முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திரு.பொன்னுதுரை--- லயன் டே்டஸ் நிறுவனம்.
ஒரு நிறுவனத்தை நடத்த திறமைமிக்க பணியாளர்கள் தேவை.
ஆனால் தனது நிறுவனத்துக்கு திறமையானவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், மாற்றுத் திறனாளிகளையும் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் லயன் டேட்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பி.பொன்னுதுரை.
""என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏதேனும் மாற்றுத் திறனாளிகள் உள்ள இடத்துக்குச் சென்று அவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன்
பொழுதைப் போக்குவது எனது வழக்கம். அப்படித்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு "விடிவெள்ளி' என்ற மனநலம் குன்றியவர்களுக்காகச் செயல்படும்
அமைப்புக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அந்த அமைப்பினர், "இங்குள்ள மனநலம் குன்றியவர்களுக்கு ஏதாவது வேலை தாருங்களேன்'
என்று கேட்டார்கள்.
நானும் ""சரி'' என்று ஒத்துக் கொண்டேன். மாற்றுத் திறனாளிகள் பிறரைப் போல பஸ் ஏறி தொழிற்சாலைக்கு வர முடியாது என்பதால், அவர்களுக்காக மினி வேன் ஒன்றை ஏற்பாடு செய்தேன். அது அவர்களைக்
காலையில் தொழிற்சாலைக்கு ஏற்றி வந்து மாலையில் அவர்களுடைய இருப்பிடத்தில் கொண்டு போய் விட்டுவிடும். காலை 9.30 மணி முதல் அவர்களுக்கு வேலை. எனது தொழிற்சாலைகளில் 33 மாற்றுத் திறனாளிகள் வேலை செய்கிறார்கள். 15 காது கேளாதவர்கள், 18 மனநலம் குன்றியவர்கள் வேலை செய்கிறார்கள்.
பிற தொழிலாளர்களிடம் பலவிதமான வேலைகளை வாங்க முடியும். ஆனால் மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்வார்கள். பேரீச்சம் பழங்களை அடைத்து வைக்க
பாட்டிலை எடுத்துத் தரும் வேலை என்றால் அந்த வேலையை மட்டுமே செய்வார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குச் செய்யத் தெரியும்.
என்னுடைய இந்தப் பணியைப் பாராட்டி தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சிறந்த தனியார் தொழிலதிபருக்கான விருதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிச் சிறப்பித்தது'' என்கிறார்
மகிழ்ச்சியுடன்.
நன்றி : திரு. முத்தரையர் மகராஜா
News From : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Kadhir&artid=613824&SectionID=146&MainSectionID=146&SEO&Title=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக