புதன், 15 மே, 2013

அகிலனின் வேங்கையின் மைந்தன் - ஒரு பார்வை..!! (பகுதி – 1)


அகிலனின் வேங்கையின் மைந்தன் - ஒரு பார்வை..!! (பகுதி – 1)

வலையர்கள்கள் யார் ? ஏன் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது ? இங்கே தஞ்சாவூரை ஆண்டதாகசொல்லப்படும் முத்தரையர்கள் எப்படி தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திற்க்கும்திருவள்ளூருக்கும்,வேலூருக்கும் போனார்கள் ? என்ற இந்த கேள்விகளெல்லாம் முத்தரையர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் பல நூறு கேள்விகளில் சில......!!  இதற்க்காக விடை தேடி அலையும் பலரில் ஒருவனானஎனக்கு நண்பர் முத்தரையர் மகாராஜா பரிந்துரைத்த "அகிலனின் வேங்கையின் மைந்தன்ஓரளவுபுரிதல்களை தருகிறது.


இந்த நாவலை வரலாற்றுப் புதினங்களில் புரட்சியை ஏற்படுத்திய கல்கியின் பொன்னியின் செல்வனின்தொடர்ச்சி என்றும் கூறலாம் ஒரே ஒரு வித்தியாசம் "பொன்னியின் செல்வனில்ஒரே ஒரு இடத்தில்முத்தரையர்கள் பற்றிய செய்தி வரும்ஆனால் "வேங்கையின் மைந்தன்"  நாவலிலோ முத்தரையர்கள்நீக்கமற நிறைந்து இருக்கின்றார்கள்சொல்லப்போனால் முத்தரையர்கள் முற்றாகஆக்கிரமைத்துள்ளனர்அதே கல்கி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்அதன் தொடர்ச்சியாக பொன்னியின்செல்வர் ராஜராஜ சோழனின் மகன் வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழனின் வரலாற்றுவெற்றிகள்தான் கதை.

இதில் நாம் பெருமைபடதக்க ஒரு விசயம் முத்தரையர்கள் பற்றிய செய்திகளை தாங்கி  வந்த இந்த நூல் 1963 ம் ஆண்டின் "சாகித்திய அகாடமி" விருது பெற்றது ஆகும்.

இதில் நான் முதல்பத்தியில் கூறியது போல வலையர் என்ற பெயருக்கான காரணம் இதில் அடங்கி இருக்கிறது. உலகத்தில் கற்காலம் தொடங்கி இன்றுவரை போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்தும் உயிர்களை பறிப்பவையாகும், ஆனால் உலக வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு ஆயுதம் "வளை எறி" ஆம் பேரரசர் பெரும்பிடுகு மட்டுமல்ல அவருக்கு முந்தைய முத்தரையர் மன்னர்கள் காலத்திலும் தனி ஒரு படை அமைப்பாக "வளை எறி படை" இருந்து இருக்கிறது, வளை எறியின் சிறப்பே அது யாரையும் கொல்லுவது இல்லை, மறைந்திருந்து தாக்குதல் அல்லது இருட்டிலிருந்து தாக்குதல் நடைபெரும் பொழுது தாக்குவது எதிரியா, நண்பனா என்று அறியாத போது அவர்களை வலைத்துபிடிக்க இந்த வளை எறி பயன்படும் இதனை இப்படி சொல்வதைவிட இந்த நாவலில் இருந்து இதற்க்கு ஒரு உதாரணம் சொன்னால் எல்லோருக்கும் புரியும்.

/// வளைந்த மரக்கட்டையாலான சிறிய ஆயுதம் அந்த வளை எறிதூரத்தில் மறைந்த செல்லும்மனிதர்களையோ பிடிக்கு அகப்படாமல் ஓடுபவர்களையோ அதனால் தடித்து நிறுத்த முடியும்.தொலைவில் செல்பவன் நண்பனா எதிரியா என்று தொரியாத சமயம் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் அவன் போக்கை தடுக்கசோழ வீரர்கள் (!) இந்த வளை எறியை வைத்திருந்தனர்முத்தரையர் குலக் கொழுந்து வீரமல்லனின் வளை எறி என்றைக்குமே குறிதவறியதில்லை ///  (பக்கம் - 21)

இந்த வளை எறியில் முத்தரையர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதற்க்கு இன்னுமொரு உதாரணம்



(தொடரும்.....!!!)

"வலையர்" என்ற கர்வத்தோடு.... உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக