பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் பணிந்து தொடங்கி, ஏற்கனவே பதிவிட்டதுபோல மாணவர்களுக்கு மத்தியில் பேசுவது என்பது மிகுந்த தடுமாற்றம் மிக்கது என்றாலும் என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை பதிவு செய்துவிட்டதே வந்தேன்.
மனிதர்களின் ஆரம்பகாலம் உணவுக்காக வேட்டையாடுதல் என்பது மட்டும்தான் அவர்கள் அறிந்த ஒரே தொழிலாக இருந்திருக்க முடியும் இவர்களை வேட்டைக்குடி என அடையாளப்படுத்துவோம், பிற்பாடு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உணவு தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை வந்தபோது உணவை உற்பத்தி செய்ய முற்பட்டு வேளாண் குடியாக வேட்டைகுடியின் சிறு பகுதி மாற்றமடைந்து நாளடைவில் வேளாண் குடிகளுக்குள்ளாகவும், அல்லது வேளாண்குடியினர் மற்றும் வேட்டைக்குடியினருக்கிடையே உணவுபொருள் திருட்டு அல்லது ஆக்கிரமைப்பு போன்ற காரணிகளால் இருதரப்புமே தங்களிடமிருந்த பலம்கொண்டவர்களை கொண்டு பாதுகாவலை மேற்கொண்டு நாளடைவில் அதுவே போர்க்குடியாக மாறி இருக்க வேண்டும், வேளாண் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அதனை வணிகம் செய்யும் பொருட்டு வணிககுடிகளும் உருவாகி இருக்க வேண்டும் இந்த வேட்டைக்குடி, வேளாண்குடி, போர்க்குடி, வணிகக்குடி எல்லாம் நாளடைவில் சாதியமாக மாற்றமடைந்தது என்பதுதான் பொதுவான வரலாறு.
நாகரீக வளர்ச்சியில் ஒவ்வொரு குடிகளுக்கும் அவர்கள் சார்ந்த தொழிலை திறம்பட செய்துக்கொண்டு இருக்க போர்க்குடிகளாக இருந்தவர்களுக்கு மட்டும் ஒரு சிக்கல் நாகரீக வளர்ச்சியினார் உருவாகிறது, போர் அல்லது சண்டையே இல்லாதபோது போர்குடிகளுக்கும் வேலை இருக்கவில்லை இதன்காரணமாக ஏனைய குடிகளுக்கு சேவகம் செய்ய புறப்படுகிறார்கள் இந்த போர்க்குடியினர் அப்படி போனவர்கள் இன்றுவரை சேவகமே செய்வதற்கு முத்தரையர் என்னும் போர்க்குடி ஒரு உதாரணமாக இருக்கிறது.
போர்க்குடியிலிருந்து அடுத்து என்ன என்ற தடுமாற்றமும், வழிநடத்தக்கூடிய அல்லது போர்க்குடியாக இருந்தபோது வழிநடத்திய, திட்டமிட்ட பெருந்தலைவர்கள் சுவரன் மாறன், மாறன் பரமேஸ்வரன், இளங்கோ முத்தரையன் போன்ற அறிவில் சிறந்த போர்ப்படைகளின் தலைவர்கள் இல்லாத காரணத்தால் அல்லது அவர்களைபோன்றவர்களை உருவாகவிடாமல் லாவகமாக செயல்பட்ட ஏணைய குடியினரின் சதியில் சிக்கி கடைசியில் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறி நிக்கிறது போர்க்குடியான முத்தரையர் குடி.
இந்த நிலை மாற வேண்டும் போர்க்குடியாய் இருந்தவர்கள் வணிகக்குடிகளாக மாற வேண்டும், படிப்பு என்பது ஏட்டுசுரக்காய்தான் அதைகொண்டு எதையும் சாதித்துவிட முடியுமா ? என்றால் சந்தேகமே சாதிக்க வேண்டும் என்றால் சூழ்நிலைக்கேற்ப நாமும் மாற வேண்டும்.
முத்தரையர்களிடம் இருக்கும் மற்றுமொரு தவறான பொருளாதார கொள்கையும் அந்த மக்களின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் அது, ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கோ ஐந்தோ பேரில் யாரோ ஒருவர் மட்டும் சம்பாதிக்க ஏனையோர் அந்த சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள், இதன் மூலம் எவ்வளவு பொருள் வந்தாலும் விரையமாகவே போய்விடுகிறது. ஒரு குடும்பத்தில் ஐந்துபேர் இருந்தால் அவரவருக்கான செலவுகளுக்கு அவர்களே சம்பாதித்தால் மட்டுமே தன்னிறைவு பெறுவதோடு வளர்ச்சி என்பதும் சாத்தியமாக இருக்க முடியும், எல்லோரும் எப்படி சம்பாதிக்க முடியும் ? முயன்றால் முடியும் அருகாமையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுயமாக தொழில் துவங்கி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.
நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதானமான தீர்மானம் நம்முடைய சந்ததியினரை ஏதும்மற்றவர்களாக அல்லது கடன்காரர்களாக விட்டு செல்ல மாட்டோம், ஓரளவுக்கு சொத்துக்களையும் அதனை பராமரிக்கும் அளவிற்கு அறிவினையும் பெற்றவர்களாக அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும்.
(இன்னும் நிறைய பேசினேன் அதெல்லாம் எழுதுனா பக்கம் பக்கமா போய்கிட்டு இருக்கும் அதனால முக்கியமான விசயம் இவ்வளவுதான் இத்தோடு போதும்)
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்