Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 29 ஜூலை, 2012

Caste outfit leader, kin held for assault

The president of Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam, a caste outfit, was arrested along with his sons and sons-in-law on Thursday for allegedly assaulting a man belonging to a rival outift following a rift. Police said on March 12, the members of the Mutharaiyar Sangam, under the instructions of their president R Viswanathan (65), barged into the house of the founder president of Veera Mutharaiyar, K Selvakumar (40), and ransacked his house. They also assaulted him and threatened him with dire consequences. It is said that Viswanathan’s henchmen warned Selvakumar to dissolve the outfit, which was akin to their Sangam. Subsequently, Selvakumar lodged a complaint with E-Pudhur Police and a case was registered. There was a prolonged rivalry between the members of both the outfits and they indulged in frequent clashes. As both outfits belonged to the same community, they were very particular on celebrating their caste festivals. It is said that Veera Mutharaiyar Sangam members had been gaining popularity by organising a series of celebrations for the Mutharaiyars, which apparently did not go down well the Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam. Based on the complaint, police arrested Viswanathan, his sons Ramprabhu (32) and Balamurugan (28), his sons-in-law R Ravi Sankar (38) and M Dharmaraj (37), early on Thursday. Following interrogation, they were produced before the Judicial Magistrate Court II and Judge Rajendran remanded all the five in judicial custody till August 9. They were then lodged in the central prison. A posse of policemen was deputed at the Court and across the city.
NEWS FROM : THE NEW INDIAN EXPRESS

SETC bus damaged

Cadre of Tamil Nadu Mutharaiyar Sangam damaged a State Transport Corporation bus near Vedaranyam in protest against the arrest of their leader, on Friday. Tamil Nadu Mutharaiyar Sangam cadre intercepted the SETC bus heading to Thiruthuraipoondi near Kariapattinam, and pasted condemnation notices on the bus protesting the arrest of the outfit’s leader Vishawanathan in Tiruchi on Thursday. A few members broke the front glass and window panes of the bus. A case has been registered based on the driver’s complaint, and four persons have been named accused.
NEWS FROM : THE HINDU

சனி, 28 ஜூலை, 2012

தொழிலாளி கொலையில் 4 பேர் கைது போலீஸ் நிலையம் முற்றுகை

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் அருகே விவசாய தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி என்ற பாலாஜி(33). விவசாயி. இவரது தோட்டத்தில் நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டத்தை சேர்ந்த வீராசாமி(30) கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் விழாவை காண சென்ற வீராசாமி மர்மமான முறையில் இறந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஜோதிகுமார் என்பவர் புகார் செய்தார். வீரா சாமியை பாலஜி,அவரது தம்பி ஈஸ்வரன், பாலமுருகன், டிரைவர் சுரேஷ் ஆகியோர் தாக்கினர் என்று புகாரில் அவர் கூறியிருந்தார். வீராசாமியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கோவை எஸ்.பி,(பொறுப்பு) பொன்னி(ஈரோடு), நீலகிரி எஸ்.பி,நிஜாமுதீன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வீராசாமி சாவுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் தர வேண்டும், வீராசாமியின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எஸ்.பி. நிஜாமுதீன் கூறுகையில், வீராசாமி மரணத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவரது மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வருவாய்துறை மூலம் பரிசீலிக்கப்படும் என்றார். அதை ஏற்ற உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த கொலை தொடர்பாக விவசாயி முத்துசாமி என்கிற பாலாஜி(33) அவரது தம்பி ஈஸ்வரன்(31), சதீஷ்குமார்(20), பாலசுப்பிரமணியம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு, ஆயுதம் வைத்து தாக்குதல், கூட்டுகொலை முயற்சி, வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை, கொங்குநாடு முன்னேற்ற சங்கம்,முத்தரையர் சங்கம், சோளிய வேளாளர் பேரவை ஆகியவற்றை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கொங்குநாடு முன்னேற்ற சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வீராசாமி கொலையில் வன்கொடுமை சட்டம், ஆயுதம் ஏந்தி தாக்குதல் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த மனுவையும் கொடுத்தனர்.
NEWS FROM : DINAKARAN

கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம், ஜூலை 27: கோவில் திருவிழாவில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான விசாரணைக்குப் பின்னரே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். ÷மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, அரிஜன காலனியைச் சேர்ந்த வீராசாமி (30). தேவனாபுரத்தில் உள்ள பாலாஜி என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த இன்னிசை நிகழ்ச்சியில் வீராசாமிக்கும், பாலாஜியின் தம்பி ஈஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீராசாமியை பாலாஜியும், அவரது நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ÷படுகாயம் அடைந்த வீராசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பாலாஜி (32), சதீஷ் (20), பாலசுப்பிரமணியம் (41) ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிந்து, மேட்டுப்பாளையம் போலீஸôர் தேடி வருகின்றனர். ÷இந்தக் கொலை வழக்கில், சம்பந்தமில்லாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியும், இதுகுறித்து முறையான விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும், கொங்கு முன்னேற்றக் கழகம், கொங்கு வேளாளர் பேரவை, முத்தரையர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் 200-க்கு மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ÷கொங்கு முன்னேற்றக் கழக வடக்கு மாவட்டச் செயலர் மாணிக்கராஜ், மாநில அமைப்பாளர் நாகராஜ், நகர கொங்கு வேளாளர் பேரவைத் தலைவர் சி.பொன்னுசாமி, பாஜக நகரத் தலைவர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். ÷இதைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கை மனுவை நீலகிரி எஸ்.பி. நிஜாமுதீனிடம் வழங்கினர்.
NEWS FROM : DINAMANI

வேதையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

வேதாரண்யம்: திருச்சியில், முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் திடீரென கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வேதையில் அரசு பஸ்ஸின் கண்ணாடியை முத்தரையர் சங்க அமைப்பினர் கல்வீசி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சியில், முத்தரையர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் நேற்று முன்தினம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து வேதாரண்யம் அடுத்த செண்பகராயன்நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கல்வீசி, நேற்று அதிகாலையில் அப்பகுதியை சேர்ந்த முத்தரையர் சங்கத்தினர் திடீரென தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து, புரட்சி சிங்கங்களின் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக கரியாப்பட்டணம் போலீஸார், வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NEWS FROM : DINAMALAR

வெள்ளி, 27 ஜூலை, 2012

NEWS FROM IBN NEWS

Tiruchy: The president of Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam, a caste outfit, was arrested along with his sons and sons-in-law on Thursday for allegedly assaulting a man belonging to a rival outift following a rift. Police said on March 12, the members of the Mutharaiyar Sangam, under the instructions of their president R Viswanathan (65), barged into the house of the founder president of Veera Mutharaiyar, K Selvakumar (40), and ransacked his house. They also assaulted him and threatened him with dire consequences. It is said that Viswanathan’s henchmen warned Selvakumar to dissolve the outfit, which was akin to their Sangam. Subsequently, Selvakumar lodged a complaint with E-Pudhur Police and a case was registered. There was a prolonged rivalry between the members of both the outfits and they indulged in frequent clashes. As both outfits belonged to the same community, they were very particular on celebrating their caste festivals. It is said that Veera Mutharaiyar Sangam members had been gaining popularity by organising a series of celebrations for the Mutharaiyars, which apparently did not go down well the Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam. Based on the complaint, police arrested Viswanathan, his sons Ramprabhu (32) and Balamurugan (28), his sons-in-law R Ravi Sankar (38) and M Dharmaraj (37), early on Thursday. The president of Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam was arrested along with his sons and sons-in-law. Following interrogation, they were produced before the Judicial Magistrate Court II and Judge Rajendran remanded all the five in judicial custody till August 9. They were then lodged in the central prison. A posse of policemen was deputed at the Court and across the city.

NEWS FROM DINAKARAN

முத்தரையர் சங்க தலைவர் கைதை கண்டித்து பஸ் கண்ணாடி உடைப்பு

வேதாரண்யம், ஜூலை. 27 வேதாரண்யத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இதனை டிரைவர் கோபால்சாமி ஓட்டிச் சென்றார். கண்டக்டராக சுந்தர்ராஜன் இருந்தார். இந்த பஸ் காலை 4 மணியளவில் செண்பகராய நல்லூர் வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோடு ஓரம் நின்ற வாலிபர் கையை காட்டினார். அவர் பஸ்சில் ஏறத்தான் வருகிறார் என டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் நின்றதும் அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கடையால் பஸ் முன்பக்க கண்ணாடியை சரமாரியாக உடைத்தார். அந்த சமயத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பஸ்சின் பின் பக்கத்தில் துண்டு பிரசுரம் நோட்டீசை ஒட்டினார்கள். பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பஸ்சின் பின் பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- முத்தரையர் முன்னேற்ற கழக மாநில தலைவர் விசுவநாதனை கைது செய்த தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டடது குறித்து டிரைவர் கோபால்சாமி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்யதார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
NEWS FROM : MALAIMALAR

DINADHANTHI NEWS...

வியாழன், 26 ஜூலை, 2012

முத்திரையர் சங்கத்தலைவர், மக‌‌ன் கைது

வ‌ன்முறை‌யி‌ல் ஈடுப‌ட்டதாக கூ‌றி முத்திரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் பரதன் ஆ‌கியோரை திருச்சியில் போ‌‌லீசா‌ர் இ‌ன்று கைது செ‌ய்து‌ள்ளன‌ர். ‌திரு‌ச்‌சி‌யி‌ல் அ‌ண்மை‌யி‌ல் நட‌ந்த முத்திரையர் விழாவின்போது வன்முறை ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் அரசு பேரு‌ந்துக‌ள், கடைக‌ள் அடை‌த்து உடை‌க்க‌ப்ப‌ட்டன. இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து மு‌த்‌திரைய‌ர் ச‌ங்க‌‌த் தலைவ‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன், அவரது மக‌ன் பரத‌ன் ஆ‌கியோரை தேடி வ‌ந்தன‌ர். தலைமறைவாக இரு‌ந்த அவ‌ர்களை இ‌ன்று ‌திரு‌ச்‌சி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். இதனா‌ல் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். news from: webdunia tamil

திருச்சியில் முத்தரையர் சங்க தலைவர் உள்பட 5 பேர் கைது

திருச்சி, ஜூலை 26: திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸில் அளித்த புகாரில், ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் ஆகிய ஐவரும் சேர்ந்து, அவரைக் கடத்தி மிரட்டியதாகவும், வீடு புகுந்து சூறையாடியதாகவும் கூறியிருந்தார். செல்வகுமார், திருச்சியில் வீரமுத்தரையர் பேரவையின் நிர்வாகி. இதை அடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறை, திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் ஜேஎம்2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ராஜேந்திரன் அனுமதி அளித்தார். இதை அடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் திருச்சி புறநகரில் சற்று பதற்றம் நிலவியது. NEWS FROM : DINAMANI

வாலிபர் வீடு சூறையாடி கொலை மிரட்டல்: முத்தரையர் சங்கத்தலைவர் மகன்களுடன் கைது

திருச்சி வீர முத்தரையர் சங்க நிறுவன தலைவர் செல்வகுமார். திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 12.3.2012 அன்று செல்வகுமார் மண்ணச்சநல்லூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்பினர் செல்வகுமாரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி செல்வகுமார் கோவிலுக்குள் சென்றார். கடந்த 24.3.2012 அன்று பெரிய கொத்தமங்கலத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அங்கு அவரது வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களையும் சூறையாடியது. அவரது மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனை தடுத்த செல்வகுமாரை முத்தரையர் சிலைக்கு இனி மாலை போடக்கூடாது, மீறினால் சுந்தர் நகர் மாணிக்கத்தை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டிவிட்டு சென்றது. செல்வகுமார் தமிழக முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்டு போலீஸ் உதவி கமிஷனர் காந்தி, எடமலைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகிய 5 பேர் மீதும் செல்வகுமார் வீட்டை சூறையாடுதல் (427), கொலை மிரட்டல் (506) விடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆர்.விசுவநாதன் வீட்டிற்கு போலீஸ் படை சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவரது மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முத்தரையர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். முத்தரையர் சங்க நிறுவன தலைவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
NEWS FROM : MALAIMALAR

முத்தரையர் சங்க தலைவருக்கு ஆக.,9 வரை சிறை

திருச்சி: இன்று காலை கைது செய்யப்பட்ட தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9ம் தேத‌ி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை விஸ்வநாதனின் தூண்டுதல் பேரில் சிலர் அவரை அடித்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செல்வகுமார் எடமலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். செல்வகுமாரின் புகாரை ஏற்று விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து அவர்கள் ஐந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‌போலீசார் எதற்காக, எந்த வழக்குக்காக கைது செய்தனர் என்ற விபரமே தனக்கு தெரியாது என்று கூறினார். இதனிடையே விஸ்வநாதன் கைதால், திருச்சி புறநகரில் சிறிது பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது NEWS FROM : DINAMALAR

புதன், 25 ஜூலை, 2012

ஆர்.விஸ்வநாதன் கைது

இன்று அதிகாலை முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் திரு. ஆர். விஸ்வநாதன் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்

திங்கள், 23 ஜூலை, 2012

News from Gnanasekaran Veerapandian

செய்யுங்கள்.அனைவருக்கும் முக்கியமான தகவல். யாரும் இதை அலட்சிய படுத்த வேண்டாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைவரும் தங்களுடைய கல்வி தகுதியை பதிவு செய்திருப்பீர்கள். அதற்க்கு ஆதாரமாக உங்களிடம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை வைத்திருப்பீர்கள். அனால் அவை அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளமான http://tnvelaivaaippu.gov.in/Empower/இல் LOG IN செய்து அதனுள் சென்று PRINT ID கொடுத்து, அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா, உங்கள் கல்வி தகுதி, ஜாதி, பதிவு வருடம் சரியாக உள்ளத என பார்த்து PRINT OUT எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலபேருடைய பதிவுகள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யபடாமல் வெறும் " NAME & DATE OF BIRTH" மட்டுமே உள்ளன. கல்வி தகுதி பதிவேற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு இருந்தால் பதிவு மூப்பு பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாமல் போய்விடும். இணையதளத்தில் LOG IN செய்யும் போது அதற்கான வழிமுறைகளை நன்றக படித்து பின்னர் LOG IN செய்யுங்கள். நமது உறவினர் அனைவருக்கும் இதனை தெரிவியுங்கள Gnanasekaran Veerapandian

திங்கள், 16 ஜூலை, 2012

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன், துணைத்தலைவர் செல்லாண்டி, இளைஞரணி செயலாளர் பெரியகோபால், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பெரியசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், கருணாகரன், சங்கர், பாபு, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முத்தரையர் சமுதாய பட்டியலில் உள்ளவர்களுக்கு கல்வி, ÷ வலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கிட, தமிழக அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் தெ õடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். திருச்சி காவேரி ஆற்றில் சம்மர் பீச் அமைத்தும், நø டபயிற்சி செய்பவர்களை பள்ளி, கல்லூரி மைதானங்களை பயன்படுத்திட அனுமதி பெற்றுத்தந்த அமைச்சர் சிவபதிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், உண்மையான ஜாதிவாதி மக்கள் தொகையை தெரிந்து கொள்ள, தமிழக அரசே மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மண்ணச்சநல்லூர் எம்.ஆர்., பாளையத்தில் விலங்குகள் சரணாலயம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்திட வேண்டும்.முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை இணைக்கும் ஸ்ரீரங்கம்-நொச்சியம் கொள்ளிடம் தரைப்பாலம், கிளிக்கூடு-லால்குடி கொள்ளிடம் தரைப்பாலம் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட மண்ணச்சநல்லூர்-சிறுபத்தூர் உப்பாற்று நீர்தேக்கம் அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த அணைக்கு நீர்வரும் வரத்து வாய்க்கால்கள், வாரிகள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சீர்படுத்தி, அணையை செப்பனிட்டு, பூங்காவை பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நன்றி: தினமலர்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

ரவிகுலதிலகன்-கல்கி ராஜேந்திரன்-சரித்திரநாவல்

ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம் தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன். பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன். முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள் இவளை அடையவும் சுதந்திரத் திருநாட்டை அடையவும் குவளை(குறிஞ்சி மகள்), சீனன்(மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன் ஊமையன்) மற்றும் ஜெய்சிங்கன் இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்.. நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்.. இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்.. ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்.... மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்.. குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது... ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்.. ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது.. வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல் ”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது.. மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை.. பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு .. கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்.. பதிவிறக்கச்சுட்டி இதோ: http://www.mediafire.com/?yauns32keggc4cp
Author: Tamil nesan website: http://thamizhthenee.blogspot.com/2012/07/blog-post_8391.html

செவ்வாய், 10 ஜூலை, 2012

VAO EXAMINATION

வெள்ளி, 6 ஜூலை, 2012

JOB

அமைச்சர் என்,ஆர், சிவபதி

புதுக்கோட்டை கல்வெட்டு செய்தி : (நன்றி: தினத்தந்தி)

வீரபாண்டிய கட்டபொம்மன்

முத்தரையர் சங்க மாநில தலைவர் திரு. ராஜமாணிக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

திங்கள், 2 ஜூலை, 2012

JOB

கல்வி உதவித்தொகை

ஞாயிறு, 1 ஜூலை, 2012

JOB