திங்கள், 26 செப்டம்பர், 2011

இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...!! -சிங்கம் ஆர்.புஷ்பராஜ்

சிங்கம் ஆர்.புஷ்பராஜ்
இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...

வீரம் செறிந்த வன்னியில் தேடல்கள்..-வன்னியின் வரலாறு http://www.mannarnews.com/2011/09/blog-post_8489.html

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.
...
~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||

இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.

~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.

பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.
அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக