சனி, 11 ஆகஸ்ட், 2012

முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் மகன் ராம்பிரபு குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி வரகநேரி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவர் முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில் அச்சங்கத்தினர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.


ஊர்வலத்தின்போது, கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராம்பிரபு மீது ஏற்கனவே இடமலைப்பட்டி புதூரில் டாக்டர் ஒருவரின் வீட்டில் அத்துமீறி தாக்கியதாக ஒரு வழக்கு உள்ளது. வீர முத்தரையர் சங்க நிர்வாகி செல்வக்குமாருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ராம்பிரபு மீது கண்டோன்ட் மெண்ட், காந்தி மார்க்கெட், கோட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ராம்பிரவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இடமலைப்பட்டி புதூர் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவுக்கு பரிந்து செய்தார்.

இந்த பரிந்துரையின் பேரில் ராம்பிரபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.


செய்தி எடுக்கப்பட்டது நக்கீரன் இதழிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக