சிலை வைப்பதால் என்ன பிரச்சனை...?
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் பல்வேறு மன்னர்கள், அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது, அந்த சிலைகள் அமைக்கபடும்போது அரசாங்க தரப்பினரிடம் இருந்து இவ்வளவு எதிர்ப்பு வந்ததில்லை, ஆனால் இந்த தமிழ் மண்ணை ஆண்ட ஒரு தலைசிறந்த போர்வீரன், அரசனுக்கெல்லாம் அரசனாக இருந்தவன், ஒரு சமூகத்தின் அடையாளமாக (தலைவராக இல்லை..!) இருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்போவதாகவோ, வைத்தாலோ ஏனோ காவல்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் அத்தனை துறை அதிகாரிகளுக்கும் எங்கேயோ வலிக்கிறது.
ஏற்கனவே புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட சிலைகளை திறக்கவிடாமல் செய்த காவல்துறை நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட மலைவிநாயம்பட்டியில் திறக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை காவல்துறை அசூர வேகத்தில் அகற்றி தங்கள் வெறுப்பை பதிவு செய்திருக்கிறார்கள், ஒரு சிலை அமைக்கப்படும்போது அனுமதி பெற வேண்டியது அவசியம்தான், ஆனால் எங்கள் பேரரசர் சிலையை திறக்க ஏன் எப்போதுமே மறுக்க வேண்டும் ? ஒரு சிலை அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருந்தால் அதை அகற்றும் உரிமை காவல்துறைக்கு இருக்கிறதா..? தெருவிற்க்கு நான்காக நிறுத்தப்பட்டு இருக்கும் எல்லா சிலைகளும் அனுமதி பெற்றுதான் வைக்கப்பட்டு இருக்கிறதா ?
இதேபோன்று தொடந்து ஒரு சமூக மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள், அது ஒருநாள் உங்களுக்கு தீராத தலைவலியாக மாறிவிடும்.
#அகற்றப்பட்ட சிலை அதே இடத்தில் நிறுவிட வேண்டும்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்