பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011,21:08 IST
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முத்தரையர் சங்க கொடியை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இருதரப்பினரிடையே நடந்த தகராறில் மூன்று அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. வீடுகளை சேதப்படுத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர். நத்தம் அருகேயுள்ள பரளிபுதூர் முத்தரையர் குடியிருப்பு பகுதியில், ஒரு வாரத்திற்கு முன் காலனி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தையினர் தங்கள் கட்சி கொடியை கட்டியிருந்தனர். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர். நேற்று முன்தினம் சிறுத்தை அமைப்பினர் கொடியை அகற்றி விட்டனர். நேற்று முன்தினம் மாலை அதே இடத்தில் இருந்த முத்தரையினர் சங்க கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆத்திரமடைந்த பரளிபுதூர், சுற்றுப்புற கிராம மக்கள் மதுரை-நத்தம் ரோட்டில், சங்க கொடியை அவமதித்ததாக விடுதலை சிறுத்தையினரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர். இரவு 9 மணிக்கு அங்கிருந்த விடுதலைச் சிறுத்தையினருக்கும், முத்தரையர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்பகுதியில் பதட்டம் அதிகரித்ததால் பஸ்கள் பாலமேடு- முளையூர் வழியாக நத்தத்திற்கு திருப்பி விடப்பட்டன. அன்றிரவே, பரளிபுதூரில் வசித்த விடுதலைச் சிறுத்தையினர் வீடுகளை சிலர் தாக்கி தீ வைத்தனர். இதில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்த தென் மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி.க்கள் சைலேஷ் மிஸ்ரா, சந்தீப்மித்தல், மதுரை எஸ்.பி., மனோகரன்,தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் ஏ.டி.எஸ்.பி., சிவக்குமார், டி.எஸ்.பி.,க்கள் ராஜாராம், தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராஜாமணி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நமது இனத்தை இழிவுபடுத்திய அனைவரையும் வன்மையாக கண்டிக்கபட வேண்டும்......
பதிலளிநீக்குநத்ததிலிருந்து ராஜா.................
நமது இனத்தை இழிவு படுத்த துடிக்கும் அனைவருக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்....
பதிலளிநீக்குஅழகர்கோவில் , வலையபட்டி , முத்தரையர் இளம்சிங்கம்..