செவ்வாய், 24 செப்டம்பர், 2013

முத்தரையர் வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)

வேட்டையசாமி துணை
மறைக்கப்பட்டசரித்திரம்...!                                                         அழிக்கப்பட்ட சரித்திரம்...!!
வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)

வாழ்க சோழ நாட்டு பல்லவ நாட்டு முத்தரையர்கள்
வெல்க சோழ நாட்டு வீர சோழ மூப்பர்களின் வீரம்
சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள் இந்த நான்கு மாமன்னர்களும் நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்களே
தமிழக வரலாற்றில் 40 க்கும் மேற்பட்ட போர்களை சந்தித்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களே...
மூப்பர் என்றால் மன்னர்களின் சேனை தலைவர்கள் என்று அர்த்தம்.
மூப்பனார் என்றால் பகவான் கந்தன் முருகனின் (வீரபாகு) சேனைத்தலைவர்கள் என்று அர்த்தம்
பதிமூன்று தலைமுறைகளாக சேர, சோழ, பாண்டிய, பல்லவ மாமன்னர்களை போரில் வென்று தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்களே, 60 தலைமுறைகளாக பாளையகாரர்களாகவும் இருந்தவர்கள் முத்தரையர்கள்.
சோழ வம்சம் (தஞ்சாவூர்)
பாண்டிய வம்சம் (மதுரை)
பல்லவ வம்சம் (காஞ்சிபுரம்)
 நாயக்க வம்சம் (விஜய நகர பேரரசு)
எள்ளாலன் வம்சம் (ஈழ நாடு மணிபல்லவ தீவு (இலங்கை)
சிங்கள வம்சம் (அனுராதபுரம், கண்டி) (இலங்கை)
ஆற்க்காட்டு நவாப் கான்சாகிப்
ஜாக்சன் துரை (பிரிட்டன் தளபதி)
வெல்ஷ் துரை (பிரிட்டம் தளபதி)
மறவர் நாட்டு மாமன்னன் (மறவர் நாடு என்பது இப்போதைய சிவகங்கை) உடையத்தேவர், இத்தனை பேரிடமும் அமைச்சர்களாகவும், அரசியல் சதுரங்கவாதிகளாகவும் போர்படை தளபதிகளாகவும், சேனை தலைவர்களாகவும், சிப்பாய்களாகவும் இருந்தவர்கள் பல்லவ நாட்டு சோழ நாட்டு வீர சோழ மூப்பர்கள் என்ற முத்தரையர்கள்
12 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படையெடுப்பாலும், முஸ்லீம்களின் படையெடுப்பாலும் சோழ சாம்ராஜ்ஜியம், பல்லவ சாம்ராஜ்ஜியம் சிதறி போனது சோழர்கள், பல்லவர்கள் பாதிபேர் கொல்லப்பட்டும் மீதிபேர் அடிமைகளாகவும், பாதிபேர் காடுகளில் வேட்டையர்களாகவும் மீதிபேர் குறு நில மன்னர்களுக்கு அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும், சேனை தலைவர்களாகவும், சிப்பாய்களாகவும் வாழ்ந்த்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

ராஜேந்திர சோழன் இலங்கை, அந்தமான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளின் மீது படையெடுத்த போது அப்போரில் பெரும்பாண்மையாக இருந்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழ நாட்டு வீர சோழ மூப்பர் சமுதாய மக்களே..!

ஒரு மூப்பர் சமுதாயத்தை சேர்ந்தவன் போர்களத்தில் ஒரு யானையை அடக்கும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

சோழ நாட்டு வீட சோழ மூப்பர்கள் வீரம், விவேகம், முரட்டு குணம், போர்குணம் உடையவர்களாக இருந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.
மதுரைக்கு கிழக்கு, மேற்கு, தெற்காக வாழும் சோழ நாட்டு, பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களின் வரலாற்று சரித்திரம் வருமாறு...

1772 - ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டின் தலைமை அரசராக இருந்தவர் ஆற்காடு நவாப், அப்பொழுது தமிழ் நிலம் 27 பாளையங்களாக, 27 நாடுகளாக இருந்தது, 27 பாளையங்களுக்கும் பேரரசாக இருந்தவர் ஆற்காடு நவாப், அவருடைய போர்படையில் தலைமை தளபதியாக இருந்தவர் கான்சாஹிப் அவருடைய துணை தளபதியாக இருந்தவர்கள் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த கான்சாஹிப்பின் கையிலிருந்து "சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள்" என்ற பட்டமும், பட்டயமும் பெற்ற முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் பதினைந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாய மக்கள் கான்சாஹிப்பின் போர்படையில் அதாவது யானைபடை, குதிரைபடை, தரைபடை, வில் அம்பு படை, என்று எல்லா போர் படைகளிலும் இருந்தவர்கள் பல்லவ நாட்டு, சோழ நாட்டு வீர சோழ மூப்பர் என்ற "முத்தரையர்களே", காண்சாஹிப்பின் துணை தளபதியாக விளங்கிய முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் மூவருமே "வளரிகலை" கற்றவர்கள் அதாவது "போதிதர்மனுக்கு" இணை ஆனவர்கள் என்பது தமிழக மக்கள் அறியாத தகவல்.

1785 ஆம் ஆண்டு வாக்கில் ஆற்காடு நவாப் பிரிட்டிஷ்சாரிடம் வாங்கிய கடனை திருப்பித்தர முடியாமல் போனதால் ஆற்காடு நவாப்பின் பேரரசுக்கு உட்பட்டு இருந்த 27 பாளையக்காரர்களிடமும் (குறு நில மன்னர்கள்) வரி வசூலிக்கும் உரிமையையும், தன்னிடம் இருந்த போர்படை தளபதிகள் கான்சாஹிப், முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் உள்ளிட்டோருடன் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட படை பரிவாரங்களையும் ஆங்கிலேயருக்கே அளித்தார் ஆற்காடு நவாப், கான்சாஹிப், முத்தழகு மூப்பர், வீரணன் மூப்பர், ஆதியான் மூப்பர் ஆகியோர் ஆங்கிலேயருடன் இணைந்து வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர்களுடன் போர் புரியும் கட்டாயம் ஏற்பட்டது, போர்களத்தில் இந்த தளபதிகள் எதிர்கொண்ட பாளையக்காரர்கள் விபரம் வருமாறு.
1)   நெல்கட்டும் சேவல் பாளையக்காரர் (மன்னர்) புலித்தேவர் தளபதி ஒன்டிவீரன் இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(i)        கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 6000
(ii)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 3000
(iii)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000

2)   மறவர் நாடு என்று அழைக்கப்பட்ட (சிவகங்கை சீமை) மகாராணியார் வீரமறத்தி வேலு நாச்சியார் அவரது தளபதிகள் சின்ன மருது, பெரிய மருது இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(iv)       கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 5000
(v)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 2000
(vi)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 3500

3)   பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் (மன்னர்) வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைதுரை தளபதிகள் வெள்ளையத்தேவன் சுந்தரலிங்கம், தானாபதிபிள்ளை இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(vii)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 4500
(viii)      பிரிட்டிஷ் சிப்பாய்கள் (ஜாக்சன் துரை தலைமையில்) - 3000
(ix)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000

4)   விருப்பாச்சி பாளையக்காரர் (மன்னர்) கோபால் நாயக்கர் இவரை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(x)       கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 3500
(xi)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 2000
(xii)      முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 1500

5)   மறவர் நாட்டை (சிவகங்கை சீமை) ஆண்ட வீரமறத்தி வேலு நாச்சியாரின் மறைவிற்க்கு பிறகு அவரின் வளர்ப்பு மகன் உடையத்தேவனுக்கு கிடைக்க வேண்டிய ராஜபட்டத்தை மருது பாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் ஆத்திரம் அடைந்த உடையத்தேவன் பிரிட்டிஷ்சாரின் உதவியை நாடி சின்ன மருது, பெரிய மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்டார். மருது சகோதரர்களை வென்ற போரில் உடையத்தேவன்,  பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(xiii)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 2500
(xiv)      பிரிட்டிஷ் சிப்பாய்கள் (பிரிட்டிஷ் தளபதி வெல்ஸ் துரை தலைமையில்) - 4000
(xv)      முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 9000

6)   எட்டயபுரம் பாளையக்காரர் (மன்னர்) ஜெகவீரபாண்டிய நாயக்கர் அவரது போர்படைத் தளபதி அழகுமுத்துக்கோன் (யாதவ்) இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(xvi)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 6000
(xvii)     பிரிட்டிஷ் சிப்பாய்கள்  - 2500
(xviii)     முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000
இத்தனை பாளையக்காரர்களையும் (மன்னர்களையும்), தளபதிகளையும் வெற்றி பெற்ற போரில் பெரும்பாண்மையாக இருந்தவர்கள் கான்சாஹிப்பின் முஸ்லீம் மக்களும், சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் எனப்படும் முத்தரையர் சமுதாய மக்களே, இந்த எல்லா போர்முனையிலும் ஆங்கிலேயப்படை என்பது குறைவானதாகவே இருந்தது. இத்தனை பாளையக்காரர்களையும் (மன்னர்களையும்), தளபதிகளையும் போர்களத்தில் வென்ற பெருமையும், புகழும் கான்சாஹிப்பையும், சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களாகிய முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் தலைமையில் இருந்த முத்தரையர்களையே சாரும். இதில் கான்சாஹிப் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் அவர் ஒரு பச்சை தமிழன்
மேலே குறிப்பிட்ட எல்லா மன்னர்களின் பெயரிலும் இன்று ஒவ்வொரு சாதிய அமைப்புகள் உண்டு, இந்த எல்லா மன்னர்களும் நடந்த போர்களில் வெற்றி பெற்றார்களா ? தோல்வி அடைந்தார்களா ? என்பதை எல்லா சமூகங்களும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்கட்டும். தமிழனின் போர்களத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, உள் நாட்டவர், வெளி நாட்டவர் என்ற பாகுபாடு கிடையாது, வெற்றியா..!!! தோல்வியா...!!! என்பதுதான் விசயம், இதுதான் தமிழனின் வீரம், இந்த போர்கள் எல்லாம் நடந்தது சேர, சோழ, பாண்டிய, பல்லவ பேரரசுகள் வீழ்ந்து சுமார் 450 ஆண்டுகளுக்கு பின் இத்தனை மன்னர்களையும், தளபதிகளையும் போர்களத்தில் வென்றவர்கள் முத்தரையர்கள், மொத்தத்தில் முத்தரையர் சமுதாய மக்கள் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் சேர, சோழ, பாண்டிய மண்களை வென்ற மூன்றுதரையர்களாகவும், வளை எறி வீச்சில் வல்லவர்களாகவும், நாட்டை ஆளுவதில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களாகவும் இருந்தார்கள் என்ற வரலாறு மறைக்கப்பட்டது

இப்படிக்கு
கான்சாஹிப்பின் துணை தளபதிகள்
முத்தழகு மூப்பர் (வீர சோழ மூப்பர்)
ஆதியான் மூப்பர் ( பல்லவ நாட்டு மூப்பர்)
வீரணன் மூப்பர் (பாண்டிய நாட்டு மூப்பர்)
 இவர்களின் எட்டாவது தலைமுறை வம்சாவளி பேரன்

ஆர். சிங்கராஜ், மலேசியா
தொலைபேசி : 0175676917

இத்தனை மாமன்னர்களையும், தளபதிகளையும் போர்களத்தில் வென்ற முத்தரையர்கள் புதைக்கப்பட்டார்களா ? விதைக்கப்பட்டார்களா ?

கான்சாஹிப், பிரிட்டிஷ்சார் கூட்டாக ஏற்படுத்திய போர்படை தளங்கள் இன்றும் உள்ளது அவையாவன.
வீர சோழன் சிவகங்கை மாவட்டம்
சோழவந்தான் புதூர் - தூத்துக்குடி மாவட்டம்
சோழங்குருனை ஆணையூர் - மதுரை மாவட்டம்

இன்னும் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளது.
 





முத்தரையர் வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)

1 கருத்து:

  1. எனது அருமை முத்தரைய உறவே நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதிவு முத்தராய உறவுகளை சிருமைப்படுத்தும் விதமாக உள்ளது ஆங்கிலேயனஆங்கிலேயனின் படைவீரர்கள் என்பதே பெரிய அவமானம் நாட்டைக்காப்பாற்ற போராடியவர்களுக்கு ஏன் புகழ் உள்ளது என சிந்தியுங்கள் நீங்கள் எழுதியுள்ள விபரங்கள் மேலும் முத்தராயர் இனமக்களை அன்னியவனின் அடிமைகளாக சித்தரித்துள்ளீர் இதை படிப்போர் யாவரும் முத்தராயர் இனத்தை மோசமானவர்களாக கருதுவர் இதை நீக்கிவிடுங்கள்

    பதிலளிநீக்கு