வெள்ளி, 14 அக்டோபர், 2011

டிப்ளமோ படித்தவர்களுக்கு பிலாய் ஸ்டீல் ஆலையில் பயிற்சியுடன் வேலை

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் பிலாய் ஸ்டீல் ஆலையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: BSP -209 (Rectt) 11-12. Date:03.10.2011

பணியின் பெயர்: Operator-Cum-Technician (Trainee)

காலியிடங்கள்: 105

மெக்கானிக்கல்: 38 (பொது-20, SC-4, ST-12, OBC-2) மொத்த காலியிடங்களில் 5 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கும் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல்: 31 (பொது-18, SC-3, ST-9, OBC-1) மொத்த காலியிடங்களில் 4 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கும், இரண்டு இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்டலர்ஜி(Mettallurgy): 22 (பொது-12, SC-2, ST-7, OBC-1) மொத்த காலியிடங்களில் 3 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ்: 12 (பொது-8, SC-1, ST-3) மொத்த காலியிடங்களில் 1 இடம் முன்னாள் இராணுவத்தினருக்கும், 1 இடம் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவில்: 2 (பொது)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2011 தேதிப்படி18-லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின் சலுகைகள் அளிக்கப்படும்.

பயிற்சி காலம்: தேந்ந்தெடுக்கப்படுவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போதும் முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,250, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,350 உதவித் தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.9,160 - 3 சதவிகிதம் - 13, 150 மற்றும் இதர படிகள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பக் கட்டணத்தை "Steel Authority Of India Ltd, Bhilai Steel Plant" என்ற பெயரில் Bhilai -ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட A/C Payee டி.டியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய அக்டோபர் 12- 18 எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் இதழை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 12.11.2011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம்:

Post Box No: 16

Post Office Sector-1,

Bhilai, Durg District. Pin: 490001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக