சனி, 4 ஆகஸ்ட், 2012

முத்தரையர் சங்க தலைவரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் செயற்குழுவில் தீர்மானம்

திருச்சி, : கைது செய்யப்பட்ட முத்தரையர் சங்க தலைவரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகேசன், அமைப்பு செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ரத்தினசாமி, தஞ்சை மண்டல அமைப் பாளர் சுப்பிரமணியன், மாநில கலை இலக்கிய அணிச்செயலாளர் வீரசங் கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காலம் கடந்த வழக்குக்காக பொய் வழக்கில் கைது செய்துள்ள மாநிலத் தலைவர் விசுவநாதனையும், அவரது குடும்பத்தினரையும் அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். இதில் அரசு தயக்கம் காட்டினால் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் சென் னை தலைமை செயலகம் முன்பு நடத்துவது. முத்திரையர் இன மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வரை சந்திக்க அனுமதிக்கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


NEWS FROM DINAKARAN

தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக