Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

சனி, 2 மார்ச், 2013

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது டாக்டர் ராமதாஸ் பேச்சு

புதுக்கோட்டை
வன்கொடுமை சட்டம், 98 சதவீதம் தவறாக பயன்படுத்தப்படு கிறது என்று பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை பால் பண்ணை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா... நிறுவனர் டாக்டர் ராம தாஸ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறிய தாவது:
அனைத்து சமுதாய பேரியக்கம் என்பது, பாதிக்கப்பட்ட சமுதாயத் தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து தொடங்கப்பட்ட இயக்கம் ஆகும். காதல், சாதி ஒழிப்பு என்ற பெயரில் பெண் களை கடத்தி செல்வது, மான பங்கபடுத்துவது, திருமணம் செய்து பின்னர் அதன்மூலம் கட்ட பஞ்சாயத்து செய்வதை, இந்த இயக்கம் மூலம் கண்டிக்கிறோம்.
15, 18 வயதுகளில் டீன்ஏஜ் பருவத்தில் ஏற்படும் நாடக காதலை மட்டுமே நாங்கள் கண்டிக்கிறோம். தமிழக அரசுக்கு எதிராக செயல்படு வதற்காக இந்த இயக்கத்தை நாங்கள் நடத்த வில்லை. எங்களுடைய போராட்டங்கள் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு தராத வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு சமுதாய தலைவர்கள்...
கூட்டத்தில், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அரசகுமார், நாகராஜ், சுப்பிரமணிய காடுவெட்டியார் அகி யோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில் பா... மாநில பொதுச் செயலாளர் அருள் மணி வரவேற்று பேசினார்.
மாநில பா... தலைவர் கோ..மணி, முத்தரையர் சங்கத்தை சேர்ந்த எஸ்.எம்.மூர்த்தி, நாயுடு சங்கத்தை சேர்ந்த ராஜ்குமார், உடையார் சங்கத்தை சேர்ந்த அறந்தாங்கி அண்ணாத்துரை, பார்வார்டு பிளாக் எஸ்.ஆர்.தேவர், பிராமணர் சங்கத்தை சேர்ந்த குமார் என்கிற சிவராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பா... மாவட்ட (மேற்கு) செய லாளர் வெள்ளைச்சாமி, முத்துக் குமார், செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:
பொய் புகார்கள்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் தற்போது கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகிய தளங்களில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல சமூக தளத்திலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு உள்ளது. மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்க கூடாது என்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கம் அகும்.
சமுதாய தலைவர்களில் சிலர் அவர்களுடைய சொந்த லாபத்திற்காகவும், பிடிக்காதவர்களை பழி வாங்கவும், கட்ட பஞ்சாயத்து செய்யவும் மற்ற சமுதாயத்தினர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி பொய் புகார்களை அளிக்கும் படி அவர்களுடைய சமுதாயத் தினரை தூண்டுவது வருத்த மும், வேதனையும் அளிக் கிறது.
நாடக காதல்
இந்த நாகரிக சமுதாயத்தில் காதல் மற்றும் கலப்பு திருமணங் களுக்கு தடை செய்வது சரியாக இருக்காது. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பை கெடுக்காமல் காதல் நாடகம், கட்ட பஞ்சாயத்து, பணப்பறிப்பு, சாதி ஒழிப்பு என்ற போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்துக்கு முன்னுரிமை தந்து 21 வயதுக்குமேல் நடக்கும் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை, வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன் படுத்தப்படுகிறது. நாடக காதல் திருமணங்களால் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக் கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.  

 Thanks to : DINATHANTHI


MUDIRAJ JAYANTHI ON SATURDAY


Hyderabad: The 115th birth anniversary of K. Krishna Swamy Mudiraj, former Mayor of Hyderabad, will be held on August 23 at Mudiraj Bhavan, New Boiguda. Freedom fighter, journalist and historian, Mudiraj is known for the book – Pictorial Hyderabad – authored by him in 1929. Born in a middle class family, Mudiraj became a great educationist of his time. He also emerged as a prominent politician and a freedom fighter. Popularly referred to as “Mudiraj Petamaha”, he was the founder president of Mudiraj Mahasabha. He went round the country, established the all India Mudiraj Mahasabha and wrote the history of Mudiraj community. His two volume Pictorial Hyderabad gives a rare insight into the history of the Hyderabad State, its rulers and administration. It received wide acclaim from both Indian and international press when it was published in 1929. His idea of writing the book was to give an “unvarnished and faithful record” of all that took place during the rule of Asafjahis. Not just the historical and biographical aspects of the erstwhile rulers, nawabs and jagirdars, the book also mentions the interesting accounts of Hindu and Muslim saints. The rare book has been reprinted and is now available for sale with M. Narsimhulu Mudiraj.
He can be contacted on phone 24066959 or 93463-56861.



News From : V.P.RAJAN




வியாழன், 28 பிப்ரவரி, 2013

வாழ்த்துக்கள்

இன்று கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் திரு. பூனாட்சி அவர்களின் பணி  சிறக்க இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வாழ்த்துகிறது...!!! 




புகைப்பட உதவி : திரு. T .P .ராஜன்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கல்வி அறக்கட்டளை



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கல்வி அறக்கட்டளை

      "கல்விஇல்லாமல் இனி நம் சமூகம் முன்னேற வேறு புதிய வழிகள் கிடையாது... நமது சக சமூகங்களின் வெற்றியே கல்வியில் அவர்கள் பெற்ற வெற்றிதான்நமது எதிர்கால சந்ததியும் இந்த போட்டி நிறைந்த உலகில் வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

   இதற்க்கு நாம் என்ன செய்ய முடியும் ? என்ற கேள்வி நமது சமூகத்தின் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்து அதற்க்கு செயல்வடிவம் கொடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி வட்டம்கீரமங்கலத்தில் “பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கல்வி அறக்கட்டளைதொடங்கி அதன் மூலம்"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உயர் நிலைப் பள்ளியாகி" (PPM HIGH SCHOOL) நிற்கிறதுஇன்னும் நாம் அடைய வேண்டிய தூரம் அதிகம் என்றாலும்அதற்க்கான துவக்கப் புள்ளி இன்று கீரமங்கலத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇந்த கல்வி நிலையம் துவங்கப்பட்டு 7 ஆண்டுகளே ஆன போதும் இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 முறை 100% தேர்ச்சியை பெற்று தமிழக அரசால் கெளரவிக்கப் பட்டுள்ளது உண்மையிலேயே நாம் பெருமைபடதக்க செய்திதான்.

    இதில் மேலும் ஆச்சரியமான செய்தி இது எந்த தனி நபரின் அல்லது சிலரின் உடமையும் அல்ல.... உலகம் முழுவதும் பரந்து வாழும் முத்தரையர்களை பங்குதாரர்களாக கொண்டுதனித்து இல்லாமல் சமுதாயத்திற்க்காக வேண்டி இயங்கி வரும் ஒரு உன்னதமான கல்வி நிறுவனம் இது.. இதில் பங்குதாரர் ஆக முதல் தகுதி நீங்கள் "முத்தரையராகஇருக்க வேண்டும்ரூபாய் 10,000/- பங்குதொகை செலுத்தினால் நீங்களும் பங்குதாரர் ஆக முடியும் (இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 20,000/- க்கும் மேல்... ஆனாலும் பங்கு தொகை உயர்த்தப்படவில்லை), இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட நமது உறவினர்கள் இதில் பங்குதாரர்களாகி உள்ளனர்.

      மேலும் சுமார் 1000 பேர் இதுவரை பங்குதாரர் ஆக முன்பணம் செலுத்தி உள்ளார்கள்இதில் மற்றும் ஒரு சிறப்பு ஒரு நபர் ஒரு பங்கினை மட்டுமே வாங்க முடியும்இதன் மூலம் தனி நபர்களின் கைகளுக்கு செல்லாமல் இனத்திற்க்காகவே தொடர்ந்து இயங்கும் இந்த கல்வி நிறுவனம் நமது பங்களிப்புடன் மிகப் பெரிய வளர்ச்சியினை அடையும் சாத்தியங்கள் அதிகம்.

         தற்சமயம் இந்த பள்ளி சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி பிரதான சாலையில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் அடுத்தக் கட்டமாக "மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிதுவங்க ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறதுஅதற்க்காக புதிய கட்டிடம் கட்ட நிதி போதாமையினால் பணிகள் சுணக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது,  மேலும் இந்த பள்ளிக்கு அருகில் உள்ள நிலங்களையும் வாங்கினால் எதிர்காலத்தில் இந்த கல்வி நிறுவனத்தினை கல்லூரியாக மாற்ற வசதியாக இருக்கும்,

       ரூபாய் 10,000 / - (பத்தாயிரம் ரூபாய்ற்க்கும் மேலாக நீங்கள் செய்யும் எந்த நிதியும் " நன்கொடையாக கருதப்படும் இந்த கல்வி நிறுவனத்தினை நல்லாசிரியர் விருதினைப் பெற்ற, இந்த பள்ளியின் முதல் " தலைமை ஆசிரியர்" மரியாதைக்குறிய அய்யா திரு. சண்முகம் அவர்களுடன் நமது நண்பர்கள் திரு. காந்தி, திரு. வசந்த், திரு. கண்ணன் நாதன் திரு.அன்பரசன் உள்ளிட்டோருடன் நேரில் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது,

       அருமையான அமைவிடத்தில் பசுமையான சூழ் நிலையில், பிரதான சாலையினை ஒட்டி இந்த கல்வி நிறுவனம் சிறப்பான, ஈடுபாடான ஆசிரியர்களை கொண்டு வியக்கும் வண்ணம் இயங்கி வருகிறது. 5000 த்திற்க்கும் மேற்பட்ட அறிய நூல்களை கொண்ட நூலகமும், பரந்து விரிந்த விளையாட்டு மைதானமும், இந்த கல்வி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டினை கண்டு வியந்த "LITTLE DROP CHARITY TRUST SCOTLAND, UNITED KINGDOM " என்ற தொண்டு நிறுவனம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நன்கொடையாக ஒரு ஆய்வகத்தினை 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டி கொடுத்துள்ளது, இதே போன்று ஆர்வமான நம் இனத்தினர் பலர் ஆய்வகக் கருவிகள், புத்தகங்கள், கணிப்பொறிகள் போன்றவற்றினை நன்கொடையாக அளித்து இந்த கல்வி நிறுவனத்தினை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறார்கள், மிகவும் ஆர்வமாக இந்தப் கல்வி நிறுவனத்தினை தனது முழு நேரத்தினையும் செலவிட்டு நிர்வகித்து வரும் திரு. இந்திரன், திரு. காசிலிங்கம் போன்ற எண்ணற்ற சமூகப் பெரியவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
  
      இந்த கல்வி நிறுவனத்தில் பங்குதாரர்களாக (அல்லதுநன்கொடையாக எதேனும் உதவிகள் செய்ய  விரும்பும் எனதருமை உறவினர்கள் திருஇந்திரன் (Mobil: +91-9566514893 Email t_indran@yahoo.com )அவர்களை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்இந்த கட்டூரையின் நோக்கம் நல்ல சிந்தனையாளர்களால் உருவாக்கப் பட்டுசிறப்பாக நிர்வகிக்கப் படும் நமது கல்வி நிறுவனம்இன்னும் சமூகத்திற்க்காக எதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன்யாருக்கு எப்படியான உதவிகளை செய்யலாம் ? என்று காத்திருக்கும் நமது சமூக நண்பர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரியப்படுத்த மட்டுமே...!! உங்களால் முடியும் என்றால் பங்குதாரராக இருங்கள் அல்லது வாய்ப்பிருக்கும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்இதையும் ஒரு சமூகப் பணியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்...


என்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ்பாடும்....!
சமூகப் பணியில்....

சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.




















ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மதுரை ஸ்ரீ பாண்டி முனிஸ்வரர் பங்குனி உற்சவ விழா....



PHOTO'S FROM : KARTHIK MUTHARAIYAR

சனி, 23 பிப்ரவரி, 2013



PHOTO'S FROM : Mr. Anbu Arasan

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சொந்தங்களுக்கு செய்தி....!!

வணக்கம் உறவுகளே..!!

கடந்த வாரம் நமது சமூகத்தின் துடிப்புமிக்க வழக்கறிஞர். புதுக்கோட்டை கண்ணனை நம் கண் முன்னே பலிகொடுத்து நிற்கிறோம், தொடர்ந்து திட்டமிட்டு நம் இனம் தமிழகத்தின் எதேனும் ஒரு மூலையில் ஏதோ ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டே இருக்கிறது, நாமும் நிறைய நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசி பேசியே நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம், பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது,

இந்தபாதிப்புகளிலிருந்து நம் இனம் காப்பாற்றப் பட என்ன செய்ய வேண்டும் ? நம்முடைய வளர்ச்சி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது ? அவர்களை எதிர் கொள்ள அல்லது அவர்களிடமிருந்து நமது இனம் காப்பாற்றப் பட என்ன வழி ? சற்று விரிவான, விவேகமான திட்டமிடுதல் நமக்கு தேவை.

இந்த தருனத்தில் நமது சமூகத்தவரிடம் உரிமையுடன் வேண்டுகிறோம், எங்கேயும், எப்போதும் பிரச்சனைகளில் தனி மனிதர்களை முன்னிலைப் படுத்தாதீர்கள், அதற்க்கான அவசியம் நமக்கு கிடையாது நமக்கு தலைவராக, தெய்வமாக, மன்னராக "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" இருக்கிறார், அவரின் நாமம் சொல்லி ஒருங்கிணைவோம், அதுதான் நாளை நமக்கு பாதுகாப்பான வாழ்வினை தரும் என்பது எனது தாழ்மையான கருத்து, ஒவ்வொரு தனி மனிதர்களின் சேவையும், தொண்டும் நமக்கு நம் இனத்திற்க்கு தேவை, அதே நேரம் அவர்களின் விலை மதிக்க முடியாத உயிரும், அவர்தம் குடும்பமும் இனத்திற்க்காக அழிவது என்பது ஏற்புடையது அல்ல,

நல்ல விசயங்களில் நம் தலைவர்களை, வளர்ந்து வரும் தலைவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதே நேரம் பிரச்சனைகளின்போது தனி மனிதர்களை அடையாளப்படுத்தாதீர்கள், பிரச்சனைகளின் போது யார் நம்மை ஒருங்கிணைப்பது, யார் நமக்கான ஆலாசனைகளை தருவது என்பது போன்ற விசயங்களை வெளியே தெரியாமல் எந்த தனி நபர் சாராமல் (அல்லது அவரின் பெயர் தெரியாமல்..) ஒருங்கிணைவது அவசியம், இல்லாத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட நபரை நாம் இழந்துவிடும் அபாயம் இருகின்றது அதனை தவிர்க்க வேண்டும், ஒன்றல்ல நம்மில் எல்லோருக்குமே தலைவர்களாகும் தகுதி இருக்கிறது, காரணம் நாம் நாடாண்ட பரம்பரை,

ஆகவே இப்போதைய நமது தேவை தலைவர்கள் அல்ல....!! விழிப்புணர்வு...!!!! அதை முகம் தெரிந்தோ, தெரியாமலோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி நம்முடையது. அனாவசியமான ஆடம்பரங்களும், அர்த்தமில்லாத சண்டைகளும், விவேகம் இல்லாத வீரமும், திட்டமிடாத செயல்களும் பயன் இல்லாமல் போய்விடும், நிதானமாக, விவேகமாக உணர்வுகளை விதையுங்கள், அதற்க்காக கோழையாக இருங்கள் என்று அர்த்தமில்லை... வீரனாய் இருங்கள், விவேகமான வீரனாய் இருங்கள், எதையும், யாரையும் இழக்காமல் நமது இலக்கினை அடைந்தோம் என்றால் அதுதான் வெற்றி...!! இனத்தின் வெற்றி...!!!

மீண்டும் பெரும்பிடுகு முத்தரையரின் நாமம் சொல்லி முடிக்கும்...

என்றும் சமூகப் பணியில்...

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

கபாடி போட்டி

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேண்டாக்கோட்டை  கிராமத்தில் தஞ்சை மாவட்ட அளவில் 50கிலோ கபடி போட்டி நடைபெற்றது இதில் இரண்டாம் இடம் பள்ளிகொண்டான் ,மூன்றாம் இடம் சேண்டகோட்டை,இதில் இரண்டு அணியிலும்  விளையாடிய அனைவரும் முத்தரையர்  சமூகத்தவர், விழாவில் தலைமை தாங்கி v.முரளிகணேஷ் (முன்னாள் மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி) BA, BL.,  பரிசு வழங்கினார் .இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரபோஸ் மற்றும் திரு. வசந்த்,  திரு. கண்ணன் ,திரு. காந்தி (செயலாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்),கலந்துகொண்டனர். விழா குழுவினர் சிறப்பாக போட்டியை நடத்தினர்.




ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மாரியம்மன் கோவிலில்மஹா கும்பாபிஷேகம்

மண்ணச்சநல்லூர்: கவுண்டம்பட்டி மேலூரில் மஹா சூலினி மாரியம்மன் கோவிலில், மஹாகும்பாபிஷேகம் நடந்தது.மண்ணச்சநல்லூர் தாலுகா, திருப்பைஞ்ஞீலி அருகே கவுண்டம்பட்டி மேலூரில் மஹா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்., 14ம் தேதி காலை, 7.30 மணியளவில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அன்று மாலை, ஐந்து மணியளவில் விநாயகர் வழிபாடு, புண்யாவாகனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளும், தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடந்தது.கும்பாபிஷேக நாளான நேற்றுமுன்தினம் காலை, ஐந்து மணியளவில் விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா சாந்தி ஹோமம், சகல தெவதா அனுக்ரக ஆராதனை, மஹா சூலினி மாரியம்மன் ஆராதனை ஹோமம், சப்த மாதா ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. காலை, 9.50 மணியளவில் கோவில் கோபுரத்துக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் சம்பத், ம.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெல்வம் மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம பட்டயதாரர்கள் திருப்பதி, ரெங்கசாமி, துரைசாமி, நடராஜன் செய்திருந்தனர்.


NEWS FROM : DINAMALAR 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கண்ணன் சிங்கம்



இனத்தின் பெருமை ..!!


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

முத்தரையர் சங்க கூட்டம்





நேற்று (03.02.2013) அலங்காநல்லூர் ஒன்றிய முத்தரையர் சங்க  கூட்டம் கங்க முத்தூரில் நடைப்பெற்ற போது எடுத்தப்  படம் 

படம் & செய்தி :  மகேஷ் முத்தரையர் 


செய்தி எடுக்கப் பட்டது : முத்தரையர் ஷேரிங் குரூப்