Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

திருவாரூர் மாவட்ட ஊராச்சி தலைவர்

முத்துபேட்டை மாவட்ட ஊராச்சி குழு உறுப்பினர் ஆக
ஆ தி மு க சார்பில் தேர்வு செய்யப்பட்ட
தனலட்சுமி அம்பிகாபதி ,, தற்போது திருவாரூர்
மாவட்ட ஊராச்சி தலைவர் ஆக தனலட்சுமி அம்பிகாபதி
( இடும்பாவனம் ) தேர்வு செய்யபட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவிக்கிறேன் ....
அன்புடன் :: LSB . ராஜ்குமார் ,, ஆலங்காடு ..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

திருச்சி மாவட்ட பஞ்., தலைவர் பதவிக்கு போட்டி முட்டிமோதும் பெண் கவுன்சிலரில் ஜெயிப்பது யார்?

திருச்சி: திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., பெண் மாவட்ட கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அப்பதவி யார் பிடிக்கப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ள மாவட்ட அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெருத்த ஆவல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 24 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 22ஐ அ.தி.மு.க.,வினர் கைப்பற்றியுள்ளனர். மீதியுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து தான் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவர். திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ளது.ஆகையால், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள 10 பெண் கவுன்சிலர்கள் மத்தியிலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.



அ.தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர்களாக ஆனந்தி, விஜயா, ராஜாத்தி, சுலோச்சனா, அமுதா, ருக்மணி, காஞ்சனா, ரீனா, மலர்விழி, மாலதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜாத்தி மூன்றாவது முறையாக மாவட்ட கவுன்சிலராகியுள்ளார் என்பதால், சீனியரான இவருக்கே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் இவர் தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் சங்கீதாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக புகார் உள்ளதால், இவருக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி மறுக்கப்படும் என்று அ.தி.மு.க.,வினரே கூறுகின்றனர்.
மற்றவர்களில் அமுதா, காஞ்சனா, மலர்விழி ஆகியோர் இரண்டாவது முறையாக மாவட்ட கவுன்சிலர்களாகியுள்ளனர். இவர்களில் மலர்விழி மணப்பாறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்காடச்சலத்தின் மனைவி ஆவார். வெங்கடாச்சலமும் கடந்த ஆட்சியில் தி.மு.க., அமைச்சர் நேருவுடன் நெருக்கமாக இருந்தார் என்ற புகார் உள்ளதால், அவருடைய மனைவிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.



மீதியுள்ள அமுதா, காஞ்சனா ஆகிய இருவரில் காஞ்சனாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமுதாவும் போட்டியில் உள்ளார். அதேசமயம் அ.தி.மு.க., மாவட்ட தலைமையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்வுக்கான பட்டியலில் காஞ்சனா மற்றும் ராஜாத்தி ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் காஞ்சனாவே ரேஸில் முந்துகிறார்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை புதிய முகங்களான முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி மனைவி மாலதி, ரீனா, ருக்மணி, சுலோச்சனா, விஜயா, ஆனந்தி ஆகியோரில் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென "யோகம்' அடிக்கவும் வாய்ப்புள்ளது. மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை பொறுத்தவரை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜ்மோகன், ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. நான்காவது முறையாக மாவட்ட கவுன்சிலராக ஆகியிருக்கும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நெடுமாறன், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்பதால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

ஜெ.,யின் தொகுதி பொறுப்பாளர் யார்?அ.தி.மு.க.,வில் "எகிறும்' எதிர்பார்ப்பு -தினமலர்

.
திருச்சி:தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியின் பொறுப்பாளராக இருந்த பரஞ்ஜோதி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகி விட்டதால், அத்தொகுதியின் புதிய பொறுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ளது.கடந்த பொதுத்தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால், தன் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வான பரஞ்ஜோதியை பொறுப்பாளராக நியமித்தார். எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்துவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.





ஜெயலலிதாவின் அலுவலகம் என்பதால், கிட்டதட்ட, முதல்வரின் தனிப்பிரிவு போலவே ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பெறப்படும் மனுக்கள், ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.தொகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் இங்கு மனு கொடுக்க குவிகின்றனர். சென்னைக்கு சென்று முதல்வரிடம் நேரிலோ அல்லது முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க விரும்புபவர்கள், இங்கேயே தங்களது காரியத்தை முடித்து கொண்டு உரிய நிவாரணத்தை அடைகின்றனர்.





இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாகவும் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவர் வகித்து வந்த தொகுதி பொறுப்பாளர் பதவி மீது கண் வைத்து, கட்சியினர் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.முதல்வரிடம் நேரடியாக மட்டுமல்லாமல், அடிக்கடி பேசும் வாய்ப்பு கிட்டுவதோடு, "முதல்வரின் பி.ஏ.,' என்ற அந்தஸ்தும் கட்சியினரிடையே கிட்டும் என்று நினைப்பதால், போட்டி மிக பலமாகவே இருக்கிறது."ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியை கைப்பற்றி, ஜெயலலிதாவின் வலதுகரம் போல விளங்கப்போகிறவர் யார்?' என்ற எதிர்பார்ப்பு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.,வினரிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.





யாருக்கு அந்த வாய்ப்பு?முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஆன்மிக, ஜோதிட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்.
"ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்; அவரது பூத் ஏஜன்ட்டாக உடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும்' என்ற ஜோதிட வழிகாட்டுதல்படி செயல்பட்டு வெற்றி பெற்றார்.ஜோதிடப்படி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக, அதே தொகுதியில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டதை போல, மீண்டும் அதே தொகுதியைச் சேர்ந்த முத்தரையர் இனத்தவரே பொறுப்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



.

யாருக்கு அந்த வாய்ப்பு?

யாருக்கு அந்த வாய்ப்பு?முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஆன்மிக, ஜோதிட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்."ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்; அவரது பூத் ஏஜன்ட்டாக உடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும்' என்ற ஜோதிட வழிகாட்டுதல்படி செயல்பட்டு வெற்றி பெற்றார்.
ஜோதிடப்படி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக, அதே தொகுதியில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டதை போல, மீண்டும் அதே தொகுதியைச் சேர்ந்த முத்தரையர் இனத்தவரே பொறுப்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

இரண்டரை கோடி மக்களின் நான்காவது பிரதிநிதி

எனது அன்பான உறவுகளுக்கு வணக்கம்,
இன்று எட்டு கோடி மக்களையும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்ட தமிழகத்தில், இரண்டரைக் கோடி முத்தரையர் மக்களின் நான்காவது பிரதிநிதி (?) சட்டமன்றம் செல்கிறார், ஏற்கனவே நாம் கூறியதுப் போலே மீண்டும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் வெற்றிப் பெற்ற எமது உறவு மரியாதைக்குரிய திரு. பரஞ்சோதிக்கும், வெற்றிக்காக உழைத்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

என்றும் உங்கள்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தி.மு.க., ஓட்டு ஓடிப்போனது : திருச்சியில், அ.தி.மு.க., அமோகம்


திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முக்கிய கூட்டணிக் கட்சிகளை கழட்டிவிட்டு, தனித்து களமிறங்கிய அ.தி.மு.க., 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, தி.மு.க.,வின் ஓட்டுகள் வெகுவாகச் சரிந்துள்ளது. அ.தி.மு.க.,வின் வெற்றி வித்தியாசம் மேலும் அதிகரித்துள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில் இறந்ததால் காலியான மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர, இந்திய ஜனநாயக கட்சி உட்பட, 16 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது முன்னாள் அமைச்சர் நேரு, நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் சார்பில், முன்னாள் அமைச்சர் வேலு தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தான், நேருவுக்கான தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதிக்காக, 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் திருச்சியில் தங்கி தேர்தல் பணியாற்றினர்.

ஓட்டுப்பதிவு குறைவு: திருச்சி மேற்கு தொகுதியில், 2 லட்சத்து, 8,491 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 1 லட்சத்து, 27 ஆயிரத்து, 433 பேர் ஓட்டு போட்டனர். கடந்த சட்டசபைத் தேர்தலை விட, இடைத்தேர்தலில் 14 சதவீதம் ஓட்டுகள் குறைவாக பதிவானது. இதனால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பதிவான ஓட்டுகள், பஞ்சப்பூர் சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.
மொத்தம், 18 சுற்றுகள் அடங்கிய ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்று முதலே அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும், 500 முதல், 1,000 ஓட்டுகள் அதிகம் வாங்கினார். 12 சுற்றுகள் முடிந்த நிலையிலேயே, அ.தி.மு.க., வேட்பாளர், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக அவர், 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் நேருவை தோற்கடித்து, திருச்சி மேற்கு தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
பதிவான ஓட்டுகளில் பரஞ்ஜோதி, 69 ஆயிரத்து, 29 ஓட்டுகளையும், தி.மு.க., வேட்பாளர் நேரு, 54 ஆயிரத்து, 345 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் மரியம்பிச்சை, தி.மு.க., வேட்பாளர் நேருவை விட 7,179 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஓட்டு வித்தியாசம் தற்போது இரு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நிலையில், பதிவாகியுள்ள ஓட்டுகளை வைத்து பார்க்கும் போது, தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் வெகுவாகச் சரிந்துள்ளது தெரிகிறது. தி.மு.க., வேட்பாளர் நேரு, கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, 15 ஆயிரத்து, 968 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்த, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் விலகியும், அ.தி.மு.க.,வின் வெற்றி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது அமோக வெற்றி மூலம் வெளிப்பட்டுள்ளது.

"முதல்வர் திட்டங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி' : ""தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றி,'' என்று மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி தெரிவித்தார். திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பரஞ்ஜோதி, 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதுக்கான சான்றிதழைப் பெற கட்சியினருடன் சாரநாதன் கல்லூரிக்கு வந்த பரஞ்ஜோதி, நிருபர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகும். அவருடைய திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. மேற்கு தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை, முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனை படியும், வழிகாட்டுதல் படியும் செய்வேன். இடைத்தேர்தலில் என்னுடைய வெற்றிக்கு உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், ஓட்டளித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பரஞ்ஜோதி கூறினார்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் அறிவியல் உதவியாளர் பணி

இந்திய வானிலை ஆய்வு மையங்களில் (Meteorology Department) நாடு முழுவதும் அறிவியல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் இந்தக் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியின் பெயர்: அறிவியல் உதவியாளர்

காலியிடங்கள்: 465 (பொது-230, ஒபிசி-128, எஸ்சி-70, எஸ்டி-37)

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியலை ஒரு பாடமாக படித்த அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது 60 சதவிகித மதிப்பெண்களில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் பட்டப்படிப்பு அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். +2 வில் இயற்பியல், கணிதம் முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.10.2011 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் PH(OH/HH) பிரிவினருக்கு 10 வருடங்களும், PH/(OH/HH) OBC பிரிவினருக்கு 13 வருடங்களும் PH/(OH/HH) + SC/ST பிரிவினருக்கு 15 வருடங்களும், EXSM(SC/ST ) பரிவினருக்கு 10 வருடங்களும் உச்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியிவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு மையம்: எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Stae Bank of India-வில் செலான் வழியாகவோ SBI-யின் ஆன்லைன் Payment-ன் வழியாகவோ விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம், பெண்கள் SC/ST PH/EXSM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் Part-1, Part-2 என இரண்டு கட்டமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.ssconline.nic.in, www.sscregistrationsifyitest.com என்ற இணையத்தைப் பார்க்கவும்.

ஐடிஐ படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உளவுத்துறையில் ஏற்பட்டுள்ள ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபீசர் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி கோடு எண்: 01


பதவியின் பெயர்: Personal Assistant (P.A)

காலியிடங்கள்: 58 (பொது-30, OBC-12, SC-10, ST-6)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயக்குவது பற்றிய அறிவினை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800 மற்றும் இதர படிகள்.

பதவி கோடு எண்: 02


பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Wireless Telegraphy)

காலியிடங்கள்: 198 (பொது-110, OBC-4, SC-30, ST-11)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்கண்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Electronic Mechanic Information Technology and Electronic System Maintenance Electrician Mechanic (Radio & TV) Mechanic Cum Operator of Electronic Communication System.

சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.


பதவி கோடு எண்: 03


பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Electronics Data Processing)

காலியிடங்கள்: 6 (பொது-3, OBC-2, SC-1)

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறிசார்ந்த மூன்று மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் அத்துடன் கணிப்பொறி டேட்டா- என்ட்ரி பணியில் மணிக்கு 800 கீ அழுத்த வேகம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.

வயதுவரம்பு: 30.10.2011 தேதிப்படி 18-லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்:

சென்னை - கோடு எண் -09


பெங்களூர் - கோடு எண் -05

திருவனந்தபுரம் - கோடு எண் -31

ஹைதராபாத் - கோடு எண் -13

தேவையான கல்வித்தகுதி இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரம் www.mha.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இ-மெயில் ID உடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.mha.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு பதிவு எண்ணுடன் கூடிய Registration Slip வழங்கப்படும். அதனை நகல் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2011.

மேலும் விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

டிப்ளமோ படித்தவர்களுக்கு பிலாய் ஸ்டீல் ஆலையில் பயிற்சியுடன் வேலை

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் பிலாய் ஸ்டீல் ஆலையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: BSP -209 (Rectt) 11-12. Date:03.10.2011

பணியின் பெயர்: Operator-Cum-Technician (Trainee)

காலியிடங்கள்: 105

மெக்கானிக்கல்: 38 (பொது-20, SC-4, ST-12, OBC-2) மொத்த காலியிடங்களில் 5 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கும் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல்: 31 (பொது-18, SC-3, ST-9, OBC-1) மொத்த காலியிடங்களில் 4 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கும், இரண்டு இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்டலர்ஜி(Mettallurgy): 22 (பொது-12, SC-2, ST-7, OBC-1) மொத்த காலியிடங்களில் 3 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ்: 12 (பொது-8, SC-1, ST-3) மொத்த காலியிடங்களில் 1 இடம் முன்னாள் இராணுவத்தினருக்கும், 1 இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவில்: 2 (பொது)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2011 தேதிப்படி18-லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின் சலுகைகள் அளிக்கப்படும்.

பயிற்சி காலம்: தேந்ந்தெடுக்கப்படுவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போதும் முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,250, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,350 உதவித் தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.9,160 - 3 சதவிகிதம் - 13, 150 மற்றும் இதர படிகள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பக் கட்டணத்தை "Steel Authority Of India Ltd, Bhilai Steel Plant" என்ற பெயரில் Bhilai -ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட A/C Payee டி.டியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய அக்டோபர் 12- 18 எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் இதழை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 12.11.2011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம்:

Post Box No: 16

Post Office Sector-1,

Bhilai, Durg District. Pin: 490001







அண்ணமார் சாமி கதையில் முத்தரையர் - மகராஜா மலர்மன்னன்

வீரப்பூர் போர்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர். அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய வீரர் குடும்பங்கள் ஆண்ட...ுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர்.

வீரப்பூர்ப் போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து கதைப்பாட்டு எழுதிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகள் 90% விழுக்காடு வரலாற்று சம்பந்தம் இல்லாதவை.

தலையூர்ப் படைகள் வளநாடு நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வளநாட்டு படை தலையூர்ப் படையை வளநாட்டிற்க்குள் புகவிடாமல் வீரப்பூர் காட்டில் தடுத்து நிறுத்தி போர்தொடுத்தது. போரின் முடிவில் வளநாட்டு படை முழுவதும் முறியடிக்கப்பட்டது.படுகளம் பகுதியில் மேடான பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டு முன்னரே அழிந்து போன படை போக மீதியிருந்த படை வீரர்களுடன் பொன்னர் சங்கர் சுற்றி வளைக்கப்படவே தப்பி ஒடமுடியாத இட அமைப்பும், படைக்குறைவும் ஏற்படவே எதிரிகள் கையில் சிக்காமல் இருக்க மூவரும் வாளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தான் உண்மை. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தும் இதுவே.

படுகளத்தில் இருந்து நேர் கோட்டில் பார்தாலே 20 கி.மீட்டர் அப்பால் வரும் படையின் தூசி, வேல்கள் மின்னுவதை வைத்து படைகள் வரும் திசை , தொலைவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். இதை அடிப்படையாக வைத்துத்தான் வளநாட்டுப்படைத் தலைமை இந்த மேடான பகுதியில் படையை நிறுத்திக்கொண்டு தலையூர் படைக்காக காத்திருந்தது. தலையூர்ப்படைக்கும், வளநாட்டுப் படை நின்ற இன்றைய கூவனாம் பள்ளத்திற்கு அருகே போர் மூண்டது.இந்த போர் பற்றி எந்த குறிப்புக்களோ, கல்வெட்டோ,செப்பேடு பட்டயமோ இல்லை. எந்த ஆவணங்களும் இல்லை.

இந்த போர் நடந்து முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பின்னர் எதை வைத்து எழுதியிருக்க முடியும்.? கள்ளழகர் அம்மானையும், பிச்சனும் இதை பாரதபோர் அளவிற்கு புனைந்து எழுதிவிட்டார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.

போரின் முடிவைத்தெரிந்து கொண்டு பொன்னர்,சங்கர் மனைவியர் தீயிட்டு இறந்து விடுகிறார்கள்.எஞ்சிய அருக்காணி மட்டும் பாசத்தால் அண்ணமார்களின் உடலைக்காண படுகளம் வருகிறாள். படுகளம் வந்து உடலைக்கண்டபின் முத்தரைய போர் வீரர்களின் உதவியோடு படுகளத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அருக்காணியும் துயரம் மிகுந்து, அழுது அழுது படுகளத்திலேயே இறந்து விடுகிறாள்.

அருக்காணியை வளநாட்டில் இருந்து அழைத்து வந்த முதல் உடல் அடக்கம் செய்தது வரை பொன்னர் சங்கர் குடும்பத்தினர் மீது ஆழ்ந்த பற்றுவைத்திருந்த முத்தரையர்களே.

வியாழன், 13 அக்டோபர், 2011

அதிமுகவுக்கு ஆதரவு

காஞ்சிபுரம், அக். 12: திருச்சி மேற்கு இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் கூட்டம், மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடகர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த என்.ஆர்.சிவபதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கும், அதேபோல் திருச்சி மேற்கு தொகுதியில் மு.பரஞ்சோதி, அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்தரையர் சங்கம் கடந்த தேர்தல்களைப் போல் இம் முறையும் அதிமுவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தது.

வடகாட்டில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு - தினமணி

ஆலங்குடி, அக். 7: ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கமாக வடகாடு வடக்குக் கடை வீதியில் தொடங்கி, நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அன்னதானமும், எளிய குடும்பத்தைச் சேர்ந்தோருக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலம் குருபூஜை நிகழ்ச்சிஏராளமானோர் பங்கேற்பு

ஆலங்குடி: ஆலங் குடி அடுத்த வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் குரு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆலங்குடி அடுத்த வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட் டார். இந்நிலையில் அவரது நினைவு நாளான நேற்று, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருக்காக குரு பூஜை நடத்தினர். கடந்த 48 நாட்களாக நூற்றுக்கணக்கானோர் காவி வேட்டி காவித்துண்டு அணிந்து விரதமிருந்தனர்.
நேற்று காலை வடகாடு பெரிய கடைவீதியில் இருந்து வெங்கடாசலத்தின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் ஊர்வலமாக மாலைகளை ஏந்தி வந்தனர். இதில் புதுக்கோட்டை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சீனுசின்னப்பா, புதுக் கோட்டை எம்எல்ஏ முத்துக்குமரன், அணவயல் ஊராட்சி தலைவர் அடைக்கலம், மேலாத்தூர் ஊராட்சி தலைவர் சரவ ணன், தென்னங்குடி ராசா, கீழாத்தூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் உட்பட திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். குருபூஜை யில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் அன்னதானமும் நடந்தது.