பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2010,02:02 IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழுக்கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடந்தது.மாநில அமைப்பு செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்க ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட கவுரவத்தலைவர் தங்கவேல், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முருகையன், தெற்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் செல்லத்துரை, மாநிலத்தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் பேசினர்.
சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் தத்தமங்கலம் அருணாசலம் சங்கத்துக்கு எதிராக செயல்படுவதால் அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குதல். முத்தரையர் மரபில் 29 பட்டப்பெயர், உட்பிரிவு இருப்பதால் அவற்றை ஒன்றாக கருதி எம்.பி.சி., பட்டியலில் சேர்த்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்.அரசு பணிகளில் ஜாதிவாரியாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலம் கணக்கெடுத்து வருவதுபோல, தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்து முத்தரையருக்கு 20 சதவீத கல்வி, அரசு, தனியார் துறைகளில் வேலைவாயப்பு வழங்க வேண்டும்.வருங்காலங்களில் சட்டசபை, லோக்சபாவுக்கு முத்தரையர் சமுதாயத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கி, நியமன பதவி, வாரியத்தலைவர், நீதித்துறை மற்றும் அரசு தேர்வாணையக்குழு ஆகியவற்றில் இடம் வழங்க வேண்டும்.
பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலையை தஞ்சை, புதுக்கோட்டை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் திறந்து வைத்து ஆண்டு தோறும் அரசு விழா எடுக்க வேண்டியும், முத்தரையர் மன்னர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென முதல்வரை கேட்டுக் கொள்ளுதல்.தமிழ்நாடு அரசு பாடநூல்களில் முத்தரைய மன்னர்களில் மிகவும் புகழ்வாய்ந்த சுவரன்மாறன், இரண்டம் பெரும்பிடுகு முத்தரையர், கண்ணப்பர், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறு இடம் பெற ஆவணம் செய்ய வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.புதுக்கோட்டை மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான கொள்ளிடம் - காவிரி உபரி நீர்த்திட்டம் செயல்படுத்த வேண்டுமெனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக