Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 2 ஜூன், 2012

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (எம்எல்)

இன்று...!!

தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின்
சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள்

பழ.ஆசைத்தம்பி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க போகிறோமா? மீண்டும் பழைமைக்குத் திரும்பி மன்னர் பரம்பரையிடம் ஒப்படைக்க போகிறோமா?
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ஒருவர் கூட தலித் அல்ல. 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை மக்கள் கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுத்தனர்.
எதிர்வரவுள்ள இடைத்தேர்தலில், உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, ஏழைகளின் பிரதிநிதியாக தலித் மக்களின் பிரதிநிதியாக மாலெ கட்சி களம் காண்கிறது. இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், அறிவாளி பிரிவினர் ஆதரவு கொடுங்கள் என மாலெ கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
180, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டை தொகுதி ஒன்று. புதுக்கோட்டை தொகுதி 1952 முதல் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி புதுக்கோட்டை ஒன்றியம் (26 ஊராட்சிகள்) கரம்பக்குடி ஒன்றியம் (20 ஊராட்சிகள்) மூன்றும் இணைந்தது புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி.
மார்ச் 2012 வரை மொத்த வாக்காளர்கள் 1,92,362. ஆண் வாக்காளர்கள் 96,167. பெண் வாக்காளர்கள் 96,255. 25.05.2012ல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,94,980.
மொத்த வாக்குச் சாவடிகள் 224. புதுக்கோட்டை ஒன்றியத்தில் 74 வாக்குச் சாவடிகள். கரம்பக்குடி ஒன்றியத்தில் 47 வாக்குச் சாவடிகள். புதுகை நகராட்சியில் 103 வாக்குச் சாவடிகள்
சமூகம்
தொகுதியில் பெரும்பான்மை தலித் மக்கள். முத்தரையர் சமூகம், முக்குலத்தோர் (மறவர் இல்லை), பிற சமூகத்தினர் என அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளனர்.
வர்க்கம்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஏழை, சிறு, குறு விவசாயிகள் நிறைந்த பகுதி. நிலவுடைமையாளர்கள் சிறிய பிரிவினரே. சிறுவிகித விவசாய உற்பத்தியை கொண்ட பகுதி. மிகவும் பின்தங்கிய, வறட்சியான பகுதி.
மன்னர் ஆட்சியின் மிச்சசொச்சம்
1948ல் மன்னர் ஆட்சி ஒழித்து கட்டப்பட்டது. ஆனால் அதன் மிச்சசொச்சம் பெயர்களில் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெயர் தொண்டைமான் மாளிகை. அரசு மருத்துவமனை, ராணியார் மருத்துவமனை. அரசுப் பள்ளி, ராணியார் மேல்நிலை பள்ளி. அரசுக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி.
நாட்டு கூட்டமைப்பு முறை
தொகுதியில் இன்னும் நாட்டு அம்பலம் முறை, சாதிய மிச்சசொச்சங்களுடன் உயிர் வாழ்கிறது. கவி நாடு, வடவாளம் நாடு, வாராப்பூர் நாடு, கோத்துபனை நாடு வீரக்குடி நாடு, ஈ சங்க நாடு என பல நாடு முறை இருக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை
தலித் மக்கள், முத்தரையர் மக்கள் கோவிலில் நுழைய தடை துவங்கி, தனிக் குவளை, தனி சுடுகாடு, முடித்திருத்த தடை, உள்ளூர் அதிகாரத்தில் பங்கு மறுப்பு, உரிமை மறுப்பு, தலித் தலைவர் கருக்கள குறிச்சியில் தேசிய கொடி ஏற்ற தடை என சாதிய ஒடுக்குமுறை தொடர்கிறது.
வரலாறு நெடுக வறட்சி, பஞ்சம் தொடர்கிறது. புதுகை தொகுதியில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் துவங்கி 1708, 1709, 1733, 1837, 1866, 1868, 1879, 1884, 1889, 1893, 1895, 1904 - 05, 1907, 1909, 1921, 1925, 1926 - 30, 1945, 1969, 1974 - 75 என தொகுதி மக்களை வாட்டி வதைத்த வறட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம்.
பஞ்சத்தை போக்க மாவட்டம் முழுவதும் 6000 குளங்கள் வெட்டப்பட்டன. புதுக்கோட்டை நகரத்தில் மட்டும், புதுகுளம், பல்லவன்குளம் துவங்கி 66 குளங்கள் வெட்டப்பட்டது.
குளங்கள் பராமரிக்கப்படாமல் பல காணாமல் போயின. சில சென்னை கூவம் போல் ஆயின. சிலவற்றை அரசாங்கமே அங்கீகரித்து கட்டிடங்கள் கட்டுவது என ஆரம்பித்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் யூனியன் ஆபீஸ், கல்லூரி, கல்லூரி விடுதி என குளத்தை தூற்றுவிட்டனர். இதனால் தண்ணீர் பிரச்சனை தொகுதி மக்களின் பிரதான பிரச்சனை.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது, ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது மிகமிக அவசியம்.
விவசாயம்
தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த மக்கள் பெரும்பான்மை. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 466329 ஹெக்டேர். அதில் சாகுபடி நிலம் 32 சதவீதம் மட்டும். மீதி புறம்போக்கு வகையினம் 143895 ஹெக்டேர். ஓரளவு வன நிலம் உள்ளது. 2010ல் நிகர சாகுபடி 150671 ஹெக்டேர். 2011ல் நிகர சாகுபடி 149367 ஹெக்டேர். 2011ல் சாகுபடி பரப்பு குறைந்துதுள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி, நீர் ஆதாரம் இல்லாமை, மின் தட்டுப்பாடு, இடுபொருள் விலை உயர்வு, விளைச்சலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, சிறு விகித உற்பத்தி என விவசாயத்தை விட்டு மக்கள் விரட்டப்படுவதும், விளை நிலம் சுருங்கி போவதும் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
தொகுதியில் சிப்காட் மற்றும் முந்திரி தொழிற்சாலை தவிர இதர தொழிற் சாலைகள் இல்லை. விவசாய வேலைகளும் இல்லை. (மேலே உள்ள விபரம் இதை காட்டும்). 100 நாள் வேலையில் இது வரை ஒரு நாள் கூட, 80, 100, 119, 132 கூலி வழங்கியதும் இல்லை. 100 நாள் வேலையும் தரப்படுவது இல்லை.
புலம் பெயர்தல்
வேலை இல்லை. போதுமான கூலி இல்லை. வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. மக்கள் திருப்பூர், கோவை சென்னை என பெருநகரங்களுக்கு புலம் பெயர்வதும், உடல் உழைப்பு தொழிலாளர் களாக வெளிநாடு செல்வதும் தொடர்கிறது.
மன்னராட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும்
புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல்களில் 2004 வரை வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தரப்படுகின்றன.
1951 கே.எம்.வல்லதரசு, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி.
1957 ராமநாதன் செட்டியார், இந்திய தேசிய காங்கிரஸ்.
1962 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967 உமாநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 வீரையா, திமுக
1977 இளஞ்செழியன், அதிமுக
1980 சுவாமிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் (தி)
1984 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1991 சுந்தர்ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ்
1996 திருச்சி சிவா, திமுக
1998 ராஜா பரமசிவம், அதிமுக
1999 திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர்.அதிமுக
2004 ரகுபதி, திமுக
2009 தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. 14 முறை நாடாளுமன்ற தொகுதியாக இருந்து 2009ல் தொகுதியாக இல்லாமல் போனது தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே. தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கோட்டை தொகுதியில் மட்டும் 12,326 வாக்குகள் 49 ஓவுக்கு போடப்பட்டன.
சட்டமன்ற தேர்தல்களில் 2011 தேர்தல்களில் தான் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். மத்திய, மாநில அரசுகளின் முதலாளித்துவ ஆதரவு நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக மக்கள் ஆதரவு நிகழ்ச்சிநிரலை முன்னிறுத்த இடதுசாரி இருத்தல் அவசியம். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். மன்னராட்சி அல்லாமல் மக்களாட்சி வேண்டும்.

புதுக்கோட்டை நகரில், நகர மக்களை குடிமனை, வீட்டு வாடகை குடிநீர், வேலையின்மை நகரத்தைவிட்டு துரத்துகிறது. கிராமத்தில், விவசாய நெருக்கடி, வேலையின்மை, சாதிய ஒடுக்குமுறை சொந்த ஊரைவிட்டு பெரும்நகரத்தை நோக்கி, வெளிநாட்டை நோக்கி விரட்டுகிறது.
புதுக்கோட்டை தொகுதி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கு பின்வரும் அம்சங்கள் அவசியம்.தொகுதியில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம்.
நகரத்தில், கிராமத்தில் வீட்டுமனை இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனை.
100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை, 300 ரூபாய் கூலி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை.
தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை பராமரிப்பது, பாதுகாப்பது. நீராதாரத்தை பெருக்குவது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவது, விரிவுபடுத்துவது.
மத்திய, ரிசர்வ் பாரஸ்ட் இடத்தை மாநில அரசு அரசின் கீழ் கொண்டு வந்து, விவசாய பண்ணைகளாக, பழந்தோட்டங் களாக அமைத்து மக்களுக்கு வேலை தருவது, அல்லது மக்களுக்கு பிரித்து வழங்குவது.
ஆர்.எஸ்.பதி மரங்களை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது. மக்களை, விவசாயத்தை, நிலத்தடி நீரை பாதுகாப்பது.
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் மருத்துவக் கல்லூரி
அரசு கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவ கல்லூரி.
வம்பன விதைப் பண்ணை, வெள்ளான் விடுதி எண்ணெய் வித்து பண்ணை, அண்ணா பண்ணை, அரிமளம் பண்ணை, கால்நடை பண்ணை ஆகியவற்றை மய்யப்படுத்தி விவசாயக் கல்லூரி.
 மாவட்ட தலைநகரம் என்பதால் அரசு பொறியியல் கல்லூரி.
 அரசு முந்திரி தொழிற்சாலை.
 விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்.
 அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலை, கூடுதல் பேருந்து இயக்கி பேருந்து வசதி இல்லா கிராமம் இல்லை என்கிற நிலை.
 அரசு பள்ளிகளையும், ஆதிதிராவிடர் பள்ளிகளையும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்துவது.
 கிராமப்புறங்களில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உடனே அப்புறப்படுத்துவது.
 துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்குதல்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகப்படுத்துதல். அரசு மருத்துவமனைகளை உயிர்காக்கும் மருத்துகளை கொண்டு, கூடுதல் கட்டிட வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளாக மாற்றுதல்.
இன்னும் பல. . .

தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்பார்ந்த புதுக்கோட்டை தொகுதியில் வசித்து வரும் கிராமப்புற தொழிலாளர்களே,
ஏழை, சிறு, குறு, நடுத்தர விவசாயிகளே,
சமூகரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படுகிற தலித் மற்றும் முத்தரையர் சமூக மக்களே,
அனைத்து சமூக உழைக்கும் மக்களே.
வர்க்கமாக, சாதியாக, பெண் என்பதாலும் சுரண்டப்படும் மண்ணின்பாதி, விண்ணில் பாதியாக உள்ள பெண்கள் சமூகமே,
சமூக மாற்றத்தை, சமத்துவத்தை விரும்பும், தலித் அமைப்பு தோழர்களே,
பாட்டாளிகளின் கரத்தை வலுப்படுத்த, இடதுசாரி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தம்மை அர்ப்பணித்துள்ள இடதுசாரி இயக்க தோழர்களே,
அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அங்கன் வாடி பணியாளர்களே, சத்துணவுப் பணியாளர்களே, மக்கள்நலப் பணியாளர்களே, சாலைப் பணியாளர்களே,
துப்புரவுத் தொழிலாளர்களே, சுமைதூக்கும் தொழிலாளர்களே, தரைக் கடை வியாபாரிகளே.
ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, அறிவாளி பிரிவினரே, சமூகத்தை புரட்டி போடும் தொழிலாளர் வர்க்கமே.
உங்கள் பிரதிநிதியாய் தேர்தல்களத்தில் சிபிஅய் (எம்.எல்).
உங்கள் சின்னம் மூன்று நட்சத்திரக்கொடி.
உங்கள் வேட்பாளர் தோழர் ம.விஜயன்.





அன்று...!!!
CPI ML கட்சி உண்மை அறியும் குழுவின் அறிக்கை
தலித்துகளின் நிலத்தை அபகரிக்கும் அரசியல் பெரும்புள்ளிகளின் திட்டமிட்ட சதிச்செயலே பரளிப்புதூர் தாக்குதல்!
அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் திமுக ஆட்சியில் பரளிபுதூர் என்று சொல்ல வேண்டிய விதத்தில் பரளிபுதூர் தலித் சமுதாய மக்கள் மீது முன்கூட்டியே திட்டமிட்ட குறிவைத்த தாக்குதல் 13.02.2001 அன்று நடத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் படம் பிடித்து காட்டிய பிறகும் காவல்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடமிருந்து எவ்வித பொறுப்புள்ள அவசரகால நடவடிக்கையையும் காணமுடியவில்லை.
இந்த சூழலில் 22.02.2011 அன்று சிபிஐஎம்எல் கட்சியின் உண்மை அறியும் குழு பரளிபுதூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்துப் பேசியது. அப்போதுதான் ஊருக்குள் மக்கள் நுழைய ஆரம்பித்திருந்தனர். பெண்கள், இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் குழுவுடன் உரையாடினர். மக்களிடம் ஊடாடியதிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கொண்டு நாங்கள் பின்வருவனவற்றை முன்வைக்கிறோம்.


பரளிபுதூர் தாக்குதலின் சமூக அரசியல் பின்புலம்
பரளிபுதூர் மட்டுமல்ல மதுரையை, ஒட்டியுள்ள நத்தம் தாலுகா பகுதி முழுமையும் பொதுவாக முத்தரையர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். 90 சதம் முத்தரையர்கள் 10 சதம் மற்றவர்கள் என்பதே நிலை. அந்த பத்து சதத்தில் பறையர் என்று குறிப்பிடப்படும் அட்டவணைச் சாதியினர் பெரும் பகுதியினராக உள்ளனர்.
பரளிபுதூர் ஊராட்சி என்பது புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி, பொடுகம்பட்டி, அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சியில் உள்ள மக்கள் தொகையில் 600 பேர் மட்டுமே தலித்துகள். ஏறக்குறைய 4000 பேர் முத்தரையர்கள் மொத்தம் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர்.
முந்தைய காலத்தில் பறையர்கள் நிலஉடமையாளர்களைச் சார்ந்து வாழ்ந்திருந்திருக்கிறார்கள். 600 ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருந்த ஓர் நாயக்கர் நிலப்பிரபு மற்றும் அவனிழைத்த கொடுமைகள் பற்றி இப்போதும் கசப்போடு நினைவுகூர்கிறார்கள். பின்னர், முத்தரையர்கள் கைவசம் நிலம் கைமாறியிருக்கிறது. அதேசமயம் தலித்துகள் கல்வியில், வேலைவாய்ப்பில் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறத் துவங்கியுள்ளனர்.
தற்போது முத்தரையர்கள் நிலத்தில் வேலை செய்யும் தலித் என்று எவரையும் சொல்ல முடியாது என்று குறிப்பிடுகின்றனர். படித்து பெரிய வேலைகளுக்குச் செல்வது, தொழில் படிப்புகள் வழியாக வேலை தொழில் வாய்ப்புகள், கட்டுமானப் பணிகள், நகர்புர வேலைகள் என்று தலித்துகள் முத்தரையர்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
முத்தரையர்களுக்கும் நிலத்தின் மீதான கட்டுப்பாடு பற்றிய போட்டி இருந்து வந்திருக்கிறது. தலித்துகளின் சாமி கண் திறப்பு இடத்தை முத்தரையர்களில் ஒருவர் ஆக்கிரமித்துவைத்துள்ளார். தலித்துகளுக்கு அரசு கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு அடுத்துள்ள தோட்டத்தில் நத்தம் புறம்போக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தலித்துகள் தெரிவிக்கின்றனர். மலைச்சரிவில் தலித் மக்களுக்கு முதலமைச்சரின் இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தின் கீழ் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பண்படுத்தி மரங்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
வெகு காலம் தலித்துகளின் பயன்பாட்டில் அந்த நிலப்குதி இருந்திருக்கிறது. (அனுபவத்தில் இருந்த இடத்திற்குத்தான் இரண்டு ஏக்கர் திட்டத்தில் பட்டா அளித்துள்ளனர்.) பட்டா அளிக்கப்பட்ட பின்னர் அந்த 60 ஏக்கரில் 50 ஏக்கருக்கான பாதையை முத்தரையர்களில் ஒருவரான ராமன் ஆக்கிரமித்து வைத்துள்ளார். நிலத்தைக் கைவிடுவது அல்லது எதிர்த்துப்போராடுவது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிலம் தொடர்பான தகறாறுகள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. தற்போதைய மோதலுக்கு அவை முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கின்றன.
கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசு அல்லது இதர வேலைகளில் அமர்ந்த தலித்துகள் தமது சேமிப்பை நிலமாக மாற்றிக் கொண்டு, ஓய்விற்குப் பின் ஊருக்கு வந்துவிட முயற்சித்துள்ளனர். நிலம் வாங்கத் துவங்கியுள்ளனர்.
முத்தரையர்களின் பெரும்பகுதி குறைவான படிப்பறிவு உள்ளவர்கள். பெரும்பாலும் அரசு அல்லது பிற வேலைகளுக்குச் செல்வதில்லை. நிலம் அது சார்ந்த உற்பத்திதான் அவர்களின் பிரதான வாழ்க்கை ஆதாரமாக இருக்கிறது. தற்போது தலித்துகள் நிலத்தை வாங்க ஆரம்பித்துள்ளது முத்தரையர்களை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக, புறம்போக்கு உள்ளிட்ட இயற்கை வளங்களை தமது கையில் வைத்துள்ள முத்தரையர்களின் ஒரு சில நபர்கள், தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதில் முனைப்பாக இருந்துள்ளனர் என்பதை கிராமத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முத்தரைய பெரும் புள்ளிகளின் உற்பத்தி கட்டுப்பாட்டிலிருந்து விலகிவந்துவிட்ட தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விடுதலைசிறுத்தைக் கட்சியில் இணைந்துள்ளனர். திருமணம் போன்ற குடும்ப / சமூக விழாக்களில் தமது சுயேட்சையான நிலைமையை பிரகடனப்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர். அது பொதுவான முத்தரையர்களிடம் எரிச்சல் மற்றும் பொறாமை உணர்வைப் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, முத்தரையர்களின் ஒரு சில பெரும்புள்ளிகள் முத்தரையர்களைத் திரட்டி தலித்துகள் மீது தாக்குதல் தொடுத்து நிலத்தின் மீதான தங்கள் கட்டுப்பாட்டினை மறுஉறுதி செய்துள்ளனர். தலித்துகள் மீது நடைபெற்ற தாக்குதல் உண்மையிலேயே அவர்களின் பொருளாதார பலத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பதன் பொருள் இதுதான்.

தாக்குதலின் தன்மை
சிலை திறப்பு விழாவிற்குத் திரட்டப்பட்ட முத்தரையர்கள் சிலை நிறுவ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். காயப்பட்ட அவர்களின் உணர்விற்கு வடிகாலாக அல்லது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அல்லது இந்த இரண்டின் கலப்பாகவும் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. மதுரையின் தெற்கே உள்ள வலையங்குளம் துவங்கி பரளிபுதூரின் அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முத்தரையர்கள் திரட்டப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக என அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தலித்துகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், கடைகள், உணவு தாணிய சேமிப்பு, கால்நடைகள், தொலைக்காட்சி பெட்டிகள், என்று குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அனேகமாக அனைத்து தலித்துகளின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. அரசு கட்டிக்கொடுத்த அளவுக்கு மேல் விரிவாக்கம் செய்யப்பட்ட வீடுகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் பெரும் புள்ளிகள், குறிப்பாக அம்மாவாசியின் மகன் சுட்டிக்காட்ட வெளியூர் ஆட்களும் உள்ளூர் ஆட்களும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகள் போன்ற அடிப்படை ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கல்விச்சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், பணப்பரிமாற்றம் (கடன்/வைப்பு) ஆவணங்கள் உட்பட அனைத்துவிதமான ஆவணங்களும் திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப்பெற வேண்டும் என்றால் ஒரு சில ஆண்டுகளுக்கு நடையாக நடக்க வேண்டியிருக்கும்.
ஆண்குழந்தைகளை எரித்துக்கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. ஆண்கள்தான் வாரிசுகளை உருவாக்குகிறார்கள் என்ற மிக இருண்ட கால கருத்தாக்கத்தின் அடிப்படையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பெண்களை மிகவும் இழிவான வார்த்தைகளில் வசை பாடியுள்ளனர். ஆட்கள் திரள்வதைக் கண்டவுடன் பெண்கள் காடுகளுக்கு ஓடிவிட்டதால் பாலியல் தாக்குதல் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதுபோல, ஆபத்தான காயங்கள், மரணங்கள் சம்பவிக்காமல் போய்விட்டது.
ஒருவேளை தலித் மக்கள் எதிர்த்துப்போராடுவது என்று முடிவு செய்திருந்தால் மிகப்பெரும் சோகத்தையும் அவமானத்தையும் இழிவையும் தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். ஆனால், எண்ணிக்கை குறைவு என்ற தமது பலவீனத்தை உணர்ந்துகொண்ட தலித்துகள் தீர்மானகரமாக முடிவெடுத்து, அதன்படி தப்பித்துச்சென்றுவிட்டனர். காடகளில் இரவு தங்கி, பின்னர் பதுங்கித் திரிந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து மீண்டிருக்கிறார்கள். பெண்களின், சிறுமிகளின் கண்களில் தெரியும் வேதனைக்கும் வலிக்கும் திமுக அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
தலித்துகளின் வீடுகளின் ஓடுகள் அம்மிக் குழவிகள், பெரிய கற்களை கொண்டு உடைக்கப்பட்டுள்ளன. பார்வையிழந்த தலித் ஒருவரின் சிறிய கடை ஒட்டு மொத்தமாக இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. தண்ணீர் பொதுக்குழாய்கள் கூட உடைத்து தகர்க்கப்பட்டுள்ளன. தாக்குதல் முடிந்த பிறகும் பலகாலத்துக்கு தலித் மக்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்து விடக்கூடாது எனும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் எதிர்வினை
மாவட்ட ஆட்சியர் திரு. வள்ளலார், சம்பவம் நடந்து 3 நாட்கள் கடந்தே பரளிபுதூருக்கு வந்திருக்கிறார். ஐ.பெரியசாமி (அமைச்சர்), என்எஸ்வி சித்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்) வந்து சென்றிருக்கின்றனர். இவர்களில் எம்பி தன் சொந்த பணத்தில் வீட்டிற்கு 2 ஆயிரம் கொடுத்ததாக மக்கள் சொன்னார்கள்.
எம்பியும் சரி மந்திரியும் சரி தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டிக்கவோ அல்லது தாக்கியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவோ அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்காக நடவடிக்கை எடுக்கவோ இல்லை. வெறும் வாய்ப்பேச்சுடன் திரும்பிவிட்டனர் என்று மக்கள் குறிப்பிட்டனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனது ஆட்களுடன் வந்து முத்தரையர்களைப் பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தலித்துகளைப் பார்த்து ‘இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று முழக்கமிட்டுள்ளனர். தலித்துகளைத் தாக்கி மற்றவர்களை தங்கள் வாக்கு வங்கியாக்கிக்கொள்ளும் தந்திரம் இதுவென்றே தோன்றுகிறது.
திமுகவும் இதர கட்சிகளும் வரும் தேர்தலைக் கணக்கில் கொண்டு இப்பிரச்சனையை அடக்கி வாசிக்கப்பார்க்கின்றன. தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு தேர்தல் கணக்குகளை சிதற அடித்துவிடும் என்பதால் மௌனம் சாதித்தே பிரச்சனையை மறக்கடிக்கப் பார்க்கின்றன.
இந்த மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பகுதிக்கு வராதது மட்டுமல்ல, தனது அரசியல் கட்சிக்குப் பாதகம் வராமல் பாதிக்கப்பட்டவர்கள் போராடிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்! திமுக தலைமையிலான தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு அளிக்க வேண்டும், சட்ட விரோத தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரக்கூட, தனது கூட்டணி கட்சிக்கு நெருக்கடி கொடுக்கக் கூட தயாரில்லை.

அரசின் செயல்பாடு
தற்போது உடைக்கப்பட்டுள்ள ஓடுகளை ஈடுகட்ட ஓடுகள் இறக்கப்பட்டுள்ளன. அதனை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசு வழியாக வழங்கியதாக மக்கள் சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியதாகவும் தெரிவித்தனர். எப்போது திரும்ப ஊருக்குச் செல்வோம் என்று தெரியாமல் காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களைத் தவிர அரசின் செயல்பாடு வேறு எதனையும் காணோம். பத்து பேர் சேர்ந்து கொண்டு தாக்க, அதிலிருந்து தப்பித்து ஓடிய தலித்தான நைனாரை போலீஸ் கைது செய்துள்ளது. வேறு சிலரையும் கொடியேற்றம் பிரச்சனை தெடர்பாக கைது செய்துள்ளது.
இருதரப்பாரையும் சமமாகப் பாவிக்கிறோம் என்ற பாவ்லாவைக் காவல் துறை மேற்கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. கடுமையாக தாக்கப்பட்ட தமிழ்ச்செல்வியின் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை. இதிலிருந்து, குற்றத்தை தடுப்பதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் காவல்துறை அக்கறை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, தாக்குதலுக்கு ஆளானவர்களை தண்டிப்பது என்ற காவல்துறையின் தலித் விரோத அணுகுமுறைதான் வெளிப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடு
உள்ளாட்சி அமைப்பு பரளிபுதூரின் ஆதிக்க சக்திகளின் கையில்தான் இருக்கிறது. தேத்தாம்பட்டியைத் தவிர பிற கிராமங்களுக்கு உரிய வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும், தாக்குதலுக்கு ஆளான தலித் பகுதிக்கு விதிவிலக்கான சிலவற்றைத் தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டதில்லை என்றும் திமுகவைச் சேர்ந்த ஒரே தலித் வார்டு உறுப்பினர் பஞ்சு சொன்னார்.
ஒரு கோடி வரை நிதிப்பெற்றுள்ள இந்த ஊராட்சியில், தலித் கிராமத்திற்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். தற்போது உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதைத் தவிர வேறு நடவடிக்கை எதுவும் இல்லை.
ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பிறரைப்போல வளர்ச்சிப் பாதையின் முன்செல்வதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சிறு நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி எதிர்க்கிறது, கண்டிக்கிறது. அந்த அடிப்படையில் பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது.

பரிந்துரைகள்
1.தாக்குதலைத் தடுக்கத் தவறிய, தாக்குதலுக்குப் பின்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய, இதுவரையில் முறையான நிவாரண நடவடிக்கை வழங்காத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் நிர்வாக அதிகாரியான மாவட்ட ஆட்சியர் இத்தவறுகளுக்காகத் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு, ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2.தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட, வழிநடத்திய முத்தரையர் தரப்பு பெரும் புள்ளிகளான அம்மாவாசி, பிச்சை அவரது மகன் மற்றும் இராமன் போன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, பெண்களை இழிவுபடுத்துவது, சொத்துக்களை சேதப்படுத்துவது, கலவரம் செய்வது போன்ற வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
3.சாலை மறியல் போன்ற இதர குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட மற்ற அப்பாவி முத்தரையர்கள் மீதுதான வழக்குகள் கைவிடப்பட வேண்டும்.
4.கொடியேற்றினார்கள் என்று, அல்லது இதர காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட தலித் பிரிவினர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
5.பெண்களை இழிவு செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6.முத்தரையர் தரப்புப் பெரும் புள்ளிகள் செய்துள்ள நில ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றப்பட வேண்டும். புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற தலித்துகளுக்கும் முத்தரையர்களுக்கும் பிரித்தளிக்க வேண்டும்.
7.தலித்துகளுக்கு அரசு பட்டா அளித்த, மலைச்சரிவில் உள்ள 60 ஏக்கர் நிலத்திற்கான பாதையினை அரசு உருவாக்கி வழங்க வேண்டும். பாதையை மறிக்கும் நபரன இராமன் என்பவர் மீது வன்கொடுமை சட்டத்தில் சொல்லப்படும், தலித்துகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது, நிலத்தைப் பறிப்பது என்ற குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
8.தலித்துகளின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால் குடும்பம் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
9.தலித்துகளின் அடிப்படை ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கல்விச் சான்றுகள், வங்கிச் சான்றுகள் போன்றவற்றை அளிக்க உரிய அனைத்து துறைகளையும், அதிகாரிகளையும் கொண்ட சிறப்பு முகாம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் பரளிப்புதூரிலேயே நடத்தி அனைத்து ஆவணங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை அறியும்குழு உறுப்பினர்கள்
பாலசுந்தரம் (மாநில செயலாளர், சிபிஐஎம்எல்)
ஜெயவீரன் (சிபிஐஎம்எல், மாவட்ட செயலாளர் திண்டுக்கல்)
தேன்மொழி (மாநிலத் தலைவர், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்)
உஷா (மாநிலக் குழு, சிபிஐஎம்எல்)
மணிவேல் (ஏ.அய்.சி.சி.டி.யூ, மாநில பொதுக்குழு உறுப்பினர்)
திவ்யா (மாநிலக் குழு, அகில இந்திய மாணவர் கழகம்)
இராமச்சந்திரன் (சிபிஐஎம்எல், மாவட்ட செயலாளர், கரூர்)
மதிவாணன் (சிபிஐஎம்எல், மதுரை மாவட்ட குழு)




இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் .....


பொதுஉடைமை கட்சிகளின் நிலை மிகவும் பரிதாபதற்க்கு உரியது... நேற்று ஆதிக்க சாதியாக தெரிந்த முத்தரையர்கள் இன்றைய தேர்தல் களத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக மாறியது எப்படி ? என்பதனை அறிய இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் விரும்புகிறது, சந்தர்ப்ப அரசியலும், ஏமாற்று வார்த்தை பிரயோகங்களும் எல்லோரிடமும் எடுபடலாம் முத்தரையர் களிடம் உங்களின் நாடகத்தினை கண்பிக்க வேண்டாம் ! தலித்துகளுடன் என்றுமே நாம் வன்மம் பாராட்டியது கிடையாது, சொல்லப்போனால் அவர்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றே நாம் விரும்பி இருக்கிறோம், ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த மோதலை முலதனமக்க நீங்கள் அன்று முற்பட்டப் போது பாவம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை "புதுக்கோட்டையில் " இடைத் தேர்தல் வரும் அங்கே முத்தரையர்களின் காலில் விழ வேண்டி வரும் என்று நீங்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டிர்கள், கம்முனிசமும் லெனினிசமும் எங்களுக்கும் தெரியும், உங்களைப் போல் உழைக்கும் மக்களின் உணர்வினை தூண்டி ஆதாயம் அடையும் எண்ணம் எங்களிடம் இல்லை, உங்களின் இந்த இரட்டை வேடத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

வெள்ளி, 1 ஜூன், 2012

புதியதலைமுறையில் வேலை வாய்ப்புகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியை உருவாக்க விருப்பமா?

புதிய தலைமுறை இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்துடன், பல்வேறு பயன்தரும் நிகழ்ச்சிகளை கொண்டு ஒரு புதிய தொலைக்காட்சியை தொடங்க இருக்கின்றனது. இதற்கு கீழ்க்கண்டவாறு நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர்.



தலைமை செயல் அதிகாரி
ஊடகம்/பொழுதுபோக்குத் துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்ற மேலாண்மை நிர்வாகி


பொதுமேலாளர் - நிகழ்ச்சி
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளி


பொதுமேலாளர் - விளம்பரம்
தொலைக்காட்சி விளம்பர விற்பனையில் அகில இந்திய அளவில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர்


பொதுமேலாளர் - தொழில்நுட்பம்
சேட்டிலைட் தொலைக்காட்சி சேனலில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்


தயாரிப்பாளர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளிகள்


செய்தி ஆசிரியர்
தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஊடகவியலாளர்

ஒளிப்பதிவாளர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன் அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளர்கள்


படத் தொகுப்பாளர்கள்
FCP/AVID ஆகியவற்றில் நன்கு அனுபவம் பெற்ற படத் தொகுப்பாளர்கள்


மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும் :

மேலாளர் (HR),
நெ. 25 A என் பி தொழிற் பேட்டை,
ஈக்காட்டுதாங்கல்,
சென்னை - 600 032


மேலும் விபரங்களுக்கு

மின் அஞ்சல் : hr(at)newgenmedia(dot)in

வேலைவாய்ப்பு தகவல்


வேலைவாய்ப்பு தகவல்


பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டுவிடலாமே? -புதியதலைமுறை

பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டுவிடலாமே?

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் அளிக்கப்படும்’ என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காலதாமதத்தைத் தவிர்க்கும் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.


ஆனால் அதே சமயம் இது குறித்து மனதில் பல நெருடல்களும் ஏற்படுகின்றன. பொதுவாக, 6ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு 11, 12 வயதாகியிருக்கும். காண்பது, கேட்பது எல்லாம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிகிற வயது.


பள்ளிப் பிள்ளைகளிடையே ஒரு வழக்கம் உண்டு. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவது வழங்கப்படும்போது உனக்கு என்ன கிடைத்தது என்று மற்ற மாணவர்களுக்குக் கிடைப்பதை வாங்கிப் பார்ப்பது. பார்த்து தன்னுடையதோடு ஒப்பிட்டுக் கொள்வது. அது மதிப்பெண் அட்டையானாலும் சரி, தேர்வுத் தாளானாலும் சரி, பரிசுப் பொருளானாலும் சரி.


அந்தப் பருவத்தில், அவர்களுக்கு பள்ளியிலிருந்தே சாதிச் சான்றிதழ் வழங்கும்போது, மதிப்பெண் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல, நான் இந்த சாதி, நீ எந்த சாதி என்று சக மாணவர்களின் சாதி பற்றி அறியும் ஆர்வம் நிச்சயம் ஏற்படும். இதன் விளைவால் ஒவ்வொருவரும் இன்ன சாதி என்பது அவர்களது பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து விடும். அதோடு, வகுப்பறையில் சாதி வேற்றுமை பார்க்கிற உணர்வும் வேரூன்றி வளரும் அபாயமும் நேரலாம்.


ஆகவே இதுபோன்ற சிக்கல்கள் நேர்வதைத் தவிர்க்க, பிறப்புச் சான்றிதழிலேயே அவரவர் சாதியைக் குறிப்பிட்டு வழங்கிவிடலாமே. இதன்மூலம் பிறப்பைப் பதிவு செய்யும் வழக்கமும் வலுப்பெறும்.


இப்பொதெல்லாம் பெரிய நகரங்களில் கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது சாதி பற்றிய விவரங்களும் கணினியிலேயே பதிவாகி ஒரு data base உருவாகிவிடும்.


கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்காத இடங்களில் ரிஜிஸ்டரில் பதிவாகிவிடும்.


இதன் மூலம் வருங்காலத்தில், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களையும் அரசு தனது விரல்நுனியில் வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்காது.


-த்ராவிட், சென்னை - 24

புதன், 30 மே, 2012

TAMIL CULTURE & HISTORY- CHOLAR,SERA,PANDIAR..........



தகவல் சுரங்கம் - முத்தரையர் மாதம் - நன்றி: தினமலர்

தகவல் சுரங்கம்

முத்தரையர் மாதம்

ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தை, தமிழ்ச் சமுதாயத்தில் முத்தரையர் மாதமாக கொண்டாடு கின்றனர். மே 23ம் நாள் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளின் முன்னும், பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. முதன்முதலில் பல்லவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முத்தரையர்கள் பின், பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாக இருந்தனர். கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் பகுதிகளில் இவர்களது ஆட்சி நடைபெற்றது. "அரையர்' என்னும் சொல்லுக்கு நாடாள்வோர் என்பது பொருளாகும். அதனால் தான் இவர்களுக்கு முத்தரையர் என பெயர் வந்தது. இவர்கள் பாண்டிய மன்னர்களைப் போல, தங்கள் கொடிகளில் மீன்களைப் பொறித்து வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை தங்கள் பெயர்களோடு இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் பிடுகு என்பது "வலிமையான இடி' என்பதை குறிக்கிறது.

to visit : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=476925

திங்கள், 28 மே, 2012

சோழநாடு முன்னேற்ற கழக 2ம்ஆண்டு துவக்கவிழா - நன்றி: தினகரன்

தஞ்சை: சோழநாடு முன்னேற்ற கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் அலுவலக திறப்புவிழா தஞ்சையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் தமிழரசன் வரவேற்றார். தஞ்சை நகரை உருவாக்கி தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கு தஞ்சையில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்டிற்கு பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் பெயர் சூட்ட வேண்டும் என தமிழகஅரசை கேட்டுக்கொள்வது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாரிமுத்து, அய்யப்பன், சுதாகர், ஜெயக்குமார், செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.

சனி, 26 மே, 2012

நன்றி..! நன்றி..!! நன்றி...!!!

முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1337-வது பிறந்த நாள் விழா முத்துபேட்டை இல் கொண்டாடப்பட்டது ...
தஞ்சை கிழக்கு மாவட்டம் , திருவாரூர் , நாகை ஆகிய மாவட்டங்களின் மைய பகுதியான முத்துபேட்டை விழா வில் , பட்டுகோட்டை , ஆதிரம்பட்டினம் , மதுக்கூர் , மன்னார்குடி , நீடாமங்கலம் , கோட்டூர் , திருத்துறைபூண்டி , வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 20 _ 30 வயதுக்கு உள்பட்ட சுமார் 2000 மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர் ..விழா பேரணி முத்துபேட்டை புறநகர் சாலை இல் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழி யாக புதிய பேருந்து நிலையம் அருகே விழா மேடை வந்து
சிறப்பாக நடைபெற்றது ..
பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கும் ,வர்த்தக நிறுவனங்களுக்கும் எந்த விதமான வன்முறையும் இன்றி , மிகவும் கண்ணியத்தோடு , பக்குவமாக ,( மாற்று இனத்தவர் கூட பாராடும் வகையில் ) பேரணியில் கலந்து கொண்ட முத்தரையர் சமுதாய நண்பர்களுக்கு மனமார்த்த நன்றி நன்றி .. மேலும் பாதுகாப்பு பணியில் யீடுபட்ட காவல் துறைக்கும் , பேரணி அமைதியாக நடத்த முழு ஆதரவு அளித்த அணைத்து இன நண்பர்களுக்கும் நன்றி ..நன்றி ..

-ராஜ்குமார்

வெள்ளி, 25 மே, 2012

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது..!!


வன்மையாக கண்டிக்கிறோம்....!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 சதய விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை திருச்சி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, ஆண்டாண்டு காலமாக மே 23 ம் நாள் திருச்சியில் லட்சக்கணக்கான முத்தரையர் சொந்தங்கள் திரண்டு அமைதியாக தமது மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்த போது அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக கூட சொல்லாத தமிழக ஊடகங்கள், இருதினங்களுக்கு முன்பு திருச்சியில் சில இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகளை மிகப் பெரிய வன்முறையாக சித்தரித்து எமது இனத்தை வன்முறையாளர்களாக காட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம், அன்றைய தினம் மன்னருக்கு மரியாதையை செய்ய வந்த சொந்தங்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை, அங்கு ஒரு போக்குவரத்து ஒழுங்கு கூட செய்யாமல் எமது சொந்தங்களை அலைக்கழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும், தமிழக அரசு அரசு விழாவாக நடக்கும் பேரரசரின் சதய விழாவின் போது திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமாவது அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், மேலும் பெரும் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவதனால் ஏற்படும் நெரிசலை தடுக்க எல்லா மாவட்ட தலைநகரிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை திறந்திட வேண்டும் என்று அரசுக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது, அன்றைய தினம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடாத எமது சொந்தங்கள் 46 பேர் மிது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எமது உறவுகளை வேண்டிக்கொள்வதெல்லாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனத்திற்கு நாகரிகம் கற்று தந்த கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாம், நாம் கூடும் இடங்களில் நமது பெயருக்கு களங்கம் செய்ய, நமது இனத்திற்கு களங்கம் ஏற்படுத்த சதிகார கும்பல்கள் காத்து கிடக்கின்றன, அந்த நாசகார கும்பலின் சதியினை முறியடித்து நாளை ஆளப் போகும் இனம் பொறுமையை கைவிடல் ஆகாது என்பதனை வலியுறுத்துகிறோம்


என்றும்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

VISIT : http://illamsingam.blogspot.com

நன்றி : செல்வா


வேலை வாய்ப்புத் தகவல்கள்...


நன்றி: தினத்தந்தி திருச்சி பதிப்பு


திருச்சி முத்தரையர் சதயவிழாவில் கலவரம் : பொதுசொத்துக்கு சேதம்; 46 பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சியில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் கலவரம் செய்த, 46 பேர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத வகையில், பொதுசொத்து சேத வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான, ஜாதிச் சங்க நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், நேற்று முன்தினம் காலை நடந்தது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததால், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியை முற்றுகையிட்டனர்.இவர்கள் கையில் வைத்திருந்த கொடிக்கம்பினால் செல்லும் வழியில் நின்ற, சென்ற வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும், கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு ஏராளமான பொதுமக்களுக்கு சிறியளவிலான காயங்களும் ஏற்பட்டன. அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் நடந்த கலவரத்தை தட்டிக்கேட்ட, காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட அவர், கொடுத்த புகாரின்படி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரின் மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாய்ந்தது வழக்கு: திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பஸ் கண்ணாடிகளை உடைத்த, 46 பேர் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், அனுமதியின்றி ஊர்வலமாக செல்லுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ், ஸ்ரீரங்கம், கன்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

NEWS FROM : DINAMALAR

வியாழன், 24 மே, 2012

தினத்தந்தி மதுரை பதிப்பு

முத்தரையர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பத்திரிக்கைகள் ....!!! (தினமலர் செய்தி)

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாட்டம் மாநகர மக்களுக்கு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியம், கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, ராணி, மாநகரச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தே.மு. தி.க., சார்பில் மாவட்டச்செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் பார்த்திபன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். ஐ.ஜே.கே., பொதுச்செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணி வித்தனர். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கம் உள்ளிட்டஅø மப்பினர் மாலை அணிவித்தனர்.*ரணகளம்: காலையில் சிறப்பாக துவங்கிய சதயவிழா, மாலை நேரம் நெருங்க, நெருங்க "உற்சாகம்' கரை புரண்டோடியது. ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன், கார்களில் ஊர்வலமாக வந்தவர்கள், கையில் உள்ள சவுக்கு மர கொடியினால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் டூவீலர்களில் வருபவர்களை அடித்தும், கார், பஸ்களின் மீது அடித்தும் ரகளை செய்தனர்.இதனால் ஏராளமானோர் சிறியளவில் காயமடைந்தனர். நேற்று மாலை 5. 30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண் ஒருவரை, இதேபோல ஊர்வலமாக சென்றவர்கள் கொடிக்கம்பினால் தாக்கியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரவுண்டானா அருகே திடீர் சாலைமறியலில் குதித்தனர்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாரை, பொதுமக்கள் கண்டபடி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலம் வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கைகள் கட்டி போட்ட நிலையில் இருந்த போலீஸார், மக்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். ஊர்வலமாக வருபவர்களை மறித்து தாக்க முற்பட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.*இன்ஸ்., மண்டை பணால்: இரு தரப்பினரையும் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சமாதானம் செய்ய முயன்றார். அ ப்போது, ஊர்வலமாக வந்த சிலர் அவர் மண்டையில் கல்லால் தாக்கி, நின்று கொண்டிருந்த பஸ் மீது தள்ளிவிட்டனர். இத்தாக்குதலில் அவரது மண் டை உடைந்து ரத்தம் கொட்டியது.உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.*கல்வீச்சு: தஞ்சை பகுதியில் இருந்து வேன்களில் ஊர்வலமாக திருச்சி வந்த கும்பல், முந்தி செல்ல வழி கொடுக்காத டி.எஸ்.டி., எல்.ஆர்.எஸ்., பஸ்கள் மற்றும் பள்ளி வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடி உடைந்தது.திருவானைக்காவல், தென்னூர் ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுபோன்று கும்பல், கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டவர்களால், மாலை முதல் இரவு வரை மாநகர மக்கள் பீதியுடனே சாலைகளில் நடமாடினர்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் முத்தரையர் இனம் கொந்தளிப்பு :









முத்தரையர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பத்திரிக்கைகள் ....!!! (நக்கீரன் செய்தி..)



தமிழகத்தில் முத்தரையர் இனமக்கள் பெருவாரியாக உள்ளனர். அதிமுகவின் வாக்கு வங்கியாகவே இவர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி பொறுப்புகளிலும் தொடர்ந்து முத்தரையர் இனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.


ஒரு சில இடங்களில் வாய்ப்புக் கொடுத்தாலும், ஒரு சில மாதங்களில் பறித்துக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையாக சுமார் 65 வாக்காளர்கள் முத்தரையர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றிய சேர்மன்களும் பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் முத்தரையர்களாகவே உள்ளனர்.


இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளராக ஒரு முத்தரையருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் கட்சி தலைமை பறித்துவிட்டது. இதனால் தொடர்ந்து கண்டன போஸ்டர்கள் ஒட்டினர்.

இதன் காரணமாகவே முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஒரு வேட்பாளரையும் அறிவித்துள்ளனர். வாய்ப்பை பறித்துக்கொண்டதால் அதிமுக வேட்பாளரை புறக்கணிப்போம் என்று முத்தரையர் இன அதிமுகவினர் கட்சி தலைமைக்கே கடிதம் எழுதியுள்ளனர்.


இந்த நிலையில்தான் இன்று நடந்த திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் மேடை அமைக்க அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தடையை மீறி மேடை அமைத்து சதய விழாவை நடத்தியுள்ளனர்.

சதய விழா முடிந்த நிலையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், சதய விழாவிற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருபதும் கூடியிருந்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனால் திருச்சி மாநகரில் ஆங்காங்கே கடைகளை உடைத்தும், காவலர்களின் மண்டையை உடைத்தும், ஜெயலலிதாவின் தொகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை சூரையாடியுள்ளனர். இதனால் திருச்சி மாநகரில் இன்னமும் பதட்டம் தணியவில்லை.




- செம்பருத்தி, ஜெ. டி. ஆர்.

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை - தினகரன்

1,337வது பிறந்த நாள் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கட்சியினர் மாலை

திருச்சி, : பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்..
நாட்டின் விடுதலைக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட பேரரசர்களின் ஒருவரான பெரும்பிடுகு முத்தரையரின் 1,337வது பிறந்தநாளை யொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையில் சிலைக்கு நேற்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர்.
இதற்கிடையே மன்னர் சிலைக்கு மாலை அணிவிக் கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங் கார மேடை அமைக்காதது குறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகள்நேற்று முன் தினம் புகார் தெரிவித்தனர். சிலையின் கீழே தலைவர்க ளின் உருவப்பட த்தை வைத்து மாலை அணிவிக் கும் நடைமுறை தான் உள் ளது என பதில் அளித்துள்ளனர்.
இதற்கு முத்தரையர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நேற்று அதிகாலை 4 மணி க்கு அவசரமாக ரெடிமேட் மேடை அமைக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் அமைச்சர் சிவபதி, கலெக் டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்பி குமார், எம்எல்ஏக்கள் பரஞ்சோதி, மனோகரன், கு.ப. கிருஷ்ணன், பூனாட்சி, இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன் னாள் அமைச்சரும், மாவ ட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் முன்னாள் அமைச்சர் செல் வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரிய சாமி, ராணி, நகர செயலா ளர் அன்பழகன் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக சார்பில் மாவ ட்ட செயலாளர் விஜயராஜன், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் மலர்மன்னன், சேரன், இந் திய ஜனநாயகக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய சீலன், பாஜக மாவட்டத் தலைவர் பார்த்திபன் ஆகி யோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முத்தரையர் சங்கங்களின் சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்தரையர் பிறந்த நாள் விழா - நன்றி: தினத்தந்தி


முத்தரையர் பிறந்த நாள் விழா - நன்றி: தினத்தந்தி


திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில்....

இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர். பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

NEWS FROM :
http://puthiyathalaimurai.tv/news/tamil/29980

புதன், 23 மே, 2012

எங்கே கலவரம் ? - காவல்துறையின் அராசகம்...!!

இன்று 1339 சதையவிழா: முத்தரய்யர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சிவபதி தலைமையில் மரியாதை - நன்றி: மாலைமலர்

திருச்சி, மே.23-


முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1339-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயஸ்ரீ, குமார் எம்.பி., மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி மனோகரன், பூனாட்சி, கு.ப.கிருஷ்ணன், இந்திராகாந்தி. முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன்,

கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகர், மனோகரன், லதா. மாநகர அ.தி.மு.க. அவைத்தலைவர் வெல்லண்டி நடராஜன் முன்னாள் மாவட்ட செயலாளகள் வக்கீல் முருகய்யன், ரத்தினவேலு, பரமசிவம், டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள், நாகநாதர் பாண்டி, பூபதி, கலிலூல்ரகுமான், பேரவை இணைச் செயலாளர் திருச்சி அன்பழகன்,

இளைஞரணி பத்மநாதன், ஜோதிவாணன், ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன், ஒன்றிய செயலாளர் நடசேன், ஒன்றிய கவுன்சிலர் பேரூர் கண்ணதாசன். மாநகர் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் கவுன்சிலர் பெஸ்ட்பாபு, கவுன்சிலர்கள் ராஜா , ஏ.பி.சகாதேவன், நத்தர்ஷா, ஏர்போர்ட்விஜி, முத்துலட்சுமி,

வட்ட செயலாளர்கள், ஒத்தக்கடை மகேந்திரன், வெஸ்லி, பிச்சைமணி, மண்ணச்சநல்லூர் ரமேஷ், கல்லூர் முருகேசன், பொதுக்குழு பரமேஸ்வரன், அரசு வக்கீல்கள் சரவணன், வெங்கடேசன், ஜெயராமன், பாக செயலாளர்கள் வி.என்.ஆர்.செல்வம், தர்க்கா காஜா, தியாகராஜன், பீம நகர் ராஜேஷ், சுப்பிரமணி, வேலுப்பிள்ளை,

ஒத்தக்கடை செந்தில், பொன்னகர் முரளி, டிபன்கார்த்தி, மகாமுனி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மாலை அணிவித்தனர். மாநகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில்பெரியசாமி, ராணி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர், பகுதி செயலாளர்கள் மண்டிசேகர், கண்ணன், கொட்டப்பட்டு தர்மராஜ், இளைஞரணி அமைப்பாளர் தொ.தங்கமணி, ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், தலைமையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் அலங்கராஜன் செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், ஜோசப் ஜெரால்டு, சுரேஷ்காந், ராமு, வெங்கடேஷ்.

பகுதி செயலாளர்கள் கலைப்புலிபாண்டியன், வீரசிவக்குமார், பொன்மலை மனோகர் நெப்போலியன், பாவேந்தன், ஜபருல்லா, விவசாய அணி செயலாளர் குமரவேல், கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரமுத்தரையர் சங்கம் சார்பில் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வைரவேல், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் சார்பில்...

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம் - நன்றி: தினமணி

திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார் பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை தேர்தலில் அ.தி.மு.க வின் மாற்று வேட்பாளராக "முத்தரையர்' :

புதுக்கோட்டை தேர்தலில் அ.தி.மு.க வின் மாற்று வேட்பாளராக "முத்தரையர்' :

காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, புதுக்கோட்டை இடைத்தேர்தல், அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பெயரில் இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.அவருக்கு மாற்று வேட்பாளராக, அ.தி.மு.க., புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கருப்பையா முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முதலில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதன்பின், கடைசி நேரத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் கருப்பையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோரில் ஒருவரை மாற்று வேட்பாளராக கட்சித்தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாற்று வேட்பாளராக அறிவிக்க காலைக்கதிர் செய்தியே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டை நகரம் முழுவதும் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் இல்லை என்ற நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.இடைத்தேர்தல​் வேளையில் இப்படி ஒரு நோட்டீஸால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த ஞாயிறு காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன்பின்னரே மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, அதுவும் ஏற்கனவே கட்சியினருக்கும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரையும் நிறுத்த அ.தி.மு.க., சீனியர் அமைச்சர்கள் முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலை பெற்றுள்ளனர்.அதன்படியே அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு மாற்று வேட்பாளராக, முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.கருப்பையாவை மாற்று வேட்பாளராக அறிவித்தன் மூலம் தொகுதியில் உள்ள முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பர் என்று நம்பிக்கை அ.தி.மு.க., தரப்பில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுவும் நம் இனத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அ.தி.மு.க அரசின் ராஜதந்திரங்களில் ஒன்றே இணைய நண்பர்களே ....!

- செல்வராஜ் முத்தரையர்

செவ்வாய், 22 மே, 2012

அழைப்புக்கள்


வேலை வாய்ப்புத் தகவல்கள்...!!!


வாழ்த்துக்கள்...!!!

எனது சகோதரியின் மகள் R.சினேகா இன்று அறிவிக்கப்பட்ட +2 தேர்வு முடிவுகளில் 1200 மதிப்பென்களுக்கு 1092 மதிப்பெண்கள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார், மருத்துவ படிப்பில் சேர்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், எனது வாழ்த்துக்களோடு உங்களின் அன்பான வாழ்த்துக்களை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்

சஞ்சய்காந்தி

திங்கள், 21 மே, 2012

வேலைவாய்ப்பு தகவல்...!!


அழைப்பு

முத்தரையர்களுக்கு காங்., முக்கியத்துவம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சசர் உறுதி - நன்றி: தினமலர்

புதுக்கோட்டை: ""முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்,'' என்று மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.சிவகங்கை எம்.பி., தொகுதிகுட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் செசயல்வீரர்கள் கூட்டம் நேற்று(20ம் தேதி) நடந்தது. மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம சுப்புராம் வரவேற்றார். மத்திய உள்துறை அமைச்சசர் சிதம்பரம் பேசியதாவது:காங்கிரஸ் பேரியக்கம், 128 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது. இதை யாராலும் வீழ்த்தவோ, அசைசக்கவோ முடியாது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சசகஜம். தேய் பிறை, வளர் பிறை போன்று காங்கிரஸ் கட்சி வெற்றி, தோல்விகளை மாறி மாறி சசந்தித்து வருகிறது. அமாவாசைச போன்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு வராது.வரும் 2014ல் நடைபெறவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சசாட்டியுள்ளார். இதில் உண்மையில்லை. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு, 86 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மக்களுக்கு என்னன்ன திட்டங்கள் தேவையோ அந்த திட்டங்களை செசயல்படுத்துவதற்காக, தேவையான நிதியை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.திருமயம் தொகுதியில் மட்டும், எட்டு ஆண்டுகளில், 14 வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசசாயிகளுக்கு விவசசாயக்கடன், தொழிலாளர்களுக்கு தொழில் கடன் என, பல கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் விதமாக, "பெல்' நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலங்கள், சசமுதாய கூடங்கள், பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இந்த தொகுதியில் செசயல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் கடந்த சசட்டசசபைத் தேர்தலில் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல தவறியதால் தான் தோல்வியை தழுவினோம். எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் திருமயம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைக்க வேண்டும்.இதற்காக மாதத்துக்கு இரண்டு முறை இதுபோல் செசயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் மக்களோடு மக்களாக இணைந்து மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செசல்ல வேண்டும்.காங்கிரஸ் கட்சியை அனைத்து சசமுதாய மக்களும் ஆதரிக்கின்றனர். இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சசமுதாய மக்களின் முழு ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.இச்சசமுதாய மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால்தான், இந்த நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் முத்தரையர் சசமுதாய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும்.

ஞாயிறு, 20 மே, 2012

வேலை வாய்ப்புத் தகவல்கள்

முத்தரையர் செய்திகள்...!!!


வேலைவாய்ப்பு தகவல்கள்


சனி, 19 மே, 2012

முத்தரையர் சங்க ஆலோசனைகூட்டம்

நாமக்கல்:மாவட்ட முத்தரையர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.


சங்க மாவட்ட பொருளாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோபி முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார்.கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பில், நாமக்கல் முத்தரையர்இன மக்கள்

அனவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஒன்பது பட்டப்பெயரில் உள்ள அனைவரும்

முத்தரையர் என பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், மகாமுனி, துரைசாமி, நாகராஜன், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகரப் பகுதியில் உள்ள அந்த சமுதாய ஓட்டுகளை அதிகம் பெற, அ.தி.மு.க., பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதுக்கோட்டை தொகுதிக்கு, வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலை, தி.மு.க.,- ம.தி.மு.க.,- இ.கம்யூ.,- பா.ஜ.,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க., சார்பில் ஜாகிர் உசேன், ஐ.ஜே.கே., சார்பில் சீனிவாசன் ஆகியோர் மட்டும் வேட்பாளர்களாக இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். புதுக்கோட்டை தொகுதியைப் பொறுத்தவரை, கள்ளர் மற்றும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். தொகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தவர் உள்ளனர். இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கை எட்ட... : இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று, இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பான்மை ஓட்டுகளையும், அ.தி.மு.க., வேட்பாளர் பெற வேண்டும்.
குறிப்பாக, நகரப் பகுதியில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற்றால் தான், இலக்கை அடைய முடியும் என்று, அ.தி.மு.க., தரப்பில் நம்புகின்றனர்.

அதிர்ச்சி : தவிர, தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளதால், அந்த மக்களின் ஓட்டுகள், தே.மு.தி.க., பக்கம் சாய வாய்ப்புள்ளது. ஆகையால் தான், முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற, அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறார். சில நாட்களாக, நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் சமுதாய முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதேபோல், நகரில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் சென்று, அம்மக்களின் ஆதரவை திரட்டினார். முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை, அ.தி.மு.க., வேட்பாளர் பெருவாரியாக பெற முயற்சித்து வருவது, தே.மு.தி.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தரையர்களுக்கு முக்கிய பதவிகள் இல்லை : புதுகையில் ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு - நன்றி : தினமலர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் இல்லை என்பதை, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், எம்.ஜி.ஆர்., காலம்தொட்டே, அ.தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

முதல்வருக்கு தெரிவிக்க...: திருச்சியைப் பொறுத்தவரை தற்போது, எம்.எல்.ஏ.,க்களாக பரஞ்ஜோதி, சிவபதி, பூனாட்சி ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களில், சிவபதி அமைச்சராக உள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் மட்டும், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மற்றபடி புதுக்கோட்டை, அ.தி.மு.க.,விலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ முக்கிய பதவிகளில் முத்தரையர்கள் இல்லை. இதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை நகர் முழுவதும், "புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சங்கம்' என்ற பெயரில், நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் இல்லை : அந்த நோட்டீசில், "எம்.ஜி.ஆர்., காலம் முதலே முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வருகின்றனர். அப்படி ஓட்டளிக்கும் முத்தரையர்களுக்கு, கட்சி பதவிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்பதை முதல்வரும், அவரின் தளபதிகளும் (அமைச்சர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகம் : மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில், மூன்றில் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, இடைத்தேர்தல் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை, அ.தி.மு.க., தலைமைக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையிலே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆகையால், வரும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பங்கேற்கவில்லை : தவிர, கு.ப.கிருஷ்ணனுக்கு முக்கிய பதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டீசை ஒட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை நகர செயலராக இருக்கும் பாஸ்கர், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சியில் சீனியராக இருந்தும், பெரிதாக எந்த பதவியும் கிடைக்கவில்லை என்பதால், அவருடைய ஆதரவாளர்கள் யாராவது போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்களா? என்ற கோணத்திலும், உளவுத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில், பாஸ்கர் பெரிதாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!!

எனது அன்பிற்கினிய தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள்... !!

நாளது நாள் (23 MAY 2012), பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 ம் ஆண்டு பிறந்த தின விழா...... தமிழமெங்கும் உள்ள நமது இன சகோதர்களால் எழுச்சியோடு கொண்டாட உள்ள இந்த நேரத்தில்... நாம் கடந்த பல வருடங்களாக எதிர் நோக்கி இருந்த சாதிவாரியான கணக்கெடுப்பு இந்திய மத்திய அரசால் தொடக்கி நடந்து வருகின்றது, அதில் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இந்த கணக்கெடுப்பின் மூலம் சரியான தகவலினை பெற முடியாது என்பது கசப்பான உண்மை, காரணம் இதில் ஒருவருடைய சாதி எது என்று கேட்கப்படும் போது, அவர் எதனை கூறினாலும் எந்த ஆதாரமும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் இதில் நிறைய தவறுகள் நடக்கவும் ( உதாரணமாக சாதிகளுக்கான இட ஓதிக்கீடில் பயன் பெற்ற ஒருவர் நான் சாதியற்றவன் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் ), நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் இதனால் முழுமையான பயனைப் பெற முடியாது என்பதனால் இந்த கணக்கெடுப்பை இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் நிராகரிக்கிறது. மேலும் தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் உள்ள சாதிகளை உள்ளது உள்ளப் படியே சரியான முறையில் கணக்கெடுப்பை நடத்தி சரியான இட ஒதிக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

மேலும் தற்சமயம் புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில், அந்த தொகுதில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டி வருமே என்ற காரணத்தால் தேர்தலைப் புறக்கணிக்கும் தி.மு.க, இனி தமிழகத்தில் நடைப் பெரும் எல்லா இடைத் தேர்தல்களையும் புறக்கணிக்குமா ? புதுக்கோட்டை தொகுதில் மட்டும் அல்லாமல் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள முத்தரையர்கள் பெரும்பாலனவர்கள் அ.தி.மு.க வில் உள்ள போது வேறு இனத்தவருக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயமா ? முத்தரையர்களை என்றுமே மதிக்காத / அவர்களின் வெற்றி வாய்ப்புள்ள எல்லா தொகுதியிலும் மாற்று இனத்தவரை வேட்ப்பாளராக்கும் தே.மு.தி.க விற்கும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் முத்தரையர் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக களம் காணும் மரியாதைக்கு உரிய திரு. சிவப்பிரகாசம் அவர்களுக்கு நிபந்தனைகள் இல்லாத ஆதரவினை என் முத்தரையர் இனம் வழங்க வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் பணிவோடு வேண்டுகிறது.

இந்த இனிய நாளில் எனது இனத்தின் அத்தனை உறவுகளுக்கும் எங்களது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த பொன்னான நேரத்தில் எமது இளைய தலைமுறை " குடி பழக்கத்தை துறப்பதாக" ஒரு சபதம் எடுத்து நாளைய தமிழகத்தை நாமே வழிநடத்த உங்களை அன்புடன் வேண்டுகிறோம் என்றும் உங்கள்....!!!



அன்புடன்....
K.சஞ்சய்காந்தி B.Com
ஒருங்கிணைப்பாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

M.காந்தி B.E.,
செயலாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9003834321

R.தேவா (எ) சுரேஷ் M.Sc.,
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9677547381

செவ்வாய், 15 மே, 2012




THANKS TO: MANODAS



THANKS TO: SASI

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற வீடுவீடாக திண்ணை பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் திருமேனி பேசுகையில், ‘புதுக்கோ ட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 64,000 முத்தரையர் இன வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால், அனைத்து கட்சிகளுமே அவர்கள் சாராத எண்ணிக்கையில் குறைவாக உள்ள இனத் திலிருந்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்து களம் இறக்குகிறார்கள். இம்முறை முத்தரையர் இன பிரதிநிதியாக மலையூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறோம்.

அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக வீடுவீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து வேட்பாளர் சிவப்பிரகாசம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

செவ்வாய், 27 மார்ச், 2012

முத்தரையர் சங்க கூட்ட

ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில் முத்தரையர் சங்க கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
கருப்பையா, முனியசாமி,முனீஸ்வரன், ஆறுமுகம்,இளைஞர் பேரவை தலைவர் முருகேசன் உட்பட பலர் பேசினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தவும், இந்தியா-இலங்கை இருநாடுகளுக்கிடையே கடல் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாலுகா தலைவராக சுந்தர்ராஜன், துணைத்தலைவர் குமரேசன், செயலாளர் களஞ்சியராஜ், துணைசெயலாளர் குருசாமி, பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


THANKS: DINAMALAR

வெள்ளி, 16 மார்ச், 2012

இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

காஞ்சிபுரம், மார்ச் 12: நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
÷கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது.
÷அதே போல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கே ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடக முத்தரையர் அறிவித்துள்ளார்.

THANKS: DINAMANI

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்: ஜான்பாண்டியன் பேட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல பிரிவுகளாக உள்ள முத்தரையர் சங்கங்களை ஒன்று கூட்டி ஒரே அணியில் திரட்டி மக்களுக்கு, சமுதாயத்திற்கு தொண்டு செய்ய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் பாடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்க வந்துள்ளேன்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அங்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆளும் கட்சியால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதனால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இடைத்தேர்தலில் தனித்து நிற்பது சாத்தியம் இல்லை. கூட்டணி சேர்ந்தால் தான் வெற்றி பெறும். தி.மு.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் தான் வாங்கும். வெற்றி பெற முடியாது.

தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு மத்திய அரசு தான் காரணம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு மத்திய அரசு உதவாமல் பாரபட்சமாக நடந்து வருகிறது. மத்திய அரசு கொடுத்தால் தான் மின் தடை நீங்கும். எனவே தமிழகத்தில் மின் தடையை நீக்க மத்திய அரசை கேட்பதோடு மட்டும் அல்லாமல் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியாவது தமிழக அரசு மின்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் என்கவுன்ட்டர்கள், பரமக்குடி சம்பவம் போன்றவை வருந்தத்தக்கது. பரமக்குடி சம்பவத்திற்கு அதிகாரிகள் திட்டமிட்டு செய்த சதி தான் காரணம். என்கவுன்ட்டர் நடத்தக்கூடாது. குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.காவல்துறை துப்பாக்கிசூடு நடத்துவதை கண்டிக்கிறோம்.

இலங்கை தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசை கலைத்து விட்டு ராஜபக்சேவை சிறையில் வைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

THANKS: MALAIMALAR

மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்க முடியாது ஜான்பாண்டியன் பேச்சு

தஞ்சை: மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை, சரித்திரம் படைக்க முடியாது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் அரசியலில் முத்தரையர்களின் நிலை குறித்த பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள முத்தரையர் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும். ஏழை, எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும்.
பல வழக்குகள் போட்டு என்னை சிறையில் அடைத்தாலும், எனது சிந்தனைகளை யாரும் சிறை வைக்க முடியாது. இன்று அமைச்சர் பதவி வகிக்கும் நமது சமூகத்தினர் நமக்காக எந்த பணிகளையும் செய்வதில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டு என்னும் ஆயுதத்தை நாம் கையில் எடுத்தால் எவராலும் நம்மை அசைக்க முடியாது.
ஆட்சிகள் மாறலாம். காட்சிகளும் மாறலாம். ஆனால், சமுதாயம் மாறாது. முத்தரையரும், தேவேந்திர குலத்தினரும் இணை பிரியாத நண்பர்கள். நாம் ஒன்றாக இருந்து வரலாறு படைப்போம்.
உழைக்கும் நமது சமுதாயத்தை இழிவுபடுத்துவோரை தூக்கி எறிவோம். மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


THANKS: DINAKARAN

ஞாயிறு, 11 மார்ச், 2012

தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்

தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அப்ரண்டீஸ்
கல்வித் தகுதி: டீசல் மெக்கானிக்/ எலெக்ட்ரீஷியன்/ forger and heat treater/ Sheet Metal Worker/ மோட்டார் மெக்கானிக்/ டிராஃப்ட்ஸ்மேன்(மெக்கானிக்கல்) பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ/ பி.இ./ பி.டெக். படித்திருக்க வேண்டும்.
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2012
மேலும் விவரங்களுக்கு: www.tuticorinport.gov.in/

THANKS: PUTHIYATHALAIMURAI

I.E.S இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ் தேர்வு எழுத என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போல மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முக்கியத் தேர்வு ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு.இந்தத் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இந்திய ரயில்வே, மத்திய என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் வாட்டர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்திய ராணுவம், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ்... இப்படி பல்வேறு துறைகளில் குரூப் ஏ மற்றும் பி சேவைப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பொறியியல் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிசிக்ஸ், ரேடியோ என்ஜினீயரிங் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களின் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோர், பார்வைத்திறன் செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. அரசுத் துறையில் பணிபுரிந்துகொண்டே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

ஐ.இ.எஸ். தேர்வைப் பொருத்தவரை இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். ஒன்று, எழுத்துத் தேர்வு, மற்றொன்று பர்சனாலிட்டி டெஸ்ட். எழுத்துத் தேர்வுக்கு மட்டும் மொத்தம் 1,000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் என்று துறைவாரியாக கேள்வித்தாள்கள் இருக்கும். எழுத்துத் தேர்வை பொருத்தவரை இரண்டு வகையான தேர்வு முறைகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். முதல் வகை தேர்வுமுறையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். இதில் மூன்று கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா இரண்டு மணி நேரம். இதில் ஒன்று, ஜெனரல் எபிலிட்டி கேள்வித்தாளாகவும் மற்ற இரண்டு கேள்வித்தாள்களில் துறை சார்ந்த கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

இரண்டாம் வகையான தேர்வு முறையில் விடைகளை மாணவர்கள் கட்டுரை வடிவில் (கன்வென்ஷனல் டைப்) எழுத வேண்டியதிருக்கும். இந்தத் தேர்வில் இரண்டு கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா மூன்று மணிநேரம். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள்.இந்த இரண்டு கேள்வித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், மாணவர்கள் தேர்வு செய்யும் துறைவாரியான கேள்விகளாகத்தான் இருக்கும் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. ஐ.இ.எஸ். தேர்வு தேசிய அளவிலான தேர்வு என்பதால், விடைகளை கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பெர்சனாலிட்டி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பெர்சனாலிட்டி தேர்வு என்பதும் நேர்முகத்தேர்வு போலத்தான். இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. துறை வாரியான அறிவு, பொது அறிவு, உடற்தகுதி, சமூகப்பார்வை, தலைமைதாங்கும் பண்பு, மூளை மற்றும் உடற்திறன், எதையும் புதுமையாக யோசித்தல் இப்படி பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு என்ஜினீயரிங் பணிகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்பும்போது, பிறப்புச் சான்றிதழ், கல்வித்தகுதிச் சான்றிதழ், வயது வரம்பில் சலுகை கோரியிருப்பின் அதற்கான சான்றிதழ், தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டியது அவசியம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்கள் தலைமை தபால் நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ரூ. 50 தேர்வுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாணவர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் கார்டு, விசா மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். தபால் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரூ.100க்கான போஸ்டல் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26.
விவரங்களுக்கு: www.upsc.gov.in

THANKS: PUTHIYATHALAIMURAI

நாம் எப்போது போராட போகிறோம் ...!!!

சண்டிகர்: அரியானாவில் ஜாட் சமூகத்தினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவரச சட்டம் ஒன்றினை பிறப்பிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அரியானாவில் ஜாட் சமூகத்தினர் ,இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் , கல்வி,வே‌லைவாய்ப்புகளி்ல் இட ஒதுக்கீடு கோரி கடந்த மூன்று வாரங்களாக போராடி வருகின்றனர்.ரயில்மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில் ஜாட் சமூக பிரதிநிதிக‌ளுடன் ஆலோசனை நடத்திய அரியானா மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து அவரச சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


THANKS: DINAMALAR

நாலடியார் தெளிவுரை...

இந்நூல் செய்யப்பட்ட காலம் இன்னதெனத் தெளிவாய்ப் புலப்பட்டிலது. இது சங்கமருவிய நூலெனக் கூறுவது கொண்டு, இதன் காலத்தைக் கடைச்சங்க காலமாகிய இரண்டாம் நூற்றாண்டெனப் பொதுவாய்க் கூறுவதுண்டு. கடைச்சாங்க நூல்களெனத் தெளிவுறத் துணியப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளிற் பயின்ற வாராத சத்தம், சோதிடம் (52), அபராணம் (207), உபகாரம் அபகாரம் (69), தீர்த்தம் (75), கோத்திரம் (242) முதலிய சொற்கள் இந்நூலில் வந்திருத்தலாலும், வரலாற்று ஆராய்ச்சிக்கு உரியதெனக் கருதப்படும் முத்தரையர் (200,296) என்னும் சொல் ஈரிடத்தில் அமைந்திருத்தலாலும். இஃது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாயிருக்கலாமென ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.

நாலடியார் தெளிவுரை...
http://www.noolulagam.com/product/?pid=5402

சனி, 10 மார்ச், 2012

இந்தியா எதிநோக்கியுள்ள ஆபத்து....!!

இந்தியா எதிநோக்கியுள்ள ஆபத்து....!! இலங்கை ராணுவ வலைத்தளத்தில் இருந்து

இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின் சீனா இலங்கையில் அதிக முதலீடுளை செய்ய முன்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 821 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2011 ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் 1.28 பில்லியன் டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.

இலங்கையானது வெளிநாட்டு முதலீடுளை எதிர்பார்த்து பல திட்டங்ளை நடைமறைப்படுத்தி வருகின்றது இதில் ஓர் அங்கமாக உல்லாசப் பயணத் துறையை மேம்படுத்தும் திட்டத்தை துரித கதியில் மேன்படுத்தி வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக சீனாவின் உதவியுடன் கொழும்பின் மத்திய பகுதியில் 3 ஹெக்டர் நிலப்பரப்பில், ஏறத்தாள 104 மில்லியன் டொலர் முதலீட்டில், 350 மீற்றர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைக்க இலங்கை அரசு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இக்கோபுரம் தென் கிழக்கு ஆசியாவின் மிக உயரமானதாகும் இது தாமரை வடிவில் அமைக்கபடவுள்ளது.இத்தாமரைக் கோபுரத்தை இந்தியாவிலிருந்தும்பங்களாதேஷிலிருந்தும் பார்க முடியும்.


உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய இத்தாமரைக் கோபுரம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவை, வானொலி போன்றவற்றோடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் பயன் படுத்தப்படவுள்ளது.

துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்தியைப் பொறுத்தவரை, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய ம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக சாலை மற்றும் வட பகுதி வீதிப் புனரமைப்பிற்கு என அடுக்கிக் கொன்டு செல்லக்கூடிய வகையில் சீனா பல உதவிளை வழங்கிவருகின்றது.





http://www.vidivu.lk/tm.asp?fname=20120108_02

முத்தரையர் குழும நண்பர்கள் சந்திப்பு - சென்னையில்

நாளை ஞாயற்று கிழைமை இணைய முத்தரையர் குழும நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெறுகிறது, இடம் மற்றும் முகவரி ,'

கேட்டலிஸ்ட் ஐ ஏ எஸ் .அகாடமி ,W 102 ,தரைதளம் இரண்டாம் நிழற் சாலை ,அண்ணாநகர் ரவுண்டு டாணா,அண்ணா நகர் ,சென்னை
தொடர்புக்கு -9486939275 , 9620841312

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ரவி குல திலகன் - ஒரு பார்வை

வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல்... அணிந்துரை சுந்தா..

சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்..

நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்..

இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்..

ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்....

மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்..

குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது...

ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்..

ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது..

வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல்

”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது..

மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை..
பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு ..

கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்... சொல்வீர்கள் கல்கியின் இளவலும் அற்புதமென்று..


THANKS: தேனம்மை லெக்ஷ்மணன்
http://honeylaksh.blogspot.com/search?

புதன், 22 பிப்ரவரி, 2012

பேராசிரியர் இராசசேகர தங்கமணி


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

தமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின் வரலாற்று முதன்மை நமக்கு ஒருவாறு விளங்கும்.
கரூர் பகுதியின் அத்தனை வரலாற்று உண்மைகளையும் மனத்தில் தேக்கியபடி அறிஞர் ஒருவர் உள்ளார். அவர்தாம் பேராசிரியர் இராசசேகர தங்கமணி.

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 28 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.70 அகவையைக் கடக்கும் இவர் இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்கிறார்.அந்த அளவு என் உடல் வலிமை வாய்ந்தது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.அடிப்படையில் தாம் ஒரு மற்போர் வீரர்(பயில்வான்) என மார்தட்டிக்கொள்ளும் பேராசிரியர் இளம் அகவை முதல் வேட்டைக்குச் செல்வதில் நாட்டம் உடையவர்.இன்றும் ஓட்டமும் நடையுமாக இருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு என்னும் அருங்குணத்தையாகும்.

இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கும் காசுமீர் தவிர்த்த இந்தியப் பகுதிகளுக்கும் சென்றுவந்த இந்தப் பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு சோம்பி அமர்ந்திருக்கும் இயல்புடையவர் அல்லர்.தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தம் நேரத்தைச் செலவிடுகிறார். இவரைச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் இளமைப்பருவம் பற்றி...

என் பிறந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமழபாடிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை என்னும் சிற்றூர்.என் தந்தையார் புலவர் மருதமுத்து.தமிழாசிரியராகவும்,ஓவிய ஆசிரியராகவும் விளங்கியவர்.நான் 10.10.1939 இல் பிறந்தேன்.என் தந்தையார் பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் நூல்களை எப்பொழுதும் படிப்பவர்.அவர் வழியாகப்பண்டாரத்தாரையும் அவர்தம் நூல்களையும் அறிந்தேன்.

எங்கள் ஊரைச் சுற்றி வரலாற்று முதன்மை வாய்ந்த பல ஊர்கள்,கோயில்கள்,ஏரிகள் உள்ளன.இந்தப் பின்புலம் எனக்கு வரலாற்றுத் துறையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.எங்கள் ஊருக்கு அருகில் திருமழபாடி, கீழைப்பழூர், கண்டாராதித்தம், திருவையாறு,தஞ்சாவூர், அரியலூர்,குலமாணிக்கம்,செம்பியக்குடி,ஆலம்பாக்கம்(மதுராந்தக சதுர்வேதிமங்கலம்), செம்பியன் மாதேவி ஏரி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய ஊர்களும் பிற அடையாளங்களும் எங்கள் பகுதியின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன.இந்தச் சூழல் என்னை இளம் அகவையிலேயே வரலாற்றில் ஆர்வம் வரும்படி செய்தது.

உங்கள் கல்வி பற்றி...

திருமழபாடியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். சமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புப் பயின்றேன்.தேசியக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தேன். திருப்பராய்த்துறையில் பி.டி என்ற ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியேற்றேன்.1966 இல் முதுகலை வரலாறு படித்துக் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றேன்.

வரலாற்றுத் துறைக்கு உங்களின் பங்களிப்பு...

தமிழ்நாட்டு அரசின் பாட நூல் நிறுவனத்துக்கு முதலாம் இராசேந்திரசோழன் பற்றிய நூல் எழுதி வழங்கியுள்ளேன்(1973).இதற்கு முன் இதுபோல் தனி அரசனைப் பற்றி விரிந்த நூல் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.பின்னர்ப் பாண்டியர் வரலாறும் எழுதி வழங்கினேன்.அதனை அடுத்து இரசிய நாட்டு வரலாறும் எழுதி வழங்கினேன்,இவ்வாறு அரசு நிறுவனத்துக்கு மூன்று வரலாற்று நூல்கள் எழுதி வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தொல்பொருள்,அகழாய்வு,கல்வெட்டு,நாணயங்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்து பல ஆய்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளேன்.என் வரலாற்றுத் துறைப் பங்களிப்பைக் கண்டு பல நிறுவனங்கள் சிறப்புச் செய்துள்ளன.அவற்றுள் வரலாற்று வித்தகர்,வரலாற்றுச்செம்மல்,தமிழக வரலாற்று மேதை என்னும் பட்டங்களைச் சிறப்பிற்குரியனவாகக் கருதுகிறேன்.


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

உங்கள் இலக்கியத்துறைப்பங்களிப்பு பற்றி...

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் என்ற பேரகராதிக்கு 200 மேற்பட்ட கட்டுரைகள் நான் எழுதி வழங்கியுள்ளேன். என் தந்தையார் உடன் பிறப்புகள் மூவரின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.என் நூல்களை வெளியிட்டுள்ள துடன் தமிழறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் தொகுத்த சங்க நூற் சொல்லடியம் என்ற நூலின் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன்.அறிஞர் கோடப்பிள்ளை எழுதிய பண்டிதமணியார் நூலையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்து அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களை என்னுடைய கொங்கு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டு வருகிறேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி...

இலங்கை,அமெரிக்காவுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்துள்ளேன்.என் மகன்கள் இருவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.அங்குப் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தமிழ் வரலாறு பற்றி உரையாற்றியுள்ளேன்.அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய பட்டறிவும் எனக்கு உண்டு.அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியகங்கள், நூலகங்களைப் பயன்படுத்திய பட்டறிவும் உண்டு.

உங்கள் நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பட்டியலிட முடியுமா?

தமிழக வரலாற்றில் புதிய ஒளி,சுற்றுலாவியல்,தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்,வேட்டுவர் வரலாறு,முத்தரையர் வரலாறு,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்,கொங்குச் சமுதாயம், கருவூரார்வரலாறு,வெஞ்சமன் வரலாறு,கரூர் பசுபதீசுவரர் கோயில் தலவரலாறு, தொல்லியல், தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள்,கருவூரும் கன்னித்தமிழும், தமிழ்நாடும் தொல்லியலும் உள்ளிட்ட நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் பழங்காசு இதழின் சிறப்பாசிரியராகவும்,பல்வேறு வரலாற்று ஆய்வு அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ள பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நடமாடும் வரலாற்று நூலகம் எனில் மிகையன்று.

பேராசிரியரின் முகவரி:
ம.இராசசேகர தங்கமணி
488/9, பாண்டியர் நகர்,
கரூர்-639 001
செல்பேசி: 94430 88144

நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் இப்போது...

நண்பர்களே இனி இளம் சிங்கங்களின் பதிவினை உடனடியாக TWITTER மற்றும் FACEBOOK ல் காணலாம்
Twitter and facebook Username : sanjai28582

புதன், 15 பிப்ரவரி, 2012

முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா

திருச்சி, பிப். 11: திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். வழக்குரைஞர் பி. சரவணன், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் ஜி. லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

THANKS : DINAMANI

தமிழர் நலன் ஜெ., முடிவுகளுக்குதமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவுஅளிக்கும்

திருச்சி: "தமிழக நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவு அளிப்பது' என்று, திருச்சியில் நடந்த அச்சங்கத்தின் காலாண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் காலாண்டு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவரும், பொதுச்செயலாளருமான பாஸ்கரன், செயலாளர் வக்கீல் சிவராஜ், நிர்வாகிகள் கருணாகரன், பெரியசாமி, மூர்த்தி, ஜெயச்சந்திரன், சங்கர், வேலாயுதம், குஞ்சான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், முத்தரையர் என தலைப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களில் முத்துராஜா முத்திரியர், முத்தரையர் பி.சி., பட்டியலிலும், வலையர், சேர்வை, அம்பலக்காரர் எம்.பி.சி., பட்டியலிலும் உள்ளனர். இந்த அரசாணையில் உள்ள முரண்பாட்டை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக முதல்வரை வலியுறுத்தும் கோரிக்கை உள் அரங்க மாநாடு திருச்சியில் ஏப்ரல் மாதம் நடக்கிறது.தமிழக அமைச்சரவையில் சிவபதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியமைக்கும், திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ததுக்கும், தரமான பூங்கா திருச்சியில் அமைக்கவும், கூடங்குளம் அணுஉலையை பிரச்னையை ஆராய குழு அமைக்கவும், விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு உச்ச வரம்பை உயர்த்தியும் உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு முத்தரையர் சங்கம் பாராட்டை தெரிவிக்கிறது. மேலும் தமிழக நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மாநாட்டை துறையூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: தினமலர்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

முத்தரையர் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட முத்தரையர் நலச்சங்க ஆலோசனை கூட்டம், கவுரவ தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராகவன் வரவேற்றார். சங்க தலைவர் நாகசாமி, பொருளாளர் மாணிக்கம், இளைஞரணி செயலாளர் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் கமலநாதன் வரவேற்றார். கூட்டத்தில், சங்க உறுப்பினர் சேர்ப்பு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றுவது, முத்தரையர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து சிறப்பு சலுகை பெறுவது, திருவாலங்காடு ஒன்றிய செயலாளராக வி.அரிதாஸ் என்பவரை நியமிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

THANKS TO: DINAKARAN