சனி, 2 மார்ச், 2013

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது டாக்டர் ராமதாஸ் பேச்சு

புதுக்கோட்டை
வன்கொடுமை சட்டம், 98 சதவீதம் தவறாக பயன்படுத்தப்படு கிறது என்று பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை பால் பண்ணை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா... நிறுவனர் டாக்டர் ராம தாஸ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறிய தாவது:
அனைத்து சமுதாய பேரியக்கம் என்பது, பாதிக்கப்பட்ட சமுதாயத் தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து தொடங்கப்பட்ட இயக்கம் ஆகும். காதல், சாதி ஒழிப்பு என்ற பெயரில் பெண் களை கடத்தி செல்வது, மான பங்கபடுத்துவது, திருமணம் செய்து பின்னர் அதன்மூலம் கட்ட பஞ்சாயத்து செய்வதை, இந்த இயக்கம் மூலம் கண்டிக்கிறோம்.
15, 18 வயதுகளில் டீன்ஏஜ் பருவத்தில் ஏற்படும் நாடக காதலை மட்டுமே நாங்கள் கண்டிக்கிறோம். தமிழக அரசுக்கு எதிராக செயல்படு வதற்காக இந்த இயக்கத்தை நாங்கள் நடத்த வில்லை. எங்களுடைய போராட்டங்கள் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு தராத வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு சமுதாய தலைவர்கள்...
கூட்டத்தில், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அரசகுமார், நாகராஜ், சுப்பிரமணிய காடுவெட்டியார் அகி யோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில் பா... மாநில பொதுச் செயலாளர் அருள் மணி வரவேற்று பேசினார்.
மாநில பா... தலைவர் கோ..மணி, முத்தரையர் சங்கத்தை சேர்ந்த எஸ்.எம்.மூர்த்தி, நாயுடு சங்கத்தை சேர்ந்த ராஜ்குமார், உடையார் சங்கத்தை சேர்ந்த அறந்தாங்கி அண்ணாத்துரை, பார்வார்டு பிளாக் எஸ்.ஆர்.தேவர், பிராமணர் சங்கத்தை சேர்ந்த குமார் என்கிற சிவராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பா... மாவட்ட (மேற்கு) செய லாளர் வெள்ளைச்சாமி, முத்துக் குமார், செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:
பொய் புகார்கள்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் தற்போது கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகிய தளங்களில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல சமூக தளத்திலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு உள்ளது. மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்க கூடாது என்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கம் அகும்.
சமுதாய தலைவர்களில் சிலர் அவர்களுடைய சொந்த லாபத்திற்காகவும், பிடிக்காதவர்களை பழி வாங்கவும், கட்ட பஞ்சாயத்து செய்யவும் மற்ற சமுதாயத்தினர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி பொய் புகார்களை அளிக்கும் படி அவர்களுடைய சமுதாயத் தினரை தூண்டுவது வருத்த மும், வேதனையும் அளிக் கிறது.
நாடக காதல்
இந்த நாகரிக சமுதாயத்தில் காதல் மற்றும் கலப்பு திருமணங் களுக்கு தடை செய்வது சரியாக இருக்காது. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பை கெடுக்காமல் காதல் நாடகம், கட்ட பஞ்சாயத்து, பணப்பறிப்பு, சாதி ஒழிப்பு என்ற போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்துக்கு முன்னுரிமை தந்து 21 வயதுக்குமேல் நடக்கும் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை, வன்கொடுமை தடுப்பு சட்டம் முறைகேடாக பயன் படுத்தப்படுகிறது. நாடக காதல் திருமணங்களால் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக் கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.  

 Thanks to : DINATHANTHI


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக