1300 - வருடங்களுக்கு முந்தைய கதைக்களம் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவலை தம்பி ஒருவர் எனக்கு பரிந்துரைத்தப் போது எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் படிக்கத் துவங்கி நாவலாசிரியர். திரு. சாண்டில்யனின் முன்னுரையிலும், அதைத் தொடர்ந்த கதையின் தொடக்கத்திலும் "முத்தரையர்கள்" குறித்த தவறான சித்தரிப்புக்கள், முத்தரையனான எனக்கு இயற்க்கையாய் எழும் கோபம், கதையின் போக்கில் எரிச்சலுடனேயே பயணப் பட வைத்தது,
"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பற்றிய அத்தியாயம் தொடங்கும்போது எரிச்சல் அடங்கி ஆர்வம் மிகுந்தது, நாவலாசிரியர் என்னதான் "முத்தரையர்கள்" ஆண்ட காலத்தை இருண்ட காலம் என்றும், துன்பம் நிறைந்தது என்றும் காண்பிக்க நினைத்தாலும், முத்தரையர்களின் வீரத்தினை, நேர்மையினை, எதிரிகளிடம் காட்டும் இரக்கத்தினை, துரோகத்தை துரோகத்தால் இல்லாமல் வீரத்தால் வெல்ல நினைக்கும் உறுதி என்று முத்தரையர்களின் இயற்க்கை குணத்தினை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
உலகம் வியக்கும், யாருக்கும் தலை வணங்காத வீரம் கொண்ட
"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" தனது வளர்ப்பு மகளிடம் காட்டும்
பாசமும், அந்த அபலைப் பெண்ணின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் விதமும், கற்பனைதான்
என்றாலும் "முத்தரையர்களின்" பாசமும், வீரமும் உலகம் வியக்கும் உண்மைகள்
என்பதை நாவலாசிரியர் உரக்கச் சொல்கிறார்.
வீரத்தின் இலக்கணமாய் வாழ்ந்த "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" குறித்த தகவல்கள் / வரலாறுகள் வஞ்சகர்களால் மறைக்கப் பட்டும்கூட நாவலாசிரியர் மரியாதைக்குறிய "சாண்டில்யன்" உண்மையை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்பட்டது நிச்சயமாக அவருக்கு நாம் கடமைப் பட்டவர்கள் ஆகின்றோம்.
இது இனத்தின் மீது ஆர்வமில்லாமல் இருக்கும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய பல தகவல்கள் அடங்கிய நூல் ஆதலால் எனது மதிப்பிற்க்கு உரிய உறவுகளிடம் நான் வேண்டுவது, யாருக்கேனும் ( நமது சமூகத்தவர்களுக்கு) நீங்கள் பரிசளிக்க விரும்பினால் நிச்சயமாக "சாண்டில்யனின் மோகனச்சிலை" புத்தகத்தினை பரிசளித்து வரலாற்றினை அறிய செய்யுங்கள், இந்த நூல் ரூபாய் . 120 / - விலையில் " வானதி பதிப்பகம்,
23, தீனதயாலு தெரு, தியாகராய நகர், சென்னை -
600 017 " என்ற முகவரியில் கிடைக்கும், இந்த புத்தகத்தினை இலவசமாக படிக்க (CLICK) இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால் sanjai28582@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் PDF வடிவத்தில் அனுப்பியும் தருகிறேன்.
நிறைய நமது உறவுகளுக்கு வரலாறு தெரியாமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கின்றார்கள், நிச்சயமாக இந்த நூல் நம்மினத்தவரின் தாழ்வு மனப்பான்மையை இல்லாமல் செய்து, நெஞ்சம் நிமிர்த்தி, கர்வத்தோடு "முத்தரையர்" என்று சொல்ல வைக்கும்.
என்றும் சமூகப் பணியில்.....
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்,
குறிப்பு : இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும் எந்த தகவலினையு ம் எடுத்து வெளியிடும் நண்பர் கள் இது http://illamsingam. blogspot.ae இந்த வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்புடன் வெளியிட வேண்டுகிறோ ம், நன்றி...!
Download Link : http://orathanadukarthik.blogspot.in/2015/01/blog-post_10.html
http://www.mediafire.com/file/p44psb8k4ledzty/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.pdf
இன்னும் பல நாவல்கள் நமது முத்தரைய மன்னனைப் பற்றி உள்ளன. கவுதம நீலாம்பரன், சாண்டில்யன்,தாமரை செந்தூர் பாண்டி ஆகியோர் எழுதி உள்ளனர்.
பதிலளிநீக்குபுத்தகத்தின் பெயரையும் கூறினாள் வாங்க ஏதுவாக இருக்கும்.
நீக்குபோன வாரம் கோவை சென்றபோது, மோகனசிலை நாவலை தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த வாரம் கட்டாயமாக வாங்கி வருவேன். படித்துவிட்டு வீரவரலாற்று பதிவுகளை இடுவோம்.
பதிலளிநீக்கு