Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 31 மார்ச், 2011

புது முகங்கள் மோதும் புதுக்கோட்டை தொகுதி

தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு பலப்பரீட்சை புதுமுகங்கள் மோதும் புதுக்கோட்டை தொகுதி புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.-இந்திய கம்யூ. கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இரு கட்சி வேட்பாளர்களும் புதுமுகங்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக புதுக்கோட்டை தொகுதி உள்ளது. இதுவரை நடந்த 11 சட்டமன்ற தேர்தல்களில், புதுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், காங்கிரஸ் (பழைய) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2 தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் நகர்புறங்களை காட்டிலும் கிராமபுற பகுதிகளே அதிகமாக உள்ளன.

புதுக்கோட்டை தொகுதியில் முத்தரையர் இன மக்கள், ஆதிதிராவிடர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதையடுத்து கள்ளர் இனமக்களும், உடையார், முஸ்லிம் இன மக்களும் வசித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதுக்கோட்டை தொகுதியில் புதுக்கோட்டை நகராட்சியில் 39 வார்டுகளும், புதுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளும், கறம்பக்குடி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும் உள்ளடங்கியுள்ளன.

புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார்.இவர் தேர்தல் களத்தில் முதன்முதலாக நிற்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முத்துக்குமரன் போட்டியிடுகிறார். இவரும் தேர்தல் களத்தில் இப்போது தான் குதிக்கிறார். இதனால் 2 புதுமுகங்கள் போட்டியிடுவதால் புதுக்கோட்டையை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பெரியண்ணன் அரசு கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முத்துகுமரன், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் பலம், தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் நிர்வாகம் ஆகியவற்றை சுட்டிகாட்டி பிரசாரம் செய்து வருகிறார். இதனால் புதுக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை 2 வேட்பாளர்களும் சமபலத்தில் உள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பரதனும், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் முத்தரையர் இன மக்களின் ஓட்டுக்களை பிரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா சார்பில் பழ.செல்வம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேரும் களத்தில் உள்ளனர். புதுக்கோட்டை வறட்சி மிகுந்த பகுதியாகும். எனவே வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதேபோல் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை நகரில் புதிதாக பஸ்நிலையம், கால்நடை மருத்துவ கல்லூரிகள் ஆகியவை அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். வியாபாரிகள் மற்றும் பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கூடுதல் நெடுந்தூர ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் புதுக்குளத்தை தூர்வாரி படகு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்! -ஜூனியர் விகடன்

6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!
கடந்த ஐந்து வருடங்களாக மடிப்புக் கலையாத சட்டையோடு, சைரன் ஒலித்த காரில் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பந்தாவாக வலம் வந்தவர்கள்...இன்று கொளுத்தும் வெயிலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், இடுப்பு வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் ஓட்டுக்காக கையேந்தி, தெருத் தெருவாக நடந்துகொண்டு இருக்கிறார்கள்!

தி.மு.க. அமைச்சரவையில் மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி இருவருக்கு மட்டும்தான் இந்த முறை ஸீட் இல்லை. மற்ற அனைவருமே களத்தில்! இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

அமைச்சர்களாக இருந்தவர்கள் போட்டியிடும் தொகுதிகளை ஜூ.விநிருபர்கள் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கும் முதல் கட்ட சர்வே இதோ...

வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி): 'வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியில் நின்றால், அல்வா கொடுத்துவிடுவார்கள்’ என சங்ககிரிக்கு வந்திருக்கிறார் ஆறுமுகம். இதுநாள் வரை அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததால், எளிதில் ஜெயித்தார். இந்த தடவை அப்படி இல்லை. சித்தப்பாவை 'விடாது கருப்பாக’த் துரத்திக்கொண்டே வந்திருக்​கிறார் அ.தி.மு.க-வின் விஜய​லட்சுமி பழனிசாமி. இருவரும் வன்னியர். ஆனால், சங்ககிரி தொகுதியில் கவுண்டர்கள் அதிகம் என்பதால், அவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

நில அபகரிப்பு, ஆறு கொலைகள் விவகாரம், கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வீரபாண்டியாரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. அண்ணன் மகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், சித்தப்பா ரொம்பவே மெனக்கெட வேண்டும்!

துரைமுருகன் (காட்பாடி): கருணாநிதியின் இடது கரமான துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடி. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை முடிந்த வரை காட்பாடிக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். மக்கள் யாரும் எளிதில் நெருங்க முடியாதவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு... ஒரு புதுமுகம். மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதுதான் துரைமுருகன் பலம். செல்வாக்கான ஆளைப் போட்டு இருந்தால் திணறி இருப்பார். ஆனாலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெறக்கூடும்!.

பொன்முடி (விழுப்புரம்):அதிரடி அமைச்சர் பொன்முடி நிற்பது, விழுப்புரத்தில். எதிர்ப்பாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவரும் அதிரடிப் பேர்வழிதான். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவதும், கட்சிக்காரர்​களிடம்கூட நெருங்கிப் பழகாமல் விலகி இருப்பதும் பொன்முடியின் பலவீனம். வன்னியர் எதிர்ப்பாளர் என்ற இமேஜும் உண்டு. பெரும்பாலான வாக்காளர்கள் வன்னியர்கள் என்பதும், தி.மு.க-வில் இருக்கும் வன்னியர்களே பொன்முடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும், அவரை டேமேஜ் பண்ணிவிடும்போலத் தெரிகிறது. ஆனால், அவரோ தன் பண பலத்தை நம்புகிறார்!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி): பன்னீருக்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றியைத் தந்த தொகுதி குறிஞ்சிப்பாடி. தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். தொகுதியில் அதிகப்​படியாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தை​களும் கை கோத்து இருப்பது பன்னீருக்குக் கூடுதல் பலம். எதிர் அணி வேட்பாளரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலிப் பகுதியில்தான் செல்வாக்கானவர் என்பதால், குறிஞ்சிப்பாடியில் பன்னீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!

பெரிய கருப்பன் (திருப்பத்தூர்): அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், 'தான் உண்டு தனது சொந்த வேலை உண்டு’ என்று இருப்பவர். அதற்காக தொகுதி மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? கடந்த ஐந்து வருடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தவிர வேறு எந்த சிறப்புத் திட்டத்தையும் பெரிய கருப்பன் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க - வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். 1991-96-ல் இங்கே வெற்றி பெற்று அமைச்சராக இருந்த இவர், தன்னை வளப்படுத்திக்கொண்டதோடு, கட்சியினரையும் சாதிக்காரர்களையும் கை தூக்கிவிட்டார். அதுதான் இப்போது ராஜ கண்ணப்பனைக் கை தூக்கிவிடும் சக்தியாக மாறி இருக்கிறது. பெரிய கருப்பன் மறுபடியும் சட்டமன்றத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான்!

தமிழரசி (மானாமதுரை): தான் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான் தொகுதியை பா.ம.க. தள்ளிக்கொண்டு போனதால், மானா மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரசி. தொகுதி மாறி வந்ததுதான் அவருக்கு ஏழரை. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்பதால், ஸீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸார் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குணசேகரனுக்கும் சொந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள். அதை எல்லாம் தாண்டி, கூட்டணி பலத்தோடு தொகுதியை ரவுண்டு வருகிறார் குணசேகரன். இருக்கும் நிலைமையைப் பார்த்தால், தமிழரசிக்கு மானாமதுரை மல்லி மணக்காது!

பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!

இளித்துரை ராமச்சந்திரன் (குன்னூர்): நீலகிரி மாவட்டம் குன்னூரில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு ஆரம்பமே ஆறுதல் தருவதாக இருக்கிறது. குன்னூரின் பலம் வாய்ந்த தி.மு.க. புள்ளியான முபாரக்குக்கு ஸீட் கிடைக்காததால், அவரது ஆதரவுப் பட்டாளம் கடும் அதிருப்தியில் சோர்ந்துகிடக்கிறது. ஆனால், அவர்களிடம் வெள்ளைக் கொடி நீட்டி வழிக்குக் கொண்டுவந்திருக்கும் ராமச்சந்திரன், கூடவே தன் மீது மாளாத வருத்தத்தில் இருந்த படுக இனத் தலைவர்களிடமும் சமரசம் செய்திருக்கிறார். இதன் மூலம் ராமச்சந்திரனின் பாதை தெளிவாக இருக்கிறது!

எ.வ.வேலு (திருவண்ணாமலை): வேலுக்கு எதிராக நிற்பது அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இருவருமே மக்களுக்கு நன்கு அறிமுகமனாவர்கள். தொகுதியில் இருக்கும் அடிப்பொடிகளில் தொடங்கி, அத்தனை பேரையும் தெரிந்துவைத்து இருப்பது, வேலுவின் பிளஸ். வன்னியர் எதிர்ப்பாளர் என்பது அவருக்குக் கெட்ட பெயர். தொகுதியில் அதிகம் இருக்கும் முதலியார்களைப்பற்றி இவர் ஏதோ ஒரு கமென்ட் அடித்ததாகவும், அதனால் அவர்கள் கோபம்கொண்டு கூடிப் பேசி வருவதாகவும் தகவல். தலித் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் பக்கம் இருக்கின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது வேலு வெல்வது டவுட். எனவே, அனைவரையும் குறிவைத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள் தி.மு.க-வினர்!

ஐ.பெரியசாமி (ஆத்தூர் - திண்டுக்கல்): எதிர்க் கட்சியில் இருக்கும் ஆட்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான் ஐ.பெரியசாமியின் வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தொகுதியில் ரேஷன் கார்டு, டி.வி. என பெண்டிங்கில் இருந்த அத்தனையும் அள்ளி வழங்கி, நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொண்டார் ஐ.பி. எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால், பெரியசாமியின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

மதிவாணன் (கீழ்வேளூர்): புதிய தொகுதியான கீழ்வேளூரில் பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன். அவரை எதிர்த்து நிற்பவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலி. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுவதால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் திருவாரூரே கதியெனக் கிடக்கிறார்கள். மதிவாணனைக் கண்டுகொள்ளக்கூட, தொகுதிக்குள் ஆள் இல்லை. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி என்று சொல்லக்கூடிய பட்டியலில் இந்தத் தொகுதியும் உண்டு. தே.மு.தி.க-வுக்கும் இங்கே குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. ஆகவே, மதிவாணணுக்கு பால் பொங்குவது கஷ்டம்!

சுப.தங்கவேலன் (திருவாடானை): திருவாடானை தொகுதி தனக்குத்தான் என முடிவு செய்த தங்கவேலன், கடந்த ஆறு மாதங்களாக அரசின் நலத் திட்டங்கள் அத்தனையும் திருவாடானைத் தொகுதியிலேயே செயல்படுத்த ஆரம்பித்தார். எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமான் வெளியூர்க்காரர் என்பதால், அதையே சாதகமாக்கி பிரசாரத்தில் குதித்திருக்கிறார் தங்கவேலன். தொகுதி முழுக்க வைட்டமின் 'ப’வும் நிறையவே போகிறது. எனவே, கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு பிடி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தங்கவேலன். 'அதற்காக’ ஓட்டு போட்டால் மட்டும்தான், இவரால் தேற முடியும்!

மைதீன்கான் (பாளையங்கோட்டை): கடந்த இரண்டு முறை டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்ற தொகுதி இது. 'தமிழக அமைச்சர்களில் எளிதாக அணுகக்கூடியவர் யார்?’ என்று போட்டிவைத்தால், மைதீன்​கானுக்கே முதல் இடம். தொகுதி வளர்ச்சிக்காக தனது மேம்பாட்டு நிதியுடன், கனிமொழி, சண்முகசுந்தரம், திருச்சி சிவா போன்ற ராஜ்ய சபா எம்.பி-க்களின் நிதியையும் பெற்றுத் தந்து நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மைதீன்கான். பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்பதும், வேட்பாளர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பதும் அ.தி.மு.க. அணியில் தோல்விக்கு முழுக் காரணமாக இருக்கும்.

பூங்கோதை (ஆலங்குளம்): ஆலடி அருணாவின் வாரிசு என்ற ஒரே தகுதியுடன் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்க​மானவர். அது மட்டுமே போதும் என்று நினைத்ததால், கட்சிக்காரர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, இங்கு இருக்கவில்லை என்ற வருத்தம் மக்களிடம் பரவலாக இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் கடையம் போன்ற தி.மு.க. ஆதரவு ஏரியாக்கள் உள்ளே வந்து இருப்பது மட்டும்தான் பூங்கோதைக்கு கை கொடுக்கும். எதிர் அணியில் நிற்பவர், பூங்கோதையைவிட வீக்கான வேட்பாளர். இருவருமே நாடார்கள். எனவே, வாக்குகள் பிரியும். மற்ற சாதியினர் பூங்கோதைக்கு எதிராக இருக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டும்தான் தேறலாம். இல்லை என்றால் டவுட்!

கீதாஜீவன் (தூத்துக்குடி): அரசு நலத் திட்டங்களைத் தொகுதிக்காக நிறைய செயல்படுத்தி இருக்கிறார் கீதா ஜீவன். அப்பா பெரியசாமியின் தலையீடு நிறைய இருப்பதுதான் அவருக்கு மைனஸ். அதேபோல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரனை அறிவித்தார்கள். பிறகு பால் என்பவரைக் கொண்டுவந்தார்கள். அவரையும் மாற்றி செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த காமெடி, கீதா ஜீவனுக்கு சாதகம். ஜெனிஃபருக்கு ஸீட் அறிவித்து பிடுங்கிக்கொண்டதால், மீனவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தி தி.மு.க-வுக்கு சாதகமாகி, கீதா ஜீவனை வெற்றிக் கோட்டுக்கு அருகே கொண்டுபோய் உள்ளது!

சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி): சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கும் தொகுதி. நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார். எதிர்ப்பு என்று பெரிய அளவில் ஏதும் இல்லை. அ.தி.மு.க-வில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவை எல்லாம் சுரேஷ்ராஜனுக்குப் பலமாக... கன்னியாகுமரியில் காற்று தி.மு.க. பக்கமே வீசுகிறது!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை): சாத்தூரில் இருந்து தொகுதி மாறி அருப்புக்கோட்டையில் வேட்பாளர் ஆகி இருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இவரை எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகியான வைகை செல்வன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, தொகுதி முழுக்க பணத்தை அள்ளி இறைக்கிறார் அண்ணாச்சி. மாவட்டம் முழுக்க செய்திருக்கும் நலத் திட்டங்களுடன் அண்ணாச்சி கொடுக்கும் பணத் திட்டங்களும் சேர்ந்து இருப்பதால் வெற்றி உறுதி என்று நினைக்கிறார். ஆனால், சாந்தமாக தொகுதிக்குள் வலம் வரும் வைகை செல்வனின் தேவாங்கர் சமூகத்தினரது வாக்குகள் முழுமையாகப் போனால், இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவும்கூடும். மற்ற சமூகத்து வாக்குகளை அள்ள பகீரத வேலைகளில் இறங்கி இருக்கிறார் சாத்தூரார்!

தங்கம் தென்னரசு (திருச்சுழி): குற்றச்சாட்டுக்கள் எதிலும் சிக்காமல் இருக்கிறார் தங்கம் தென்னரசு. அதே நேரத்தில், தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. எதிர்த்து நிற்பவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இசக்கி முத்து. ஓர் இடைத் தேர்தலின்போது தனியாக நின்றே இந்தக் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை அள்ளிய வரலாறும் உண்டு. அகமுடையர் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தவரை நிறுத்தி இருந்தால், தங்கம் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாக மாறி இருக்கும். எதிர் வேட்பாளரின் பலவீனம் இவரை இம்முறை ஜெயிக்கவைத்துவிடும்!

கே.என்.நேரு (திருச்சி மேற்கு): திருச்சி மேற்குத் தொகுதியில் களம் இறங்குகிறார் கே.என்.நேரு. கூட்டணி இழுபறியில் அ.தி.மு.க. திணற... அப்போது இருந்தே, சட்டென்று வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேரு. இவரது பலமே சுறுசுறுப்புதான். நள்ளிரவு 12 மணிக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பிரசார வியூகம்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால், அதிகாலை நேரத்தில் கட்சிக்காரர்கள் யாரையாவது தொலைபேசியில் விரட்டுகிறார். நேருவுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி என்றால், அடுத்த தேர்தல் அவரது காலை வாரிவிட்டுவிடும். பெரிய அரசியல் பின்புலன் இல்லாத நபர்களிடம் தோற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த முறை தனது உழைப்பு மற்றும் பண பலம் மூலமாக வெற்றியை அடையலாம்!

என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்): வனத் துறை அமைச்சரான என்.செல்வராஜ், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர். செல்வராஜின் மகன் கருணைராஜா, முத்தரையர் சங்க செயல்​பாடுகளில் பெரும் ஈடுபாடுகொண்டவர். ஆகவே, அந்த வாக்குகள் செல்வராஜ் பக்கம் சாயவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நேருவும் இவரும் தனித் தனி கோஷ்டியாக செயல்படுபவர்கள் என்பதால், அதுவே தலைவலி. அதனால், நேரு கோஷ்டி ஆட்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலை செய்யவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். எதிர் அணி வேட்பாளர் சரி இல்லை என்பதால், செல்வராஜ் வெல்வார்!

உபையதுல்லா (தஞ்சாவூர்): தொடர்ந்து மூன்று முறை தொகுதியின் எம்.எல்.ஏ.வான உபையதுல்லா எளிமையானவர். மக்களிடம் நல்ல பெயர் நல்ல பெயர் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அதுதான் உபையதுல்லாவுக்குப் பிரச்னையாக இருக்கும். ஆனால், நல்ல மனிதர் என்ற இமேஜ் இவரை கை தூக்கிவிடலாம்!

வெள்ளகோயில் சாமிநாதன் (மடத்துக்குளம்): தொகுதி மாறி மடத்துக்குளத்துக்கு வந்து இருக்கிறார் சாமிநாதன். தொகுதிக்குப் புதியவர். முழுக்க முழுக்க பணத்தையே நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலு, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எளிமையானவர் என மக்களிடம் பெயரெடுத்தவர். தொகுதி முழுக்க சண்முகவேலுக்கு சொந்த பந்தங்கள் அதிகம். சுத்தி வளைத்துப் பார்த்தால், சண்முகவேலுவின் கைதான் ஓங்கி இருக்கிறது!

கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்): கே.பி.பி. சாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் கே.குப்பன். முன்னாள் எம்.எல்.ஏ-வான குப்பன், தற்போது திருவொற்றியூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர். சாமியைவிட செல்வாக்கு​கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டு​களில், தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை சாமி வலை வீசிக் கொண்டுவந்து குவித்து இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமைச்சர் சாமியின் தம்பி சாமியாடிய விவகாரங்களைப் பயத்துடன் மீண்டும் நினைத்துப் பார்த்தபடி, பொது ஜனம் இலைத் தரப்பை இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். மணலி, சேக்காடு, எண்ணூர் என இதுவரை சாமிக்கு சர்வ பலத்தைக் கொடுத்த மீனவ ஏரியாவாசிகளும், இப்போது தி.மு.க-வின் மீது திடீர் கோபம்கொண்டு சாமிக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கி உள்ளனர்!

க.அன்பழகன் (வில்லிவாக்கம்): 88 வயதுக்காரர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க-வின் பொதுச் செயலாளர். தமிழக நிதி அமைச்சர். இந்தப் பெருமைகளை உடைய பேராசிரியர், இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகரனை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கு முந்திய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் 336, 409 என்கிற ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார். அதனால்தான், தனக்கு சேஃப்டியான தொகுதி இது என்கிற வகையில் வில்லிவாக்கம் வந்து இருக்கிறார். ஆனால், வில்லிவாக்கமும் அவருக்கு சாதகமாக இல்லை!

ஜே.சி.டி.பிரபாகரன் 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது ஆளுமையைவைத்து 'வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர்' என்று மக்கள் செல்லமாக அழைப்பார்கள். தொகுதிக்குள் ஒன்றரை மாதங்கள் பாத யாத்திரை சென்று மக்கள் குறை கேட்டவர். கடந்த 27 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகள் எனத் தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர். இவருக்குக் கை கொடுப்பவர் - தே.மு.தி.க. கவுன்சிலர் பிரபாகரன். கடந்த உள்ளாட்சியில் தி.மு.க. முக்கியப் பிரமுகரை வீழ்த்தி இவர் ஜெயித்தார். இதை எல்லாம் வைத்து அன்பழகன் அவுட் என்கிறார்கள்!

பரிதி இளம்வழுதி (எழும்பூர்): ஐந்தாவது முறை எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. இந்த முறை ஆறாவது தடவை... தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டவர். சாலை வசதி, புதிய கட்டடங்கள் என்று மக்கள் பணியை ஏகத்துக்கும் செய்திருந்தாலும், ஒரு சில கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்கிற புலம்பல் உட்கட்சியில் ஒலிக்கிறது. பரிதியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பவர் தே.மு.தி.க-வின் புரசை கு.நல்லதம்பி. இவருக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கும் 30 வருடப் பழக்கம். ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னால், 15 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, இவருக்கு சைக்கிள் கடை வைத்துத் தந்ததே விஜயகாந்த் தானாம். ஆனால், இவருக்குப் பரிதியை எதிர்கொள்ளும் அளவுக்கு படை, பண பலம் இல்லாததால், பரிதியின் பக்கம் வெற்றிக் காற்று!

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்): கடைசி நிமிஷம் வரையில்கூட, 'முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி இது’ என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று கருணாநிதி திருவாரூருக்கு இடம்பெயர, இங்கே தா.மோ.அன்பரசனுக்கு உறுதியானது. குரோம்பேட்டை தாண்டி சாலையில் வரும்போது, எதிர்ப்படும் மேம்பாலங்கள், பழைய மகாபலிபுர ரோட்டைத் தொடும் துரைப்பாக்கம் ரேடியல் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம்... இரண்டையும் கடக்கும் பல்லாவரம்வாசிகள் உதயசூரியன் சின்னத்தை மறக்க மாட்டார்கள் என்று தி.மு.க-வினர் சொல்லி ஓட்டு சேகரிக்கிறார்கள். தர்ஹா ரோடு சுரங்கப் பாதை, மீனம்பாக்கம் பி.வி.நகர் சுரங்கப் பாதை... இரண்டையும் கட்டி முடித்ததும் இவர்களே. ஆனால், மக்கள் வசிக்கும் சில இடங்களை தொல்பொருள் துறை கைப்பற்றி, அங்கே எல்லாம் புதிய கட்டடம் எதுவும் கட்டக் கூடாது. பூமியைத் தோண்டக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறவைப்பதாக அன்பரசன் மக்களிடம் உத்தரவாதம் தந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் வரவில்லை. அன்பரசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தன்சிங் போட்டியிடுகிறார். முன்னாள் பல்லாவரம் நகரசபைத் தலைவர். இவருக்கும் செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அந்த வகையில், இந்த ஓட்டுகள் மீண்டும் தன்சிங்குக்கு சாதகமாக விழும் என்று எதிர்பார்கிறார்கள். இது தா.மோ.அன்பரசனை டவுட் பட்டியலில் சேர்க்கவைக்கிறது!


ஜூனியர் விகடன்

ஞாயிறு, 27 மார்ச், 2011

THANKS TO DINAMALAR

மதுரை:மேலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆர்.ராணி. இவர் மார்ச் 24ம் தேதி மேலூர் உதவித் தேர்தல் அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் மனுத்தாக்கலின் இறுதி நாளான நேற்றும் அவர் இரண்டாவது முறையாக மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் 4 மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

THANKS TO DINAMALAR



திண்டுக்கல் : நத்தம் தொகுதியில் அதிகாரபூர்வ தி.மு.க.,வேட்பாளரை எதிர்த்து, அத்தொகுதியில் சீட் கிடைக்காத தி.மு.கவைச் சேர்ந்த, எம்.ஏ.ஆண்டி அம்பலம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் ஓன்பது முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டி அம்பலம். இவரது மறைவுக்கு பின்பு நத்தம் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு மாறியது. ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.ஏ., ஆண்டி அம்பலம் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்தார். இதையடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இவர் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த முறை தி.மு.க.,வில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். ஆனால் ஒன்றிய செயலரும், மாவட்ட ஊராட்சி துணை தலைவருமான க.விஜயனுக்கு சீட் கிடைத்தது. இதையடுத்து ஆண்டி அம்பலமும், இவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்தனர். இவர் சார்ந்துள்ள முத்தரையர் சமுதாய மக்கள், நத்தம் தொகுதியில் 56 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு சமுதாயத்திற்கு தி.மு.க.,வில் பிரதிநிதித்துவம் தரவில்லை எனக் கூறி, சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தனர். எம்.ஏ.ஆண்டி அம்பலத்தை சுயேச்சையாக நிறுத்துவது என்று முடிவு செய்தனர். ஆண்டி அம்பலம் நேற்று அதிகாரபூர்வ தி.மு.க.,வேட்பாளரை எதிர்த்து, நத்தம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம் இவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

THANKS TO DINAMANI

முசிறி மார்ச் 26: முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் பாஜக சார்பாக எஸ்பி. ராஜேந்திரனும், இவருக்கு மாற்றாக மகாராஜனும்,சுயேச்சையாக திமுகவின் தொட்டியம் முன்னாள் எம்எல்ஏ கே. கண்ணையனும், அதிமுக சார்பில் என்.ஆர். சிவபதியும் இவருக்கு மாற்று வேட்பாளராக தொட்டியம் அதிமுக ஒன்றியச் செயலர் பால்மணி (எ) சுப்பிரமணியனும், காங்கிரஸ் சார்பாக தொட்டியம் எம்எல்ஏ எம். ராஜசேகரனும், இவருக்கு மாற்று வேட்பாளராக ராஜாராமநாதனும், ஐஜேகே கட்சியின் சார்பாக கே.கே. பன்னீர்செல்வமும், சுயேச்சைகளாக நீதிமுத்துமணல் சீனிவாசன், பி. செந்தில்வேல், ப. குருமூர்த்தி, டி. அப்பாவு,மு. பாலகிருஷ்ணன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

THANKS TO DINAMANI

தஞ்சாவூர், மார்ச் 26: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான சனிக்கிழமை 40 பேர் வே ட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவிடைமருதூர் தொகுதியில் சுயேச்சையாக ஜெ. குடந்தையரசன், டி. சுபாஷ் சந்திரபோஸ், எஸ். ரவிச்சந்திரன், வி. இளையராஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கும்பகோணம் தொகுதியில் பி. சுப்பிரமணியன், ஆர். மோகன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளராகவும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் எம்.பி.எஸ். தட்சிணாமூர்த்தியும், பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக ஆர். மணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாபநாசம் தொகுதியில் ஏ. தமிழ்ச்செல்வன், ஏ.எம். ராஜா, பி. அரசன், குழந்தைவேலு, எம். ராஜ்முகமது ஆகியோர் சுயேச்சையாகவும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர். திருமேனி, பாஜக மாற்று வேட்பாளராக வாசுதேவன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவையாறு தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் டி. ராஜேஸ் கண்ணா, ஒரத்தநாடு தொகுதியில் கே. பரமேஸ்வரி ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் ராயர் விக்டர் ஆரோக்கியராஜ், அவருக்கு மாற்றாக பி. சரவண ஆனந்தன், இலங்கைத் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ. பாலு என்ற பாலன், சுயேச்சையாக ஜி. இளவரசன், கே. முத்துக்குமரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சி. இன்பரசன், சுயேச்சையாக ஏ.ஆர். யோகநாதன், எஸ். செந்தில்குமார், ஏ. சரவணன், எம். அப்துல் ரகுமான், ஆர். சண்முகம், ஏ.ஆர்.எம். கோவிந்தராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சி

சார்பில் கே. மகேந்திரன், அவருக்கு மாற்றாக ஆர். செல்வம், சுயேச்சையாக

எம். ஆறுமுகம், சி.என். சந்திரமோகன், பி. கண்ணன், டி. ஜெயகுமார், ஏ. முத்துகுமரன், எம். பாலசுப்பிரமணி, வி. பரதன், டி. தமிழ்செல்வி, கே. தங்கமுத்து ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

THANKS TO DINAMALAR

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து பல்வேறு கட்சியினர், சுயேச்சை என நேற்று வரை 115 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று பேராவூரணி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கே.மகேந்திரன் (36), உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது தந்தை கல்யாணசுந்தரம், தாய் கமலா. பி.ஏ., வரை படித்துள்ள இவர் தென்னை விவசாயம் செய்து வருகிறார். வேளாளர் இனத்தைச் சேர்ந்த இவர் பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராக இரண்டு முறை இருந்தார். தற்போது, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக செயல்படுகிறார்.
பேராவூரணி சட்டசபை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் ஆர்.விஸ்வநாதன் மகன் ஆர்.வி.பரதன் தஞ்சை துணை கலெக்டர் ரவிகுமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர் சங்கத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பி.ஏ., பி.எல்., படித்துள்ளார். தவிர, பல சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நேற்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் தஞ்சை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் உபயதுல்லா, அ.தி.மு.க., சார்பில் ரெங்கசாமி என 14 பேர், ஒரத்தநாடு தொகுதிக்கு தி.மு.க., சார்பில் மகேஷ்கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., சார்பில் வைத்திலிங்கம் என பத்துப்பேர், திருவையாறு தொகுதியில் தி.மு.க., சார்பில் கல்லணை செல்லக்கண்ணு, அ.தி.மு.க., சார்பில் ரெத்தினசாமி என 12 பேர், பாபநாசத்தில் காங்கிரஸ் சார்பில் ராம்குமார், அ.தி.மு.க., சார்பில் துரைகண்ணு என 15 பேர், கும்பகோணத்தில் தி.மு.க., சார்பில் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் ராமராமநாதன் என 15 பேர், திருவிடைமருதூரில் தி.மு.க., சார்பில் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில் பாண்டியராஜன் என 12 பேர், பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் ரெங்கராஜன், தே.மு.தி.க., சார்பில் செந்தில் என 16 பேர், பேராவூரணியில் காங்கிரஸ் சார்பில் மகேந்திரன், தே.மு.தி.க., சார்பில் அருண்பாண்டியன் என 21 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அளவில் எட்டு தொகுதியிலும் சேர்த்து 115 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இருந்தும், 28ம் தேதி நடக்கும் வேட்பு மனு பரிசீலனை, 30ம் தேதி மனுவை திரும்ப பெறுதல் ஆகிய நாட்களில் இதில், மாற்று வேட்பாளராக தாக்கல் செய்தவர், அதிருப்தி வேட்பாளர், ஒரே வேட்பாளர் இரண்டாவது மனுத்தாக்கல் என சில மனுக்கள் தள்ளுபடி அல்லது திரும்ப பெறப்பட்டபின் களத்தில் நிற்கும் வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும்.

As per one of the DMK Candidate

தி.மு.க. வேட்பாளர் தங்கம்தென்னரசு வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். காரியாபட்டி நகரில் கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் ஆகிய ஆலயங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

காரியாபட்டியில் உள்ள முக்குலத்தோர் உற வின்முறை, முத்தரையர் உறவின்முறை, வ.உ.சி. பேரவை, ரெட்டியார் உறவின்முறை, நாடார் உறவின்முறை, வீரசைவ பேரவை, மருத்துவர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள் அமைப்பு, அருந்ததியர் அமைப்பு ஆகிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த வேட்பாளர் தங்கம் தென்னரசுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் போஸ், ஒன்றிய குழு தலைவர் சம்பத், ஒன்றிய செயலாளர் சண்முகசாமி, நகர செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் தேவர், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் மணி என்ற ராமநாதன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், முன்னாள் நகர செயலாளர்கள் தங்கபாண்டியன், போத்திராசு,

நகர இளைஞரணி அமைப்பாளர் ரபீக், அவைத்தலைவர் லியாகத்அலி, பஞ்சாயத்து தலைவர்கள் கண்ணன், சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்தோசம், இனியவன், அச்சம்பட்டி தி.மு.க. பிரமுகர்கள் சரவணன், வீரணன், ராசு, செவல்பட்டி செல்வராஜ், அர்ச்சுணன், பட்டாணி, கிருஷ்ணசாமி, பாண்டியன் நகர் தி.மு.க. பிரமுகர்கள் உதயகுமார், சுப்பாராஜ், மெடிக் ராஜேந்திரன், மணி, செவல்பட்டி கருப்பையா, விடுதலை சிறுத்தை அமைப்பாளர் பாண்டியஅரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 25 மார்ச், 2011

முத்தரையர் சங்கபொதுக்குழு கூட்டம் - THANKS TO DINAMALAR

நாமக்கல்: நாமக்கல்லில், முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க மாவட்ட அமைப்புக் குழு தலைவர் கோபி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும், சங்க அனுமதியுடன் தேர்தல் பணி செய்யப்படும். கபிலர்மலை, ராசிபுரம், ப.வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், மக்களுக்கு தொண்டு செய்யும் நல்ல வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு உதவும் வகையில் நல்ல திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக வசிக்கும் முத்திரை இன மக்கள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., வேட்பாளருக்கு எதிர்ப்பு:சுயேச்சையாக களம் இறங்க திட்டம் - THANKS TO DINAMALAR

நத்தம்:நத்தம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, வரும் 25ம் தேதிக்குள் சீட் வழங்காவிட்டால், முத்தரையர் சங்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக, தி.மு.க.,வை சேர்ந்த ஆண்டியம்பலம் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் விஜயன், கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்த ஆண்டியம்பலம் மனு செய்திருந்தனர்.விஜயனுக்கு சீட் வழங்கப்பட்டதால், கோபமடைந்த முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த சிலர், ஆண்டியம்பலத்திற்கு சீட் கேட்டு தி.மு.க., தலைமைக்கு தந்தி அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த முத்தரையர் சங்க கூட்டத்தில் ஆண்டியம்பலம் பேசியதாவது:நத்தம் தொகுதியில் முத்தரையர் சமுதாய மக்கள் அதிகளவில் உள்ளனர். எனது தந்தையான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டியம்பலத்தான் காலத்திலிருந்து ஆதரவு தந்து வருகிறீர்கள். கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற எனக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. வரும் 25ம் தேதிக்குள் தி.மு.க., தலைமை மறுபரிசீலனை செய்து, எனக்கு மீண்டும் சீட் வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.அப்படியில்லையெனில், 25ம் தேதி முத்தரையர் சமுதாயம் சார்பாக சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவேன்.இவ்வாறு ஆண்டியம்பலம் பேசினார்.

THANKS TO DINAMALAR

பட்டுக்கோட்டை: மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருஞானசம்மந்தம் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம் (48). இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த 1996, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற இவர், கடந்த 2006 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் வீரகபிலனிடம் தோற்றுப்போனார். வாசனின் தீவிர ஆதரவாளரான இவருக்கு இந்தாண்டு எப்படியும் சீட்டு வழங்கப்படும் என காத்திருந்த நிலையில், இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரனுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இருந்தும், தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனக்கோரி திருஞானசம்மந்தம் டெல்லி மற்றும் சென்னையில் வாசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.



நேற்று காலை பேராவூரணி உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் இரு மனு தாக்கல் செய்தார். அதில், ஒன்று சுயேட்சையாகவும், மற்றொன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் மனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிட அக்கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட வேண்டும். வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாகக்கூட அக்கடிதத்தை வழங்கி சரி செய்து கொள்ளலாம், என்பதால் இரு மனுவை திருஞானசம்மந்தம் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி தனக்கு சீட்டு ஒதுக்காவிட்டால், தான் சுயேச்சையாக போட்டியிடுவது என்ற முடிவுடன் அவர் களத்தில் இறங்கியுள்ளார்.தே.மு.தி.க.,-சுயேச்சைகள் மனு தாக்கல்



தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் தே.மு.தி.க., வேட்பாளர் அருண்பாண்டியன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சியைச் சேர்ந்த இவர் தற்போது சினிமா தயாரிப்பு, விநியோகிஸ்தர் உட்பட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளது.
* பேராவூரணி தொகுதியில் போட்டியிட சிங்கத்தமிழன் முத்தரையர் முன்னேற்றக்கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் (42) என்பவர் தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) ரவிகுமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சையாக இவர் போட்டியிடுகிறார்.
* தஞ்சை சட்டசபை தொகுதிக்கு ஆர்.டி.ஓ., முத்துலட்சுமியிடம் சூசைஅருள் (49) என்பவர் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை விளார் ரோடு நாவலர் நகரைச் சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு 20 லட்சம் ரூபாயாகும்.

THANKS TO DINAMALAR

யானையின் காதில் புகப்போகும் சுள்ளெறும்பு நான் : ஸ்ரீரங்கம் தி.மு.க., வேட்பாளர் "சுளீர்' பேட்டி : என்.ஆனந்த், வயது - 29, படிப்பு - பி.எஸ்சி., சமூகம் - முத்தரையர், தொழில் - விவசாயம், ரியல் எஸ்டேட், கட்சிப் பதவி - சாந்தாபுரம் தி.மு.க., கிளைச் செயலர் : ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆனந்த், காலையில் துவங்கி, இரவு வரை ஓயாத பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 9 மணிக்கு மாவட்டச் செயலர் நேருவுடன் ஆலோசனை; இரவு 9.30 மணிக்கு, பிரசாரத்தை முடிக்க கடைசி பகுதி நோக்கி காரில் விரைகிறார். மிகுந்த சிரமத்துக்கு இடையே, காரிலேயே அவர் அளித்த, "மினி' பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவோம் என எதிர்பார்த்தீர்களா?




கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.




எந்த தைரியத்தில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்?




தி.மு.க.,வும் மிகப் பெரிய கட்சி தான். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கருணாநிதியும், ஸ்டாலினும் இருக்கிற தைரியத்தில் தான் போட்டியிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவை, என்னை எதிர்த்து போட்டியிடும் ஒரு சக வேட்பாளராகத் தான் கருதுகிறேன்.




ஜெயலலிதாவை எதிர்த்து இதுவரை சுகவனம் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், நீங்கள் பலிகடா ஆக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா?




நிச்சயமாக நான் பலிகடா இல்லை. தலைவர் கருணாநிதியும், ஸ்டாலினும், மாவட்டச் செயலர் நேருவும் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளனர்.




முத்தரையர் இன ஓட்டுகளை மட்டுமே நம்பி களம் இறங்குகிறீர்களா?




முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும், அனைத்து தரப்பு மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளும் எனக்கு நிச்சயம் விழும்.




பொதுவாகவே முத்தரையர்கள், அ.தி.மு.க., ஆதரவாளர்கள் என்ற நிலை உள்ளதே?




என் வெற்றியின் மூலம் அந்த, "டிரென்ட்'டை நிச்சயம் உடைப்பேன். கருணாநிதி கூறியதைப் போல, யானையின் காதில் புகுந்த கட்டெறும்பாக அல்ல; நான் சுள்ளெறும்பாக இருந்து யானையை வீழ்த்துவேன்.




ஸ்ரீரங்கத்தில் உள்ள பிராமண சமுதாயத்தினர் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா?




எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத இளைஞன் என்பதாலும், தமிழகத்தில் ஏராளமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த அரசின் சாதனைகளாலும், அவர்களின் ஓட்டு எனக்கு நிச்சயம் உண்டு.




தி.மு.க., அரசின் மீதான ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எப்படி சமாளிப்பீர்கள்?




இதுவரை எந்த மக்களும் ஊழல் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அப்படி கேள்வி எழுப்பினால், ஊழல் நடக்கவில்லை என்பதை விளக்கிக் கூறுவேன். அ.தி.மு.க.,வின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பேன்.




உங்களின் தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கும்?




தி.மு.க., அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும், வீடு வீடாகச் சென்று கூறி பிரசாரம் செய்வேன். இவ்வாறு ஆனந்த் கூறினார்.




ஆயிரம் தலைக்கட்டுகளைக் கொண்ட சொந்தங்களையும், அதே இனத்தைச் சேர்ந்த மக்களையும், வேண்டுமென்ற அளவு பணத்தையும் நம்பி களமிறங்கி இருக்கிறார் தி.மு.க., வேட்பாளர் ஆனந்த். மாவட்டச் செயலர் நேரு மற்றும் ஆனந்தைச் சுற்றியுள்ள கட்சியினர் சிலர் ஆட்டுவிக்கும் பொம்மையாகத் தான் ஆனந்த் இருக்கிறார். அவர்கள் நில் என்றால் நிற்கிறார்; செல் என்றால் செல்கிறார்; உட்காரு என்றால் உட்காருகிறார்.




ஆனந்த் நமக்களித்த பேட்டியின் போது, அவருக்கு தெளிந்த அரசியல் அறிவோ, எதிராளியை வீழ்த்துகின்ற பிரசார யுக்திகளோ இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.




மொத்தத்தில், வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை, "மலையை சணல் கயிற்றால் கட்டி இழுப்போம்... வந்தால் மலை; போனால் சணல் தானே...' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மாவட்டச் செயலர் நேரு முடிவெடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மே 13ம் தேதி தெரிந்துவிடும், சுள்ளெறும்பின் நிலை.

செவ்வாய், 22 மார்ச், 2011

நத்தம் தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரிக்கை - Thanks to Dinamani

திண்டுக்கல், மார்ச் 21: நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை மாற்றம் செய்து, ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக அறிவிக்கக் கோரி, முத்தரையர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி திங்கள்கிழமை கூட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆண்டி அம்பலம். முத்தரையர் இனத்தைச் சேர்ந்த இவர், நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி உருவானது முதல் 1999-ம் ஆண்டு வரை போட்டியிட்டு, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். மேலூர் தொகுதியிலும் ஒரு முறை போட்டியிட்டு வென்று, மொத்தம் 7 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்துள்ளார்.

இவர், 1999-ம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட இரா. விசுவநாதன் வெற்றி பெற்று இன்று வரை எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இத்தொகுதியில் திமுக போட்டியிட முடிவுசெய்தது. அதன்படி, மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் காங்கிரஸிலிருந்து திமுக.வுக்கு மாறி (இவர் பெயரும் ஆண்டி அம்பலம்), அத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், ஆண்டி அம்பலம் தேர்தலில் தோல்வியுற்றார்.

இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஆண்டி அம்பலம் போட்டியிட வேண்டும் என, ஊரில் பெரும்பான்மையோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், சாணார்பட்டி திமுக ஒன்றியச் செயலரும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான க. விஜயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அதிருப்தியில் உள்ள முத்தரையர் சமூகத்தினர் சனிக்கிழமை கூட்டம் நடத்தி, வேட்பாளரை மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக, திங்கள்கிழமை மீண்டும் கூட்டம் கூட்டி தீர்மானிக்க முடிவெடுத்தனர்.

அதன்படி, திங்கள்கிழமை சந்தனக் கருப்பசாமி கோயில் வளாகத்தில் கூடிய இச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், நத்தம் திமுக வேட்பாளர் க. விஜயனை மாற்றி ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் 25-ம் தேதி சுயேச்சை வேட்பாளருக்கான மனுத் தாக்கல் செய்யப்படும் என தீர்மானித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், திமுக கட்சியினர் மற்றும் மாற்று சாதியைச் சேர்ந்த மக்கள் கட்சியினர் கலந்துகொண்டு ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானத்தை ஆதரித்தனர்.

வியாழன், 17 மார்ச், 2011

"சிறுகா பெறுகாமுறை பிறழ்ந்து வாரா" (நாலடி 110) என்பதனானும் உணர்க' என்று குறித்துள்ளனர். இவற்றால் நாலடியார்சைன சமயச் சான்றோர் பலர் பாடிய பாடல்களின் தொகுதிஎன்பது போதரும்.

நாலடியார்ப் பிரதிகள் சிலவற்றில் காணும் 'வளம் கெழு திருவொடு' எனத் தொடங்கும் பாடலிலிருந்து, நாலடிநூலுக்கு அதிகாரம் வகுத்தவர் 'பதுமனார்' என்பதும், இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி உரை கண்டவர் 'தருமர்' என்பதும் தெரியவருகின்றன. பதுமனார், திருக்குறள் நூலைப் போன்று அதிகாரத்திற்குப் பப்பத்துப்பாடல்களாக அமைத்து, நூலை உருவாக்கியிருக்கிறார். நூலுக்குப் புறம்பாக முதற்கண் உள்ளகடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, இதன்கண் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும்உள்ளன. பின்னர், பாலும் இயலும் வகுத்த உரையாசிரியர்கள், அறத்துப்பால், பொருட் பால், காமத்துப் பால் என முப்பாலாகப்பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர். பொருட்பாலில் பொது இயல், பல் நெறி இயல் என்பனஓர் அதிகாரமே ஓர் இயலாகக் குறிக்கப்படுபவை. தருமர்இறுதி மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பால் எனக் கொண்டு, 'பொதுமகளிர்' என்னும் ஓர் அதிகாரத்தை (38) 'இன்ப துன்பஇயல்' என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும்(39, 40) 'இன்ப இயல்' என்றும் கொள்வர்.வேறு சில உரைகாரர் இறுதி அதிகாரமாகிய 'காமம் நுதல் இயல்' ஒன்றை மட்டுமேகாமத்துப் பாலுக்கு உரியதாகக் கொண்டுள்ளனர். ஓர் அதிகாரமே இயல்களாக அமைந்துள்ளமையும், ஓர் அதிகாரம் இயலாகவும் 'பால்' எனப்படும் பெரும் பிரிவாகவும் அமைந்துள்ளமையும் சிந்திக்கின், இந்தப் பால், இயல் பகுப்பு சிறந்த அமைப்பு முறையாகத் தோன்றவில்லை. காமத்துப் பாலின் இன்ப இயல் பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் உரைகளில் காணப்படுகின்றன.

இந்நூல் பாடல்களில் ஆடூஉ முன்னிலை(52) அதிகமாகவும், மகடூஉ முன்னிலை (6) மிகக் குறைவாகவும் வந்துள்ளன. 'பூங்குன்றநாட!' என வரும் விளித்தொடர் நூலகத்து இரண்டு இடங்களில் (128, 212)வருவது கொண்டு, பூங்குன்ற நாட்டுத் தலைவனைக் குறித்ததாக எண்ணுவோரும் உண்டு. ஆனால், இவையும் ஏனைய ஆடூஉ முன்னிலைத் தொடர்களைப் போலப்பொது வகையில் அமைந்தவை என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

ஆனால், 'முத்தரையர்' என்ற அரசபரம்பரையினரைக் குறித்த செய்திகள் இரண்டு பாடல்களில் (200, 296)உள்ளன. இம் முத்தரையர் வரலாற்றொடு இயைபுபட்டவர் என்றும், இவர்கள்காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாதல் வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எனவே, நாலடி நானூறும் இக்காலத்தைச் சார்ந்ததாதல் கூடும்.

இந் நூலைத் தொகுத்து முறைப்படுத்தியபதுமனாரே இதற்கு ஓர் உரையும் வகுத்தார் என்பது தெரியவருகிறது. மதிவரர் என்பவர் இந் நூற்கு அரும் பதவுரை இயற்றினார் என்பதும், தருமர் என்பவர் உரை எழுதினார் என்பதும் தனிப்பாடல்களால் தெரியவருகின்றன. இந்நூலினை இளம்பூரணர் முதலிய தொல்காப்பிய உரைகாரரும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தம்தம்உரைகளில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என். ஆனந்த் போட்டியிடுகிறா




சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என். ஆனந்த் போட்டியிடுகிறார்.



அந்தநல்லூர் ஒன்றியம் காந்தபுரம் என்.ஆனந்த்துக்கு வயது 29. இவர் பி.எஸ். சி. பட்டம் பெற்றவர்.

வெளிநாடு சென்று வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரிலேயே விவசாயத்தை கவனித்து வருகிறார்.



150 ஏக்கரில் வாழை பயிரிட்டு விற்பனை செய்யும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் இருக்கிறது.





தற்போது இவர் திமுக கிளைச்செயலாளராக இருக்கிறார்.



முத்தரையர் இனத்தைச்சேர்ந்த இவருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மனைவி சவுமியா எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர்.



ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா

அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்ற ஆனந்த்திடம் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவது குறித்து கேட்டபோது,

‘’அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வென்று வெற்றிக்கனியை தலைவர் கலைஞர் காலில் சமர்ப்பிப்பேன்’’ என்று அதிரடியாய் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை பெரும் வாக்குவித்தியாசத்தில் வீழ்த்துவேன்-ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் ஆனந்த்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆனந்த் கூறியுள்ளார்.


திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிளைக் கழக செயலாளராக இருக்கும் ஆனந்த் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர்கள் அதிகம் இருந்தாலும் கூட முத்தரையர் வகுப்பினரும் கணிசமாக உள்ளனர் என்பதால் ஆனந்த்தை நிறுத்தியுள்ளது திமுக.

செளம்யா என்ற மனைவியும் அர்ஷிதா என்ற மகளும் ஆனந்த்துக்கு உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் ஆனந்த்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றியை முதல்வர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்றார்.

சனி, 12 மார்ச், 2011

3 தொகுதிகளில் முத்தரையர் சங்க நிர்வாகிகள் போட்டி - Thanks to Dinamani

ராமநாதபுரம், மார்ச் 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தரையர் சங்க நிர்வாகிகள் 3 தொகுதிகளில் (ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர்) போட்டியிட இருப்பதாக அதன் மாவட்டத் தலைவர் எம்.குப்புச்சாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உசக்பட 70 தொகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள் சுமார் ஒரு கோடி பேர் வரை இருந்தும் எந்தக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
எனவே முத்தரையர் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்திட முடிவு செய்திருக்கிறோம். சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனித்து நின்று போட்டியிடுகிறோம்.
ராமநாதபுரம் தொகுதியில் 62000பேரும், பரமக்குடியில் 38000 பேரும்,முதுகுளத்தூரில் 35000 பேரும் முத்தரையர்கள் இருக்கின்றனர். பரமக்குடி தனித்தொகுதியில் மட்டும் சுமார் 25000 பேர் உள்ளனர்.
தனித்தொகுதியாக பரமக்குடி இருப்பதால் அதைத் தவிர மற்ற 3 தொகுதிகளில் சங்க நிர்வாகிகள் வேட்பாளர்களாகட்க் போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் எம்.குப்புச்சாமி ஆகிய நானும், திருவாடானை தொகுதியில் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குத்தரவை ஊராட்சி மன்றத் தலைவரும், சங்கத்தின் துணைத் தலைவருமான வி.கோவிந்தனும், ராமநாதபுரம் நகர்த் தலைவர் ஆர்.பி.செந்தில்குமார் முதுகுளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 10 மார்ச், 2011

சட்டமன்ற தேர்தல் 2011 - இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு

சட்டமன்ற தேர்தல் 2011 - இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இளம் சிங்கங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2011 , முத்தரையர் சமுதாயதினைப் பொறுத்தவரை மிக முக்கியமானது ஆம், கடந்த சில வருடங்களாகவே நம்மை திட்டமிட்டு புறக்கணிப்பதும், பலி வாங்குவதும் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் வரும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானதுதான், முதலில் ராமநாதபுரம் மாவட்டம் ஏற்காட்டில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைத்தபோது அரச இயந்திரங்கள் துரித கதியில் அத்தனை அப்புறப்படுத்தியது இதுவரை அதனை திரும்பி அமைத்து தரவில்லை ,மதுரை மாவட்டம் எலியார் பத்தியில் எமது சமுதாய முன்னோடியின் பெயர் பலகை மீது செருப்பு அணிவித்து எங்களை அவமான படுத்தியவர்களை திருப்பதிபடுத்த எமது மக்கள் மீது காவல்துறை அராசகம் கட்டவிழ்த்து விடப்பட்டது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எமது சமுதாய கொடியினை அவமான படுத்தியவர்களை விட்டுவிட்டு எமது சமுதாயத்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு தமது கூட்டணி கட்சியினை திருப்தி படுத்த நினைக்கிறது திராவிட முன்னேற்ற கழகம், சரி அவர்கள் தான் அப்படி என்றால் தமது கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சரை அவரது வீட்டிலேயே ஒரு அராசக கும்பல் வெட்டிக்கொல்கிறது அவரது இறுதி சடங்கில் கூட கலந்துக் கொள்ளவில்லை அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை ஆக தமிழக அரசியலில் மிக பெரிய சக்திகள் இரண்டும் நம்மை கண்டு கொள்ளாத நிலையில் பிற கட்சிகளின் நிலையினை கூறவே வேண்டாம். இதற்கிடையில் நமது சமுதயாதிக்கென்றே கடந்த தேர்தல் வரை கு.ப. கிருஷ்ணன் நடத்திய "தமிழர் பூமி" யும் தன்னை வேறு கட்சிகளுடன் இணைத்துக்கொண்டு விட்டது, இந்த தேர்தல் நேரத்தில் நமது சமுதாயதிற்காக புதிய அரசியல் கட்சிகளாக முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் போன்றவை தொடங்கப்பட்டுள்ளது, இவர்களின் நிலைப்பாடும் மிக சிக்கிரமே நமக்கு தெரிந்து விடும் அரசியல் இயக்கங்கள் நீண்ட காலமாக நம்மை ஏமாற்றி வரும் சூழ்நிலையில் மிக குறுகிய காலத்தில் நாம் தமிழக சட்டமன்ற தேர்தலினை எதிர்கொள்ள உள்ள இந்த நேரத்தில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எந்த அரசியல் இயக்கத்தினையும், எந்த கூட்டணியையும் ஆதரிக்கவில்லை, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அரசியல் இயக்கங்கள், அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நாம் உண்மையில் வெறுத்துபோய் உள்ளோம் என்பதுதான் உண்மை, சரி அப்படியானால் நாம் யாரை இந்த தேர்தலில் ஆதரிப்பது ?

இந்த சட்டமன்ற தேர்தலில் நேரிடையாக நாம் அரசியல் இயக்கங்களை ஆதரிக்காத நிலையில் நமது சமுதாயதிற்காக என்று தொடங்கப் பட்டுள்ள அரசியல் இயக்கங்களை (முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம்)ஆதரிக்கலாமா?
என்றால் அவர்களின் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆதரிப்போம், இல்லாத பட்சத்தில் எமது சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் எமது சமுதாயதவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளராக அறிவிக்கும் அரசியல் இயக்கங்களை வேறு எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிப்போம் என்பது தான் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் இந்த தேர்தலில் நிலைப்பாடு

அடுத்ததாக அனைத்து கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப் படும் முத்தரையர் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உங்களை வேட்பாளர்களாக அறிவித்து இருக்கின்றார்கள் என்றால் அது உங்களின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கால் அல்ல, தனிப்பட்ட செல்வாக்கால் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பெரும் தலைவர் நத்தம் ஆண்டி அம்பலத்திற்கு மட்டுமே அத்தகைய செல்வாக்கு உண்டு, உங்களுக்கு தரப்படும் சீட்டு என்பது உங்களின் சமுதாய பின்னணியை அடிப்படையாக கொண்டது மட்டுமே இத்தனை மனதில் நிறுத்தி உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் அன்பான வேண்டுகோள் !!

எமது சமுதாய மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்காதவர்கள் இந்த தேர்தலிலாவது அந்த நிலை மாறி சரியான முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறோம்

நன்றி

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சட்டமன்ற தேர்தல் 2011 - இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு

சட்டமன்ற தேர்தல் 2011 - இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இளம் சிங்கங்களுக்கும் இனிய வணக்கங்கள்,

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2011 , முத்தரையர் சமுதாயதினைப் பொறுத்தவரை மிக முக்கியமானது ஆம், கடந்த சில வருடங்களாகவே நம்மை திட்டமிட்டு புறக்கணிப்பதும், பலி வாங்குவதும் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் வரும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானதுதான், முதலில் ராமநாதபுரம் மாவட்டம் ஏற்காட்டில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைத்தபோது அரச இயந்திரங்கள் துரித கதியில் அத்தனை அப்புறப்படுத்தியது இதுவரை அதனை திரும்பி அமைத்து தரவில்லை ,மதுரை மாவட்டம் எலியார் பத்தியில் எமது சமுதாய முன்னோடியின் பெயர் பலகை மீது செருப்பு அணிவித்து எங்களை அவமான படுத்தியவர்களை திருப்பதிபடுத்த எமது மக்கள் மீது காவல்துறை அராசகம் கட்டவிழ்த்து விடப்பட்டது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எமது சமுதாய கொடியினை அவமான படுத்தியவர்களை விட்டுவிட்டு எமது சமுதாயத்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு தமது கூட்டணி கட்சியினை திருப்தி படுத்த நினைக்கிறது திராவிட முன்னேற்ற கழகம், சரி அவர்கள் தான் அப்படி என்றால் தமது கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சரை அவரது வீட்டிலேயே ஒரு அராசக கும்பல் வெட்டிக்கொல்கிறது அவரது இறுதி சடங்கில் கூட கலந்துக் கொள்ளவில்லை அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை ஆக தமிழக அரசியலில் மிக பெரிய சக்திகள் இரண்டும் நம்மை கண்டு கொள்ளாத நிலையில் பிற கட்சிகளின் நிலையினை கூறவே வேண்டாம். இதற்கிடையில் நமது சமுதயாதிக்கென்றே கடந்த தேர்தல் வரை கு.ப. கிருஷ்ணன் நடத்திய "தமிழர் பூமி" யும் தன்னை வேறு கட்சிகளுடன் இணைத்துக்கொண்டு விட்டது, இந்த தேர்தல் நேரத்தில் நமது சமுதாயதிற்காக புதிய அரசியல் கட்சிகளாக முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் போன்றவை தொடங்கப்பட்டுள்ளது, இவர்களின் நிலைப்பாடும் மிக சிக்கிரமே நமக்கு தெரிந்து விடும் அரசியல் இயக்கங்கள் நீண்ட காலமாக நம்மை ஏமாற்றி வரும் சூழ்நிலையில் மிக குறுகிய காலத்தில் நாம் தமிழக சட்டமன்ற தேர்தலினை எதிர்கொள்ள உள்ள இந்த நேரத்தில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எந்த அரசியல் இயக்கத்தினையும், எந்த கூட்டணியையும் ஆதரிக்கவில்லை, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அரசியல் இயக்கங்கள், அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நாம் உண்மையில் வெறுத்துபோய் உள்ளோம் என்பதுதான் உண்மை, சரி அப்படியானால் நாம் யாரை இந்த தேர்தலில் ஆதரிப்பது ?

இந்த சட்டமன்ற தேர்தலில் நேரிடையாக நாம் அரசியல் இயக்கங்களை ஆதரிக்காத நிலையில் நமது சமுதாயதிற்காக என்று தொடங்கப் பட்டுள்ள அரசியல் இயக்கங்களை (முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம்)ஆதரிக்கலாமா?
என்றால் அவர்களின் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆதரிப்போம், இல்லாத பட்சத்தில் எமது சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் எமது சமுதாயதவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளராக அறிவிக்கும் அரசியல் இயக்கங்களை வேறு எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிப்போம் என்பது தான் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் இந்த தேர்தலில் நிலைப்பாடு

அடுத்ததாக அனைத்து கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப் படும் முத்தரையர் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உங்களை வேட்பாளர்களாக அறிவித்து இருக்கின்றார்கள் என்றால் அது உங்களின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கால் அல்ல, தனிப்பட்ட செல்வாக்கால் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பெரும் தலைவர் நத்தம் ஆண்டி அம்பலத்திற்கு மட்டுமே அத்தகைய செல்வாக்கு உண்டு, உங்களுக்கு தரப்படும் சீட்டு என்பது உங்களின் சமுதாய பின்னணியை அடிப்படையாக கொண்டது மட்டுமே இத்தனை மனதில் நிறுத்தி உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் அன்பான வேண்டுகோள் !!

எமது சமுதாய மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்காதவர்கள் இந்த தேர்தலிலாவது அந்த நிலை மாறி சரியான முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறோம்

நன்றி

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வேலை வாய்ப்பு தகவல் - நன்றி திரு. ரமேஷ்

Vanakkam.
Job Opportunity only for Tamil Speaking People

ACCOUNTANT
Minimum 3 Years Experience, Qualification - Bcom, Salary 5,000/- + Accommodation + Benefits. Office Location Karama, Dubai - UAE

OFFICE ADMINISTRATOR
Temporary Position : Office Administrator (3 Months), Salary 2,000/- +. Office Location Bur Dubai, Bank Street. Shipping Company, Dubai UAE

Candidates who fit the profile and meet the requirements, please send your CVs and cover letter to ramesh_vip@hotmail.com

செவ்வாய், 8 மார்ச், 2011

சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம்

தமிழகத்தில் தேர்தல் வரும் போது பல எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் எல்லாம் நடக்கும்.

புதிய கட்சிகள் தொடங்கப்படும். ஏற்கனவே இருக்கும் சில கட்சிகள் காணாமல் போகும். இதன்படி நேற்று சென்னையில் நடிகர் சரத்குமார் தலைமையில் " பெருந்தலைவர் மக்கள் கட்சி" என்ற பெயரில் நாடார் சமுதாயத்திற்காக புதிய கட்சி ஒன்றை அந்த சாதி சங்க தலைவர்கள் தொடங்கியுள்ளனர். அரசியல்கட்சிகள் தங்களை மதிக்காத காரணத்தால் புதிதாக கட்சி அமைப்பை உருவாக்குவது தான் சரியான வழி என்ற அடிப்படையில் இப்படி கட்சி தொடங்கப்பட்டதாக சொன்னார்கள்.

இதே வழியில் தமிழ்நாட்டின் மற்றொரு சாதியான முத்தரையர் சாதியினர் புதிதாக "சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். இந்த கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்பது பற்றி இந்த கட்சியின் தலைவர் விஸ்வநாதன் என்பவர் ஊடகவியலாளர்களிடம் சொல்லும் போது " கட்சியாக மாறும் போது அரசியல் கட்சிகள் எங்களை போன்றவர்களுடன் பேச்சு நடத்த வருகின்றனர். இனி எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள். எங்களது வலிமையை இந்த தேர்தலில் காட்ட இருக்கிறோம். நாங்கள் தமிழ்நாட்டின் 50 தொகுதிகளில் (இடங்களில்) இந்த தேர்தலில் போட்டியிடுவோம். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வரும் போது போட்டியிடுவோம்" என்றார்.
தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்பவர்களாகவும் உள்ளனர்.

முத்தரையர்களுக்கு அரசியலில் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்தது அ.தி.மு.க., தான். 1982ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கோவேந்தன் என்பவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசியலில் முக்கியத்துவத்தை அளித்தார்.அதன்பின், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற காலகட்டங்களில் கு.ப.கிருஷ்ணன், ஆலங்குடி வெங்கடாச்சலம், கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளித்தார். மேற்கண்டவர்கள் கட்சியிலும் அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.

அதே சமுதாயத்தைச் சேர்ந்த காத்தமுத்து, முசிறி ரத்தினவேல், பரஞ்ஜோதி, பிரின்ஸ் தங்கவேல், சிவபதி ஆகியோர் எம்.எல்.ஏ.,வாகவும், அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். முத்தரையர் சமுதாயத்திலிருந்து அ.தி.மு.க.,வில் மாநில பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்காடச்சலம் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.

வியாழன், 3 மார்ச், 2011

முத்தரையர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தல் - தினமணி

First Published : 27 Feb 2011 11:48:08 AM IST
மதுரை, பிப். 26: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பரளிப்புதூரில் அப்பாவி முத்தரையர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் வி.ராஜாராம்பாண்டியன் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். முத்தரையர் சமுதாயத்துக்கு 10 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பரளிப்புதூரில் அப்பாவி முத்தரையர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்வாணைக் குழு உறுப்பினர் பதவிக்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் பன்னீர் செல்வத்தை தேர்ந்தெடுத்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டி

முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்று மன்னார்குடியில் நடந்த முத்தரையர் மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



மன்னார்குடியில் முத்தரையர் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தலைவர் தங்க குமரேசன் தலைமையில் நடைபெற் றது. சந்திரகாசன் முன்னிலை வகித்தார்.



இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வடிவழகன், இளை ஞரணி செயலாளர் ரமேஷ், தர்மராஜ், சரவணன், முருகானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், இதை யொட்டி தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி கடசி கொடியேற்றி பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும், வாக்கு எண்ணிக்கையில் அதிகம் பெற்ற கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக் கும் சட்ட திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.