ஓ.. இளைஞனே...
இன்னும் எத்தனை காலம்
புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியலில் மடியப்போகிறாய்..!
சிற்றின்பத்தில் சிக்குண்டு
எலிகளின் பொறிகளிலா
உன் காலத்தை கடத்தப்போகிறாய்..!
சிங்கத்தின் வம்சம் நீ
பிறகு ஏன்
நரிகளுடன் நட்புறவு...!
ஆலமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..
ஓடிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..
திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...
நண்பனே...
உலகமே உனக்காகத்தான்
அதில் எல்லைகள் பிரிக்க
உனக்கு அதிகாரம் இல்லை...
வேலிகளிட்டா
விருந்தோம்பலை வளர்க்கப் போகிறாய்..!
காற்று வழிப்போ
உன் காலம் தென்றலாய் கிடக்கும்
நாற்று வழிப்போ
உன் காலம் வசந்தமாய் கிடக்கும்..
நம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக