தஞ்சாவூர்: தஞ்சையில் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சின்னையா பேசினார். தஞ்சையை உருவாக்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு நாகை தேசிய நெடுஞ்சாலையில் பத்தடி உயரம் கொண்ட வெண்கலச்சிலை அமைப்பது. சிலை அமைக்க நிதி திரட்டி 45 நாட்களுக்குள் தலைமையிடம் ஒப்படைப்பது. சிலை மற்றும் மண்டபம் அமைக்க மாவட்ட வாரியாக குழு அமைப்பது.
முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவைகளில் தனி இடஒதுக்கீடு வழங்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது. முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கொலையில் உண்மை குற்றவாளிகளை உடன் கைது செய்ய போலீஸாரை வலியுறுத்துதல். புதுக்கோட்டையில் அவரது சிலையை நிறுவி ஆண்டு தோறும் ஜெயந்தி விழா கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக