பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகையன், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை வெளியுலகத்குக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுகொள்வது. இலவச வீட்டுமனை பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டு இருந்தும், இலவச "டிவி', வழங்கியும், இலவச மின் இணைப்பு பெற முடியாமல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு கலெக்டர் பரிந்துரைத்து இலவச வீட்டு மனைப்பட்டாவும், இலவச மின்சாரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க தமிழக அரசை கேட்டுகொள்வது. ஃபிப்ரவரி மாதம் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாபெரும் மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்தை உடன் செயல்படுத்த மத்திய அரசை கேட்டு கொள்வது. முத்தரையர்களுக்கு என தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வீடு, விவசாயம் என பலவகையிலும் பாதிப்படைந்த விவசாய ஏழை மக்களுக்கு அரசு உடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நகர செயலாளர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக