முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 614 701
தொலைப்பேசி: 0091-4373-255228
மின் அஞ்சல்: sanjai28582@gmail.com
வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/
ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582
Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.
Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,
we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics
In the State of Tamil Nadu
Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer
we are known:
We have No Unity
we are Not Educationist
we are not Known our History
Yes if you have any solution share with us...............
We have Solution Accept it.................................
WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....
MUTHARAIYAR
YOUNG LION ORGANIZATION
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சனி, 19 பிப்ரவரி, 2011
புதன், 16 பிப்ரவரி, 2011
சமுதாய சங்க கொடி அவமதிப்பு நத்தம் அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகளுக்கு தீ வைப்பு - தினமலர்
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முத்தரையர் சங்க கொடியை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இருதரப்பினரிடையே நடந்த தகராறில் மூன்று அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. வீடுகளை சேதப்படுத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர். நத்தம் அருகேயுள்ள பரளிபுதூர் முத்தரையர் குடியிருப்பு பகுதியில், ஒரு வாரத்திற்கு முன் காலனி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தையினர் தங்கள் கட்சி கொடியை கட்டியிருந்தனர். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர். நேற்று முன்தினம் சிறுத்தை அமைப்பினர் கொடியை அகற்றி விட்டனர். நேற்று முன்தினம் மாலை அதே இடத்தில் இருந்த முத்தரையினர் சங்க கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆத்திரமடைந்த பரளிபுதூர், சுற்றுப்புற கிராம மக்கள் மதுரை-நத்தம் ரோட்டில், சங்க கொடியை அவமதித்ததாக விடுதலை சிறுத்தையினரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர். இரவு 9 மணிக்கு அங்கிருந்த விடுதலைச் சிறுத்தையினருக்கும், முத்தரையர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்பகுதியில் பதட்டம் அதிகரித்ததால் பஸ்கள் பாலமேடு- முளையூர் வழியாக நத்தத்திற்கு திருப்பி விடப்பட்டன. அன்றிரவே, பரளிபுதூரில் வசித்த விடுதலைச் சிறுத்தையினர் வீடுகளை சிலர் தாக்கி தீ வைத்தனர். இதில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்த தென் மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி.க்கள் சைலேஷ் மிஸ்ரா, சந்தீப்மித்தல், மதுரை எஸ்.பி., மனோகரன்,தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் ஏ.டி.எஸ்.பி., சிவக்குமார், டி.எஸ்.பி.,க்கள் ராஜாராம், தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராஜாமணி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
சோழர்கள் ஆட்சியில் தென்னிந்தியாவுக்குத் தலைநகராக விளங்கியது தஞ்சை: குடவாயில் பாலசுப்பிரமணியன் - நன்றி: தினமணி
தஞ்சாவூர், பிப். 8: ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது தஞ்சாவூர் என்றார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவைக் கூட்டத்தில் வரலாற்றில் தஞ்சாவூர் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
குளிர்ந்த நிலப்பரப்பை உடைய இடம் என்பதால் தஞ்சை என்ற பெயர் ஏற்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக கி.பி. 550-ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் தஞ்சையின் பெயர் காணப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் பின்பகுதியில் சீராமுனிவர் என்ற சமண முனிவர் உயிர்த்திறந்த குகையில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.
சிம்மவிஷ்ணு பல்லவன், சோழநாட்டை கைப்பற்றியது குறித்த இந்தக் கல்வெட்டில் தஞ்சையை வெற்றிகொண்டான் என்ற பொருள் தரும் பட்டப் பெயரான தஞ்சகரக என்று பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர், அப்பர் சுவாமிகள் திருவீழிமிழலையில் பாடிய பாடலில் தஞ்சை தளிக்குளத்து மகாதேவர் என்று பாடியுள்ளார். இந்தக் கோயில் சீனிவாசபுரம் பகுதியில் இருந்துள்ளது.
பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாடல்களிலும் தஞ்சையைப் பற்றி கூறப் பட்டுள்ளது. ஆழ்வார்கள் பாடல் பெற்ற மாமணிக்கோயில் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில் ஆகியவை தஞ்சையில் இருந்துள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த இந்தக் கோயில்கள் பின்னர் நாயக்கர்கள் காலத்தில் வெண்ணாற்றங் கரையில் அமைக்கப்பட்டன.
சோழர்களுக்கு முன்னர் முத்தரையர் காலத்திலேயே தஞ்சை தலைநகராக விளங்கியது. பின்னர், விஜயாலய சோழன் தஞ்சையை கி.பி. 850-ம் ஆண்டில் மீட்டான். அப்போது முதன் முதலில் கீழவாசல் பகுதியில் தற்போது ராகுகால காளி, வடபத்ர காளி என அழைக்கப்படும் நிசும்பசூதனிக்கு கோயில் கட்டினான். இதுதான் சோழர் களின் குல தெய்வம்.
ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர், தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது. அவர்கள் தற்போதைய ஒரிசா வரை அரசாண்டனர். ராஜராஜசோழன் மறைவுக்குப் பிறகு 10 ஆண்டுகள் தஞ்சையை தலைநகராகக் கொண்டுதான் ராஜேந்திரசோழன் ஆட்சி செய்தார்.
பின்னர் குதிரை, யானைப் படைகள் உள்ளிட்டவை பல ஆறுகளைத் தாண்டிச் செல்வதில் இருந்த சிரமத்தைக் குறைப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றினான். சோழர்களின் அரண்மனை தற்போதை சீனிவாசபுரத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மாறவர்மசுந்தரபாண்டியன் இந்த அரண்மனையை அழித்தார். பின்னர் பாண்டிய மன்னரின் தளபதியான சாமந்தநாராயணன் தஞ்சையில் மீண்டும் ஓர் ஊரை உருவாக்கினார். இவர்களைத் தொடர்ந்து, நாயக்கர்கள், மராட்டியர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆட்சி செய்தனர் என்றார் குடவாயில் பால சுப்பிரமணியன்.
கூட்டத்தில் பேரவைத் தலைவர் தங்கராஜன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி, பிப். 13-
திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் அயன் பேரையூர் கைகாட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, சவுந்தர்ராஜன், துணை மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் சங்கீதா, மல்லியம்பத்து, ஊராட்சி தலைவர் கதிர்வேல், தொழில் அதிபர் ஜான்சன்குமார், மோகன்தாஸ் உள்படபலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று காலை பெரம்பலூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடலூர் வந்த போது மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடேசன் வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் அமைச்சர் செல்வராஜின் சகோதரர் துரை ராஜ்-செல்லம்மாள் மகன் ராஜ்மோகன், தமிழ்நாடு முத்தரையர் சங்க முன்னாள் தலைவர் முள்ளிக்கரும்பூர் ராஜமாணிக்கம் பேத்தி தங்கமணி ஆகியோர் திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் அமைச்சர்கே.என்.நேரு, மத்திய மந்திரி நெப்போலியன், மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரைசாமி, அரியலூர் சிவசங்கர், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பெரம்பலூர் உழவர்சந்தை திடலில் மாவட்ட செயலாளர் துரைசாமி-மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி ஆகியோர் மகள் தமிழ் பொன்னி, காஞ்சிபுரம் ஆசூர் பி.எஸ்.என்.எல். அதிகாரி அப்பாவு- ஹில்டாமேட்லின் மகன் விமல் கிறிஸ்டோபர் ஆகியோரது திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
பின்னர் காலை 11 மணிக்கு திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் அயன் பேரையூர் கைகாட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீட்டை வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மந்திரி நெப்போலியன், திருமாவளவன் எம்.பி., ராஜ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் மகாதேவி ஜெயபால், அயன் பேரையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கடலூருக்கு புறப்பட்டு சென்றார்
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
மீனவர்களுக்கு புதிய கட்சி: முத்தரையர் சங்கம் முடிவு - THANKS TO DINAMALAR
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தவிர்க்கவும், இவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவும், மீனவர்கள் அதிகம் உள்ள முத்தரையர் சங்கத்தினர் தனி கட்சி துவங்க திட்டமிட்டுள்ளனர். முத்தரையர் சங்க மாநில இளைஞரணி தலைவர் பரதன் கூறியதாவது: எங்கள் சமூகத்தினர், 10 மாவட்டங்களில் அதிகமாக இருந்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளோம். வனத்துறையினரால் தொடர்ந்து மீனவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்; இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவதும் தொடர்கிறது. மீனவர்களின் நலன் கருதி, தனி கட்சி துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரிய கட்சிகள் எங்களை அழைக்காவிடில், தேர்தலில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பரதன் கூறினார்
செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
கோஷ்டி மோதல் : ஒருவருக்கு கத்தி கீறல் - DINAMALAR
சனி, 5 பிப்ரவரி, 2011
THANKS - SIVAKUMAR AND VIKADAN
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாய கணக்கு:
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்
தனியார் நிறுவனம்
துபாய்
Syed