நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.
எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.
எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.
எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.
1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.
5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.
எண்: 7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக