வெள்ளி, 27 ஜூலை, 2012

முத்தரையர் சங்க தலைவர் கைதை கண்டித்து பஸ் கண்ணாடி உடைப்பு

வேதாரண்யம், ஜூலை. 27 வேதாரண்யத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இதனை டிரைவர் கோபால்சாமி ஓட்டிச் சென்றார். கண்டக்டராக சுந்தர்ராஜன் இருந்தார். இந்த பஸ் காலை 4 மணியளவில் செண்பகராய நல்லூர் வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோடு ஓரம் நின்ற வாலிபர் கையை காட்டினார். அவர் பஸ்சில் ஏறத்தான் வருகிறார் என டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் நின்றதும் அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கடையால் பஸ் முன்பக்க கண்ணாடியை சரமாரியாக உடைத்தார். அந்த சமயத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பஸ்சின் பின் பக்கத்தில் துண்டு பிரசுரம் நோட்டீசை ஒட்டினார்கள். பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பஸ்சின் பின் பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- முத்தரையர் முன்னேற்ற கழக மாநில தலைவர் விசுவநாதனை கைது செய்த தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டடது குறித்து டிரைவர் கோபால்சாமி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்யதார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
NEWS FROM : MALAIMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக