வியாழன், 24 மே, 2012
முத்தரையர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பத்திரிக்கைகள் ....!!! (தினமலர் செய்தி)
திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாட்டம் மாநகர மக்களுக்கு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியம், கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, ராணி, மாநகரச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தே.மு. தி.க., சார்பில் மாவட்டச்செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் பார்த்திபன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். ஐ.ஜே.கே., பொதுச்செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணி வித்தனர். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கம் உள்ளிட்டஅø மப்பினர் மாலை அணிவித்தனர்.*ரணகளம்: காலையில் சிறப்பாக துவங்கிய சதயவிழா, மாலை நேரம் நெருங்க, நெருங்க "உற்சாகம்' கரை புரண்டோடியது. ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன், கார்களில் ஊர்வலமாக வந்தவர்கள், கையில் உள்ள சவுக்கு மர கொடியினால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் டூவீலர்களில் வருபவர்களை அடித்தும், கார், பஸ்களின் மீது அடித்தும் ரகளை செய்தனர்.இதனால் ஏராளமானோர் சிறியளவில் காயமடைந்தனர். நேற்று மாலை 5. 30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண் ஒருவரை, இதேபோல ஊர்வலமாக சென்றவர்கள் கொடிக்கம்பினால் தாக்கியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரவுண்டானா அருகே திடீர் சாலைமறியலில் குதித்தனர்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாரை, பொதுமக்கள் கண்டபடி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலம் வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கைகள் கட்டி போட்ட நிலையில் இருந்த போலீஸார், மக்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். ஊர்வலமாக வருபவர்களை மறித்து தாக்க முற்பட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.*இன்ஸ்., மண்டை பணால்: இரு தரப்பினரையும் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சமாதானம் செய்ய முயன்றார். அ ப்போது, ஊர்வலமாக வந்த சிலர் அவர் மண்டையில் கல்லால் தாக்கி, நின்று கொண்டிருந்த பஸ் மீது தள்ளிவிட்டனர். இத்தாக்குதலில் அவரது மண் டை உடைந்து ரத்தம் கொட்டியது.உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.*கல்வீச்சு: தஞ்சை பகுதியில் இருந்து வேன்களில் ஊர்வலமாக திருச்சி வந்த கும்பல், முந்தி செல்ல வழி கொடுக்காத டி.எஸ்.டி., எல்.ஆர்.எஸ்., பஸ்கள் மற்றும் பள்ளி வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடி உடைந்தது.திருவானைக்காவல், தென்னூர் ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுபோன்று கும்பல், கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டவர்களால், மாலை முதல் இரவு வரை மாநகர மக்கள் பீதியுடனே சாலைகளில் நடமாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக