சனி, 18 ஆகஸ்ட், 2012

சிலை அவமதிப்பு முத்தரையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தா.பேட்டை, : தொட்டியம் அடுத்த சத்திரத்தில் கடந்த 13ம் தேதி பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர். இதை கண்டித்து முசிறி கைகாட்டியில் முத்தரையர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முசிறி நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் ரமேஷ், செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபி, துணை தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர்.
அப்போது, முத்தரையர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள் கவியரசு, ராஜசேகர், தங்கவேல், மங்கலம் கோபி, விமல்ராஜ், சுப்பிரமணியன், பாண்டியராஜன், ஜான்சுந்தர், சிவகுமார் மற்றும் முசிறி, வடுகப்பட்டி, அயித்தாம்பட்டி, மங்களம், புதூர், துலையாநத்தம், ஜம்புநாதபுரம், கணேசபுரம், வாளவந்தி, சிந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்துகொண்டனர். முசிறி டிஎஸ்பி தங்கவேல், மதுவிலக்கு டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முசிறி ரவச்சக்கரவர்த்தி, செல்வி, தொட்டியம் குமரேசன், சப்இன்ஸ்பெக்டர்கள் கருப்பண்ணன், சண்முகலட்சுமி, ராமநாதன், பழனியாண்டி, பாலு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக