புதன், 7 டிசம்பர், 2016

அரசியல் வெற்றிடம்...!

அரசியல் வெற்றிடம்...!

அதிமுக பொதுச்செயலாளர் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் இழப்பு எதிர்கால தமிழக அரசியல்களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்..?

முதலில் ஒரு விசயத்தை சொல்லியே ஆக வேண்டும், அரசியல் சாராத ஒரு குடும்பத்திலிருந்து வந்து தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆளுமை திறன் உலகம் வியந்தது, தமிழக அரசியலை பொருத்தவரை ஜெயலலிதாவுக்கு கிடைத்த அங்கீகாரம் இதற்க்கு முன்பும், இனி எப்போதும் எந்த ஒரு பெண்ணுக்கும் கிடைக்கபோவதில்லை,

இரண்டாவது சினிமாதுறையிலிருந்து இனி ஒருவர் தமிழகத்தை ஆள்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை, ஒருவேளை (!) தேசிய கட்சிகள் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுக்கள் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால் அவர்கள் "நியமிக்கும் முதல்வர்" சினிமா துறை சேர்ந்தவராக இருக்க முடியுமே தவிர நேரடியாக தமிழக அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராக கூடிய வாய்ப்பு நடிகர் / நடிகைகளுக்கு இல்லை என்பது அரசியல் கற்றவர்களுக்கு புரியும்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக பன்னீர்செல்வத்தையோ, சசிகலா நடராஜனையோ முதலமைச்சராக கொண்டு தமிழகத்தை ஆளும் நிலை நீடித்தால் உறுதியாக சொல்லலாம் "அதிமுக" சரித்திரத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவே அமைக்காதென்று...!. நிச்சயமாக இவர்களால் ஜெயலலிதாவை போலவோ, அவரின் ஆலோசனை இல்லாமலோ மக்கள் விரும்பும் / ஏற்றுக்கொள்ளும் / சகித்துக்கொள்ளும் ஆட்சியை தரவே முடியாது, இன்னும் சொல்லப்போனால் நேரடியாக அதிகாரத்துக்கு வராதபோதே செய்த துஷ்பிரயோகங்கள் / ஊழல்கள் இனி கேள்விகேட்பார் இன்றி தொடரவே செய்யும், அதுவே இவர்களின் எழ முடியாத வீழ்ச்சிக்கு வித்திடும்.

அதேபோல தமிழக நலன் சார்ந்து இல்லாவிட்டாலும், தங்கள் கட்சி மற்றும் எதிர்கால அதிகார கைப்பற்றல் தொடர்பாக கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த தீர்க்கமான பார்வை இன்று இருக்கும் வேறு எந்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் கிடையாது, எதிரிகளை உருவாக்குவதும், அழிப்பதும் இவர்கள் இருவருக்கும் கைவந்த கலை, இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நாளை மக்களின் பேசும்பொருளாக இருக்கும், மாறாக இப்போது இருக்கும் வேறு எந்த தலைமைக்கும் அப்படி ஒரு தீர்க்கமான பார்வையே கிடையாது, இந்த தலைவர்களுக்கு மக்களின் பேசும்பொருள்தான் அரசியலாக இருக்கிறது.

திமுகவில் ஸ்டாலின் ஒரு ஆளுமை என்று அறியப்பட்டாலும் அது அந்த கட்சி எல்லையை தாண்டி பொதுமக்கள் ஏற்க்கும் தலைமையாக இல்லை என்பதே நிதர்சனம், இதனையே ஸ்டாலின் மறைமுகமாக தலைமை ஏற்று எதிர்கொண்ட மூன்று பொதுத்தேர்தல் தோல்வி நமக்கு உணர்த்துகிறது,

அதேபோலவே வைகோ, வாசன், சீமான்களுக்கு தங்கள் கட்சியை எப்படி கட்டமைப்பது என்பதிலேயே இன்னும் குழப்பங்கள் தீரவில்லை, ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், சரத்குமார்களின் எல்லையாக தமிழக மக்கள் வரையறுத்து வைத்திருப்பது சாதியாக மட்டுமே இருக்கிறது, அதைதாண்டி அவர்களும் வர முயலவில்லை, மக்களும் வரவிடவில்லை, வந்தாலும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பில்லை,

தேசிய கட்சிகள் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது, அவர்களின் அதிகபட்ச பலம் எதாவது சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து பத்து பதினைந்து மக்கள் பிரதிநிதிகளை பெற முயற்சி செய்துகொண்டே இருப்பது மட்டும்தான், தவறியும் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்பே இல்லை, ஒருவேளை மக்கள் செல்வாக்கு வேகமாக அதிகரித்தாலும் தமிழீழம், காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு, ஜல்லிகட்டு அல்லது அதேபோன்ற தமிழக மக்களின் உணர்வோடு தொடர்புடைய விசயங்கள் பெரிதாக வெடித்து கிளம்பும்போது தேசியகட்சிகள் வளர்க்கும் செல்வாக்கும் அதே வேகத்தில் வீழ்ச்சியையே காணும். 

ஜெயலலிதாவிற்க்கு பிறகும் அதிமுகவை அதே கட்டமைப்போடு காக்ககூடிய வலிமை இப்போது அதிமுகவில் இருக்கும் யாருக்கும் கிடையாது, விஜயகாந்துகள் எல்லாம் ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்கள் ஆகிவிட்டார்கள்.

இதன்மூலம் ஜெயலலிதா, கருணாநிதிகளுக்கு பிறகு அரசியல் சூனியம் ஏற்பட போவது உறுதி...! இனி வரும் பொதுத்தேர்தல்களில் ஒற்றைகட்சி ஆட்சி என்பதும் சாத்தியமற்றது, தனிப்பெரும்பான்மையோடு ஒரு தலைமை இப்போதைய நிலையில் இல்லை, இனி உருவாகவும் இன்றைய சூழ்நிலையில் வழியில்லை
ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும் இது தமிழகத்தின் பொற்காலம் என்றும் சொல்லலாம

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஆதினமிளகி அம்பலம்

தமிழ்நாடு கன்னப்பர்குல வலையர் சங்கத்தின் மூத்த. தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியும் மறைந்த அமைச்சர் கக்கன்சியின் நெருங்கிய நன்பரும் சமூக ஆர்வளருமான தாத்தா VKA ஆதினமிளகி அம்பலம் அய்யா அவர்களின் இன்று நூறாவது பிறந்த நாள் விழா

அவர்களை பற்றிய ஓர் தகவல் படித்து பகிர்லாம் நன்பர்களே  1937 ல் காங்கிரசில் இனைந்தார்  1940 களில் பல்லாங்கினற்று வலையங்குவம் திரு வேட்டையமூப்பளார் தலமையில் கன்னப்பர்குல வலையர் சங்கத்தில் இனைந்து ஆடிட்டராக பனியாற்றி பிறகு தலைவர் பொருப்பேற்றிருக்கிறார்  பின்னர்  முதல் முயற்சியா சருகுவலையபட்டி கிராமத்திற்கு  1941 ல் அரசு துவக்க பள்ளி கூடம் கொன்டுவந்திருக்கிறார்

1943 ல் வெள்ளையனே வெளியேரு  போராட்டத்தின் போது கைதாகி பெல்லாரி சிறையில்  மூன்று வருடம் இருந்து விடுதலையாகி 1950 ல் சருகுவலையபட்டி தனி பஞ்சாய்து  உருவாக்கி  அதே வருடம் அஞ்சல் நிலையத்தையும் கொன்டுவந்து  1955 ல் அந்த கிராமத்தில் கூட்டறவு   (A 2494 ) சங்க வங்கியும் கொன்டுவந்திருக்கிறார்

1967 ம்ஆன்டு வரை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராகவும்  1971 ம்ஆன்டு வரை தொடர்ந்து விவசாய கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து  சருகுவலையபட்டி மக்களுக்கு வழக்கு  மற்றும் காவல் துரை  பிரட்சனைகளுக்கு  ஆலோசகராக வும் இருந்து  பேரும் புகழடன் வாழ்ந்து வருகிறார்