மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு மாநில பெண்கள் கபாடிப் போட்டி
நண்பர்களே .. வருகின்ற மே 23 - பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தினத்தன்று "மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு மாநில பெண்கள் கபாடிப் போட்டி" பட்டுக்கோட்டையை அடுத்த சேண்டாக்கோட்டையில் கடந்த வருடம் ஆண்களுக்கான கபாடிப் போட்டி நடத்தியது போல சிறப்பாக நடத்துவது என்று "மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு கபாடிக் குழு" கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது,
இந்த கூ ட்டத்தில் கபாடிக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.வசந்த், அமைப்பாளர்கள் திரு. மணி, திரு.வீ,கே,சுப்பிரமணியம், டாப் டென் சசிகுமார், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க செயலாளர் திரு. காந்தி, இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தலைவர் திரு. சுரேஷ் (எ) தேவா ஆகியோர் கலந்து கொண்டனர, இந்த கபாடிப் போட்டியை பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர் உறவினர்கள் இணைந்து நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக