இந்திய வானிலை ஆய்வு மையங்களில் (Meteorology Department) நாடு முழுவதும் அறிவியல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் இந்தக் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியின் பெயர்: அறிவியல் உதவியாளர்
காலியிடங்கள்: 465 (பொது-230, ஒபிசி-128, எஸ்சி-70, எஸ்டி-37)
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியலை ஒரு பாடமாக படித்த அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது 60 சதவிகித மதிப்பெண்களில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் பட்டப்படிப்பு அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். +2 வில் இயற்பியல், கணிதம் முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.10.2011 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் PH(OH/HH) பிரிவினருக்கு 10 வருடங்களும், PH/(OH/HH) OBC பிரிவினருக்கு 13 வருடங்களும் PH/(OH/HH) + SC/ST பிரிவினருக்கு 15 வருடங்களும், EXSM(SC/ST ) பரிவினருக்கு 10 வருடங்களும் உச்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியிவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு மையம்: எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Stae Bank of India-வில் செலான் வழியாகவோ SBI-யின் ஆன்லைன் Payment-ன் வழியாகவோ விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம், பெண்கள் SC/ST PH/EXSM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் Part-1, Part-2 என இரண்டு கட்டமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய www.ssconline.nic.in, www.sscregistrationsifyitest.com என்ற இணையத்தைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக