சனி, 2 அக்டோபர், 2010

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்
28 Sep 2010 12:29,

சிவகாசி, செப். 27: அடிப்படை வசதி கோரி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பில், சிவகாசியில் திங்கள்கிழமை உண்ணாவிதரப் போராட்டம் நடைபெற்றது. ரிசர்வ் லயனிலிருந்து ஆனையூர் வரை சாலையை செப்பனிட வேண்டும்.ஆனையூர், அய்யம்பட்டி, எ. லட்சுமியாபுரம், காந்திநகர், இந்திராநகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவேண்டும்.கிராம நிர்வாக அலுவலகம் ஆனையூரில் இயங்கவேண்டும். ஏ.லட்சுமியாபுரத்திலிருந்து ஆனையூர் ஒத்தப்புலி வரை சாலையோர மின்விளக்குகளை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் எம். முருகேசபாண்டின் தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலர் இ. ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி வி. மாணிக்கம், காந்திநகர் நாட்டாமை சுப்பையன், ஏ.லட்சுமியாபுரம் நாட்டாமை எம். தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக