Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

திங்கள், 30 நவம்பர், 2015

கேள்விகள்....???

கேள்விகள்....???

மிக சமீபத்திய அரசியல் செயல்பாடுகள், நிலைப்பாடுகள், போராட்டங்கள், தலைவர்கள் பற்றிய சந்தேகங்கள், நீண்ட நாள் மனதில் இருக்கும் சந்தேகங்கள், என்று ஒவ்வொரு முத்தரையர் மனதிலும் நிறைய கேள்விகள் தினமும் உதித்துக்கொண்டு  இருப்பதை சமீபத்திய சமூக வலைத்தளப் பதிவுகளை காணும்போது தெரிகிறது. அத்தகைய கேள்விகள் பெரும்பாலும் பிரிவினைக்கும், தவறான புரிதலுக்கும் வழிவகுக்கிறது அதனை தவிர்க்க ஒரு முத்தரையனாக எனக்கும் கடமை இருக்கிறது.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் தொடர்பற்றவர்கள் பதிலளிப்பதனால் சண்டை சச்சரவுகள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது, இதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள நினைக்கிறேன்.

யாரை நோக்கி கேள்விகள் பிறக்கின்றனவோ, அவர்களிடமே தெளிவு பெற்றால் என்ன..?  யாரைக்குறித்து கேள்வி எழுப்பப்படுகிறதோ அவர்களே விளக்கம் சொன்னால் தவறான புரிதல்கள், விஷம பிரச்சாரங்கள், புரளிகளை களைந்து ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

இதில் அய்யா ஆர்.வி, திரு. கே.கே.செல்வகுமார், திரு. அருணாசலம், திரு. சரவணன், திரு. எஸ்.எம்.மூர்த்தி, திரு. வெள்ளைத்துரை, திரு.மாறன் உட்பட அனைத்து தலைவர்களிடமும் (என்னிடம் எதுவும் கேட்க விரும்பினால் அதையும் கேளுங்கள் :p ) நீங்கள் கேள்விகளை கேளுங்கள் அவற்றை தொகுத்து அவர்களிடம் கொடுத்து பதிலினை பெற முயற்சிப்போம்.

தெளிவு பெற முயற்சிப்போம்.

கீழ்கண்ட விதிகளை பின்பற்றி கேள்விகளை கேளுங்கள்:

• எந்த தலைவரிடம் / அமைப்பிடம் கேள்வி கேட்க விரும்புகிறீர்கள்..?
• கேள்வி என்ன..?
• அதிகபட்சமாக ஒருவர் 5 கேள்விகளை முன் வையுங்கள்
• அதிகமாக ஆக்கப்பூர்வமான கேள்விகளை முன் வையுங்கள்
• நாகரீகமான / தனி நபர் விமர்சனமற்ற கேள்விகளை முன் வையுங்கள்
• தெளிவு பெற விரும்பும் கேள்விகளை மட்டும்முன் வையுங்கள்

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியமைக்க உதவுங்கள்

அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வியாழன், 26 நவம்பர், 2015

‘அமைச்சர் காமராஜின் உறவினர்’ அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

‘அமைச்சர் காமராஜின் உறவினர்’ அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே அதிமுக பிரமுகரின் தம்பி சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் அவரது சடலம் கிடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாட்டை சேர்ந்தவர் மதன்(44). இவரது அண்ணன் ஜெகன் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், தொகுதி அதிமுக இணை செயலாளராகவும் உள்ளார். இவர்கள் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.நேற்று இரவு மதன் முத்துப்பேட்டை கடைத்தெருவுக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சித்தேரி குளத்தை தாண்டி புனித அந்தோணியார் கோயில் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.மதன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். காரில் இருந்த இறங்கிய கும்பல் அவரை விரட்டியது. மதன் பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். மர்ம கும்பல் அவரை விரட்டி சென்றது.

அதன் பின்னர் அவரது கதி என்ன ஆனது என தெரியவில்லை. தகவலறிந்த அவரது உறவினர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.உடனடியாக மதனை கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்த தஞ்சை டிஐஜி செந்தில்குமார், நாகை எஸ்பி அபிநவ்குமார், ஏடிஎஸ்பிக்கள் தஞ்சை ராஜேந்திரன், திருவாரூர் முத்தரசு மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் முத்துப்பேட்டையில் குவிந்தனர்.தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் பல இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் மதனை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இன்று அதிகாலை அவரது பைக் அனாதையாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்குள் சென்று பார்த்தபோது, மதன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

அவரது தலை, கழுத்து, கால், கை உள்பட உடலின் பல இடங்களில் வெட்டு விழுந்து இருந்தது. தலையே இல்லாத அளவுக்கு சரமாரியாக வெட்டியுள்ளனர். காரில் இருந்து இறங்கிய கும்பலிடம் இருந்து தப்பிக்க மதன் தேவாலயத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார்.இந்நிலையில் சேற்றில் சிக்கி கொண்ட அவரை கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்த வீரபாண்டியன்(35) என்பவர் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது வெட்டி கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில் மதன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் முன் ஜாமீன் பெற்று வெளியில் இருந்து வந்தார். எனவே வீரபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக மதன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதனின் அண்ணன் ஜெகன் முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகார் மனுவில், கோவிலூரை சேர்ந்த ராஜேஷ், சரவணன், வினோத், இளஙகோவன், மந்திரமூர்த்தி, அய்யப்பன், செல்வராஜ், உப்பூரை சேர்ந்த சுதாகர், ஆலங்காட்டை சேர்ந்த மனோகர், மருதங்காவெளியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் 2, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முத்துப்பேட்டையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


News Source : http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=84841

புதன், 25 நவம்பர், 2015

வரலாறு சொல்லும் 'வரலாறு'


இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கு முதன்மைத் தரவாக விளங்கும் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் படியெடுத்துத் தொகுத்து ஆவணப்படுத்தும் பணி அரசாங்கத்துக்கு முக்கியமானதாகப் படவில்லை. அரசாங்கத்தின் தொல்லியல் துறையைவிட இதில் ஆர்வமுள்ள தனி நபர்களின் பங்களிப்பே அதிகம். அதற்கு சாட்சியாக இருப்பது 'வரலாறு' என்னும் இதழ். 

1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த இதழ் இப்போது வெள்ளிவிழா கண்டு 25 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் ஆவணம் இதழ் துவக்கப்பட்டு இரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகு அதன் ஆசிரியர் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக இந்த வரலாறு இதழ் துவக்கப்பட்டதென திரு கலைக்கோவன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்தான் இதன் பொறுப்பாசிரியர். திருமதி நளினி, திருமதி அகிலா ஆகியோர் இணையாசிரியராகவும், துணையாசிரியராகவும் இருக்கின்றனர். இந்த மூவர் குழுவின் பணி மலைக்க வைக்கிறது. 

வரலாறு 25 ஆவது இதழில் 13 புதிய கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முத்தரையர் காவல் உரிமைச் செப்பேட்டில் இருக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது நீண்டதொரு வரலாற்றை சிறு கதையின் சுவாரசியத்தோடு கூறுகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட கோயில் கட்டடக் கலை என்ற தலைப்பில் மு.நளினி ஆற்றிய சொற்பொழிவு நிறைய தகவல்களைக் கூறுகிறது.  குடைவரை, கற்றளி,மாடக்கோயில் என மூன்றாக வகைப்படுத்திக்கொண்டு அம்மாவட்டத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். திருச்சிராப்பள்ளியில் இரண்டு, வெள்ளாறையில் இரண்டு, பைஞ்ஞீலியில் ஒன்று என இந்த மாவட்டத்தில் ஐந்து குடைவரைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். கிபி ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்தக் குடைவரைகளை நாமும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்தச் சொற்பொழிவு. 

இந்த இதழில் திரு கலைக்கோவனின் நாட்குறிப்புகளின் தொகுப்பு போன்ற ஒரு கட்டுரை உள்ளது. அது அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது இதழின் நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்து திசைதிருப்புவதாக உள்ளது. 

கல்வெட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த இதழை அறிவார்கள். மற்றவர்களும்கூட இதைப் படித்துப் பயனுறவேண்டும். 

திங்கள், 16 நவம்பர், 2015

ஜூனியர் விகடன்


நக்கீரன்



அரசியல் கடிவாளம்




துண்டு பிரசுரம்




நம்ம அடையாளம்






கலைஞர் கருணா நிதி அறிக்கை

கேள்வி :- புதுக்கோட்டையில் அமைச்சர் ஒருவர் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் வகையில் கருத்துத் தெரிவித்து, அதன் விளைவாக போராட்டம் எல்லாம் நடைபெற்றிருக்கிறதே?

ஏடுகளில் எல்லாம் அந்தச் செய்தி பெரிதாக வந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. தலைமை, குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவு படுத்திப் பேசிய அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், போராடிய தரப்பினரை கைது செய்த தோடு, அவர்களுக்குத் தலைமை வகித்த ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளது. இதிலிருந்து ஒரு தரப்பினரை தரக் குறைவாகப் பேசிய அந்த அமைச்சருக்கு ஆளுங் கட்சியும், இந்த அரசும் ஆதரவு தெரிவிக்கிறதோ என்ற சந்தேகம்தான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் விவகாரம்... அதிமுகவுக்கு இனி முத்தரையர் ஓட்டு கிடையாது... தோற்கடிக்கப் போவதாக தீர்மானம்!

புதுக்கோட்டை: முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததால் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியை தோற்கடிப்போம் எனவும் முத்தரையர் சமூகத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய தலைவர் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கடந்த மாதம் 25-ந் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். தங்களது பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கெங்கையம்மாளை ஜாதி பெயர் சொல்லி விஜயபாஸ்கர் திட்டியதாக முத்தரையர் சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி போராட்டமும் நடத்தினர். ஆனால் கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோர் அ.தி.மு.கவைவிட்டே நீக்கப்பட்டனர். இது அச்சமூகத்தினரிடத்தில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் முத்தரையர் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் நெருக்கடி கொடுத்ததால் அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மறமடக்கி என்ற இடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: - கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது மற்றும் அனுப்புவது. - சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத மற்றும் நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுநரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது. - பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும். - நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : ONE INDIA

அதிமுகவை தோற்கடிப்போம்: அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்


புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் நடைபெறுவதாக இருந்த அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் காவல்துறை மற்றும் ஆளும்கட்சியின் நெருக்கடி காரணமாக 15.11.2015 ஞாயிற்றுக்கிழமை மறமடக்கியில் நடந்தது, 
 
"அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு" நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன், முத்தரையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், திருக்கட்டளை பாலா, இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சஞ்சய்காந்தி மற்றும் பல்வேறு இயக்கங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை திருவரங்குளத்தில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான கீழ்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்வதாக கூட்ட தீர்மானம் நிறைவேற்றியது. கூடுதலாக விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும், முத்தரையர்களை வேட்பாளராக அறிவித்தாலும் அதிமுகவை தோற்கடிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1. கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது / அனுப்புவது.

2. சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத / நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுனரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுவது. 

3. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும். 

4. பேராட்டத்தின் கோரிக்கையில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பகத்சிங்

News Source : நக்கீரன்

காவல்துறை தடையை மீறி முத்தரையர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்




















இன்று 15.11.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் காவல்துறை மற்றும் ஆளும்கட்சியின் நெருக்கடி காரணமாக மறமடக்கியில் நடந்தது, "அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு" நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. மரு.பாஸ்கரன், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்கம் அம்பலக்காரர் பேரவை திரு. ராசிராம், திரு. அண்ணா.பரமசிவம், அரசன் சின்டிகேட் டிரஸ்ட் இளமான் செந்தில், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க மாநில துணைச்செயலாளர்கள் திரு. இளவழகன், திரு. ராஜ்குமார், திரு. கண்ணன் நாதன், முத்தரையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜெயக்குமார், திருக்கட்டளை பாலா, மற்றும் முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் மறுமலர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறமடக்கி கிராமத்தினரும், திரு, துரை அவர்களும் செய்திருந்தனர்

ஏற்கனவே புதுக்கோட்டை திருவரங்குளத்தில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான கீழ்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்வதாக கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியது.

கூடுதலாக விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும், முத்தரையர்களை வேட்பாளராக அறிவித்தாலும் அதிமுகவை தோற்கடிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1. கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது / அனுப்புவது.

2. சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத / நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுனரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுவது.

3. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும்.

4. பேராட்டத்தின் கோரிக்கையில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி ஆலோசனைகூட்டம் சிறப்பாக நடந்தேறியது

இடம் : மறமடக்கி, புதுக்கோட்டை மாவட்டம்

வியாழன், 12 நவம்பர், 2015

அதிமுக உறுப்பினர் அட்டைகளை திருப்பி கொடுக்க முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம

அதிமுக உறுப்பினர் அட்டைகளை திருப்பி கொடுக்க முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் கறம்பக்குடி ஒன்றியக்குழுத் தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கம் மற்றும் கவுன்சிலர்களிடம் அவர்கள் சார்ந்துள்ள முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசியதாக எழந்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரி முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 5ந் தேதி புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்பாட்டம் செய்தும் கட்சி அலுவலகம் மீது கல்வீசியும் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
அன்றே கட்சியின் விசாரனைக்குழு அமைச்சர் பூனாட்சி தலைமையில் அமைக்கப்பட்டு விசாரனை நடந்த நிலையில் நேற்று புதன்கிழமை அமைச்சர் மீது புகார் கறிய கெங்கையம்மாள், சொக்கலிங்கம் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியானது.   
இதனால் கொதிப்படைந்த அச்சமூக சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவரங்குளத்தில் கூட்டமைப்பு தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இளம் சிங்கங்களின் எழச்சி இயக்க தலைவர் சஞ்சய்காந்தி முன்னிலையில் நடந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது.
ஜாதி பெயரை இழிவாக பேசய அமைச்சர் மீது நடவடிக்கை கோரி ஆளுநரை சந்தித்த மனு கொடுப்பது. அடுத்த கட்ட போராட்டம் பற்றிய விரிவான ஆலோசனைக் கூட்டத்தை கொத்தமங்கலத்தில் நடத்துவது. அதிமுகவில் இருக்கும் முத்தரையர் இன உறுப்பினர்களை அக்கட்சியின் உறுப்பினர் அட்டைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இரா.பகத்சிங்
News source : http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=154795

அவசர ஆலோசனை கூட்ட

இன்று 12.11.2015 அன்று புதுக்கோட்டை திருவரங்குளம் முத்தரையர் திருமண மண்டபத்தில் நடந்த "அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு" அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. மரு.பாஸ்கரன், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திரு. புஷ்பராஜ், சிங்கராஜாக்கள் கட்சியின் செயலாளர் திரு. அன்பழகன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திரு.பாண்டி, முத்தரையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜெயக்குமார், திருக்கட்டளை பாலா, மற்றும் முத்தரையர் முன்னேற்ற சங்கம், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் மறுமலர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1. கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் 5 லட்சம் பேரின் உறுப்பினர் அட்டையை தலைமைக்கு அனுப்ப பிரச்சார இயக்கம் நடத்துவது / அனுப்புவது.

2. சாதி, மத, இன, மொழி துவேசத்தில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் "சாதி துவேசத்தில்" ஈடுவடுவதை கண்டிக்காத / நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இழந்து ஆளுனரிடம் புகார் கொடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோருவது, தவறும் பட்சத்தில் சென்னையில் 50 ஆயிரம் முத்தரையரை திரட்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடுவது.

3. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் சிலை அமைத்துக்கொடுத்து 20 ஆண்டுகளாக முத்தரையர் மக்களை வெறும் ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வரும் அதிமுக உடனடியாக பேரரசர் சிலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், சிலையை எங்கள் சமூகமே அமைத்துக்கொள்ளும்.

4. மேலும் விரிவான ஒரு ஆலோசனை கூட்டம் அனைத்து தொகுதி முத்தரையர் அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து கொத்தமங்கலத்தில் 15/11/2015 அன்று நடத்துவது

5. பேராட்டத்தின் கோரிக்கையில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்படும் முத்தரையர் சமூகத்த்தின் 29 உட்பிரிவுகளையும் இணைத்து 15% தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரபடுத்துவது

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதன், 11 நவம்பர், 2015

“விஜயபாஸ்கரை வீழ்த்தியே தீருவோம்”

அமைச்சருக்கு எதிராகக் களம் இறங்கும் சமூகத்தினர்
‘‘தீபாவளி பட்டாசு வாங்க இரண்டு பேர் கடைக்குப் போறாங்க. அங்கேயிருந்த பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி ராக்கெட். விலை, 176. ‘இது எப்படி வெடிக்கும்?’னு கேட்டாங்க. ‘இது கூட்டு ராக்கெட். இத இங்கே பத்த வெச்சா.. ஜோடியா பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்!’ என சொன்னார் கடைக்காரர். வேற கடைக்குப் போறாங்க. அந்தக் கடைக்குப் பேரு கோயம்பேடு பயர் ஒர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார்’’ - சட்டசபையில் விஜயபாஸ்கர் சொன்ன கதை இது. கருணாநிதியைத் ‘தள்ளு வண்டி’ என்றும், விஜயகாந்தை ‘தண்ணியிலே இருப்பவர்’ என்றெல்லாம் விஜயபாஸ்கர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தது. ஆனால், அதே பேச்சால் ‘மாண்புமிகு’வை இழந்துவிடுவார் போல. ‘எங்கள் சமூகத்தினரை இழிவாகப் பேசினார்’ என அவருடைய அலுவலகத்தை முற்றுக்கையிட்டு, கிடுகிடுக்க செய்திருக்கிறார்கள் முத்தரையர் சமூகத்தினர்.
‘முத்தரையர் சமூகத்தை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடு’ என திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன முத்தரையர் அமைப்புகள். விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கார்டனுக்கு அனுப்பப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து திரண்டு வந்திருந்த முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என எச்சரித்தது போலீஸ். இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் முற்ற, ஒரு கட்டத்தில் அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பினர்கள் முத்தரையர்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடியில் முடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எறியத் தொடங்கினர்கள். அ.தி.மு.க அலுவலகத்தையும் கற்களை வீசி சேதப்படுத்தினர். போலீஸ் தடியடி நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தது. மோதல் சம்பவம் காட்டுத்தீயாக மாவட்டம் முழுவதும் பரவியது. புதுக்கோட்டையின் பல இடங்களில் முத்தரையர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
பிரச்னைக்குக் காரணம் என்ன?
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாளும் அவரது கணவர் சொக்கலிங்கமும் விவரிக்கிறார்கள். ‘‘அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் தரக்குறைவாக, கண்ணியமற்ற முறையில் எங்களை நடத்தினார். எங்கள் ஊருக்குக் கல்யாண மண்டபம் கட்டித் தருவது, நலத்திட்டங்கள் வழங்குவது குறித்த கோரிக்கைகளோடு கடந்த வாரம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு ஆறு கவுன்சிலர்கள் உட்பட சிலருடன் போனோம்.
ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டு, என்ன நினைத்தாரோ, எல்லோர் முன்னிலையில் ‘நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கூட நாலுபேர் சேர்ந்து வர்றாங்க? கூட்டம் சேர்த்துக்கிட்டு இருக்கியா?’ ’’ என்றவர் ‘‘சாதி பெயரை சொல்லி ‘எல்லாம் ஒன்றுகூடி என்ன எதிர்க்க பார்க்குறீங்களா? ஏற்கெனவே என்னை திருச்சியில் எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். உன்னை எல்லாம் ஒரு நிமிடத்தில் காணாமல் செய்துவிடுவேன். கட்சியைவிட்டே உன்னைத் தூக்கிவிடுவேன். அரைமணி நேரத்தில் அட்ரஸ் இல்லாமல் செய்துவிடுவேன். அன்னவாசல், கொத்தமங்கலம், அறந்தாங்கி போன்ற இடங்களில் கூட்டம் போட்டது எல்லாம் எனக்குத் தெரியாது என்று பார்த்தியா? நீங்க என்ன கூட்டம் போட்டாலும் என்னை அசைக்க முடியாது’ என்றார்.
அப்படி கூட்டம் எல்லாம் போடவில்லை. சமுதாயக் கூட்டங்கள்தான் போட்டோம் என்றோம். ‘என் முன்னாடியே நின்னு பேசிக்கிட்டு இருக்கியா? போய்யா இந்த இடத்தைவிட்டு’ என்று அசிங்கமாகத் திட்டினார். அதனால் அமைதியாக வந்துவிட்டோம்.’’ என்றார்கள்.
இந்த சம்பவம்தான் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டதாம். அதுதான் போராட்டம், தடியடி வரை வந்து நின்றிருக்கிறது. அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘விஜயபாஸ்கர் இப்படி பேசுவதை வழக்கமாகக் வைத்திருக்கிறார். அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருப்பதால் பலரும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். கட்சியில் முத்தரையர் சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்காமல் இருந்தது முணுமுணுப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர், எம்.பி ஒருவர் ஆகியோர் இதை கையில் எடுத்திருக்கின்றனர். விஜயபாஸ்கரை வீழ்த்தியே  தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்” என்றனர்.
போராட்டத்தை முன்நின்று நடத்திய செல்வக்குமார், ‘‘அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் முக்குலத்தோர் சமூக மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றன. அ.தி.மு.க-வில் அதிக அளவில் முக்குலத்தோர் மாவட்டச் செயலாளர்களாக, மந்திரிகளாக இருந்து வருகின்றனர். இதனால் பிற சமூக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் சம வாய்ப்புகள் தரவேண்டும். எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை இல்லையென்றால் அடுத்த கட்டமாக களத்தில் இறங்குவோம்” என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன சொல்கிறார்? ‘‘சாதியைச் சொல்லி திட்டியதாகப் பிரச்னை செய்கிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. அன்று என்னுடன் தாசில்தார், இணை இயக்குநர், விவசாயத் துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள். நான் தவறாகப் பேசவில்லை என்பதற்கு அவர்களே சாட்சி’’ என்றார்.
- சண்.சரவணக்குமார்

News Source : விகடன்

சனி, 7 நவம்பர், 2015

Tamilaga Arasiyal

சஞ்சய்காந்தி அம்பலக்காரர் கருத்து போராட்டம் குறித்து...





முதல்முறையாக முத்தரையர் குறித்த விவாத நிகழ்ச்சி தொலைக்காட்சியில்




நேற்று (06.11.2015) இரவு 9:00 மணிக்கு



முத்தரையர் சமூகத்தை இழிவுபடுத்திய அமைச்சர், சமூக அமைதியை சீர்குலைக்கிறதா அதிமுக ? விவாதம்



 "அச்சமில்லை" நிகழ்ச்சி





அதில் எனக்கும் வாய்பளித்த மக்கள் தொலைக்காட்சிக்கு மற்றும் நீதியின் குரல் பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி...! :)

வெள்ளி, 6 நவம்பர், 2015

புதுக்கோட்டை போராட்ட காட்சிகள் (புகைப்பட தொகுப்பு)

புதுக்கோட்டை போராட்ட காட்சிகள் (புகைப்பட தொகுப்பு)