கடலூர் : கடலூர் மாவட்ட முத்தரையர் சங்க செயற்குழுக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது. நெய்வேலி தலைவர் மணி, செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜாராம் வரவேற்றார். மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கி சங்க காலண்டரை வெளியிட மாநில சமூக செயலர் அம்சா பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் சீத்தாபதி வாழ்த்திப் பேசினார். வெங்கடாசலம், வரதராஜன், ராஜேந்திரன், கலைச்செல்வன், முத்தையா, செல்வம், பிச்சைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து கிளை சங்கங்களையும் புதுப்பித்து, வளர்ச்சி ஏற்படுத்துவது. சங்கத்தினர்களை ஒருங்கிணைத்து மாநில சங்கத்தை திறன் உள்ள அமைப்பாக உருவாக்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக