முன்னாள் அமைச்சர் கொலை:
4வது நாளாக பதட்டம் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் கொலையால் தொடர்ந்து பதட்டம் நீடிப்பு:4வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லைஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம் கடந்த வியாழன் இரவு அன்று 8.30மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை. இன்றோடு நான்காவது நாளாக பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொலையாளிகள் பேராவூரணியில் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததால் வெங்கடாசலத்தின் உறவினர்களும் ஆதரவாளர்களும் அந்த வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயற்சித்தபோது போலீசார் தடுத்து
சமாதானம் செய்து வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் நிலவியது. இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத்தொடங்கியது. ஒரு சிலரால் அந்த பேருந்துகளும் நிறுத்தப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக