திருச்சி, ஜூலை.6-
திருச்சி மாநகராட்சிக்கு 28-வது வார்டு அ.தி.மு.க. வசம் உள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்படும் இங்கு 3 முறையும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்பையாவே வெற்றி பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்ததை தொடர்ந்து 28-வது வார்டு புதிய கவுன்சிலர்யார் என தேர்வு செய்ய வருகிற 22-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு தற்போது இவ்வார்டில் 7348 வாக்காளர்கள் உள்ளனர். 3610 ஆண் வாக்காளர்களும் 3738 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வார்டு ஆகும். தாழ்த்தபட்டவர்கள், கள்ளர், முத்தரையர் குறிப்பிட்ட சதவீதம் உள்ளனர். இருப்பினும் அ.தி.மு.க. கட்சி செல்வாக்கே பலமுறை வெற்றியை கொடுத்து உள்ளது.
வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதியே தொடங்கி விட்டது. 10-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது. ஆனாலும் இதுவரை எந்த கட்சியும் வேட்பாளர்கள் யார் என அறிவிக்கப்படவில்லை. தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு நேற்று அறிவித்து உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளராக யார் என பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என மாநகர் மாவட்ட செயலாளர் மனோகர் கூறியுள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் யார் 2 நாளில் அறிவிக்கப்படும் என மாவட்ட செயலாளர் விஜயராஜன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க.வில் கவுன்சிலர் சீட்டை பிடிக்க கட்சிகள் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. சார்பில் கடந்த முறை போட்டியிட்ட முஸ்தபா வட்ட செயலாளர் தாஜுதின் சீட்டு கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த வார்டில் வட்ட செயலாளர் மண்டிசேகரும், நிறுத்தப்படலாம் என்று சிலரும் மாவட்ட பொருளாளராக உள்ள கே.கே.எம். தங்கராஜா நிறுத்தப்படலாம் எனவும் கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலகிறது.
அ.தி.மு.க. வட்டாரத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. தே.மு.தி.க சார்பில் கடந்த முறை போட்டியிட்டு 900 ஓட்டு பெற்ற சரவணன் தற்போது பா.ஜனதாவில் உள்ளார். இவ்வார்டில் தே.மு.தி.க. சார்பில் கேபிள் அன்பு, சுல்தான் சந்துரு வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்கள்.
2 நாளில் வேட்பாளர்கள் யார் என 3 கட்சிகளும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பா.ஜனதாவும் வேட்பாளரை களத்தில் இறக்குகிறது. தொடர்ந்து 3 முறை வெற்றிக்கனியை பறித்த அ.தி.மு.க. இம்முறையும் வெற்றியை தக்க வைக்க துடிக்கிறது. இம்முறை வார்டை கைப்பற்றியே தீருவது என தி.மு.க. தீவிரமாக செயல்பட உள்ளது. இவர்களுக்கு இடையே தே.மு.தி.க. தங்கள் சக்திய காட்ட வேலையை இப்போதே தொடங்கி விட்டது.
unkal article super
பதிலளிநீக்குthank u sinkam
பதிலளிநீக்கு