Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ரவி குல திலகன் - ஒரு பார்வை

வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல்... அணிந்துரை சுந்தா..

சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்..

நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்..

இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்..

ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்....

மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்..

குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது...

ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்..

ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது..

வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல்

”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது..

மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை..
பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு ..

கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்... சொல்வீர்கள் கல்கியின் இளவலும் அற்புதமென்று..


THANKS: தேனம்மை லெக்ஷ்மணன்
http://honeylaksh.blogspot.com/search?

புதன், 22 பிப்ரவரி, 2012

பேராசிரியர் இராசசேகர தங்கமணி


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

தமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின் வரலாற்று முதன்மை நமக்கு ஒருவாறு விளங்கும்.
கரூர் பகுதியின் அத்தனை வரலாற்று உண்மைகளையும் மனத்தில் தேக்கியபடி அறிஞர் ஒருவர் உள்ளார். அவர்தாம் பேராசிரியர் இராசசேகர தங்கமணி.

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 28 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.70 அகவையைக் கடக்கும் இவர் இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்கிறார்.அந்த அளவு என் உடல் வலிமை வாய்ந்தது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.அடிப்படையில் தாம் ஒரு மற்போர் வீரர்(பயில்வான்) என மார்தட்டிக்கொள்ளும் பேராசிரியர் இளம் அகவை முதல் வேட்டைக்குச் செல்வதில் நாட்டம் உடையவர்.இன்றும் ஓட்டமும் நடையுமாக இருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு என்னும் அருங்குணத்தையாகும்.

இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கும் காசுமீர் தவிர்த்த இந்தியப் பகுதிகளுக்கும் சென்றுவந்த இந்தப் பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு சோம்பி அமர்ந்திருக்கும் இயல்புடையவர் அல்லர்.தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தம் நேரத்தைச் செலவிடுகிறார். இவரைச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் இளமைப்பருவம் பற்றி...

என் பிறந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமழபாடிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை என்னும் சிற்றூர்.என் தந்தையார் புலவர் மருதமுத்து.தமிழாசிரியராகவும்,ஓவிய ஆசிரியராகவும் விளங்கியவர்.நான் 10.10.1939 இல் பிறந்தேன்.என் தந்தையார் பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் நூல்களை எப்பொழுதும் படிப்பவர்.அவர் வழியாகப்பண்டாரத்தாரையும் அவர்தம் நூல்களையும் அறிந்தேன்.

எங்கள் ஊரைச் சுற்றி வரலாற்று முதன்மை வாய்ந்த பல ஊர்கள்,கோயில்கள்,ஏரிகள் உள்ளன.இந்தப் பின்புலம் எனக்கு வரலாற்றுத் துறையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.எங்கள் ஊருக்கு அருகில் திருமழபாடி, கீழைப்பழூர், கண்டாராதித்தம், திருவையாறு,தஞ்சாவூர், அரியலூர்,குலமாணிக்கம்,செம்பியக்குடி,ஆலம்பாக்கம்(மதுராந்தக சதுர்வேதிமங்கலம்), செம்பியன் மாதேவி ஏரி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய ஊர்களும் பிற அடையாளங்களும் எங்கள் பகுதியின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன.இந்தச் சூழல் என்னை இளம் அகவையிலேயே வரலாற்றில் ஆர்வம் வரும்படி செய்தது.

உங்கள் கல்வி பற்றி...

திருமழபாடியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். சமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புப் பயின்றேன்.தேசியக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தேன். திருப்பராய்த்துறையில் பி.டி என்ற ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியேற்றேன்.1966 இல் முதுகலை வரலாறு படித்துக் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றேன்.

வரலாற்றுத் துறைக்கு உங்களின் பங்களிப்பு...

தமிழ்நாட்டு அரசின் பாட நூல் நிறுவனத்துக்கு முதலாம் இராசேந்திரசோழன் பற்றிய நூல் எழுதி வழங்கியுள்ளேன்(1973).இதற்கு முன் இதுபோல் தனி அரசனைப் பற்றி விரிந்த நூல் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.பின்னர்ப் பாண்டியர் வரலாறும் எழுதி வழங்கினேன்.அதனை அடுத்து இரசிய நாட்டு வரலாறும் எழுதி வழங்கினேன்,இவ்வாறு அரசு நிறுவனத்துக்கு மூன்று வரலாற்று நூல்கள் எழுதி வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தொல்பொருள்,அகழாய்வு,கல்வெட்டு,நாணயங்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்து பல ஆய்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளேன்.என் வரலாற்றுத் துறைப் பங்களிப்பைக் கண்டு பல நிறுவனங்கள் சிறப்புச் செய்துள்ளன.அவற்றுள் வரலாற்று வித்தகர்,வரலாற்றுச்செம்மல்,தமிழக வரலாற்று மேதை என்னும் பட்டங்களைச் சிறப்பிற்குரியனவாகக் கருதுகிறேன்.


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

உங்கள் இலக்கியத்துறைப்பங்களிப்பு பற்றி...

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் என்ற பேரகராதிக்கு 200 மேற்பட்ட கட்டுரைகள் நான் எழுதி வழங்கியுள்ளேன். என் தந்தையார் உடன் பிறப்புகள் மூவரின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.என் நூல்களை வெளியிட்டுள்ள துடன் தமிழறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் தொகுத்த சங்க நூற் சொல்லடியம் என்ற நூலின் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன்.அறிஞர் கோடப்பிள்ளை எழுதிய பண்டிதமணியார் நூலையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்து அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களை என்னுடைய கொங்கு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டு வருகிறேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி...

இலங்கை,அமெரிக்காவுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்துள்ளேன்.என் மகன்கள் இருவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.அங்குப் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தமிழ் வரலாறு பற்றி உரையாற்றியுள்ளேன்.அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய பட்டறிவும் எனக்கு உண்டு.அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியகங்கள், நூலகங்களைப் பயன்படுத்திய பட்டறிவும் உண்டு.

உங்கள் நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பட்டியலிட முடியுமா?

தமிழக வரலாற்றில் புதிய ஒளி,சுற்றுலாவியல்,தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்,வேட்டுவர் வரலாறு,முத்தரையர் வரலாறு,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்,கொங்குச் சமுதாயம், கருவூரார்வரலாறு,வெஞ்சமன் வரலாறு,கரூர் பசுபதீசுவரர் கோயில் தலவரலாறு, தொல்லியல், தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள்,கருவூரும் கன்னித்தமிழும், தமிழ்நாடும் தொல்லியலும் உள்ளிட்ட நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் பழங்காசு இதழின் சிறப்பாசிரியராகவும்,பல்வேறு வரலாற்று ஆய்வு அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ள பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நடமாடும் வரலாற்று நூலகம் எனில் மிகையன்று.

பேராசிரியரின் முகவரி:
ம.இராசசேகர தங்கமணி
488/9, பாண்டியர் நகர்,
கரூர்-639 001
செல்பேசி: 94430 88144

நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் இப்போது...

நண்பர்களே இனி இளம் சிங்கங்களின் பதிவினை உடனடியாக TWITTER மற்றும் FACEBOOK ல் காணலாம்
Twitter and facebook Username : sanjai28582

புதன், 15 பிப்ரவரி, 2012

முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா

திருச்சி, பிப். 11: திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். வழக்குரைஞர் பி. சரவணன், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் ஜி. லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

THANKS : DINAMANI

தமிழர் நலன் ஜெ., முடிவுகளுக்குதமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவுஅளிக்கும்

திருச்சி: "தமிழக நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவு அளிப்பது' என்று, திருச்சியில் நடந்த அச்சங்கத்தின் காலாண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் காலாண்டு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவரும், பொதுச்செயலாளருமான பாஸ்கரன், செயலாளர் வக்கீல் சிவராஜ், நிர்வாகிகள் கருணாகரன், பெரியசாமி, மூர்த்தி, ஜெயச்சந்திரன், சங்கர், வேலாயுதம், குஞ்சான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், முத்தரையர் என தலைப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களில் முத்துராஜா முத்திரியர், முத்தரையர் பி.சி., பட்டியலிலும், வலையர், சேர்வை, அம்பலக்காரர் எம்.பி.சி., பட்டியலிலும் உள்ளனர். இந்த அரசாணையில் உள்ள முரண்பாட்டை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக முதல்வரை வலியுறுத்தும் கோரிக்கை உள் அரங்க மாநாடு திருச்சியில் ஏப்ரல் மாதம் நடக்கிறது.தமிழக அமைச்சரவையில் சிவபதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியமைக்கும், திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ததுக்கும், தரமான பூங்கா திருச்சியில் அமைக்கவும், கூடங்குளம் அணுஉலையை பிரச்னையை ஆராய குழு அமைக்கவும், விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு உச்ச வரம்பை உயர்த்தியும் உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு முத்தரையர் சங்கம் பாராட்டை தெரிவிக்கிறது. மேலும் தமிழக நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மாநாட்டை துறையூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: தினமலர்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

முத்தரையர் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட முத்தரையர் நலச்சங்க ஆலோசனை கூட்டம், கவுரவ தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராகவன் வரவேற்றார். சங்க தலைவர் நாகசாமி, பொருளாளர் மாணிக்கம், இளைஞரணி செயலாளர் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் கமலநாதன் வரவேற்றார். கூட்டத்தில், சங்க உறுப்பினர் சேர்ப்பு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றுவது, முத்தரையர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து சிறப்பு சலுகை பெறுவது, திருவாலங்காடு ஒன்றிய செயலாளராக வி.அரிதாஸ் என்பவரை நியமிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

THANKS TO: DINAKARAN