வியாழன், 4 அக்டோபர், 2012

இலங்கை சிறையில் உயிரிழந்த மீனவரின் உடல் திருச்சி வந்தது

இலங்கை சிறையில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடல் இன்று திருச்சி வந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்தரையர் நகரைச் சேர்ந்த மீனவர் தங்கராஜ் (64) என்பவரும், முனுசாமி என்பவரும், 2004ம் ஆண்டு இலங்கை கடல் எல்லையைத் தாண்டிய போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படை, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து.
இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி தங்கராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் இன்று ஸ்ரீலங்கன் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
அங்கு, தங்கராஜின் மகன் வெள்ளையன் உடலைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார்.

News From : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக