தூத்துக்குடி: திரேஸ்புரத்தில் நாட்டுபடகு பழுதுபார்க்கும்தளம் அமைக்க அரசு முயற்சி செய்திருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முத்தரையர் சமுதாயம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக திரேஸ்புரம் முத்தரையர் சமுதாய சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;திரேஸ்புரம் வடக்கு பகுதியில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் காலங்காலமாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் மீன்பிடி மற்றும் சங்குகுளி தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மீன்பிடி மற்றும் சங்குகுளி தொழிலில் எங்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக தொழில் செய்து வருகிறோம். தற்போது இந்த பகுதியில் நாட்டுப்படகு பழுதுபார்க்கும் தளம் அமைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த இடத்தில் சுகாதாரம் இல்லாமல் இந்த பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு சுகாதாரகேடு விளைவிக்கும் நிலை உள்ளது. அந்த இடத்தில் வேறு பகுதியினருக்கு பழுதுபார்க்கும் தளம் ஏற்படுத்தினால் எங்கள் சமுதாயத்தினருக்கு மிகவும் இடையூறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் வர வாய்ப்புகள் உள்ளன. திரேஸ்புரம் வட க்கு கடற்கரை பகுதிகளில் மேட்டுப்பட்டி, விவேகானந்தநகர் ஆ கிய பகுதி மீனவ மக்களுக்கும் இது போன்ற பிரச்னை கள் வரும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் நாட்டுப்படகு பழுதுபார்க்கும் தளம் அமையவிருக்கும் திட்டத் தை தவிர்த்து, அந்த இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து எங்கள் பகுதி மீனவ மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
THANKS: DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக