கள்ளர் சமூக உறவுகள் மட்டுமல்ல,
" வலையர்கள் முத்தரையர்களா...? " என்ற கேள்வியை யார் எழுப்பினாலும் அதற்கான பதிலைத் தருவதற்கான தார்மீக உரிமை எங்களுக்குண்டு, உங்களின் கேள்விக்கான பதிலைத் தரவும் உங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம்.... கல்வெட்டோ, பட்டயமோ, கரைப் பெயரோ, கடவுள் வழிபாடோ, முத்தரைய மன்னர்களுடனான தொன்மத் தொடர்பிற்கான நிகழ்காலத்திய சான்றுகளோ... நீங்கள் எதைக் கேட்டாலும் அத்தனையையும் தருவதற்கு நாங்கள் தயார்...!
ஆனால் சோழர் தொடர்பாக வன்னியர்களுடன் மல்லுக்கட்ட கள்ளர்கள் ஒரு பதிவை எழுதிவிட்டு, போகிற போக்கில் அந்தப் பதிவில் தஞ்சைக்கும் முத்தரையருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்புவதும், அதற்கு பதில் தந்தவுடன் 'அட முத்தரையரே கள்ளர்தானப்பா, வலையனுகளுக்கு முத்தரையரோடு என்னப்பா தொடர்பு... ' என்றும் பல்டி அடிப்பதும் வியப்பாக இருக்கிறது..
வலையர்களே முத்தரையர்கள் என்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பலமுறை கொடுத்தாயிற்று, மேலும் வேண்டுமானலும் நாங்கள் தருகிறோம், ஆனால் முத்தரைய மன்னர்களை உரிமை கொண்டாட முயலும் கள்ளர் உறவுகள் தயவுசெய்து 'நானா மூனா நாட்டார் எழுதிருக்கார், நானா மூனா நாட்டார் எழுதிருக்கார் ' என்றும், முத்தரையர் பட்டம் எங்களுக்கு இருக்கிறது என்றும் கூப்பாடு போடாமல் ஏதாவது உருப்படியான சான்றுகளைத் தாருங்கள்....
ஏனென்றால் வேங்கடசாமி நட்டாருக்கு கடந்த நூற்றாண்டில் "கள்ளர் சரித்திரம் " என்ற நூலை எழுதுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும்? அதிலும் குறிப்பாக தென்பகுதி தன்னரசுக் கள்ளர்களையும், பிறமலைக் கள்ளர்களையும் காட்டிலும் தஞ்சைக் கள்ளரை உயர்த்திப் பிடிக்க வேண்டியதற்கான அவசியம் நாட்டாருக்கு ஏன் ஏற்பட்டது என்பதையும் முதலில் கள்ளர்கள் உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கள்ளர் சமூகத்தின் மீது வெள்ளையர்களால் தீவிரமான முறையில் திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடூரத்திலிருந்து "தஞ்சைக் கள்ளர்கள்" தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவே சில மன்னர்களோடும், புகழ் வாய்ந்த ஆன்மிக அறச்செயலாளர்களுடனும் தங்களை ஒப்பிட்டு 1920களுக்குப் பிறகு புத்தகங்களை எழுதி அதை வெள்ளையர்களிடத்தில் ஆவணமாகச் சமர்ப்பித்து அந்த சட்டத்திலிருந்து தம்மை தப்பிவித்துக் கொண்டனர் என்பது வரலாறு...
எந்த அடிப்படை ஆதாரங்களுமின்றி முத்தரைய மரபினரையும், முத்தரைய வேந்தரான திருமங்கை ஆழ்வாரையும் கள்ளர் சாதியாக உருவகப்படுத்த வேண்டிய அவசியம் இதன் காரணமாகவே வேங்கடசாமி நாட்டாருக்கு ஏற்பட்டது என்பதை அக்கால அரசியல் குறித்து ஊன்றிப் படிப்போரால் எளிதாக உணர முடியும்...
கள்ளர் சமூகத்தைப் பற்றி நீண்ட ஆய்வினை மேற்கொண்டுவரும் திரு முகில்நிலவன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்' புத்தகத்தின் கட்டுரை மட்டுமல்லாது அண்ணன் சுந்தரவந்தியத் தேவனின் “பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலிலும் (பக்க எண்: 650) தெளிவான முறையில் நான் மேற்சொன்ன தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (ஆய்வாளர்கள் முகில்நிலன் , சுந்தரவந்தியத்தேவன் போன்றவர்களெல்லாம் எந்த சமூகம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!)
எனவே கள்ளர் உறவுகள் ஒரு தமிழ் மன்னனாக பெரும்பிடுகரைக் கொண்டாடுவதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் அவர் அந்த சாதியல்ல இந்த சாதி என்பதும், புனைவு வரலாற்றின் பெயரால் வலையர் மக்களை வம்புக்கு இழுப்பதும் தேவையற்ற செயல் என்பதை இனிமேலாவது உணர்ந்து உண்மை வரலாற்றை மட்டும் பதியுமாறு முத்தரையர்களின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்..