புதன், 10 அக்டோபர், 2012

ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், நேற்று அதிகாலை நடந்த ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சந்தனக்கூடுக்கு மலர் தூவி வரவேற்றனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா 838 ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, செப்., 17ல் மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது.நேற்று மாலை 5 மணிக்கு போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது. யானை, குதிரை, தாரை, தப்பட்டையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, இன்று காலை 5 மணிக்கு தர்கா வந்தது. நான்கு சக்கர சப்பரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மலர்கள் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் வைக்கப்பட்டது. யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தியும், பெண்கள் வழிநெடுகிலும் குலவையிட்டும் வந்தனர்.
NEWS FROM : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக