செவ்வாய், 7 செப்டம்பர், 2010

முத்தரையர் சங்க செயற்குழுக் கூட்டம்

திருச்சி, செப். 4: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பட்டயதாரர் ரங்கராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அண்ணாமலை முத்துராஜா பெயரை சூட்ட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க மாவட்டச் செயலர் தங்கவேல், பொருளாளர் குஞ்சான், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ஜெயச்சந்திரன், மூர்த்தி, வழக்குரைஞர் ராஜசேகர், பிரவீன் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக