திங்கள், 3 செப்டம்பர், 2012

குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி, செப். 1: திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் வழிப்பறி, நகைப் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸôர், கொள்ளையர்களை பிடிப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலர் பெரியகோபால், ஒன்றியச் செயலர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

NEWS FROM DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக