முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 614 701
தொலைப்பேசி: 0091-4373-255228
மின் அஞ்சல்: sanjai28582@gmail.com
வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/
ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582
Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.
Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,
we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics
In the State of Tamil Nadu
Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer
we are known:
We have No Unity
we are Not Educationist
we are not Known our History
Yes if you have any solution share with us...............
We have Solution Accept it.................................
WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....
MUTHARAIYAR
YOUNG LION ORGANIZATION
தலைமை ஒருங்கிணைப்பாளர்
வியாழன், 8 ஜூலை, 2010
வேங்கையின் வேந்தன-3-
விஜ:
பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்
மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?
வேளி:
தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ
வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த
சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்
தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!
விஜ:
பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க
வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?
வேளி:
ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்
கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்
கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்
சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.
ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!
வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!
விஜ:
மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்
கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:
நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!
முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்
தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர
வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்
என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே
சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!
நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு
மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்
சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,
அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.
வேளி:
சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே
ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.
வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்
காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை
விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்
மடல்மாற்றம் கண்டுதான்...
{ஒரு வீரன்வந்து)
வீரன்:
மன்னா! மதுரை
மருதன் பெருஒற்றர் தங்கள்.....
விஜ:
வரச்சொல்
மருதன்:
திருவடிகட் கென்வணக்கம்..
விஜ:
சென்ற பிறர் எங்கோ!
மரு:
இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்
விரைந்து வந்தேன் வேந்தே!
{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}
விஜ:
மெதுவாய் எழு மருதா!
கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்
துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே
எடுக்கின்றேன்..
{எடுத்தெறிந்து விட்டு }
எங்கே மருத்துவர்?
மரு:
வேந்தே!
துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்
பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்
சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே
மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்
எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்
கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்
தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.
(என்று கூறி இறக்கின்றான்)
விஜ:
(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)
வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!
ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,
(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)
வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்
நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.
தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்
எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!
வேளி:
வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை
தாறுமா றாகிவிட்டால்?
விஜ:
சாவில் சுகம் காண்போம்:
முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட
முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்
சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்
மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.
சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்
ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்
சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட
தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.
வேளி:
யார்மன்னா அவ்விருவர்?
விஜ:
என்வாள் வழித்தோன்றல்
நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!
வேளி:
ஆரசே, இளவரசா?
விஜ:
ஆம் அமைச்சே.....
வேளி:
வேண்டாம்,
திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்
விஜ:
முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!
ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!
சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ
செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை
கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்
மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!
விஜ:
பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்
மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?
வேளி:
தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ
வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த
சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்
தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!
விஜ:
பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க
வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?
வேளி:
ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்
கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்
கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்
சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.
ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!
வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!
விஜ:
மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்
கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:
நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!
முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்
தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர
வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்
என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே
சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!
நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு
மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்
சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,
அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.
வேளி:
சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே
ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.
வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்
காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை
விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்
மடல்மாற்றம் கண்டுதான்...
{ஒரு வீரன்வந்து)
வீரன்:
மன்னா! மதுரை
மருதன் பெருஒற்றர் தங்கள்.....
விஜ:
வரச்சொல்
மருதன்:
திருவடிகட் கென்வணக்கம்..
விஜ:
சென்ற பிறர் எங்கோ!
மரு:
இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்
விரைந்து வந்தேன் வேந்தே!
{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}
விஜ:
மெதுவாய் எழு மருதா!
கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்
துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே
எடுக்கின்றேன்..
{எடுத்தெறிந்து விட்டு }
எங்கே மருத்துவர்?
மரு:
வேந்தே!
துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்
பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்
சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே
மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்
எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்
கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்
தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.
(என்று கூறி இறக்கின்றான்)
விஜ:
(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)
வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!
ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,
(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)
வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்
நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.
தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்
எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!
வேளி:
வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை
தாறுமா றாகிவிட்டால்?
விஜ:
சாவில் சுகம் காண்போம்:
முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட
முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்
சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்
மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.
சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்
ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்
சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட
தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.
வேளி:
யார்மன்னா அவ்விருவர்?
விஜ:
என்வாள் வழித்தோன்றல்
நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!
வேளி:
ஆரசே, இளவரசா?
விஜ:
ஆம் அமைச்சே.....
வேளி:
வேண்டாம்,
திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்
விஜ:
முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!
ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!
சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ
செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை
கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்
மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!
வளரும்..4
எழுதியவர்:ENNAR @ 9:50 PM 0 மறுமொழிகள்
ஞாயிறு, ஜூலை 09, 2006 வேங்கையின் வேந்தன-2-
வேளிர்:
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை
கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!
விஜ:
வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற
வாளில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ?
வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்:
சூழச்சிக்கே கோழைநான். சொல்லுவதைக கேளுங்கள்
சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்
நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்
சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்னஆள் வேறென்றால்
பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!
வேளி:
தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!
சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று கூறுவேனோ?
விஜ:
பின்னென்ன கூறகின்றீர்?
வேளி:
கொள்கையில் தான்
மாறுவேனோ, கோனாட்டு மண்ணில் பிறந்தேன் நான்?
சீற்றமிகு சிங்கம் சிறுநரியின் சூழ்ச்சிக்குத்
தோற்றிடுதல் தீதென்றே சொல்கின்றேன், பேரரசே
விஜ:
யார்பே ரரசன்? இருப்பதெல்லாம் சோணாட்டின்
ஓர்கூறு! யானோ ஒருசிற் றரசன்.
வளைவாழ் எலியும் வயல் சொந்தம் பேசும்
நிலையேஇப் பட்டம்! நினைவோடு பேசும்.
வேளி:
குகைவாழ்ந்தும் சிங்கம் கொடுங்காட்டின்கோ தான்!
வகைதொகையாய்க் கூறுகின்றேன் மன்னா! பெருங்காஞ்சித்
தெள்ளா றெறிந்தான் சிறந்தபுகழ் தாலாட்டப்
பல்லவர்கள் சேனை பலத்தோடு வாழ்கின்றார்
ஆற்றல் அறியாமல் யாமெதிர்த்தல் ஆழ்ந்தகுளச்
சேற்றில் மதயானை சிக்கினாற்போல் ஆகும்.
உமைவேண்டிக் கேட்கின்றேன் பல்லவரை உற்ற
சுமை தாங்கி ஆக்கி அதில் சோழர் சுமைவைப்பீர்!
விஜ:
என்றால்?...
வேளிர்:
புனல் நாட்டின் தோல்வி இழப்பெல்லாம்
நன்றாகப் பல்லவர்தோள் நாகரிக மாய்ஏற்றும்.
விஜ:
எப்படித்தான் கூடும்?
வேளிர்:
எழில்மயில்கள் பெண்களொடு
தப்படிதான் இட்டுச் சதிர் பழகும் தஞ்சைநகர்க்
கோட்டையை நோக்கிக் குறிவைக்கும் பாண்டியராம்
ஈட்டிமுனை பாயுமொரு வேங்கையாய் இல்லாமல்
பல்லவரைக் கேடயமாய் நன்கு பயன்படுத்தி
வெல்லும்போர் செய்வதையே வேந்தே நான் வேண்டுகின்றேன்
வெற்றிமங்கை அன்றுதான் வீரமணப் பந்தலிலே
உற்ற மங்கை என்றமர்வாள் உம்பக்கம், பேரரசே!
விஜ:
கோனாடு, கோளரிகள் வாழ்குகைதான் என்றிருந்தேன்;
ஆனால் அதுவோ நரிக்குகைதான் என்கின்றீர்!
வாள்மாற்றல் உண்டு வளைந்தொடிந்தால், கொண்டகுறிக்
கோள்மாற்றல் என்றுமில்லை கோனாட்டு வேளிரே!
யார் என்னைக் கைவிடினும் நான் அஞ்சேன். என்றென்றும்
நீர் என்னைப் பின்தொடர்வீர் என்று நினைத்திருந்தேன்.
நானிலத்தில் நம்பஇனி நல்லஒரு ஆளில்லை;
நான்நிலத்தில் ஓர்தனியாள், நல்லதுணை என்போர்வாள்!
வேளிர்:
சீற்றக் குளிர்காற்று தீண்ட முகிலுணர்ச்சி
மாற்றி மழையாய்ப் பொழிந்து விட்டீர் மாமன்னா!
தண்டிப்பேன் என்றுஎன் தலைவாங்கும் நான்மகிழ்வே:
துண்டிப்பேன் அன்பைஎனச்சொல்லிஎனைக் கொல்லாதீர்.
நீர் நினைப்பு; நானோ செயல்என்று நீள்பொன்னிப்
பார்நினைக்க நான்வாழ்ந்தேன் பார்த்திபா! அந்தகைய
என்மீதோ நம்பிக்கை இல்லை என உரைத்தீர்?
கண்ணையே நம்பா இமை உண்டோ காவலனே?
பேரரசே! சோணாட்டைப் பேரரசாய் ஆக்கிடுவோம்...?
விஜ:
நேரரசே இல்லாத பேரரசாய்
வேளிர்:
நின்று
நிலைக்கத்தான் வேண்டுமெனமில்நெஞ்சு பொருந்தி
இழக்கத்தான் வேண்டும் சிலவற்றை யாமும்
விஜ:
இளவரசன் என்மகனை யானிழந்த போதும்
உளமதிர மாட்டேன்உறுதிகுலையேன் நான்
வேளிர்:
நானிதனை எண்ணி நவிலவில்லை , மாமன்னா!
வான்பெற்று வட்டநிலா இழந்தால் ஏதுபயன்?
தங்களிடம் தான்நான் தயவாகக் கேட்கின்றேன்.
விஜ:
தங்கு தடையின்றிச சாற்றும்.......
வேளிர்:
'தருகிறேன்
என்றுரைத்தால் சொல்லுகின்றேன் என்வேந்தே, ' இல்லை' எனில்
நின்று நிலைக்காது நீர் நினைக்கும் பேரரசு!
விஜ:
சொல்லும் தருகிறேன்----
வேளிர்:
தோய்ந்தேன்நான் தேன்கடலில்
வெல்லும் இனிச்சோழப் பேரரசு வேந்தே!
திருவாழத் தேடி வருவீடாம் தங்கள்
கருவூலத் தைக்கேட்கவில்லைநான் காவலனே!
கேட்டால்நீர் தந்திடுவீர் என்பதனால் கேட்கவில்லை!
ஈட்டிமுனை புண்ணால் இசைவரைந்த மார்பா!
கரிகாலன் கைச்சுவையைக் கண்ட அந்த வீரம்
உறைவாளைக் கேட்கின்றேன், உம்பொருட்டே கேட்கின்றேன்
விஜ:
வாளில்லா வேந்தனா? பல்லில்ல வேங்கையா?
வேளிரே வேடிக்கை!
வேளிர்:
முத்தரையர் முள்காத்த தஞ்சை முழுமலரைக்
கொத்தோடு கொத்திவந்த போதினில்நான் உம்தனித்த
வாள்வீச்சைக் கண்டிருந்தேன்; மாற்றார் தமதாயுள்
நாள்வீழ்ச்சி இன்றோடே என்றோடல் நான்காணேன்!
மார்தட்டி வந்து நின்ற மாறவர்மன் மற்றும்வாள்
கூர்தட்டி வீழ்ந்தான் குளிரரிசில் ஆற்றருகே!
அன்றோவாள் வேண்டும் , அதனால்நான் பார்த்திருந்தேன்;
இன்றோவாள் வேண்டாம் "இழந்துவிடும்" என்கின்றேன்.
வாளுக்கு நீரில்லை மற்றிளங்கோ இன்றிருந்து,
மூளைக்கு நீரேதான் வேறில்லை மூண்டெழுப்பும்.
வீச்சுவாள் நீரிழக்க வேண்டாம் எனச்சோழ
ஆட்சிஇழக்க அகமகிழ்கொள் வீரோ?
விஜ:
இழக்கமாட்டேன் என்னாட்டின் ஆட்சி; இழந்தால்
பிழைக்கமாட்டேன்! பின்னர் உயிரோடிருக்கமாட்டேன்
வேளிரே! நீர் என்னை வென்றுவிட்டீர் வாய்ப்பேச்சில்,
வாள் உறையை விட்டு வராமல் இனிக் கண்ணுறங்கும்.
கூர்வாளால் பேரரசைக் கொள்ளமுடியாதென்றீர்
மாறாக் கூர்த்த மதியாலே கூடுமோ?
வேளிர்:
கூடும், குலவேந்தே! கூறுங்கள்;சீறும்பாம்பு
ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக