு முத்தரையரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின்" சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கி வெற்றிக்கு பாடுபடுவது.
2. பாமக நிறுவனர் மருத்துவர். இராமதாஸ் சமீபத்தில் மத்திய. மாநில அரசுகளை வலியுறுத்திய திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை உடனே சூட்டிட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது, இந்த கோரிக்கையினை விடுத்த பாமக நிறுவனருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
3. முன்னாள் அமைச்சர் "ஆலங்குடி வெங்கடாசலம்” படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியும் உண்மை குற்றவாளியை கைது செய்யவில்லை ஆகவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அன்னாரின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினமான அக்டோபர் 7 ந்தேதியை "சமூக எழுச்சி நாளாக" கடைபிடிப்பது.
4. முத்தரையர் சமூகத்திற்க்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
5. காவேரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநிலத்திற்க்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அதேபோல காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதிக்கும் மத்திய அரசின் போக்கிற்க்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
6. தொடந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவதை தடுத்து நிறுத்த உரிய‌ நடவடிக்கையினை இந்திய மத்திய அரசு எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
7. பட்டுக்கோட்டை அரசு பொதுமருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவகல்லூரியாக்க வேண்டும், போதிய மருத்துவர்களை நியமித்து மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட இந்த கூட்டம் வலியுறுத்துகிறது, இந்த கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தினை இயக்கம் மிக விரைவில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
இந்த கூட்டத்தில் திரு.பொன்னை அன்பு, திரு, இராஜ்குமார், திரு. கரிசை தமிழ், திரு. திரு.வருண்ராஜ், திரு. ரங்கராஜ், திரு. மகேந்திரன், திரு.அதிபன், திரு. சுரேந்திரன், திரு. அன்பரசன், திரு. தீபக், திரு. கேசவன், திரு.விஜயகுமார், திரு.மகேந்திரன், திரு.அருண், திரு.கார்த்திக், திரு. தொண்டையக்காடு செந்தில், திரு. சதிஸ், திரு. பாஸ்கர், திரு. அஜித், திரு.மணிவண்ணன், திரு.இராஜபாண்டியன்,திரு.முத்துகுமார், திரு.தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் திரு.மேனிராஜா (பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்) நன்றி கூறினார்.