எனது மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களோடு ஒரு வேண்டுகோளும்..!
எனதருமை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மனம் நிறைந்த தீபஒளி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கும் அதே நேரம் உரிமையோடு ஒரு வேண்டுகோளையும் வைத்திட விரும்புகிறேன்..!
உலகம் முழுவதும் பரந்து வாழும் முத்தரையர் எனும் உயர்குடிப்பிறப்புகளே நம் இனம் அரசியல் வீழ்ச்சியடையவும், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோவவும் பிரதான காரணியாக இருப்பது "மது அருந்தும் பழக்கமே" இதனால் நாம் இழந்ததும், இழந்துகொண்டு இருப்பதும் ஏராளம் இதை இனத்தின்பால் அக்கறையுள்ள ஒவ்வொரு முத்தரையனும் அறிவான்.
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”
என்ற வள்ளுவன் வாக்கு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நமக்கு சாலவும் பொருந்தும், "உயர்குடித் தன்மையாம் ஒழுக்கம் தவறுதல், தாழ்ந்த பிறப்பாகிவிடும்" அப்படி ஒரு நிலைமை நம் குலத்திற்க்கு வருவதை உண்மையான முத்தரையன் யாரும் விரும்ப மாட்டான் என்ற நான் நினைக்கிறேன்,
காசு உங்களுடையது..! உடம்பும் உங்களுடையது..!! யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது அதனால்தான் வேண்டுகோளாய் இதனை முன்வைக்கிறேன், குடிப்பது உங்கள் உரிமை சார்ந்த விசயம் அதே நேரம் ஒட்டுமொத்த இனத்தின் வீழ்ச்சிக்கும் தெரிந்தோ, தெரியாமலோ நீங்களும் காரணமாக அமைவது சரியா..? என்பதை சிந்தித்து பாருங்கள்,
நாளை தீப திருநாள் இன்னேரம் பலரும் பலமான திட்டங்களை மனதில் போட்டு வைத்திருப்பீர்கள், அதில் பிரதானமானது மது அருந்துவதாகவே இருக்கும், அதனால்தான் தமிழக அரசே தீபாவளி விற்பனை இலக்காக 250 கோடியை எட்ட வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிற்து, இதில் மூன்றில் ஒரு பங்கு தொகை நம்மினத்தவர் பணமாகதான் இருக்கும்,
அந்த நிலையினை மாற்றி "மது இல்லாத தீபாவளியாக" இந்த ஆண்டு தீபஒளி திருநாளை கொண்டாட வருமாறு முத்தரையர் பேரினத்தினை உரிமையோடு அழைக்கிறேன்.
"மது இல்லாத தீபாவளி, மறுபடியும் முத்தரையர் ஆட்சியின் முதல்படி" வாருங்கள் மது இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம், மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம்.
வாழ்த்துக்களுடன்....
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்