கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.
வரலாறு: முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும் ஆண்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக் கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக் கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன் மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின் சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம். திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.
இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங் காணலாம்.
(மேற்)
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும்.
மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)
இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத் “தமிழறியும் பெருமாள் கதை” என்னும் புத்தகத்தில் –
“அங்காடி கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன். கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்”
எனக் கூறப்பட்டுள்ளது காண்க. கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும் ஒரு வகுப்பினர் முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து கொள்கிறார்கள்.
ஒரு விடுகதை
-
அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்தலுற்றேன் —–நான் யார்?
-
விடை: சதுரங்கம்
Read more: http://noozly.com/topic/MUTHURAJA#ixzz2GIBn3dGk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக