Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 27 செப்டம்பர், 2017

இது இல்லைனா தஞ்சை பெரிய கோயிலே இல்லை........

இது இல்லைனா தஞ்சை பெரிய கோயிலே இல்லை........

பல்லவர்களின் குடையின் கீழ் நார்த்தமலையை ஆட்சி செய்துவந்த முத்தரையர் மன்னரான சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழனால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

-------------------------------------------------------------

ஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று புதிர்போடும் கட்டிடங்களை பாறைகளை கொண்டு எழுப்பியிருக்கின்றனர்.
உலகமே தமிழர் புகழை பேசிக்கொண்டிருக்கும்போதும், இந்திய அரசு கீழடி போன்ற தமிழர் வரலாறை உலகுக்கு வெளிக்கொண்டு வர மௌனித்துள்ளதை கண்டு தமிழர்கள் பெரும்பாலும் கவலை கொள்கின்றனர். எனினும் தமிழர் பெருமை அடக்கமுடியாத ஆற்றலைப் போல பிளந்து கொண்டு வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.அதில் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோயிலின் அட்டகாசமான அற்புத கட்டிடக்கலை.
உலகின் பல அறிவியலாளர்களே வாயைப் பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்து செல்கின்றனர். ஆனால் இது மட்டும் நடக்காமலிருந்திருந்தால் இப்படி ஒரு அதிசயம் உலகில் இல்லாமலே போயிருக்கும். வாருங்கள் அந்த அதிசயம் எது என்று பார்க்கலாம்.

தெரியுமா உங்களுக்கு?

எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம் அப்படி தமிழர் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சம் என்று சொல்லப்படும் தஞ்சை பெரிய கோயிலை கட்ட பயன்படுத்திய பாறைகளை எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?.

அதிசய மலை

அந்த பாறைகள் வெட்டியெடுக்கப்பட்ட மலை மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று இந்த கட்டிடக்கலை அதிசயமே இல்லாமல் இருந்திருக்கும். ஏன் வேறு மலைகளிலிருந்து வெட்டி எடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுதான் இந்த நார்த்தாமலை பாறைகளின் அதிசயம்.

நார்த்தாமலை


தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 69கி.மீ தொலைவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும்நார்த்தாமலையில் இருந்து தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கான கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

எகிப்தில் பிரமிடு கட்டிய முறை

எகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு தேவையான பல நூறு டன் எடையுள்ள கற்களை நைல் நதியில் கொண்டுவந்தார்களாம். அது இங்கே சாத்தியமில்லை என்னும்போது எப்படி மிகப்பெரிய பாறைகளை இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருப்பார்கள் என்பதே இன்னமும் யாராலும் கண்டுபிடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

தமிழகத்தின் மிகப்பழமையான குடைவரைக்கோயில்

பெரிய கோயிலுக்கான கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலை என்பதை தாண்டி தமிழகத்தில் இருக்கும் மிகவும் பழமையான குடைவரைக்கோயில்கள் நார்த்தமலையில் இருக்கின்றன.

குடைவரைக்கோயில்


நார்த்தமலையில் உள்ளவிஜயாலய சோழீஸ்வரம் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில் ஆகும். திராவிட கட்டிடக்கலை முறைப்படி இல்லாமல் நாகரா கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.

பல்லவர்களின் கீழ் நார்த்தமலை

பல்லவர்களின் குடையின் கீழ் நார்த்தமலையை ஆட்சி செய்துவந்த முத்தரையர் மன்னரான சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழனால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

சிவபெருமான்

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் மூலவராக சிவபெருமான் லிங்க ரூபமாக மேற்குநோக்கி காட்சி தருகிறார். மூலவரின் சிலைக்கு மேலே நான்கு அடுக்கு கொண்ட விமான கோபுரம் உள்ளது. இதன் மேல் கலசம் எதுவும் இல்லை. இக்கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன.


மேலும் தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு : நன்றி : நேட்டிவ் பிளானட் 

மரண அறிவிப்பு..

முத்தரையர் சமூகத்தின் முதல் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவர் திரு.குழ.செல்லையா அவர்களின் துணைவியார் புலவர் பூங்கோதை அம்மையார் காலமானார்.... !



வியாழன், 21 செப்டம்பர், 2017

முத்தரையர் காசுகள்

முத்தரையர் காசுகள்




வடிவம்-வட்டம்
உலோகம்-செம்பு
காலம் / ஆட்சியாளர்-முத்தரையர்
வரலாற்று ஆண்டு-கி.பி. 9ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம்-திருவையாறு (தஞ்சை)
முன்பக்கம்-நிற்கும் சிங்கம் உள்ளது.
பின்பக்கம்-சூரியன்,சந்திரனுக்கு நடுவே தாமரை மொக்கு போன்ற வடிவம் காணப்படுகிறது.
எடை-3 கிராம்
சுருக்கம்-முத்தரையர்கள் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்த குறுநில மன்னர்கள் ஆவர். இக்காசு முத்தரையர்கள் வெளியிட்டதாகும்.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர்-ஆறுமுக சீதாராமன்
குறிச்சொல்-முத்திரைக் காசுகள், உள்ளுர் முத்திரைக் காசுகள், செம்பு காசுகள்,வெள்ளி காசுகள், நாணயங்கள், தமிழகக் காசுகள், தமிழக நாணயங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், முத்தரையர் காசுகள், முத்தரையர் கால நாணயங்கள்

நன்றி: தமிழிணையம் மின்னுலகம்

சிலப்பதிகாரத்துக்கும், கீழடிக்குமான முத்தரையர்களின் தொடர்பு...!!

சிலப்பதிகாரத்துக்கும், கீழடிக்குமான முத்தரையர்களின் தொடர்பு...!!

//மணலூருக்கு மிக அணித்தாக இருந்த இன்றைய கீழடியும் கூட அன்றைய முத்தரையன் போரில் பெரும் அழிவுக்குள்ளாகியிருக்க வாய்ப்புண்டு. //

நன்றி : கீற்று

------------------------------------------------------------------

சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன், தலைவியான கோவலனும் கண்ணகியும், மதுரை வந்து வணிகம் செய்து புதுவாழ்வு தொடங்கு முகத் தான் புகாரை விட்டு வெளியேறுகின்றார்கள்.  வழியில் கவுந்தி அடிகள் என்னும் சமணத்துறவியின் துணையுடன் தங்கள் பயணத்தைத் தொடர் கின்றனர்.  வண்ணச் சீறடி மண்மகள் அறியாமல் வளர்ந்து வாழ்ந்த கண்ணகி பூம்புகாரிலிருந்து ஆறைங்காதம் (30 -காதம் சுமார் 250 கி.மீ) நடந்தே மதுரை செல்லத் துணிகிறாள்.  காவிரிக்கரை நெடுகிலும் இருந்த சோலைகளைக் கடந்து முதலில் உறையூரை அடைந்தனர்.
உறையூரிலிருந்து புலர்காலைப் பொழுதில் தென்திசை நோக்கி வெளியேறிய மூவரும் வழியில் மாங்காட்டு மறையோன் எனும் வேதியனை எதிர்ப்படுகின்றனர்.  அவனிடம் கோவலன்.
‘மாமறை முதல்வ மதுரைச் செல் நெறி
கூறு நீ’                                            (காடுகாண்: 58-59)
எனக் கேட்கிறான். அதற்கு விடையிறுக்கும் வகையில் கொடிய பாலை நிலத்தில் வேனிற் காலத்தில் நடந்து வரும் அவர்களைக் கண்டு மனம் கலங்கி, அவர்களிடம்,
‘கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்’
(காடுகாண்.  வரி 71-73)
என் விடை கூறுகிறான்.  அதாவது கொடும்பை என்னும் இன்றைய கொடும்பாளூர் கோட்டையை அடைந்தால் அங்கிருந்து பிறைநுதல் அணிந்த சிவபெருமானின் கையில் உள்ள திரிசூலம் போன்ற மூன்று வழிகள் மதுரைக்குப் பிரிந்து செல்லும் என்கிறான் மாங்காட்டு மறையோன்.
இங்கு குறிப்பிடப்படும் கொடும்பை என்னும் கொடும்பாளூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும்.  பிற்காலச் சோழர் காலத்தில் சிற்றரச மரபினமான இருக்குவேளிர் எனும் அரசகுடியினரின் தலை நகரமாக விளங்கிய ஊர் கொடும்பாளூர்.  கொடும் பாளூர் மணிக்கிராமத்தார் என்னும் வணிகக் குழுவினர் நெடுங்காலமாக தமிழகம் எங்கும் ஏன் தென்கிழக்கு ஆசிய தகோபா (கலைத்தக்கோர் புகழ் தளைத்தக்கோலம்) வரை பயணித்து வணிகம் செய்த குழுவினராவர், எனவே சங்ககாலத்திலேயே இவ்வூர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்க வாய்ப்புகளுண்டு.  சைவ சமயத்தின் காளாமுகப் பிரிவினர் இங்கு மடம் ஒன்று அமைத்து சமயப்பணி ஆற்றியுள்ளனர் என்பதை பிற்காலச் சோழர் கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியலாம்.
இத்தகைய கொடும்பாளூரிலிருந்து மூன்று வழிகள் மதுரைக்குச் செல்லுவதாகவும் அதன் தன்மைகளையும் மாங்குடி மறையோன் விளக்கு கிறான்.  வலதுபுறமாகச் செல்லும் வழியிலே சென்றால் மரா, ஓமை, உழிஞ்சி, மூங்கில், கள்ளி போன்ற பாலை நில மரங்களடர்ந்த காடுகள்
வரும், அடுத்து எயினர் குடியிருப்பைக் கடந்தால் வெண்ணெல், கரும்பு, தினை, வரகு எனும் புன் பயிர் விளையும் நிலங்களைக் காண்பீர்.  அதனையும் கடந்தால் வாழை, கமுகு, தெங்கு, மா, பலா போன்ற பயன்தரு கனிமரங்கள் நிறைந்த தென்னவன் (பாண்டியன்) சிறுமலையை அடையலாம் என்று கூறுகிறான்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் உள்ள நிலப்பகுதியை நாம் இன்றைய பெருவழியோடு ஒப்பிட்டு நோக்கலாம்.  கொடும்பாளூரிலிருந்து மதுரைக்கு வரும்போது முதலில் விறலியர் மலை (விராலி மலை)யைக் கடக்க வேண்டும்.  அங்கிருந்து பாரியினுடைய பறம்புமலை இன்றைய பிரான் மலையைக் கடக்கலாம்.  பிரான்மலையிலிருந்து கொட்டாம்பட்டி, மணப்பாறை வழியாக திண்டுக்கல் கடந்து சிறுமலையை அடையலாம் எனத் தோன்று கிறது.  இம்மலைக்கு வலப்புறமாகச் சென்றால் மதுரை நகரை அடையலாம்.
இடப்புற வழியாகச் சென்றால் வயல், சோலை, காடுகள் பல கடந்து சென்று திருமால்குன்றம் எனும் இன்றைய அழகர் கோயிலை அடையலாம்.  இவ்வழியை நாம் ஆராய்வோமானால் கொடும் பாளூர், விராலிமலை, பிரான்மலை, கருங்காலக் குடி, வெள்ளை நிகமம் எனும் வெள்ளரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி கடந்து அழகர் கோயிலை அடையலாம்.  இக்கிராமங் களின் பல ஊர்களில் சங்க காலத் தமிழ் (தமிழ்-பிராமி) கல்வெட்டுகள் கொண்ட சமணத்துறவியர் வாழ்விடங்கள் இருக்கின்றன.  சமணத்துறவியான கவுந்தி அடிகள் இச்சின்னங்களையெல்லாம் அறிந்த வராகவுமிருக்கலாம்.  கருங்காலக்குடி, அரிட்டா பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி (அழகர்மலை) ஆகிய ஊர்களில் இன்றும் கல்வெட்டுகளுடன் கூடிய சமணர் தலங்கள் உள்ளன.  எனவே இடது புற வழியில் நெடுங்காலமாக வணிகப் பெருவழியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
வலம், இடம் போகும் இரு நெறிகளை விலக்கி இடையில் உள்ள செந்நெறியில் போனால் தேம் பொழில் சூழ் காடுகளும், ஊர்களும் கடந்து சென்றால் மதுரைப் பெருவழியைக் காணலாம் என்பான் மாங்காட்டு மறையோன்.  இவ்வழியை நோக்கினால் ஏற்கனவே நாம் கண்ட கருங்காலக்குடி, கீழவளவு, மேலூர், வெள்ளரிப்பட்டி, திருவாதவூர், வரிச்சியூர் வழியாக வைகை வடகரையில் உள்ள ஐயை கோட்டத்தை அடையலாம்.  இங்கு நாம் கண்ட திருவாதவூர் சங்கப் புலவர் கபிலர் பிறந்த ஊரும், சமணத்துறவியர் வாழ்ந்த அறவோர் பள்ளிகள் இருந்த ஊருமாகும்.  இதனைக் கடந்து வரிச்சியூர் அருகில் குன்னத்தூரிலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த சமணத் துறவியரின் கற்படுக்கைகளும், கல்வெட்டுகளும் காணக் கிடைக் கின்றன.  இதன் வழியே சென்றுதான் கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகியோர்,
‘விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர்’.
(காடுகாண்: 214 - 216)
ஐயை கோட்டம் யாது?
நெடுந்தூரம் நடந்து வந்த கண்ணகியின் மெய்வருத்தம் நீங்கும் வகையில்,
‘ஐயை கோட்டத்து எய்யா தொரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர்.’
(வேட்டுவ வரி. 4-5)
ஐயை கோட்டத்தைக் கொற்றவை கோயில் என்று அறிஞர்கள் பலரும் பொருத்தமாகவே பொருள் கொண்டுள்ளனர்.  இந்தக் கொற்றவையின் பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும், அவளது (திருவிளையாடல்) செயல்களையும், எயினர் கொடுக்கும் பலிகளை ஏற்பதையும் வேட்டுவ வரியில் விரிவாகக் காணலாம்.  ஐயை கோயிலில் பலிபீடமும் இருந்தது என்பதை,
‘பாகம் ஆளுடையாள் பலி முன்றில்’
(வேட்டுவ வரி- உரைப்பாட்டு)
என்ற வரியால் உறுதிப்படுத்தலாம்.  ஐயை கோட்டத்தில் தங்கிய பின் கோவலன் கோசிக மாணியைச் சந்திக்கிறான்.  மாதவியின் முடங்கலைப் பெறுகிறான்.  பாணரோடு ஆடுகிறான்.  பின்னர்,
‘மாதவத்தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும் பொழில் தென்கரை எய்துகிறான்.’
(புறஞ்சேரி 179-180)
வையை என்னும் பொய்யாக் குலக்கொடியாம் நீரினைக்கடந்து தென்கரையில் சேர்கின்றனர்.  அவ்வாறெனின் அவர்கள் முன்னர்த் தங்கிய ஐயை கோட்டம் வைகை நதியின் வடகரையில் அமைந் திருந்தது என்பது உறுதிப்படுகிறது.  ஆனால் வடகரையில் இருந்த ஐயை கோட்டம் எது என்பது நமது அடுத்த தேடலாக அமைகிறது.
‘கண்ணகியார் அடிச்சுவட்டில் என்ற ஆய்வு நூலை எழுதிய கரந்தை சி. கோவிந்தராசனார் (1991) அவர்கள், கோவலனும் கண்ணகியும் மேலூர் வந்து ஆனைமலை, திருமோகூர் வழியாகச் சென்று அதற்கும் தெற்கே மருதமுன்துறை எனும் இடத்தை அடைந்ததாகக் கூறுகிறார்.  அவர் திருமோகூரையே திருமாலிருஞ்சோலை என அடையாளம் காண்பது ஆய்வுக்குரியது.  ஆனால் அவர் ஐயை கோட்டத்தில் தங்கினர் என்று கூறிப்போகிறாரே தவிர அது எங்கிருந்து என்பது பற்றி அறிய முயற்சிக்கவில்லை.  சிலப்பதிகாரச் சிந்தனை எழுதிய ப. அருணாசலம் (1971) அவர்களும் ஐயை கோயிலைச் சுட்டுகிறார்.  ஆனால் அதன் அமைவிடம் பற்றி ஆராயவில்லை.  சிலம்புச் செல்வம் எழுதிய மு. சுப்பிரமணியமும் (1973) இது பற்றிக் கவலைப்படவில்லை.  நமது ஊகத்தின் அடிப்படையில் ஐயை கோட்டம் எங்கிருந்தது என்பதைக் காணலாம்.
‘வையையின்’ வடகரையில் அமைந்திருந்த ஐயை கோட்டம் என்னும் கொற்றவை கோயில் (அ) காளிகோயில் வரலாற்றுக் காலம் தொடங்கி இன்று வரை வழிபாட்டில் இருந்து வரும் கோயிலாக ஏன் இருக்கக் கூடாது என்பதே நமக்கு எழும் வினாவாகும்.  மதுரைக்கு அருகில் வையையின் வடகரையில் அமைந்து இன்று வரை பெருவாரி யான மக்களால் வழிபடப்படும் கோயில் ‘மடப் புறம் காளி’ கோயிலாகும்.  இன்றைய தினம் அச்சம் தரும் அளவில் மிகப்பெரிய உருவமாகச் சுதையால் செய்துவைக்கப்பட்டுள்ள உருவம் அண்மைக் காலத்தது ஆகும்.  ஆனால் சங்ககாலத்தில் அல்லது கண்ணகியும் கோவலனும் வந்த காலத்தில் சிறிய அளவிலான கோயிலாகச் செங்கல் தனியாக இது இருந்திருக்க வாய்ப்புண்டு.
இன்று இக்கோயில் உள்ள ஊர் மடப்புறம் என அழைக்கப்படுகிறது.  இதன் எதிர்க்கரையில் (வையையின் தென்கரை) தேவாரமூவராலும் பாடப் பெற்ற திருப்பூவனநாதர் என்னும் சிவன்கோயில் அமைந்துள்ளது.  பொது ஆண்டு 7ஆம் நூற்றாண்டி லேயே சிறப்புற்றிருந்த இச்சிவன் கோயில் பாடல் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே இயங்கி வந்திருக் கலாம்.  இக்கோயிலின் மடம் ஒன்றை ஏற்படுத்தி அதனை நிருவகிக்கும் செலவுகளுக்காக விடப் பட்ட நிலமே மடப்புறம் என்பதாகும்.  பிற் பாண்டியர் காலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்திருக் கலாம்.
ஆனால் மடப்புறமாக நிலம் விடுவதற்கு முன்பே அங்கு பல கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  இன்றைய காளிகோயிலின் தென் பகுதியிலேயே ஒரு சிவன் கோயின் அமைந் துள்ளது.  அதன் உள்ளாக முற்காலப் பாண்டியர் காலத்தில் 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு கன்னியர் சிற்பம் ஒரே கல்லால் வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.  இக்கோயிலின் வாயில் முன்பாக வாயிற்காவலரைப் போன்று இரண்டு இளம் வீரர்கள் மண்டியிட்ட வண்ணம் தங்கள் தலையைத் தாமே அறுக்கும் வகையான சிலைகள் இடம்பெற்றுள்ளன.  இச்சிலைகளின் கீழாக இரண்டு கல்வெட்டுகள் வட்டெழுத்தில் வெட்டப் பட்டுள்ளன.
‘தூங்கு தலை கொடுத்தான் சித்திர சரிதன்’
‘தூங்கு தலை கொடுத்தான் ஸ்ரீ வல்லபன்’
என இரண்டு கல்வெட்டுகளும் தற்பலி செய்து கொண்ட வீரர்களின் பெயர்களைத் தருகின்றன.  இக்கல்வெட்டுகளின், சிலைகளின் காலம் பொது ஆண்டு 8-9 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம்.  ஐயை கோட்டத்தில் எயினர்கள் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்து பலி பீடத்தில் வைத்தனர் என்பதை,
“இட்டுத்தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலை போகாத் தொல்குடி”
 (வேட்டுவவரி. 20-21)
என்னும் அடிகளால் அறியலாம்.  சங்ககாலத்தில் இருந்த காளிக்குத் தலைப்பலி கொடுக்கும் வழக்கம் பொது ஆண்டு 8-9ஆம் நூற்றாண்டு வரை இருந்தது என்பதற்கு மேலே காட்டிய இரண்டு வீரர்களின் உருவங்கள் சான்றாகின்றன.  இதே இடத்தில் முதலாம் இராசராசசோழன் காலத்தில் மேலைக் கோயில் என்ற பெயரில் ஒரு திருமால் கோயிலும் இருந்துள்ளதை அண்மையில் மடப்புறத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றால் அறிகிறோம் (ஆவணம் இதழ் 26.  பக் 81-82).  இத்திருமால் கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கவும், நந்தவனம் ஒன்று அமைக்கவும் கொடுக்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.  இன்றைய நிலையில் இதே இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் செல்வாக்கிழந்துவிட்டது.  இராசராசன் காலத்திலிருந்த திருமால் கோயில் இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது.  ஆனால் காலங் காலமாக இருந்த ஐயை கோட்டம் மட்டுமே
காளி (மடப்புறம் காளி) என்ற பெயரில் இன்றும் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.  சிலப்பதிகார காலத்துச் சாலினிபோல் இன்றும் பல பெண்கள் இக்கோயிலில் அருள் பெற்று ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயை கோட்டமும் கீழடியும்:
மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடி என்னும் சிற்றூர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.  இதன் காரணம் மைய அரசின் தொல்லியல் துறை இங்கு கடந்த மூன்றாண்டு களாக மேற்கொண்டு வரும் அகழாய்வே ஆகும்.  சுமார் 100 ஏக்கர் பரப்பில் உள்ள புதைமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் மிகப் பெரிய கட்டிடப்பகுதிகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன.  சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய ஒரு நகர நாகரீகம் இங்கு செழித் தோங்கியிருந்தது என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.  ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப் பாய்வு செய்ததன் மூலம் அவை 2200 ஆண்டு
கட்கு முற்பட்டவை என அறுதியிடப்பட்டுள்ளன.  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐயை கோட்டம் இன்றைய மடப்புறம் காளி கோயிலே என்று அடையாளம் கண்டுள்ள நாம் கீழடியுடன் என்ன தொடர்பில் இருந்திருக்கலாம் எனவும் சிந்திக்கலாம்.  கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளுடன் மரப்புணை ஏறி வைகையின் தென்கரையை அடைந்தனர் எனச் சிலம்பு கூறுகிறது.  இதே வைகையின் தென்கரையில் தான் கீழடி அமைந்துள்ளது.  கீழடி தவிர திருப்பு வனம், மணலூர், கொந்தகை போன்ற பழமையான ஊர்களும் தென்கரையிலேயே அமைந்துள்ளன.  பிற்காலக் கல்வெட்டுகளில் பேசப்படும் வெருகனூர், ஐராவணநல்லூர் (விரகனூர், ஐராவத நல்லூர்) போன்றவை மதுரைக்குக் கிழக்கே அமைந்துள்ள ஊர்களாகும்.  திருப்புவனம் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற சைவத்தலம்.  மணலூரை அழித்ததாக எட்டாம் நூற்றாண்டின் முத்தரையர் கல்வெட்டு கூறுகிறது.  இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனின் செந்தலைப் பாடல் கல்வெட்டுகள் அவன் மணலூர் வெற்றியைப் பாடலாகக் கூறுகின்றன.
‘ஒழுகு குருதியுடனொப்ப வோடிக்
கழுகு கொழுங் குடர் கவ்வ - விழிகட்பேய்
புண்ணநைந்துகையும்பப்போர் மணலூர் வென்றதே
மண்ணனைந்து சீர்மாறன் வாள்’
(வெண்பா 2, திருமலை நம்பி 2012)
இம்மணலூரை முத்தரையன் வெற்றிகண்ட தாகக் கூறினாலும் வரலாற்றுக் காலம் நெடுகிலும் அண்ட நாட்டுப் பெருமணலூர் வேளாண்கள் பலரும் பாண்டியர் தம் அரசவையில் அமைச்சர் களாகவும் அதிகாரிகளாகவும் பணியாற்றிப் பெருமை சேர்த்துள்ளனர்.
மணலூருக்கு மிக அணித்தாக இருந்த இன்றைய கீழடியும் கூட அன்றைய முத்தரையன் போரில் பெரும் அழிவுக்குள்ளாகியிருக்க வாய்ப்புண்டு.  அதற்குப் பின்னும் கொந்தகையான குந்தி தேவிச்சதுர் வேதிமங்கலம் வீரிட்டு எழுந்துள்ளது என்பதையும் காண்கிறோம்.  எனவே கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஐயை கோட்டம் என்னும் இன்றைய மடப்புறம் காளிகோயில் பரப்பில் தங்கி, மறுநாள் மரப்புணையேறி அக்காலத்தில் உயிர்ப்புடன் திகழ்ந்த வைகையின் தென்கரையில் அமைந்திருந்த கீழடியில் வந்து இறங்கினர் எனக் கருதுவதில் தவறில்லை.  அங்கிருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்ணகி, தன் கணவனை இழந்த பின்பு மேல்த்திசையில் செல்லுங்காலையில்.
‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசைவாயில் வறியேன் பெயர்கென’க்
கூறுகிறாள்.
மேல் திசைவாயிலில் சென்ற கண்ணகி அக் காலத்தில் உயிர்ப்போடு செயல்பட்டுக் கொண் டிருந்த பெருவழிகளில் அமைந்த சமணக் குன்று களாகிய சமணமலை (கீழக்குயில்குடி) பெருமாள் மலை, கொங்கற்புளியங்குளம், நடுமுதலைக்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி வழியாகக் கம்பம் வரை சென்றிருக்கலாம் என்பதை உய்த்துணரலாம்.
பயன்பட்ட நூல்கள்:
1.            சிலப்பதிகாரம் - புலியூர்க்கேசிகன் தெளிவுரை.  பாரிநிலையம் சென்னை 2009.
2.            சி. கோவிந்தராசனார்.  கண்ணகியார் அடிச்சுவட்டில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.  மதுரை                      1991.
3.            ப. அருணாசலம், சிலப்பதிகாரச் சிந்தனை, பாரி புத்தகப் பண்ணை, சென்னை 1985.
4.            மு. சுப்பிரமணியம், சிலம்புச் செல்வம், மறைமலை அடிகள் மன்றம் புன்செய்புளியம்பட்டி 1973.
5.            ஆவணம் இதழ் 26.  தமிழகத் தொல்லியல் கழகம்.  தஞ்சாவூர் 2015
6.            இரா. திருமலை நம்பி.  தமிழக வரலாற்றில் முத்தரையர்.  தமிழ்க் கோட்டம் புதுக்கோட்டை 2012.

நன்றி : கீற்று

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மருத்துவர் அனிதா..

மருத்துவர் அனிதா...

எனக்கு எப்போதும் தற்கொலைகள் மீது பரிதாபம் கிடையாது, விவேகமற்ற செயல், காரணம் ஆயிரம் இருந்தாலும் தற்கொலை அவசியமற்றது. அது ஒருபுறம் இருக்கட்டும், நடந்த தற்கொலைக்கான காரணம் ?

நேற்றிலிருந்து இதுவரை இந்திய குடிமகன்கள் பலரும் எழுதிய‌ ஆதங்கங்கள், ஆத்திரங்களை காண முடிந்தது, எல்லோருக்குமே யாரோ ஒருவர் மீது பலிபோட மட்டுமே நோக்கம் இருக்கிறது. நரேந்திரமோடி, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் விஜயபாஸ்கர், நிர்மலா சீத்தாராமன், ராதாகிருஷ்ணன், தமிழிசை , ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது,

எனக்கு எழும் கேள்வி இவர்களெல்லாம் யார் ? வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா ? இவர்கள் யாரும் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்களா ? இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை கால்கடுக்க வரிசையில் நின்று வாங்கிய ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் தேர்வு செய்த நீங்கள் குறைபடுவது நியாயமா ?

எவனோ ஒருவன் உங்களுடைய நியாயங்களுக்காக உரத்து குரல் கொடுப்பான், தன் குடும்பம், தன் சுகங்களை தியாகம் செய்து தெருவில் இறங்கி போராடுவான் அவனை உங்களின் பிரதிநிதியாக ஆக்கினால் உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அவன் தேவையான இடங்களில், நேரங்களில் போராடுவான்,

நீங்கள் யாரை தேர்வு செய்தீர்கள், இதை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நிமிடம் நீங்கள் தேர்வு செய்த 20 எம் எல் ஏக்கள் புதுச்சேரி சொகுசுவிடுதியில்தானே இருக்கிறார்கள் ? இதற்கு முன்பு கூவாத்தூரிலும் அவர்கள்தானே கூத்தடித்தார்கள் ? எங்கே ஆதங்கப்பட்ட நீங்கள் இவன்களில் ஒருவனை தெருவில் இழுத்துபோட்டு செருப்பால் அடியுங்கள் பார்ப்போம் முடியாது காரணம் உங்களுக்கு கொடுத்த ரூபாய் கணக்கை சொல்லி அங்கேயே அப்போதே உங்கள் வாயை அடைப்பான்.

அவர்கள்தானே உங்களின் பிரதிநிதி ? அவர்கள்தானே உங்களுக்காக பேச வேண்டும் ? எந்த தகுதியின் அடிப்படையில் அவர்களை தேர்வு செய்தீர்கள் ? இதற்கு முன்பு எப்போதாவது மக்களின் பிரச்சனைக்காக இவர்கள் போராடிய வரலாறு எதாவது ஒன்று உண்டா ?

நீங்கள் தேர்வு செய்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களை எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் ? உங்களின் எந்த பிரச்சனைக்காக (நீட், காவிரி, மீத்தேன், கெயில்,கூடங்குளம்.....) இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை முறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள் ? எத்தனை முறை நாடாளுமன்ற அவையை முடக்கி இருக்கிறார்கள் ? எத்தனை முறை குறைந்தபட்சம் இந்த பிரச்சனைகள் பற்றி கருத்துரைத்திருக்கிறார்கள் ? எதுவுமே செய்யாத இவர்களில் எத்தனைபேர் இரண்டாவது, மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க்கீறார்கள் ?

இந்த ஒரு அனிதாவல்ல, இன்னும் உங்களின் செல்லமகள்கள், மகன்கள் அது அனிதா, சுவிதா, கவிதா, மலையாண்டி, மாயாண்டி என்று எல்லோரும் சாக நீங்கள்தான் காரணம். குறையை மற்றவன் மீது சுமத்தி நீ யோக்கியன் என நடிக்காதே....

கா.சஞ்சய்காந்தி